DWSIM-3.4/C2/Introduction-to-Flowsheeting/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Flowsheeting க்கு அறிமுகம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், ஒரு mixerஐ simulate செய்து,
00:10 தொடர்ந்து, ஒரு flash separator, மற்றும் ஒரு இரு phase feedஐ கொடுக்கக் கற்போம்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 3.4ஐ பயன்படுத்துகிறேன்.
00:20 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, DWSIM பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:24 எங்கள் வலைத்தளமான, spoken hyphen tutorial dot orgல், இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
00:31 DWSIMஐ திறக்கிறேன்.
00:33 இரண்டு material streamகள் கொண்ட, flow-begin என்ற fileஐ நான் ஏற்கனவே திறந்துள்ளேன்.
00:40 நான் Raoult’s law மற்றும் CGS systemஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
00:43 இதைப் பெற, நான், File menu மற்றும் Open option ஐ பார்த்தேன். இதை நான் மூடுகிறேன்.
00:53 எங்கள்spoken tutorial வலைத்தளத்தில், இந்த file உள்ளது.
00:56 நீங்கள் இந்த fileஐ download செய்து பயன்படுத்தலாம் அல்லது தேவையான தகவலை manualஆக enter செய்யலாம்.
01:02 Flowsheet canvasல், Inlet1 மற்றும் Inlet2 என்ற இரண்டு streamகளை நீங்கள் காணலாம்.
01:08 அடுத்த slide, இந்த fileன் contentகளை சுருங்கச் சொல்கிறது.
01:13 இந்த streamகளை ஒன்றாகக் கலக்கும் போது, நமக்கு equimolar composition கிடைக்கிறது.
01:17 DWSIMன் கணக்கீடுகளை எளிதாக சரி பார்க்க, நாம் இந்த மதிப்புகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
01:23 DWSIMக்கு திரும்புவோம்.
01:25 இந்த streamகளினுள் vapor இருப்பதற்கு, நாம், அவற்றை மாற்றுவோம்.
01:31 Inlet 1ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:34 Properties tabன் முதலில், Specificationஐ கண்டறியவும். அதை க்ளிக் செய்யவும்.
01:40 Down-arrowஐ அழுத்தி, Pressure and Vapor Fraction ஐ தேர்வு செய்யவும்.
01:46 Scroll down செய்து, Molar Fraction Vapor Phaseஐ கண்டறியவும்.
01:53 இங்கு, 1 என்று enter செய்யவும், அதாவது, மொத்த streamமும், vaporஆக இருக்கிறது.
02:00 அதே முறையில், Inlet2ஐ, 50% Molar Fractionஐ கொள்ளச் செய்யவும்.
02:13 இப்போது, flowsheetக்கு ஒரு mixerஐ சேர்ப்போம்.
02:17 Object Paletteல் இருந்து, Mixerஐ கண்டறியவும். அது மூன்றாவது entry ஆகும்.
02:22 அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும்.
02:24 இப்போது, mixerன் பெயரை மாற்றுவோம்.
02:29 Appearance tabஐ க்ளிக் செய்யவும். முன்னிருப்பான பெயரை நீக்கி, Mixer என enter செய்யவும்.
02:36 இப்போது, mixerக்கு ஒரு output streamஐ சேர்ப்போம்.
02:40 Material Stream ஐ க்ளிக் செய்து, அதை flowsheetக்கு இழுக்கவும்.
02:45 எதையும் enter செய்யாமல், automatic pop-upஐ மூடுவோம். ஏனெனில், எல்லா output streamகளும் குறிப்பிடப்படாமல் இருக்க வேண்டும்.
02:54 இந்த streamன் பெயரைmixer-out என மாற்றுவோம்.
03:03 Streamகளை mixerஉடன் இணைக்கிறேன்.
03:05 Mixerஐ ஒருமுறை க்ளிக் செய்கிறேன்.
03:08 Selected Object windowவில், Properties தோன்றுகிறது.
03:12 Mixer, 6 inlet streamகள் வரை கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
03:19 Inlet Stream 1ஐ க்ளிக் செய்வோம்.
03:23 ஒரு menu ஐ குறிக்கின்ற, down-arrow ஒன்று தோன்றுகிறது.
03:27 இந்த arrow ஐ க்ளிக் செய்து, Inlet1ஐ தேர்வு செய்யவும்.
03:32 இவ்வாறே, Inlet Stream 2ல், Inlet2ஐ இணைக்கவும்.
03:37 இங்கு, Connected to Outlet என்று குறிப்பிடப்பட்டிருக்கும் outlet portஐ கண்டறியவும்.
03:43 அதை க்ளிக் செய்து, mixer-outஐ தேர்வு செய்யவும்.
03:49 Streamகளை சிறப்பாக align செய்ய, அவைகளை நகர்த்தலாம்.
03:54 Mixer, இன்னும் கணக்கிடப்படாததால், சிவப்பாக இருக்கிறது.
03:58 Configure simulation பட்டனின் வலது பக்கம் , Calculator இருக்கிறது.
04:02 அது பல optionகளை கொண்டிருக்கிறது. முதலாவது, solverஐ activate செய்வதற்கானplay பட்டன் ஆகும். அதை அழுத்தவும்.
04:09 இதன் வலது பக்கம் இருக்கும் இரண்டு பட்டன்கள், Recalculate நடவடிக்கைகானதாகும். அந்த பட்டனை க்ளிக் செய்யவும்.
04:17 Mixer இப்போது நீல நிறமாகி இருக்கும். இதன் பொருள், கணக்கீடுகள் முழுமையாக முடிந்துவிட்டன என்பதாகும்.
04:22 இப்போது, mixer-out streamஐ க்ளிக் செய்யவும்.
04:27 இதன் கணக்கிடப்பட்ட மதிப்புகளை, Properties tabல் நாம் காணலாம்.
04:31 அதன் composition, நாம் எதிர்பார்த்ததாக இருக்கிறதா என்று நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
04:37 Mixtureஐ டபுள் க்ளிக் செய்யவும்.
04:40 அது equimolar compositionஐ கொண்டிருக்கிறது.
04:43 இப்போது, ஒரு flash separatorஐ சேர்ப்போம்.
04:47 Object Palette ஐ scroll down செய்வோம்.
04:51 Separator Vessel ஐ கண்டறிவோம்.
04:56 VLE, LLE மற்றும் VLLE systemகளை simulate செய்ய இதை பயன்படுத்தலாம்.
05:01 அதை க்ளிக் செய்து, flowsheetக்கு இழுக்கவும்.
05:06 Separatorக்கு, இரண்டு output streamகளை நாம் இணைக்க வேண்டும்.
05:10 Material streamஐ இழுப்போம்.
05:13 அதன் propertyகள் கணக்கிடப்பட வேண்டுமாதலால், அதை குறிப்பிடாமல் விட்டுவிடுவோம்.
05:20 அதை, Vapour என பெயரிடுவோம்.
05:27 இவ்வாறே, மற்றோரு streamஐ உருவாக்கி, அதை, Liquid என பெயரிடவும்.
05:32 இப்போது, streamகளை Separatorஉடன் இணைப்போம்.
05:36 முதல் input portல், mixer-outஐ இணைப்போம்.
05:44 மொத்தமாக, மேலும் ஐந்து input streamகளை நாம் இணைக்கலாம்.
05:47 Separator , எல்லா streamகளையும் கலந்து, பின் பிரிக்கிறது. சொல்லப் போனால், ஒரு தனி mixer தேவையே இல்லை.
05:54 நாம் இப்போது காண்பது போல், ஒரு energy stream ஐ இணைக்க,
05:59 ஒரு portஐயும் இது கொண்டிருக்கிறது.
06:02 பயிற்சிப் பகுதியில், இந்த கருத்துக்களைப் பற்றி விவாதிப்போம்.
06:07 Vapour streamஐ, Vapour outlet portஉடன் இணைப்போம்.
06:13 இவ்வாறே, Liquid stream ஐ இணைக்கவும்.
06:21 மீண்டும், சிறந்தalignmentக்கு, itemகளை நாம் நகர்த்தலாம்.
06:26 DWSIM, கணக்கீடுகளை தானாகவே முடித்துவிட்டதை கவனிக்கவும்.
06:31 நீங்கள் Recalculate பட்டனையும் அழுத்தலாம்.
06:35 சொல்லப் போனால், உங்களுக்கு சந்தேகம் இருக்கும் போதெல்லாம், இதை நீங்கள் செய்ய வேண்டும்.
06:39 இப்போது, vapor மற்றும் liquid, separatorல், ஒழுங்காக பிரிக்கப்பட்டு உள்ளனவா என சரி பார்ப்போம்.
06:45 Stream, Vapourன், vapor phase mole fractionகளை காண்போம்.
06:52 Benzeneனின் mole fraction, 0.54 ஆகும்.
06:56 Mixer-out கொண்டிருப்பதுடன், இது ஒப்பந்தத்தில் உள்ளதா என சரி பார்ப்போம்.
07:04 DWSIM , தானாகவேvapor மதிப்பை காட்டுவதை நீங்கள் காணலாம். Benzene mole fraction, 0.54 ஆகும்.
07:13 Separator, எதிர்பார்த்தபடி வேலை செய்கிறது என்பதற்கு, இது ஒரு, மறைமுக ஆதாரம் ஆகும்.
07:18 Mixer ன் வேலையையும் நாம் சரி பார்க்கலாம்.
07:22 எதிர்பார்த்தபடி, Mixture composition, equimolarஆக இருப்பதை நீங்கள் காணலாம்.
07:29 சில வேறு checkகளை, Assignment Sectionக்கு, நாம் ஒத்தி வைப்போம்.
07:34 Save as optionஐ பயன்படுத்தி, இந்த fileஐ சேமிப்போம்.
07:39 அதை, flow-end என சேமிக்கிறேன்.
07:46 உங்கள் வேலையை, அடிக்கடி சேமிக்க, நான் அறிவுறுத்துகிறேன்.
07:49 சுருங்கச் சொல்ல,
07:52 ஒரு எளிய flowsheetஐ வரையறுத்தோம்.
07:54 Mixed feedஐ உருவாக்கும் முறையை விளக்கினோம்.
07:58 Mixer மற்றும் separatorஐ அறிமுகப்படுத்தினோம்.
08:00 அவற்றை எப்படி இணப்பது என்று காட்டினோம்.
08:02 Simulate செய்ய விளக்கினோம்.
08:04 சில பயிற்சிகளைத் தருகிறேன்.
08:07 இந்த slideல் உள்ள பயிற்சி, mass balances பற்றியது ஆகும்.
08:10 Streamகள் மற்றும் சாதனங்களை குறிக்க, நான் நீல நிறத்தை பயன்படுத்துகிறேன்.
08:15 அடுத்த பயிற்சிக்கு செல்வோம். இந்த slideல் குறிப்பிட்டுள்ளபடி, mole fractionகளை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.
08:20 மூன்றாவது பயிற்சி, Separator பற்றியது ஆகும்.
08:25 அதை, streamகளை கலக்க பயன்படுத்தலாம் என்று நாம் குறிப்பிட்டதை நினைவு கூறவும்.
08:30 Mixer மற்றும் mixer-outஐ நீக்கி, அதை முயற்சி செய்யவும்.
08:35 அடுத்த பயிற்சியில், அதிக வெப்ப நிலையில், நீங்கள் பிரித்தெடுத்தலை செய்வீர்கள்.
08:41 Separatorஐ க்ளிக் செய்யவும். Scroll up செய்வோம்.
08:46 Override separation temperatureஐ, true'க்கு மாற்றுவோம்.
08:52 Resulting fieldல், மதிப்பை, 100க்கு மாற்றவும்.
08:59 Object Paletteல் இருந்து, Energy streamஐ, Flowsheetக்கு கொண்டு வரவும். இது ஒரு புது stream ஆகும்.
09:07 நான் முன்பு காட்டியபடி, இந்த streamஐ, Separatorன், Energy Streamக்கு இணைக்கவும்.
09:13 உங்கள் முடிவுகளை, simulate செய்து, ஆய்வு செய்யவும்.
09:16 இது, இந்த slideல் சுருங்கச் சொல்லப்பட்டு உள்ளது.
09:22 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:26 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:31 Spoken Tutorialகளை பயன்படுத்தி, நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:37 இந்த Spoken Tutorialலில், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா?
09:39 உங்கள் கேள்விக்கான, minute மற்றும் secondஐ தேர்வு செய்யவும்.
09:43 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கிச் சொல்லவும்.
09:45 FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
09:51 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
09:55 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
10:00 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:04 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு migrate செய்ய உதவுகிறது.
10:09 இதைச் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம்.
10:13 மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:17 ஸ்போகன் டுடோரியல், மற்றும் FOSSEE projectகளுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey