DWSIM-3.4/C2/Overview-of-DWSIM/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | DWSIM, ஒரு open source chemical process simulator, குறித்த இந்த கண்ணோட்ட ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00:11 | இந்த டுடோரியலில் நாம் DWSIMஐ நிறுவக் கற்போம். |
| 00:15 | DWSIMஐ அறிமுகப்படுத்திக் கொள்வோம். |
| 00:18 | ஏற்கெனவே உள்ள, DWSIM ஸ்போகன் டுடோரியல்களின் மேலோட்டத்தைப் பார்ப்போம். |
| 00:23 | DWSIMக்கு கிடைக்கின்ற எல்லா சாத்தியமான உதவியை பற்றி கற்போம். |
| 00:28 | எந்த operating systemலும் இது வேலை செய்யும், ஆனால், நான் Windows 7ல் பதிவு செய்கிறேன். |
| 00:34 | Simulation என்றால் என்ன? |
| 00:36 | ஒரு mathematical modelஉடன் கூடிய ஒரு physical systemன் ஆய்வு, மற்றும் இந்த modelக்கான ஒரு கணிணி முறைத் தீர்வு . |
| 00:43 | Physical systemன் நடத்தையை கணிக்க, simulation உதவுகிறது. |
| 00:47 | அது மலிவான, பாதுகாப்பான, மற்றும் வேகமான ஒன்றாகும். |
| 00:51 | Real systemல், இந்த ஆய்வுகளை நடத்த வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. |
| 00:56 | இந்திய விண்வெளி பயணங்கள், குறைந்த பொருளாதாரத்திலும், ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திலும் செய்யப்படுகின்றன. |
| 01:02 | அதற்கான ஒரு முக்கிய காரணம், simulation ஆகும். |
| 01:05 | Reliance Jamnagar, தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய, தனித்த stream refineryஆக இருந்தது.(ரிபைநெரி) |
| 01:11 | அதுவும், குறைந்த நேரத்தில். Simulationக்கு மீண்டும் நன்றி. |
| 01:16 | பல commercial process simulatorகள் உள்ளன. |
| 01:19 | சில பொது நோக்க simulatorகள், இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன. |
| 01:23 | DWSIM என்றால் என்ன?
இது நவீன process simulator, Open source software, முற்றிலும் இலவசமானது, Daniel ஆல் உருவாக்கப்பட்டது, Gregorஆல் Thermodynamicக்கு ஆதரவு கொடுக்கப்படுவது, உலகமெங்கும் பயன்படுத்தப்படுவது |
| 01:39 | இப்போது, Windows 7ல், DWSIMஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன். |
| 01:45 | இங்கு காட்டப்பட்டுள்ள இணைப்புக்கு செல்லவும். |
| 01:50 | நான் ஏற்கனவே, இந்த இணைப்பில் உள்ளேன். Download பட்டனை க்ளிக் செய்யவும். |
| 01:55 | நான் ஏற்கனவே, இதைச் செய்துவிட்டேன். |
| 01:57 | நான் இந்த fileஐ பெற்றேன். |
| 02:00 | அது Downloads directoryல் உள்ளது. இங்கு இருக்கிறது. |
| 02:04 | அதன் பதிப்பை பொருத்து, இந்த fileன் பெயர் மாறலாம். |
| 02:10 | ரைட் க்ளிக் செய்து Run as an administratorஐ தேர்ந்தெடுக்கவும் |
| 02:15 | Nextஐ, க்ளிக் செய்யவும். |
| 02:18 | “I agree”ஐ, க்ளிக் செய்யவும். |
| 02:20 | Chemsep மற்றும் C++ libraryகள் இரண்டும் உங்களுக்கு தேவை. |
| 02:24 | இரண்டு boxகளையும் குறியிடவும். |
| 02:27 | Enterஐ அழுத்திக் கொண்டே இருக்க, DWSIM நிறுவப்படுகிறது. |
| 02:32 | இந்த செயல்பாட்டை பயன்படுத்தி, DWSIMஐ நான் ஏற்கனவே, நிறுவிவிட்டேன். |
| 02:36 | அதனால், இந்த நிறுவல் செயல்முறையை ரத்து செய்கிறேன். |
| 02:41 | yesஐ, க்ளிக் செய்யவும். |
| 02:43 | இந்த windowஐ சிறிதாக்குகிறேன். |
| 02:45 | Desktopல் இருக்கும் இதன் iconஐ டபுள் க்ளிக் செய்வதன் மூலம், DWSIMஐ திறக்கலாம். |
| 02:50 | நான் ஏற்கனவே DWSIMஐ, இங்கு திறந்துவிட்டேன். |
| 02:54 | நிறைய menuக்கள் மற்றும் இதன் உற்சாகத் திறனை நீங்கள் காணலாம். |
| 03:02 | DWSIM அற்புதமான, Help வசதியை கொண்டுள்ளது. |
| 03:06 | F1ஐ அழுத்தி, நீங்கள் அதை செயலாக்கலாம். |
| 03:09 | F1ஐ அழுத்துகிறேன். |
| 03:12 | நான் இந்த, Help பக்கத்தை பெறுகிறேன். |
| 03:14 | அது நிறைய தகவலை கொண்டிருக்கிறது. |
| 03:18 | Simulation Objectஐ அழுத்துகிறேன். |
| 03:22 | Unit Operationsஐ அழுத்துகிறேன். |
| 03:25 | Separator ஐ டபுள் க்ளிக் செய்கிறேன். |
| 03:29 | அது, இந்த, பக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. |
| 03:31 | Separator பற்றிய நிறைய தகவலை இது கொண்டிருக்கிறது. |
| 03:36 | இந்த windowஐ சிறியதாக்குகிறேன். |
| 03:39 | Slideக்கு செல்கிறேன். |
| 03:42 | DWSIMன் சில நன்மைகளை நான் சுட்டிக்காட்டுகிறேன். |
| 03:46 | இது முற்றிலும் இலவசமாகும். |
| 03:48 | இது, சிறந்த thermodynamics மற்றும் solverகளை கொண்டிருக்கிறது. |
| 03:52 | முழு source code எல்லோருக்கும் கிடைக்கிறது. |
| 03:56 | DWSIMன் manualகள், ஒவ்வொரு கணக்கீட்டையும் விளக்குகின்றன. |
| 04:00 | Commercial simulatorகள் இவற்றை ரகசியமாக வைத்திருக்கின்றன. |
| 04:04 | modelகள், compoundகள் மற்றும் thermodynamicsக்கான அறிமுகத்தை User பெறலாம். |
| 04:09 | ஒருவர், DWSIMன் thermodynamic libraryஐ, வேறு programகளுடன் பயன்படுத்தலாம். |
| 04:15 | எங்களிடம், DWSIM பற்றிய சிறந்த ஸ்போகன் டுடோரியல்கள் உள்ளன. |
| 04:19 | DWSIMல், material streamகளை உருவாக்குவதில் இருந்து தொடங்குவோம். |
| 04:24 | நான் ஏற்கனவே, எல்லாspoken tutorial களையும் download செய்துவிட்டேன். |
| 04:29 | அவற்றை ஒவ்வொன்றாக play செய்கிறேன். |
| 04:32 | இதை play செய்கிறேன். |
| 04:40 | அடுத்த டுடோரியல், Flowsheetingக்கான அறிமுகம் ஆகும். |
| 04:45 | இது, ஒரு flash மற்றும் ஒரு mixerஉடன் கூடிய, ஒரு எளிய flowsheetஐ உருவாக்குகிறது. |
| 04:50 | அதனை கேட்போம். |
| 04:59 | அடுத்த டுடோரியல், shortcut வழியாக, ஒரு distillation columnஐ எப்படி, simulate செய்வது என்பதை காட்டுகிறது. |
| 05:07 | அதனை கேட்போம். |
| 05:17 | அடுத்த டுடோரியல், rigorous distillation' கணக்கீடுகளை எப்படி செய்து முடிப்பது என்பதை காட்டுகிறது. |
| 05:23 | இதன் தொடக்க இடம், shortcut distillation ஆகும். |
| 05:27 | அதனை கேட்போம். |
| 05:36 | நான் இறுதியாக காட்ட திட்டமிட்டிருக்கும் டுடோரியல், sensitivity analysisஐ எப்படி செய்வது என்பதை விளக்குகிறது. |
| 05:42 | இது, சில variableகளுக்கு, மற்ற variableகள் மேல் இருக்கும் sensitivityஐ ஆய்வு செய்ய உதவுகிறது. |
| 05:49 | Adjust operation, இதை தானாகவே செய்கிறது. |
| 06:04 | நாம் இப்போது பார்த்த டுடோரியல்களின் சுருக்கம் இதோ. |
| 06:10 | DWSIMஐ பயன்படுத்தி, flowsheeting சிக்கல்களுக்கு, ஒருவர் விரைவாக தீர்வு காணலாம். |
| 06:15 | "What if" ஆய்வுகளை செய்து முடிக்கவும். |
| 06:18 | இடர்பாடுகள் மற்றும், throughputஐ அதிகரிப்பதற்கான வழிகளை அடையாளம் காணவும். |
| 06:23 | DWSIM, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். |
| 06:27 | அவர்கள் conceptகளை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். |
| 06:29 | இது தொழிலில் இலாபத்தை மேம்படுத்த உதவும். |
| 06:34 | அவர்கள், மேலும் நிறைய முக்கிய பொறியியல் வேலைகளைப் பெறுவார்கள். |
| 06:38 | ஒரு ஆலோசனை நிறுவனத்தை தொடங்க இருக்கும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். |
| 06:43 | இது ஒரு open source software என்பதால், உதவி கிடைக்காது என நீங்கள் நினைக்கலாம். |
| 06:49 | இது உண்மையா? இல்லவே இல்லை. |
| 06:53 | DWSIM userகளுக்கு, நிறைய உதவி கிடைக்கிறது. |
| 06:57 | அவற்றை ஒவ்வொன்றாக விளக்குகிறேன். |
| 07:00 | எங்களிடம் spoken tutorial forum உள்ளது. |
| 07:03 | இந்த இணைப்புக்கு செல்லவும். நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன். |
| 07:06 | Horizontal scrollஐ பயன்படுத்தவும். |
| 07:10 | View all previous questions பட்டனையும் நீங்கள் க்ளிக் செய்யலாம். |
| 07:14 | ஒரு நேரத்தில், ஒரே ஒரு software மீது மட்டுமே, நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். |
| 07:20 | அதன் பக்கத்தில் உள்ள lensஐ க்ளிக் செய்யவும். |
| 07:22 | உதாரணத்திற்கு Pythonஐ பற்றிய கேள்விகளை காட்டுகிறேன். |
| 07:28 | முந்தைய discussionஐ காண, log in செய்ய தேவையில்லை என்பதை நினைவு கொள்ளவும். |
| 07:34 | Ask Question ஐ க்ளிக் செய்வதன் மூலம், புது கேள்வியை நீங்கள் post செய்யலாம். |
| 07:38 | அது loginக்கு பக்கத்தில் இருக்கிறது. |
| 07:40 | அதை நான் க்ளிக் செய்கிறேன். ஒரு கேள்வியை post செய்ய, நீங்கள் log in செய்ய வேண்டும். |
| 07:45 | நீங்கள் பதிவு செய்யவில்லையெனில், ஒரு முறை பதிவு செய்யவேண்டும். |
| 07:50 | நான் ஏற்கனவே இந்த siteல் பதிவு செய்துவிட்டேன். |
| 07:53 | இதை க்ளிக் செய்து, log in செய்கிறேன். |
| 07:56 | நான் ஒரு categoryஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
| 07:59 | நான் DWSIMஐ தேர்ந்தெடுக்கிறேன். |
| 08:02 | உங்களுக்கு flowsheeting டுடோரியலில், ஒரு கேள்வி உள்ளதென வைத்துக் கொள்வோம். |
| 08:06 | Introduction to flowsheeting டுடோரியலை தேர்ந்தெடுக்கவும். |
| 08:11 | இந்த கேள்வி, 3 நிமிடம், 35 நொடிகளில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். |
| 08:16 | நிமிடத்தை, 3-4 என தேர்ந்தெடுக்கவும். |
| 08:19 | நொடியை, 30-40 என தேர்ந்தெடுக்கவும். |
| 08:23 | உங்கள் கேள்வியை இங்கு எழுதி, இந்த பச்சை பட்டனை பயன்படுத்தி, அதை submit செய்யவும். |
| 08:29 | நான் அடுத்த slideக்கு செல்கிறேன். |
| 08:31 | ஸ்போகன் டுடோரியலில் இருந்து இல்லாமல், உங்களுக்கு ஒரு பொதுவான கேள்வி இருந்தால்? |
| 08:36 | அதனால், அது நிமிடம் மற்றும் நொடியைக் கொண்டிருக்காது. |
| 08:39 | உதாரணத்திற்கு, DWSIMஐ பயன்படுத்தி, நீங்கள் தீர்க்க முயன்ற ஒரு புது சிக்கலுக்காக இருக்கலாம். |
| 08:46 | இதற்கு, FOSSEE குழுத் தலைமையிலான, வேறு forum எங்களிடம் உள்ளது. |
| 08:52 | நாம் அங்கு செல்வோம். |
| 08:55 | Horizontalஆக scroll செய்யும் menuல் இருந்து, ஒரு categoryஐ தேர்ந்தெடுக்கவும். |
| 08:59 | முந்தைய கேள்விகளை, நீங்கள் காணலாம். |
| 09:02 | இதை நான் க்ளிக் செய்கிறேன். |
| 09:04 | உதாரணத்திற்கு, FOSSEE laptop மீதான discussionஐ காண்போம். |
| 09:10 | Printerகளின் மீதான discussionஐ, உதாரணத்திற்கு, நீங்கள் காணலாம். |
| 09:14 | DWSIM பற்றிய எந்த கேள்வியையும், நீங்கள் கேட்கலாம். |
| 09:17 | Ask Question இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
| 09:21 | இதை செய்யவேண்டும் எனில், நீங்கள் log in செய்யவேண்டும். |
| 09:24 | ஆனால், முதலில் பதிவு செய்யவேண்டும். |
| 09:27 | வேறு வகையான உதவிக்கு செல்வோம். |
| 09:31 | Textbook companions என்ற ஒரு வசதி நம்மிடம் உள்ளது. |
| 09:35 | தரமான புத்தகத்திலிருந்து, தீர்க்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, இது DWSIM தீர்வைத் தருகிறது. |
| 09:41 | இந்த இணைப்பில் அது உள்ளது. |
| 09:44 | FOSSEEன் DWSIM பக்கத்திற்கு செல்கிறேன். |
| 09:49 | Textbook Companion Projectக்கான இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
| 09:53 | அது, என்னை இங்கு கொண்டு வருகிறது. |
| 09:55 | இங்கு, இந்த project க்கான அறிமுகத்தை நீங்கள் காணலாம். |
| 09:59 | நிறைவு பெற்ற, DWSIM textbook companionsஐ இங்கு நீங்கள் காணலாம். |
| 10:04 | அடுத்து, இந்த இணைப்பை காணவும். |
| 10:07 | அது, Lab Migration Project எனப்படும். |
| 10:09 | இதை, நான் அடுத்த slideல் விளக்குகிறேன். |
| 10:14 | Commercial simulatorகளை அடிப்படையாகக் கொண்ட labகளை, DWSIMக்கு இடம்பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
| 10:20 | இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியமும், சான்றிதழ்களும் வழங்குகிறோம். |
| 10:25 | மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை பார்க்கவும். |
| 10:29 | DWSIM உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்று நான் முன்பே கூறியுள்ளேன். |
| 10:35 | DWSIMன் userகள் மற்றும் இதை உருவாக்கியவர்கள் அனைவரும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர். |
| 10:40 | உலகமெங்கும் இருக்கும் நண்பர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி சிலவற்றை நாம் காண்போம். |
| 10:45 | Unit operations மீதான ஒரு சிறந்த manual உள்ளது. |
| 10:48 | நீங்கள் DWSIMஐ நிறுவும் போது, உங்களுக்கு ஒரு பிரதி கிடைக்கும். |
| 10:53 | அது DWSIMன், docs folderல் உள்ளது. |
| 10:59 | DWSIMன் தற்போதைய பதிப்பு, இதை Unit Ops and Utilities Guide என அழைக்கிறது. |
| 11:05 | நான் ஏற்கனவே இதை திறந்துவிட்டேன். |
| 11:07 | Scroll down செய்வோம். |
| 11:09 | Heat exchangerஐ க்ளிக் செய்து, கணக்கீடுகளைக் காண்போம். |
| 11:18 | கணக்கீடுகளை, இங்கு காண்கிறீர்கள். |
| 11:22 | இந்த manualஐ சிறியதாக்குகிறேன். அடுத்த slide, வேறு manualஐ பற்றி கூறுகிறது. |
| 11:28 | அதே folderல், properties manualஐ கண்டறியவும். |
| 11:31 | தற்போதைய பதிப்பில், அது tech manual எனப்படுகிறது. |
| 11:37 | நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். Fugacity(பிகாசிடி) calculation, எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கத்தை காண்போம். |
| 11:48 | இறுதியாக ஒரு உதவியை உங்களுக்கு காட்டுகிறேன். |
| 11:50 | அது ஒரு DWSIM discussion forum ஆகும். |
| 11:54 | நான் இங்கு ஒரு இணைப்பை கொடுத்திருக்கிறேன். இங்கு நீங்கள் முந்தைய discussionகளைக் காணலாம். |
| 11:57 | உங்கள் கேள்விகளையும் post செய்யலாம். |
| 12:01 | இதற்கு, நீங்கள் பதிவு செய்யவேண்டும். |
| 12:03 | நான் ஏற்கனவே அந்த பக்கத்தில் உள்ளேன். |
| 12:07 | இங்கு நிறுத்துகிறேன். |
| 12:09 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
| 12:13 | DWSIMஐ நிறுவுதல். |
| 12:15 | DWSIMன் மீதான ஸ்போகன் டுடோரியல்களை கண்டோம். |
| 12:19 | DWSIMஐ பயன்படுத்துவதற்கான காரணங்களின் விளக்கம். |
| 12:22 | ஸ்போகன் டுடோரியல்கள் மற்றும் FOSSEE projectகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் projectகள். |
| 12:28 | உலகளாவிய சமூகத்தில் இருந்து, DWSIMக்கு கிடைக்கும் உதவி. |
| 12:32 | உங்களுக்கு பத்து பயிற்சிகள் உள்ளன. |
| 12:35 | உங்கள் கணிணியில் DWSIMஐ நிறுவவும். |
| 12:38 | DWSIM திறக்கிறதா என்று சரி பார்க்கவும். |
| 12:41 | DWSIM interfaceஐ ஆராயவும். |
| 12:44 | ஒவ்வொரு menu மற்றும் பட்டனையும் பார்க்கவும். |
| 12:46 | DWSIMஆல் எவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று அடையாளம் காணவும். |
| 12:51 | முன்னர் காட்டப்பட்ட ஸ்போகன் டுடோரியல்களை பயிற்சி செய்யவும். |
| 12:55 | இதற்கு, இந்த டுடோரியலில் காட்டப்பட்ட, side-by-side methodஐ பயன்படுத்தவும். |
| 13:01 | இந்த டுடோரியலை play செய்கிறேன். |
| 13:10 | அடுத்த பயிற்சிக்கு செல்கிறேன். Spoken Tutorial discussion forumக்கு செல்லவும். |
| 13:15 | முந்தைய discussionகளை பார்க்கவும். |
| 13:18 | ஒரு டுடோரியலில், உங்களுக்கு உள்ள சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நேரம் குறிக்கப்பட்ட கேள்வியை கேட்கவும். |
| 13:23 | FOSSEE discussion forumக்கு செல்லவும். |
| 13:25 | DWSIM discussionஐ பார்க்கவும். |
| 13:28 | பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும். |
| 13:32 | DWSIMக்கு ஒரு textbook companionஐ உருவாக்கவும். |
| 13:36 | உங்கள் simulation labஐ, DWSIMக்கு இடம்பெயர்க்க, உதவி செய்யவும். |
| 13:41 | DWSIMஉடன் வரும் manualகளை படிக்கவும். |
| 13:45 | DWSIM உலகளாவிய சமூகத்தின், discussion forumக்கு செல்லவும். |
| 13:50 | முந்தைய discussionகளைப் பார்க்கவும். |
| 13:52 | பதிவு செய்து, log in செய்து, கேள்வியை கேட்கவும். |
| 13:56 | இறுதிப் பயிற்சிக்கு செல்கிறேன். |
| 13:59 | DWSIMஐ திறந்து, F1ஐ அழுத்தவும். |
| 14:03 | Help வசதியை ஆராயவும். |
| 14:05 | மேலும், இந்த இணைப்பில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும். |
| 14:11 | Help sectionல் இதை குறிப்பிட மறந்துவிட்டேன். |
| 14:15 | இந்த இணைப்பு உங்களை, இந்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். |
| 14:20 | Slideக்கு திரும்பிச் செல்கிறேன். |
| 14:23 | இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
| 14:27 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும். |
| 14:32 | Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
| 14:39 | ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
| 14:46 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |