GeoGebra-5.04/C3/Create-and-manage-Tools/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Create and Manage Tools குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, tool barஐ customize செய்வது, ஒரு புதிய toolஐ உருவாக்குவது, உருவாக்கப்பட்ட toolஐ நிர்வகிப்பது, ஒரு புதிய GeoGebra window வை திறப்பது மற்றும் உருவாக்கப்பட்ட toolஐ சரி பார்ப்பது
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d
00:34 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனையாக GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:46 நான் ஏற்கனவே எனது கணினியில் GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன்
00:51 இந்த டுடோரியலுக்கு நான் axes ஐ un-check செய்கிறேன்
00:56 Tool barஐ customize செய்வதிலிருந்து தொடங்குவோம்
00:59 Tools menuவை க்ளிக் செய்து Customize Toolbar தேர்வை தேர்ந்தெடுக்கவும். Customize Toolbar window திறக்கிறது
01:08 viewsஐ தேர்வு செய்ய window ஒரு drop-down ஐ கொண்டிருக்கிறது. முன்னிருப்பாக General view தேர்ந்தெடுக்கப்படுகிறது
01:16 சம்பந்தப்பட்ட toolகளை காட்ட, ஒவ்வொரு toolக்கு பக்கத்திலும் Toolbar box ஒரு menu பட்டனை கொண்டிருக்கிறது
01:22 Toolbar boxக்கு கீழ், நாம் Up மற்றும் Down அம்பு பட்டன்களை கொண்டிருக்கிறோம்
01:27 நான் Line tool ஐ தேர்ந்தெடுக்கிறேன்
01:30 தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ பட்டியலில் மேலே அல்லது கீழே நகர்த்த இந்தப் பட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
01:37 கீழ் இடது பக்கத்தில், முன்னிருப்பான toolbar ஐ மீட்டமைக்க Restore Default Toolbar பட்டன் இருக்கிறது
01:43 Restore Default Toolbar பட்டனை க்ளிக் செய்யவும்
01:46 அடுத்து இருப்பது Tools box. இது Toolbar' box ல் இருந்து toolகளை பிரிக்கப் பயன்படுகிறது.
01:53 Toolbar boxல், சம்பந்தப்பட்ட toolகளை காட்ட Moveக்கு பக்கத்தில் உள்ள menu பட்டனை க்ளிக் செய்யவும்
01:59 Move toolஐ க்ளிக் செய்து, பின் Remove பட்டனை க்ளிக் செய்யவும்
02:04 Move tool, Tools boxல் நகர்ந்து இருப்பதை கவனிக்கவும்
02:08 Move menuவை மூட, menu பட்டனை க்ளிக் செய்யவும்
02:11 அடுத்து சம்பந்தப்பட்ட toolகளை காட்ட, perpendicular lineக்கு பக்கத்தில் உள்ள menu பட்டனை க்ளிக் செய்யவும்
02:17 இப்போது Tangents tool ஐ க்ளிக் செய்து பின் Remove பட்டனை க்ளிக் செய்யவும்
02:23 Tangents toolஉம் Tools box க்கு நகர்ந்திருப்பதை கவனிக்கவும்
02:28 Perpendicular Line menuவை மூட, menu பட்டனை க்ளிக் செய்யவும்
02:34 இந்த toolகளை அவற்றின் சம்பந்தப்பட்ட toolகளில் இருந்து பிரிப்போம்
02:38 Tools boxல் இருந்து Move tool ஐ தேர்ந்தெடுத்து, பின் Insert பட்டனை க்ளிக் செய்யவும். Move tool ஒரு தனி toolஆக சேர்க்கப்படுகிறது
02:48 அடுத்து Tangents tool ஐ தேர்ந்தெடுத்து பின் Insert பட்டனை க்ளிக் செய்யவும்
02:54 Tangents toolஉம் ஒரு தனி toolஆக சேர்க்கப்படுகிறது
02:58 மாற்றங்களை செயல்படுத்த இப்போது Apply பட்டனை க்ளிக் செய்யவும். பின் windowவை மூட Close பட்டனை க்ளிக் செய்யவும்
03:06 Move tool மற்றும் Tangents tool தனித்தனியாக toolbar ல் காட்டப்படுகின்றன என்பதை கவனிக்கவும்
03:13 இப்போது ஒரு புதிய toolஐ உருவாக்கக் கற்போம்.
03:16 ஒரு வட்டத்திற்கு tangentகளை வரைவதிலிருந்து தொடங்குவோம்.
03:20 Circle with Centre and Radius toolஐ க்ளிக் செய்யவும். Graphics view.வை க்ளிக் செய்யவும்
03:27 Circle with Center and Radius text box திறக்கிறது
03:31 Radius fieldல் டைப் செய்க 3 பின், கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். மையம் A மற்றும் 3 செமீ ஆரம் கொண்ட ஒரு வட்டம் வரையப்படுகிறது.
03:42 வட்டத்தின் equationஐ காண Algebra viewவின் எல்லையை இழுக்கவும்.
03:47 Graphics viewவை தெளிவாக காண எல்லையை இழுக்கவும்
03:51 இப்போது Point tool ஐ பயன்படுத்தி, Graphics viewவில் B என்ற வெளிப்புறப் புள்ளியைக் குறிப்போம்.
03:58 Tangents toolஐ க்ளிக் செய்யவும். பின் புள்ளி Bஐ க்ளிக் செய்து பின் வட்டம் cஐ க்ளிக் செய்யவும்
04:07 B புள்ளியிலிருந்து c வட்டத்திற்கு இரண்டு tangentகள் வரையப்படுகின்றன.
04:12 Tools menuவை க்ளிக் செய்து, Create New Tool தேர்வை தேர்ந்தெடுக்கவும்
04:18 Create New Tool dialog box திறக்கிறது
04:22 பெட்டியில் நாம் Output Objects, Input Objects மற்றும் Name & Icon tab களை கொண்டிருக்கிறோம்
04:29 முன்னிருப்பாக Output Objects tab திறக்கிறது
04:33 Output Objects tabல், objectகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு drop-down இருக்கிறது
04:38 drop-down ல் இருந்து Circle c with center A and radius 3 , Line f: Tangent to c through B, Line g: Tangent to c through Bஐ தேர்ந்தெடுக்கவும்
04:52 அடுத்து Input Objects tab ஐ க்ளிக் செய்யவும். இந்த tabல், Point A மற்றும் Point B ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன
05:00 Name & Icon tabஐ க்ளிக் செய்யவும். இந்த tabல் நாம் Tool name மற்றும் Tool helpஐ டைப் செய்யலாம்
05:07 Tool name க்கு நான் Tangents to a circle என டைப் செய்கிறேன்
05:11 நான் Tool nameஐ டைப் செய்கையில், Command name தானாகவே பூர்த்தி செய்யப்படுகிறது
05:17 Tool help boxல், Click two points என நான் டைப் செய்கிறேன்
05:22 Show in Toolbar check-box ஏற்கனவே check செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும்
05:27 இறுதியாக Finish பட்டனை க்ளிக் செய்யவும்
05:30 New tool created successfully! என்ற text உடன் கூடிய Geogebra Info message box தோன்றுகிறது
05:37 இந்த message box ஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:41 Tool tip உடன் கூடிய Tangents to a circle என்ற ஒரு புதிய tool toolbarல் காணப்படுவதை கவனிக்கவும்
05:47 இடைமுகத்திலிருந்து எல்லா objectகளையும் நீக்கவும்
05:51 இப்போது நாம் உருவாக்கிய toolஐ பயன்படுத்துவோம்.
05:55 Tangents to circle toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும். ஒரு வட்டத்திற்கான tangentகள் வரையப்படுகின்றன.
06:05 நாம் உருவாக்கிய toolஐ எவ்வாறு நிர்வகிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
06:09 Tools menuவை க்ளிக் செய்து பின் Manage Tools தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:14 Manage Tools dialog box திறக்கிறது
06:17 இந்த dialog box, Delete, Open, Save As மற்றும் Share பட்டன்களை கொண்டிருக்கிறது
06:24 Tangents to a circle toolஐ நாம் சேமிப்போம். Saves As பட்டனை க்ளிக் செய்யவும்
06:31 Save asdialog box திறக்கிறது
06:34 File name text box ல் நான் Tangents hyphen circle(Tangents-circle) என டைப் செய்கிறேன்
06:39 Files of typeல் GeoGebra Tools(.ggt) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
06:46 Fileஐ சேமிக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்
06:52 பின் கீழேயுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
06:56 பின் dialog boxஐ மூட Close பட்டனை க்ளிக் செய்யவும்
07:00 இப்போது நான் Geogebra window வை மூடுகிறேன். நான் Fileஐ க்ளிக் செய்து Closeஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:08 Close File box திறக்கிறது
07:11 அது Do you want to save your changes? என கேட்கிறது
07:15 Boxல், நான் fileஐ ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளதால் Don't Save பட்டனை தேர்ந்தெடுக்கிறேன்
07:22 இப்போது நாம் சேமிக்கப்பட்ட fileஐ திறப்போம்
07:25 அதை எனது Desktopல் நான் Tagents-circle.ggt என சேமித்துள்ளேன்
07:31 அந்த fileஐ டபுள் க்ளிக் செய்வதன் மூலம் அதை நாம் திறக்கலாம். அல்லது ரைட்-க்ளிக் செய்து Open With GeoGebra தேர்வை தேர்ந்தெடுக்கவும்
07:40 நாம் உருவாக்கியுள்ள புதிய tool, இந்த fileலில் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனிக்கவும்
07:46 நாம் Dash Homeஐ பயன்படுத்தி ஒரு புதிய GeoGebra window வை திறந்தால் நாம் உருவாக்கிய tool நமக்கு தென்படவில்லை
07:55 நீங்களே அதை சரி பார்த்துக்கொள்ளலாம். அந்த புதிய tool, புதிய GeoGebra window வில் இல்லை
08:02 நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல,
08:05 இந்த டுடோரியலில் நாம் கற்றது, tool barஐ customize செய்வது, ஒரு புதிய toolஐ உருவாக்குவது, உருவாக்கப்பட்ட toolஐ நிர்வகிப்பது, ஒரு புதிய GeoGebra window வை திறப்பது மற்றும் உருவாக்கப்பட்ட toolஐ சரி பார்ப்பது
08:21 பயிற்சியாக, ஒரு முக்கோணத்தின் உயரங்களை வரையவும், orthocenterஐ குறிக்கவும் ஒரு புதிய toolஐ உருவாக்கவும்.
08:29 உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும்.
08:39 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
08:47 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:55 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
08:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்
09:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree