GeoGebra-5.04/C2/Congruency-of-Triangles/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | GeoGebraவில் Congruency of Triangles குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
| 00:07 | இந்த டுடோரியலில், congruent முக்கோணங்களை உருவாக்கவும், அவற்றின் congruencyஐ நிரூபிக்கவும் கற்றுக்கொள்வோம். |
| 00:17 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 14.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
| 00:29 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
| 00:35 | முன்நிபந்தனை GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
| 00:40 | முதலில் முக்கோணங்களின் congruency பற்றி விளக்குகிறேன். |
| 00:45 | இரண்டு முக்கோணங்கள் ஒரே அளவு மற்றும் வடிவத்தில் இருந்தால் அவை congruent ஆக இருக்கின்றன என்று பொருள். |
| 00:51 | தொடர்புடைய அனைத்து பக்கங்களும் உள் கோணங்களும் congruent ஆக இருக்கும். |
| 00:56 | நாம் Side Side Side congruency விதியுடன் தொடங்குவோம். |
| 01:02 | இதுவே Side Side Side congruency விதி யின் வரையறை |
| 01:08 | நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை எனது கணினியில் திறந்து வைத்துள்ளேன் |
| 01:13 | நான் இந்த டுடோரியலுக்கு, axesஐ disable செய்கிறேன் |
| 01:17 | தெளிவாகக் காண fontன் அளவை 18ptக்கு நான் அதிகரிக்கிறேன் |
| 01:22 | இப்போது ABC முக்கோணத்தை வரைவோம் |
| 01:26 | முன்பு விளக்கியது போல், Polygon tool ஐ க்ளிக் செய்து ABC முக்கோணத்தை வரையவும் |
| 01:34 | ABC முக்கோணத்தைப் போலவே மற்றொரு முக்கோணத்தை உருவாக்குவோம். |
| 01:40 | Move toolஐ பயன்படுத்தி, நான் இடது பக்கத்திற்கு முக்கோணம் ABCஐ இழுக்கிறேன் |
| 01:46 | இது புதிதாக ஒன்றை வரைவதற்கு சிறிது இடத்தை உருவாக்கும். |
| 01:50 | Circle with Center and Radius toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
| 01:57 | Circle with Center and Radius text box திறக்கிறது |
| 02:02 | Radius text boxல், a என டைப் செய்து கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 02:10 | மையம் D மற்றும் a ஆரம் கொண்ட வட்டம் வரையப்படுகிறது. |
| 02:15 | Point toolஐ பயன்படுத்தி, d வட்டத்தின் சுற்றளவில் E புள்ளியைக் குறிக்கவும். |
| 02:23 | Segment' tool ஐ பயன்படுத்தி, D மற்றும் E புள்ளிகளை இணைக்கவும். |
| 02:30 | Algebra viewவில், segment DE மற்றும் segment BC இரண்டும் ஒன்றே ஆகும் என்பதை கவனிக்கவும் |
| 02:37 | Circle with Center and Radius toolஐ தேர்ந்தெடுத்து புள்ளி Eஐ க்ளிக் செய்யவும் |
| 02:44 | Radius text boxல், b என டைப் செய்து கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 02:51 | மையம் E மற்றும் b ஆரம் கொண்ட வட்டம் வரையப்படுகிறது. |
| 02:56 | புள்ளி D மீது மீண்டும் க்ளிக் செய்யவும். Radius text box ல், c என டைப் செய்து கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 03:06 | மையம் D மற்றும் C ஆரம் கொண்ட வட்டம் வரையப்படுகிறது. |
| 03:10 | இப்போது Graphics viewவில் மூன்று வட்டங்கள் உள்ளன. |
| 03:14 | g மற்றும் e' வட்டங்கள் d மற்றும் e வட்டங்களின் intersection புள்ளிகளைக் குறிப்போம். |
| 03:22 | Intersect toolஐ க்ளிக் செய்யவும் |
| 03:25 | g மற்றும் e வட்டங்களின் intersection புள்ளியான Fஐ க்ளிக் செய்யவும். |
| 03:31 | d மற்றும் e வட்டங்களின் intersection புள்ளியான Gஐ க்ளிக் செய்யவும். |
| 03:37 | Segment toolஐ பயன்படுத்தி, D, F' மற்றும் F, E புள்ளிகளை இணைக்கவும். |
| 03:46 | தேவையான முக்கோணத்தைப் பெறுவதற்கு இங்கு g மற்றும் e வட்டங்களின் intersection புள்ளியைப் பயன்படுத்துகிறோம். |
| 03:53 | d மற்றும் e வட்டங்களின் intersection புள்ளியைப் பயன்படுத்தினால், நமக்குத் தேவையான முக்கோணம் கிடைக்காது. |
| 04:00 | D, G மற்றும் G, E புள்ளிகளை இணைக்கவும். |
| 04:04 | Algebra viewவில் segment நீளத்தை ஒப்பிடுக |
| 04:08 | இப்போது DEF முக்கோணத்தைக் காண வட்டங்களை மறைப்போம். |
| 04:13 | வட்டம் dஐ ரைட் க்ளிக் செய்யவும். ஒரு sub-menu திறக்கிறது |
| 04:19 | sub-menuவில், Show Object check-box ஐ க்ளிக் செய்யவும் |
| 04:24 | இதேபோல் நான் e மற்றும் g வட்டங்களை மறைக்கிறேன். |
| 04:30 | இப்போது நாம் ABC மற்றும் DEF முக்கோணங்களின் பக்கங்களை ஒப்பிடுவோம். |
| 04:36 | Algebra view வில், Segment க்கு கீழுள்ள aஐ ரைட் க்ளிக் செய்யவும் |
| 04:41 | திறக்கின்ற sub-menu வில், Object Propertiesஐ தேர்ந்தெடுக்கவும் |
| 04:46 | Preferences window திறக்கிறது |
| 04:49 | a ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
| 04:53 | Ctrl keyஐ அழுத்திக்கொண்டே b, c, f, h மற்றும் iஐ தேர்ந்தெடுக்க அவற்றை க்ளிக் செய்யவும் |
| 05:06 | Show Label drop-downல், Name & Value தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
| 05:11 | Preferences windowவை மூடவும் |
| 05:14 | AB = DF, BC = DE மற்றும் AC = EF என்பதை கவனிக்கவும் |
| 05:25 | Move toolஐ பயன்படுத்தி, A, B அல்லது C புள்ளிகளை நகர்த்துவோம் |
| 05:35 | நாம் இழுக்கும் போது எல்லா நீளங்களும் அதற்கேற்றவாறு மாறுவதை கவனிக்கவும் |
| 05:40 | முக்கோணங்கள் ABC மற்றும் DEF ஆகியவை congruent என்பதை இது நிரூபிக்கிறது. |
| 05:46 | இப்போது நாம் Angle Side Angle congruency விதியை உருவாக்க மற்றும் நிரூபிக்க கற்றுக்கொள்வோம். |
| 05:53 | இதுவே Angle Side Angle congruency விதியின் வரையறை |
| 05:59 | ஒரு புதிய GeoGebra windowவை திறப்போம் |
| 06:03 | Fileஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும் |
| 06:08 | நான் Polygon tool ஐ பயன்படுத்தி ஒரு முக்கோணத்தை வரைகிறேன் |
| 06:14 | அடுத்து நாம் முக்கோணத்தின் இரண்டு கோணங்களை அளவிடுவோம். |
| 06:18 | Angle toolஐ க்ளிக் செய்து புள்ளிகள் C B A மற்றும் A C Bஐ க்ளிக் செய்யவும் |
| 06:35 | Algebra viewவில் alpha மற்றும் betaவின் கோணங்களின் மதிப்புகள் காட்டப்படுகின்றன |
| 06:41 | Move toolஐ பயன்படுத்தி, ABC முக்கோணத்தை இடது பக்கத்திற்கு நான் இழுக்கிறேன் |
| 06:47 | இது congruent முக்கோணத்தை வரைய சிறிது இடத்தை இது உருவாக்கும். |
| 06:52 | Segment with Given Length toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
| 06:58 | Segment with Given Length text box திறக்கிறது |
| 07:02 | Lengthக்கு a என டைப் செய்து கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 07:07 | Segment DE வரையப்படுகிறது |
| 07:10 | DE segmentன் நீளமும் BC segmentன் நீளமும் சமம் என்பதை நினைவில் கொள்ளவும். |
| 07:16 | இப்போது நாம் congruent முக்கோணத்திற்கு alpha மற்றும் betaவை ஒத்த கோணங்களை வரைவோம். |
| 07:23 | Angle with Given Size toolஐ க்ளிக் செய்து, பின் புள்ளி E ஐயும் பின் புள்ளி Dஐயும் க்ளிக் செய்யவும் |
| 07:32 | Angle with Given Size text box திறக்கிறது |
| 07:36 | text box ல், 45 degrees ஐ நீக்கவும் |
| 07:40 | symbols அட்டவணையிலிருந்து alpha வை தேர்ந்தெடுக்கவும். கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 07:47 | alphaக்கு சமமான gamma கோணம் D இல் வரையப்படுகிறது என்பதைக் கவனிக்கவும் |
| 07:53 | அடுத்து, புள்ளி Dஐயும் பின் புள்ளி Eஐயும் க்ளிக் செய்யவும் |
| 07:59 | Angle with Given Size text boxல், 45 degrees ஐ நீக்கவும் |
| 08:04 | symbols அட்டவணையிலிருந்து betaவை தேர்ந்தெடுக்கவும். |
| 08:08 | இம்முறை clockwise ரேடியோ பட்டனை க்ளிக் செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 08:15 | delta கோணம், betaக்கு சமமாக E இல் வரையப்படுகிறது என்பதைக் கவனிக்கவும் |
| 08:21 | gamma மற்றும் delta கோணங்கள் கட்டமைக்கப்படும் போது E' மற்றும் D' புள்ளிகள் வரையப்படுகின்றன என்பதைக் கவனிக்கவும். |
| 08:29 | Line toolஐ பயன்படுத்தி, D, E prime மற்றும் E, D Prime புள்ளிகளை இணைப்போம். |
| 08:39 | ஒரு குறிப்பிட்ட toolஐ பயன்படுத்திய பிறகு, Move tool ஐ செயலிழக்க வைக்க அதை க்ளிக் செய்யவும் |
| 08:45 | இது Graphics view வில் தேவையில்லாத புள்ளிகளை வரைவதை தவிர்க்கும் |
| 08:50 | வரிகள் g மற்றும் h ஒரு புள்ளியில் intersect செய்கின்றன |
| 08:54 | Intersect toolஐ பயன்படுத்தி, intersection புள்ளியை F என குறிக்கவும் |
| 09:01 | வரிகளின் intersection புள்ளி மட்டுமே நமக்குத் தேவைப்படுவதால், g மற்றும் h வரிகளை மறைப்போம். |
| 09:08 | g வரியில் ரைட் க்ளிக் செய்துShow Object check-boxஐ க்ளிக் செய்யவும். |
| 09:15 | இதேபோல் h வரியை மறைக்கவும். |
| 09:19 | Segment tool ஐ பயன்படுத்தி, D, F மற்றும் F, Eஐ இணைக்கவும் |
| 09:26 | உருவான முக்கோணம் DEF என்பது ABC முக்கோணத்திற்கு congruentஆக இருக்கிறது . |
| 09:32 | Algebra view, வில், முக்கோணங்களின் நீளம் மற்றும் கோணங்களின் மதிப்புகளை ஒப்பிடுக. |
| 09:40 | கோணங்களும் பக்கமும் congruentஆக இருப்பதை மதிப்புகள் குறிப்பிடுகின்றன. |
| 09:45 | இது Angle Side Angle congruency விதியை நிரூபிக்கிறது. |
| 09:50 | இப்போது எல்லா objectகளையும் நீக்குவோம். எல்லா objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl+A key களை அழுத்தவும் |
| 09:57 | பின் keyboard ல் Delete key ஐ அழுத்தவும் |
| 10:01 | இப்போது நாம் Side Angle Side congruency விதியை உருவாக்கவும் நிரூபிக்கவும் கற்றுக்கொள்வோம். |
| 10:07 | Side Angle Side congruency விதியின் வரையறை இதோ |
| 10:13 | Polygon toolஐ பயன்படுத்தி ஒரு ABC முக்கோணத்தை வரையவும் |
| 10:20 | A C B கோணத்தை அளவிடுவோம். Angle toolஐ க்ளிக் செய்து, பின் புள்ளிகள் A C Bஐ க்ளிக் செய்யவும் |
| 10:33 | congruent முக்கோணத்தின் அடிப்பகுதியை வரைவோம். |
| 10:37 | Segment with Given Length toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
| 10:43 | Segment with Given Length text boxல், நீளத்திற்கு a. என டைப் செய்யவும். பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 10:51 | Segment DE வரையப்படுகிறது |
| 10:54 | புள்ளி Eல், alpha(ACB) கோணத்தை copy செய்வோம் |
| 10:58 | Angle with Given Size toolஐ க்ளிக் செய்யவும் |
| 11:02 | முதலில் Dஐயும் பின் Eஐயும் க்ளிக் செய்யவும் |
| 11:07 | Angle with Given Size text box திறக்கிறது |
| 11:11 | Angle text boxல், 45 degrees ஐ நீக்கி பின் symbols அட்டவணையிலிருந்து alphaவை தேர்ந்தெடுக்கவும் |
| 11:19 | clockwise ரேடியோ பட்டனை தேர்வு செய்து பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 11:25 | கோணம் alphaவை போலிருக்கும் கோணம் betaவும் புள்ளி E இல் வரையப்படுகிறது |
| 11:31 | Line tool,ஐ பயன்படுத்தி E, D' prime புள்ளிகளை இணைப்போம் |
| 11:38 | இப்போது நாம் b மற்றும் c போன்ற நீளங்களைக் கொண்ட இரண்டு segmentகளை உருவாக்க வேண்டும். |
| 11:45 | Segment with Given Length toolஐ க்ளிக் செய்து பின் புள்ளி Dஐ க்ளிக் செய்யவும் |
| 11:51 | Segment with Given Length text box திறக்கிறது |
| 11:55 | Length text boxல் டைப் செய்க c,பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
| 12:01 | AB போன்ற நீளம் கொண்ட DF segment கிடைமட்ட திசையில் வரையப்படுகிறது. |
| 12:07 | Circle with Centre through Point toolஐ க்ளிக் செய்யவும் |
| 12:11 | முதலில் புள்ளி Dயிலும் பின் புள்ளி Fயிலும் க்ளிக் செய்யவும் |
| 12:16 | D இல் மையத்தை கொண்டு F வழியாகச் செல்லும் ஒரு வட்டம் வரையப்படுகிறது. |
| 12:21 | d வட்டம் g வரியை இரண்டு புள்ளிகளில் intersect செய்கிறது என்பதைக் கவனிக்கவும். |
| 12:26 | Intersect toolஐ க்ளிக் செய்து பின் intersection புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
| 12:33 | இப்போது நமது வரைபடத்தை முடிக்க வட்டம் d, வரி g, புள்ளிகள் D prime மற்றும் F மற்றும் segment h ஆகியவற்றை மறைப்போம். |
| 12:42 | இதனை மறைக்க, Algebra viewவில் உள்ள objectகளுடன் தொடர்புடைய நீலப் புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
| 12:50 | Segment toolஐ பயன்படுத்தி புள்ளிகள் D G, G, E மற்றும் D, Hஐ இணைக்க அவற்றை க்ளிக் செய்யவும் |
| 13:01 | இங்கு DGE மற்றும் DHE ஆகிய இரண்டு முக்கோணங்களைக் காண்கிறோம். |
| 13:08 | Algebra view வில் முக்கோணம் DGE, ABC முக்கோணத்துடன் பொருந்துகிறது என்பதை கவனிக்கவும். |
| 13:15 | இப்போது நாம் பக்கங்களின் நீளத்தை ஒப்பிடுவோம். |
| 13:19 | Distance or Length tool ஐ க்ளிக் செய்யவும். segmentகள் AB, BC, AC, DG, DE மற்றும் GEஐ க்ளிக் செய்யவும் |
| 13:35 | AB = DG, BC=DE, AC=GE. என்பதை கவனிக்கவும் |
| 13:45 | இது அனைத்து பக்கங்களும் congruentஆக இருப்பதைக் குறிக்கிறது. மேலும் கோணம் alpha என்பது beta கோணத்திற்குச் சமம். |
| 13:53 | முக்கோணங்கள் ABCமற்றும் DGE, SAS congruency விதியைப் பயன்படுத்தி congruentஆக இருக்கும். |
| 14:01 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
| 14:04 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, congruent முக்கோணங்களை உருவாக்கி அவற்றின் congruencyஐ நிரூபிப்பது |
| 14:13 | பயிற்சியாக, இரண்டு முக்கோணங்களை உருவாக்கி பின்வருவனவற்றை நிரூபிக்கவும், 1. Angle Angle Side congruency விதி 2. Hypotenuse Leg congruency விதி |
| 14:26 | உங்கள் பயிற்சி பின்வருமாறு இருக்க வேண்டும். |
| 14:31 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
| 14:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
| 14:47 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
| 14:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
| 15:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |