DWSIM-3.4/C2/Sensitivity-Analysis-and-Adjust/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 DWSIM குறித்த இந்த spoken tutorialக்கு நல்வரவு.
00:04 இந்த டுடோரியலில்,sensitivity analysis மற்றும் adjust செய்யக் கற்போம்.
00:12 இந்த டுடோரியலில், ஒரு separationக்கு, துல்லியமான Reflux Ratioஐ தீர்மானிப்போம்.
00:19 இதை முதலில் Sensitivity Analysis மூலம் செய்வோம்.
00:24 இதை Adjust operation மூலம் மீண்டும் செய்வோம்.
00:28 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன்.
00:34 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வருவன உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்:DWSIMல், ஒரு simulation fileஐ எப்படி திறப்பது, Rigorous distillation simulationஐ எப்படி செய்வது, ஒரு Flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது.
00:48 எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot org, இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்களின் விவரங்களை தருகிறது.
00:55 இந்த தளத்திலிருந்து, இந்த டுடோரியல்கள் மற்றும் தொடர்புடைய எல்லா fileகளையும் நீங்கள் அணுகலாம்.
01:02 இந்த slide, முன்நிபந்தனை டுடோரியல்கள் ஒன்றில், தீர்க்கப்பட்ட பிரச்சனையை காட்டுகிறது.
01:08 இது, Rigorous distillationஐ பயன்படுத்தி தீர்க்கப்பட்டது.
01:12 விரும்பியதைவிட குறைவான purityயே கிடைத்தது.
01:17 Purityஐ எப்படி மேம்படுத்துவது?
01:19 நாம் reflux ratioஐ அதிகரிக்க வேண்டும்.
01:23 இதற்கு தொடர்புடைய fileஐ, DWSIMல் திறப்போம்.
01:28 Fileன் பெயர், headingல் உள்ளது.
01:30 நான் ஏற்கனவேDWSIMஐ, திறந்துள்ளேன்.
01:34 நான் ஏற்கனவே, rigorous dot dwxml fileஐ, திறந்துவிட்டேன்.
01:40 எங்கள் வலைத்தளமான, spoken tutorial dot orgல் இருந்து, இந்த fileஐ நீங்கள் download செய்யலாம்.
01:48 Distillateஐ க்ளிக் செய்வோம்.
01:50 Properties sectionல், item 2ஆன, Molar Compositionஐ கண்டறிவோம்.
02:00 Mixtureக்கு பக்கத்தில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்வோம்.
02:04 Benzene mole fraction, 0.945 ஆகும்.
02:09 இதை, 0.95க்கு அதிகரிப்போம்.
02:13 Reflux ratioஐ அதிகரித்து, இதை, முயற்சி செய்வோம்.
02:18 சிறிது நேரத்திற்கு முன்பு, இதைத் தான் நாம் slideல் கண்டோம்.
02:22 File பட்டனுக்கு வலது பக்கத்தில் இருக்கும், Menu barல் இருந்து, Optimization optionஐ கண்டறியவும்.
02:28 அதை க்ளிக் செய்து, பின் Sensitivity Analysis option ஐ க்ளிக் செய்கிறேன். ஒரு window தோன்றுகிறது.
02:37 Sensitivity analysisன் menu barல், ஐந்து menuக்களை நாம் காணலாம்.
02:43 Sensitivity Studiesஐ கண்டறியவும்.
02:47 அது தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், அதை க்ளிக் செய்யவும்.
02:51 இப்போது, Case Manager என்ற titleன் கீழ், நான்கு optionகள் கொண்ட ஒரு பெட்டியைக் காணலாம்.
02:58 New option ஐ க்ளிக் செய்யவும்.
03:01 இது, ஒரு புது Sensitivity Analysis caseஐ உருவாக்க உதவும்.
03:07 SACase0 என்ற பெயரை நாம் காண்கிறோம்.
03:12 நாம் தீர்க்க வேண்டிய சிக்கலை நினைவு கூறவும்:
03:14 சிறந்த purityஐ பெறுவதற்கு, நாம் reflux ratioஐ அதிகரிக்க வேண்டும்.
03:19 ஆகையால், reflux ratio தான் independent variable.
03:24 Independent Variables பட்டன் மூலம், இதை செயலாக்குவோம்.
03:29 Object பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும், வெற்று இடத்தை க்ளிக் செய்கிறேன்.
03:34 நமது distillation columnன் பெயரான, DC-000ஐ க்ளிக் செய்யவும்.
03:40 வலது பக்கத்தில், Property என்ற ஒரு option இருக்கிறது.
03:45 அதை உள்ளே கொண்டு வருகிறேன்.
03:47 Down-arrowஐ க்ளிக் செய்கிறேன்.
03:50 Scroll down செய்து, Condenser_Specification_Valueஐ கண்டறிகிறேன்.
03:55 இந்த menuவின் கடைசியில், அது இருக்கிறது.
03:57 அது, reflux ratioவின் பங்கை செய்கிறது.
03:59 அதை க்ளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும்.
04:03 அது தேர்ந்தெடுக்கப்பட்டதை இங்கு நீங்கள் காணலாம்.
04:07 நமது reflux ratio, 2ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நினைவு கூறவும்.
04:12 அதனால், Lower limitஐ 2 என enter செய்வோம்.
04:16 Upper limit ஐ, 2.5க்கு மாற்றவும்.
04:20 Number of Points ஐ, 6க்கு மாற்றவும்.
04:24 அடுத்து, Dependent Variable ஐ, க்ளிக் செய்வோம்.
04:27 இடது பக்கத்தில், Variables என்ற ஒரு columnஐ காணவும்.
04:33 Variableகளை சேர்க்க, அதன் கீழ் இருக்கும், பச்சை வண்ண, plus பட்டனை க்ளிக் செய்யவும்.
04:41 ஒரு புது row தோன்றுகிறது. Objectன் கீழ் இருக்கும் down-arrowஐ க்ளிக் செய்யவும்.
04:46 அதை இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும்.
04:48 Distillate என்ற optionஐ க்ளிக் செய்யவும்.
04:52 Propertyன் கீழ் இருக்கும் down-arrowஐ க்ளிக் செய்கிறேன்.
04:56 ஒரு drop-down menuஐ திறக்க, இதையும் நீங்கள் இரு முறை க்ளிக் செய்ய வேண்டி இருக்கும்.
05:01 Molar Fraction (Mixture) – Benzeneஐ கண்டறியவும்.
05:05 அதை அடைய, நீங்கள் scroll down செய்ய வேண்டும்.
05:08 அதைப் போலவே இருக்கும், வேறு optionகளும் உள்ளன.
05:12 இதை தேர்வு செய்ததை உறுதி செய்து, பின், க்ளிக் செய்யவும்.
05:17 அது தேர்ந்தெடுக்கப்பட்டு, tabல் தோன்றும். பின், Resultsஐ க்ளிக் செய்யவும்.
05:24 Start Sensitivity Analysis என்ற optionஐ நாம் காணலாம். அதை க்ளிக் செய்கிறேன்.
05:31 Reflux ratioகளுக்கு, column, ஒவ்வொன்றாக simulate செய்யப்படுவதை நாம் காண்கிறோம்.
05:36 Simulationன் முடிவில், Done messageஐ நாம் பெறுகிறோம்.
05:40 2ல் இருந்து, 2.5 வரை உள்ள ஆறு Reflux ratioகளுக்கு, முடிவுகளை நீங்கள் காண்கிறீர்கள்.
05:49 அதற்கான benzene compositionகளையும் நாம் காண்கிறோம்.
05:54 நாம், Independent Variableகளுக்கு திரும்பிச் செல்லலாம்.
05:58 Pointகளின் எண்ணிக்கையை 11க்கு மாற்றவும். Resultsக்கு திரும்பவும்.
06:05 மீண்டும் Start Sensitivity Analysisஐ க்ளிக் செய்யவும்.
06:10 பதினொறு runகள் முடிவு பெறுவதை நீங்கள் காணலாம்.
06:14 Scroll up செய்வோம்.
06:17 விரும்பிய purityஆன, 0.95, 2.05 மற்றும் 2.1க்கு இடையே அடையப் பெறுவதை நீங்கள் காணலாம்.
06:26 இவைகளை, Independent Variableகளில், lower மற்றும் upper limitகளாக, தேர்வு செய்து, மீண்டும் செய்யலாம்.
06:34 ஆனால், அதை நான் இப்போது செய்யப் போவதில்லை.
06:36 இதே முறையில் தொடர்ந்து, 0.95 purityக்கு தேவையான, துல்லியமான reflux ratioஐ நாம் தீர்மானிக்கலாம்.
06:45 நான் உங்களுக்கு ஒரு பயிற்சியைத் தருகிறேன். 0.95 purityக்கு தேவையான,reflux ratioஐ உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
06:52 நான் சற்று முன் விளக்கிய, செயல்முறையை பின்பற்றவும்.
06:56 நான் உங்களுக்கு விடையைத் தருகிறேன். அது சுமார் 2.067 இருக்கும்.
07:01 இந்த முடிவுகளை ஒரு graphical formலும் நாம் காணலாம்.
07:07 Chart optionஐ க்ளிக் செய்யவும்.
07:10 Draw optionஐ க்ளிக் செய்யவும். இங்கு நீங்கள் chartஐ காணலாம்.
07:15 Distillate compositionக்கு எதிராக condenser specification value, அதாவது, reflux ratio.
07:24 இந்த pop-upஐ மூடுகிறேன்.
07:26 இந்த simulationஐ, "sensitivity" என சேமிக்கிறேன்.
07:36 அடுத்த பயிற்சிக்கு செல்வோம்.
07:39 முந்தைய பயிற்சியில், ஒரு இரண்டாம் dependent variableஐ சேர்க்கவும்: Benzene mole fraction in the bottoms.
07:46 Distillate மற்றும் bottoms compositionகள் இரண்டையும் கண்காணிக்கவும்.
07:51 Chartஐ பயன்படுத்தி, இரண்டு profileகளை எப்படி plot செய்வது என்று கண்டுபிடிக்கவும்.
07:55 மற்றொரு பயிற்சியை செய்வோம்.
07:59 நாம் பயிற்சி 1ல் பார்த்த, reflux ratio, 2.067, வேலை செய்யுமா என்று சரி பார்க்கவும்.
08:06 இதற்கு, மீண்டும், rigorous.dwxmlஉடன் தொடங்கவும்.
08:11 Reflux ratioஐ, 2.067க்கு மாற்றவும்.
08:15 Simulate செய்யவும்.
08:17 என்ன distillate composition உங்களுக்கு கிடைக்கிறது?
08:20 விரும்பிய Reflux ratioஐ, trail மற்றும் errorஆல் கணக்கீடு செய்தோம்.
08:27 இதை நேராக கணக்கீடு செய்ய, DWSIM, ஒரு சக்தி வாய்ந்த methodஐ கொண்டுள்ளது.
08:32 அது Adjust எனப்படுகிறது.
08:35 வலது பக்கத்தில் இருக்கும், object paletteல் இருந்து, Adjust ஐ கண்டறிவோம்.
08:42 அதை flowsheetக்கு இழுத்து, columnக்கு வெளியே, distillateக்கு கீழ் விடவும்.
08:49 அதை க்ளிக் செய்து, தேர்வு செய்கிறேன்.
08:52 Properties tabல், Controlled variable என்ற ஒரு option ஐ நாம் காண்கிறோம்.
08:58 இது, distillate composition என்ற dependent variableஉடன் ஒத்திருக்கிறது.
09:05 அது ஏற்கனவே திறக்கப்படவில்லை எனில், Controlled Variableன் இடது பக்கத்தில் இருக்கும், arrowஐ க்ளிக் செய்தால், இது திறக்கும்.
09:13 Click to Select என்று கூறும் இடத்தில் க்ளிக் செய்யவும்.
09:17 வலது ஓரத்தில் வரும் பட்டனை க்ளிக் செய்யவும்.
09:19 ஒரு pop-up தோன்றுகிறது. அது மூன்று columnகளை கொண்டிருக்கும்.
09:23 Typeன் கீழ் இருக்கும், Material Stream, தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அதை க்ளிக் செய்யவும்.
09:29 Object columnல், அதாவது, middle columnல், Distillateஐ தேர்ந்தெடுக்கவும்.
09:35 இது, வலது ஓரத்தில் இருக்கும் columnல், பல variableகளை உருவாக்குகிறது.
09:39 Molar Fraction (Mixture) – Benzene ஐ கண்டறியவும்.
09:44 Solid Phase entryகள் முடிந்தவுடன், அது இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
09:51 அதே போல், பல optionகள் இருப்பதால், கவனமாக இருக்கவும்.
09:55 OKஐ க்ளிக் செய்யவும்.
09:58 இது, Properties menuவில் பிரதிபலிக்கிறதா என்று சரி பார்க்கவும்.
10:04 மேலுலள்ள செயல்முறையை மீண்டும் செய்யவும்; ஆனால், இப்போது, Manipulated Variableஉடன்.
10:09 வலது பக்கத்தில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்யவும்.
10:12 Pop upல், scroll down செய்து, Distillation columnஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும்.
10:18 பின், DC-000ஐ க்ளிக் செய்து, Condenser_Specification_Valueஐ கண்டறியவும்.
10:26 அதை க்ளிக் செய்து, பின் OKஐ அழுத்தவும்.
10:31 இப்போது, Parameters propertyக்கு, வழக்கமான செயல்முறையை பின்பற்றவும்.
10:36 இதைக் காண, scroll down செய்யவும்.
10:40 Adjust Property Value என்ற option ஐ நாம் காணலாம்.
10:43 இந்த மதிப்பு, பொதுவாக 1 ஆகும்.
10:48 1ஐ நீக்கி, 0.95ஐ enter செய்யவும்.
10:52 நான் சிறிது பெரிய எண், 0.95001ஐ, enter செய்கிறேன்.
11:00 நான் ஏன் சிறிது பெரிய எண்ணை enter செய்தேன் என்று நீங்கள் யோசிக்க விழைகிறேன்.
11:06 இதற்கு சில வரிகளுக்கு கீழே, Simultaneous Adjust என்ற optionஐ காணவும்.
11:11 வழக்கமான வழியை பின்பற்றி, அதன் மதிப்பை, Trueக்கு மாற்றவும்.
11:18 அது தானாகவே கணக்கீடு செய்யவில்லை எனில், Playஐ அழுத்தி, பின் Recalculate Allஐ அழுத்தவும்.
11:26 எனக்கு, அது தானாகவே கணக்கீடு செய்தது. அதனால், நான் அவைகளை க்ளிக் செய்ய போவதில்லை.
11:32 சிறிது நேரத்தில், கணக்கீடுகள் நிறைவு பெறுகின்றன.
11:35 0.95 distillate purityக்கான, நமது குறிக்கோள் அடையப்பட்டு விட்டதா என்று சரி பார்ப்போம்.
11:42 Distillate ஐ தேர்வு செய்யவும்.
11:44 Molar Compositionன் ன் கீழ் இருக்கும், Mixture ஐ சரி பார்க்கவும்.
11:49 Benzene composition, 0.95ஆக இருப்பதை நாம் காணலாம்.
11:53 இப்போது, இதற்கு என்ன reflux ratio தேவை என்று சரி பார்ப்போம்.
11:59 இதற்கு, Distillation columnஐ க்ளிக் செய்யவும்.
12:02 Condenser Specificationன் ன் கீழ் இருக்கும், மதிப்பை சரி பார்க்கவும்.
12:08 2.067 என்ற மதிப்பை, நாம் காணலாம்.
12:13 இது, Sensitivity Analysisல், நாம் பெற்றதே ஆகும்.
12:18 இந்த simulationஐ, "adjust" என சேமிக்கிறேன்.
12:27 இதோ உங்களுக்கான அடுத்த பயிற்சி.
12:29 Distillateல், எனக்கு, 0.96 benzene mole fraction வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
12:36 என்ன reflux ratio தேவை?
12:39 நாம் முன்பு சிக்கல்களில் தீர்த்தது போல, நீங்கள் reflux ratioஐ மட்டும் மாற்றலாம்.
12:44 இதை முதலில், Sensitivity Analysisன் மூலம் தீர்க்கவும்.
12:47 உங்கள் கணக்கீடுகளை, Adjustஉடன் சரி பார்க்கவும்.
12:51 மேலும் ஒரு பயிற்சியை செய்வோம். இந்த columnல் நீங்கள் பெறக்கூடிய மிகவும் அதிகமான distillate purityஐ கண்டுபிடிக்கவும்.
12:58 முந்தைய பயிற்சிகளில் செய்தது போல், reflux ratioஐ மட்டும் நீங்கள் மாற்றலாம்.
13:03 படிப்படியாக தொடர்ந்து செயல்பட்டு, 0.99 mole fraction வரை நான் செல்ல முடியும்.
13:10 சுருங்கச் சொல்ல, பின்வருவனவற்றை, இந்த டுடோரியலில் கற்றோம்:
13:14 Sensitivity Analysisஐ எப்படி செய்வது
13:16 Solution rangeஐ எப்படி குறுகலாக்குவது
13:18 Adjustஐ பயன்படுத்தி, அதே முடிவுகளை எப்படி நேராக அடைவது
13:22 அதிகமாக deliver செய்ய, ஒரு plantஐ push செய்வதற்கு, Adjustஐ எப்படி பயன்படுத்துவது.
13:27 நாம், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
13:31 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
13:35 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
13:39 Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:47 இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா?
13:51 உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும்.
13:54 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும்.
13:56 FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
13:59 இந்த தளத்தை பார்க்கவும்.
14:02 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
14:08 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
14:12 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
14:16 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது.
14:21 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
14:25 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
14:28 ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
14:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey