GeoGebra-5.04/C2/Properties-of-Quadrilaterals/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 GeoGebraவில் Properties of Quadrilaterals குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில், quadrilateralகளை உருவாக்கவும் GeoGebraஐ பயன்படுத்தி quadrilateralகளின் பண்புகளை புரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்வோம்
00:19 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 14.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d
00:31 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:38 இல்லையெனில் அதற்கான GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
00:44 நமது செயல்விளக்கத்தை தொடங்குவோம்
00:47 நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன்
00:51 இந்த டுடோரியலுக்கு நான் முதலில் Axesஐ uncheck செய்கிறேன்
00:55 அதைச் செய்ய, Graphics viewவை ரைட்-க்ளிக் செய்யவும். Graphics menu திறக்கிறது
01:01 Axes check-boxஐ க்ளிக் செய்யவும்
01:04 நன்கு தெரிய fontன் அளவை அதிகரிக்கிறேன்
01:08 Options menuவிற்கு சென்று, Font Sizeக்கு செல்லவும்
01:13 sub-menu வில் 18 pt ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்கவும்
01:17 இப்போது ஒரு parallelogram ஐ வரைவோம்.
01:20 Segment with Given Length toolஐ க்ளிக் செய்யவும்
01:24 Graphics view வை க்ளிக் செய்யவும்
01:27 Segment with Given Length text box திறக்கிறது
01:31 Length fieldல் 5 என டைப் செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும்
01:37 5 செமீ நீளம் மற்றும் f என லேபிலிடப்பட்ட AB segment ஆனது வரையப்படுகிறது.
01:44 தவறுதலாக வரையப்பட்ட புள்ளியை நீக்கவும்.
01:48 இந்த புள்ளி உண்மையான வரைபடத்திற்கு தேவைப்படாமல் இருக்கலாம்.
01:52 புள்ளியை ரைட்-க்ளிக் செய்யவும். sub-menu வில் Delete தேர்வை தேர்ந்தெடுக்கவும்
01:59 அடுத்து Parallel Line tool ஐ க்ளிக் செய்யவும்
02:02 புள்ளி C ஐ வரைய வரி ABக்கு கீழே க்ளிக் செய்து பின் ABஐ க்ளிக் செய்யவும்
02:09 C வழியாக செல்லும் AB segmentக்கு இணையான வரி வரையப்படுகிறது.
02:14 Segment toolஐ பயன்படுத்தி புள்ளி A மற்றும் Cஐ இணைக்கவும்
02:21 மீண்டும் Parallel Line tool ஐ க்ளிக் செய்து, segment ACஐ க்ளிக் செய்து பின் புள்ளி Bஐ க்ளிக் செய்யவும்
02:31 இரண்டு இணை கோடுகள் g மற்றும் i ஒரு புள்ளியில் intersect ஆகின்றன.
02:36 Intersect toolஐ க்ளிக் செய்து பின் intersection புள்ளி Dஐ க்ளிக் செய்யவும்
02:43 இப்போது Segment' tool ஐ பயன்படுத்தி C, D மற்றும் D, B புள்ளிகளை இணைக்கவும்.
02:53 Parallelogram ABDC இப்போது முடிவடைந்தது
02:57 Parallelogram ஐ தெளிவாக காண "'g மற்றும் i வரிகளை மறைப்போம்
03:04 வரி gஐ ரைட்-க்ளிக் செய்து submenuவில் Show Object check-box ஐ க்ளிக் செய்யவும். அதேபோல i வரியை நான் மறைக்கிறேன்
03:15 இப்போது parallelogram ABDCன் பண்புகளை ஆராய்வோம்
03:20 Algebra view' ல் இருந்து பார்த்தால், segmentகள் f மற்றும் j சமமாக இருக்கின்றன மற்றும் segmentகள் h மற்றும் k சமமாக இருக்கின்றன என்பது தெரிகிறது
03:31 எதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருப்பதைக் கவனிக்கவும்.
03:36 இப்போது parallelogramன் கோணங்களை அளவிடுவோம்.
03:40 Angle toolஐ க்ளிக் செய்யவும். பின்வரும் புள்ளிகளை க்ளிக் செய்யவும் , D C A
03:50 C A B
03:55 A B D
04:01 B D C.
04:07 எதிர் கோணங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும்.
04:11 இப்போது parallelogram ABDCஐ ஒரு செவ்வகமாக மாற்றுவோம்.
04:16 Move toolஐ க்ளிக் செய்யவும். நீங்கள் 90 degrees கோணத்தை காணும் வரை புள்ளி Cஐ க்ளிக் செய்து இழுக்கவும்
04:25 அவற்றை தெளிவாக காண labelகளை இழுக்கவும்
04:30 அனைத்து கோணங்களும் 90 டிகிரிக்கு மாறியிருப்பதைக் கவனிக்கவும்.
04:34 இப்போது ஒரு kiteஐ உருவாக்க கற்றுக்கொள்வோம்
04:37 இதற்கு நான் ஒரு புதிய Geogebra windowவை திறக்கிறேன்
04:41 Fileஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும்
04:46 ஒரு kiteஐ வரைய, இரண்டு புள்ளிகளில் intersect செய்யும் இரண்டு வட்டங்களை வரைவோம்.
04:52 Circle with Centre through point toolஐ க்ளிக் செய்யவும்
04:55 Graphics viewவை க்ளிக் செய்யவும்
04:58 புள்ளி A வரையப்படுகிறது, இதுவே வட்டத்தின் மையம்.
05:03 புள்ளி A இலிருந்து சிறிது தூரத்தில் மீண்டும் க்ளிக் செய்யவும்.
05:07 புள்ளி B தோன்றுகிறது. இது வட்டம் cஐ முடிக்கிறது
05:13 இதேபோல், C மையத்துடன் மற்றும் D வழியாகச் செல்லும் மற்றொரு வட்டத்தை வரைவோம் .
05:21 c மற்றும் d ஆகிய இரண்டு வட்டங்களும் இரண்டு புள்ளிகளில் intersect ஆகின்றன என்பதைக் கவனிக்கவும்.
05:26 Intersect toolஐ க்ளிக் செய்து வட்டங்கள் cமற்றும் dஐ க்ளிக் செய்யவும்
05:33 E மற்றும் F' ஆகியவை வட்டங்களின் intersection புள்ளிகள் ஆகும்.
05:37 இப்போது இந்த வட்டங்களைப் பயன்படுத்தி தேவையான quadrilateral ஐ வரைவோம்.
05:42 Polygon toolஐ க்ளிக் செய்யவும்
05:44 quadrilateralஐ முடிக்க A, E, C, F மற்றும் A புள்ளிகளை மீண்டும் க்ளிக் செய்யவும்
05:57 Algebra Viewவில் இரண்டு ஜோடி அடுத்தடுத்த பக்கங்களும் சமமாக இருக்கிறது என்பதை கவனிக்கவும். வரையப்பட்ட quadrilateral ஒரு kite ஆகும்.
06:06 டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யுங்கள்.
06:10 kiteன் கோணங்களை அளந்து என்ன நடக்கிறது என்பதைச் சரிபார்க்கவும்.
06:14 மூலைவிட்டங்களை வரைந்து, மூலைவிட்டங்களின் intersection புள்ளியைக் கண்டறியவும்.
06:19 மூலைவிட்டங்களின் intersectionல் கோணத்தை அளவிடவும்.
06:23 மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று bisect செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
06:27 உங்கள் முடிவுபெற்ற பயிற்சி இப்படி இருக்க வேண்டும்.
06:32 எல்லா objectகளையும் நீக்க, Ctrl + Aஐ அழுத்தி keyboardல் Delete key ஐ அழுத்தவும்
06:40 இப்போது ஒரு rhombus ஐ வரைவோம்
06:43 Segment with Given Length toolஐ க்ளிக் செய்யவும். Graphics view.வை க்ளிக் செய்யவும்
06:49 Segment with Given Length text box திறக்கிறது
06:53 Length fieldல் 4 என டைப் செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும். 4 அலகுகள் கொண்ட ஒரு segment வரையப்பட்டது.
07:03 A ஐ மையமாகக் கொண்டு, B வழியாகச் செல்லும் ஒரு வட்டத்தை உருவாக்குவோம்.
07:08 Circle with Centre through Point toolஐ க்ளிக் செய்யவும்
07:11 வட்டத்தை முடிக்க A' மற்றும் B புள்ளிகளைக் க்ளிக் செய்யவும்.
07:17 Point toolஐ பயன்படுத்தி, வட்டத்தின் சுற்றளவில் C' புள்ளியைக் குறிக்கவும்.
07:23 Segment toolஐ க்ளிக் செய்து பின் புள்ளிகள் A மற்றும் Cஐ க்ளிக் செய்யவும்
07:29 இது A மற்றும் C' புள்ளிகளை சேர்க்கும்.
07:32 Parallel line toolஐ க்ளிக் செய்து வரி ABஐ க்ளிக் செய்து பின் புள்ளி Cஐ க்ளிக் செய்யவும்
07:41 ABக்கு இணையான ஒரு கோடு C வழியாக செல்வதைக் காண்கிறோம்.
07:46 இதேபோல், AC segmentக்கு B' வழியாகச் செல்லும் ஒரு இணை வரியை வரையவும்.
07:53 i மற்றும் h' வரிகள் ஒரு புள்ளியில் intersect ஆகின்றன என்பதைக் கவனிக்கவும்.
07:58 Intersect tool ஐ பயன்படுத்தி intersection புள்ளியை D எனக் குறிப்போம்.
08:05 Segment' toolஐ பயன்படுத்தி, A, D மற்றும் B, C புள்ளிகளை இணைக்கவும்.
08:13 AD மற்றும் BC மூலைவிட்டங்களுடன் ஒரு quadrilateral ABDC வரையப்படுகிறது.
08:19 மூலைவிட்டங்கள் ஒரு புள்ளியில் intersect செய்கின்றன. Intersect toolஐ பயன்படுத்தி intersection புள்ளியை E எனக் குறிக்கவும்.
08:30 டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும்
08:34 Quadrilateral ABDCயின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று bisect செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
08:40 மூலைவிட்டங்கள் perpendicular bisectorகளாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
08:45 உங்கள் முடிவுபெற்ற பயிற்சி இப்படி இருக்க வேண்டும்.
08:49 இப்போது ஒரு cyclic quadrilateralஐ உருவாக்குவோம்.
08:53 இதற்கு Graphics 2 viewவை திறப்போம்
08:57 View menuவிற்கு சென்று Graphics 2 check boxஐ தேர்ந்தெடுக்கவும்
09:03 Graphics 2 view window Graphics viewக்கு பக்கத்தில் திறக்கிறது
09:08 Graphics 2 viewவை பார்க்க, ஏற்கனவே உள்ள Graphics viewவின் பார்டரை இழுக்கவும்
09:13 Regular Polygon toolஐ திறக்கவும். Graphics 2 viewவை இருமுறை க்ளிக் செய்யவும்
09:20 4 முன்னிருப்பு மதிப்புடன் Regular Polygon text box திறக்கிறது
09:25 OK பட்டனை க்ளிக் செய்யவும்
09:28 Graphics 2 viewவில் ஒரு சதுர FGHI வரையப்படுகிறது
09:33 FG மற்றும் GH segmentகளுக்கு perpendicular bisectorகளை உருவாக்குவோம்.
09:39 tool bar ல் இருந்து Perpendicular Bisector tool ஐ தேர்ந்தெடுக்கவும்
09:43 F, G மற்றும் G, H புள்ளிகளைக் க்ளிக் செய்யவும்.
09:50 ஒரு புள்ளியில் perpendicular bisectorகள் intersect செய்கின்றன என்பதைக் கவனிக்கவும்.
09:55 Intersect tool ஐ பயன்படுத்தி, இந்த புள்ளியை 'J' எனக் குறிப்போம்.
10:01 இப்போது, 'J'ஐ மையமாக வைத்து F வழியாக செல்லுகின்ற ஒரு வட்டத்தை உருவாக்குவோம்.
10:07 Circle with center through Point toolக்ளிக் செய்து பின் புள்ளி Jஐ க்ளிக் செய்யவும். பின் புள்ளி Fஐ க்ளிக் செய்யவும்
10:16 ஒரு cyclic quadrilateral FGHI வரையப்படுகிறது
10:21 இப்போது நாம் அதன் ஏரியாவை காண்பிப்போம்.
10:24 Angle tool drop downல் Area tool ஐ க்ளிக் செய்யவும்
10:28 பின் quadrilateral FGHI ன் ஏரியாவை காட்ட அதை க்ளிக் செய்யவும்
10:35 பயிற்சியாக, ஒரு trapezium ஐ வரையவும்
10:40 அதன் சுற்றளவு மற்றும் ஏரியாவை அளவிடவும்.
10:44 உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும்.
10:49 நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல,
10:52 இந்த டுடோரியலில் நாம், quadrilateralகளை உருவாக்கவும் GeoGebraஐ பயன்படுத்தி quadrilateralகளின் பண்புகளை புரிந்து கொள்ளவும் கற்றோம்
11:03 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
11:11 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:21 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
11:25 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
11:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree