COVID19/C2/Making-a-protective-face-cover-at-home/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 வீட்டிலேயே ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை எப்படி தயாரிப்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:10 ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை அணிய வேண்டியதன் அவசியம்.
00:14 சுகாதார ஊழியர்கள் மற்றும் COVID-19 நோயாளிகளுக்கான முக்கியமான எச்சரிக்கைகள்.
00:20 பாதுகாப்பு முகக்கவசங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்.
00:25 ஒரு தையல் இயந்திரத்துடனும் மற்றும் அது இல்லாமலும் ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை செய்வதற்கான செயல்முறை.
00:32 பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவதற்கு முன் மற்றும் அகற்றும் போது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.
00:38 முகக்கவசத்தை சுத்தப்படுத்தவும் பாதுகாப்பாக வைப்பதற்குமான சரியான வழி
00:44 ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை அணிய வேண்டியதன் அவசியத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
00:50 கொரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, முகக்கவசத்தை அணிவது முக்கியம்.
00:56 இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், முகக்கவசத்தை அணிவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.
01:03 கொரோனா வைரஸைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், பல வகையான முக கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
01:10 அவற்றில், வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு முகக்கவசத்தை செய்வது எளிதானது, மேலும் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
01:18 மேலும் தொடர்வதற்கு முன் முக்கியமான எச்சரிக்கைகளை நினைவில் கொள்க.
01:23 வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் சுகாதார ஊழியர்களுக்கு அல்ல.
01:28 இது COVID-19 நோயாளிகளுடன் பணிபுரியும் அல்லது தொடர்பில் இருப்பவர்களுக்கும் அல்ல.
01:37 COVID-19 நோயாளிகள் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தக்கூடாது.
01:42 அத்தகைய நபர்கள் அனைவரும் குறிப்பிட்ட பாதுகாப்பு கியரை மட்டுமே அணிய வேண்டும்.
01:48 நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் உள்ளன.
01:53 வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் முழு பாதுகாப்பை அளிக்காது.
01:58 அவை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளிவந்து காற்றில் மிதக்கும் துளிகளை சுவாசிக்கும் வாய்ப்புகளை மட்டுமே குறைக்கின்றன.
02:06 முகக்கவசத்தை துவைக்காமல் பயன்படுத்த வேண்டாம்.
02:10 உங்கள் முகக்கவசத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
02:14 எல்லோரிடமும் குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளியை எப்போதும் பராமரிக்கவும்.
02:21 அடிக்கடி உங்கள் கைகளை சோப்புடன் 40 விநாடிகள் கழுவ வேண்டும்.
02:26 மறுபயன்பாடுடைய முகக்கவசத்தை வீட்டிலேயே உருவாக்க ஒரு எளிய முறையை இப்போது பார்ப்போம்.
02:33 இதை வீட்டில் எளிதாகக் கிடைக்கின்ற பருத்தி துணியைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்.
02:38 அதை தயாரிக்கும் போது வாய் மற்றும் மூக்கை அது முழுவதுமாக மூடுகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
02:44 முகத்தின் மீது எளிதாகக் கட்டிக்கொள்ள முடியுமாறு அது இருக்கவேண்டும்.
02:49 தையல் இயந்திரத்துடனும் மற்றும் அது இல்லாமலும் வீட்டில் முகக்கவசங்களை எளிதில் தயாரிக்கலாம்.
02:55 தையல் இயந்திரம் மூலம் பாதுகாப்பு முகக்கவசத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை முதலில் பார்ப்போம்.
03:02 உங்களுக்கு 100% பருத்தி துணி தேவை.
03:06 துணியின் நிறம் ஒரு பொருட்டல்ல.
03:10 தயாரிக்கும் முன், துணியை நன்றாக துவைத்து,
03:13 5 நிமிடம் உப்பு நீரில் கொதிக்க வைக்கவும்.
03:17 துணி நன்கு உலர்ந்தவுடன் அதைப் பயன்படுத்தவும்.
03:21 தேவையான பிற பொருட்கள்:
03:23 நான்கு துணி பட்டைகள்
03:26 கத்தரிக்கோல், மற்றும் ஒரு தையல் இயந்திரம்
03:29 ஒரு பாதுகாப்பு முகக்கவசம் தயாரிப்பதற்கான செயல்முறையை நான் விளக்குகிறேன்.
03:34 முதலில், முகக்கவசத்திற்கான துணியை வெட்டத் தொடங்குங்கள்.
03:39 பெரியவர்களுக்கு இது 9 அங்குல x 7 அங்குலமாக இருக்க வேண்டும்.
03:44 ஒரு குழந்தைக்கு அது 7 அங்குல x 5 அங்குலமாக இருக்க வேண்டும்.
03:50 இப்போது நாம் பட்டைகளை வெட்டுவோம்.
03:53 பெரியவர்களுக்கான முகக்கவசத்திற்கு piping கட்டுவதற்கு 4 நாடாக்களை வெட்டவும்.
03:59 ஒவ்வொன்றும் 1.5 அங்குல x 5 அங்குலங்கள் அளவிற்கு இருக்குமாறு இரண்டு துண்டுகளை வெட்டவும்.
04:05 1.5 அங்குல x 40 அங்குலங்கள் அளவிற்கு மேலும் இரண்டு துண்டுகளை வெட்டவும்.
04:11 Piping கட்டுவதற்கு 1.5 அங்குல x 5 அங்குல நாடாவை துணியின் ஒரு முனையுடன் இணைக்கவும்.
04:19 துணியை கீழ்நோக்கி மடித்து சுமார் 1.5 அங்குலம் அளவுடைய மூன்று மடிப்புகளை உருவாக்கவும்
04:28 மடிக்கப்பட்ட துணியை மறுபுறம் திருப்பி மடிப்புக்களை செய்வதற்கான படிகளை மீண்டும் பின்பற்றவும்.
04:34 இப்போது, துணியின் உயரம் 9 அங்குலத்திலிருந்து 5 அங்குலமாகக் குறைந்திருக்கும்.
04:42 இந்த மடிப்புகளை நிலையாக வைக்க இருபக்கமும் piping போல் மடித்து தைக்கவும்.
04:46 அனைத்து மடிப்புகளும் கீழ்நோக்கி இருக்க கூடுதல் கவனம் செலுத்தவும்.
04:51 அடுத்து முகக்கவசத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில் நீண்ட 40 அங்குல நாடாவை இணைக்கவும்.
04:59 மீண்டும் இந்த இரண்டு நாடாக்களையும் மூன்று முறை மடித்து தைக்கவும்.
05:05 உங்கள் முகக்கவசம் இப்போது பயன்படுத்தத் தயாராக உள்ளது.
05:09 அதை அணியும் போது, முகக்கவசத்திற்கும் உங்கள் முகத்திற்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது.
05:15 நீங்கள் எதிர்கொள்ளும் பக்கத்தின் மடிப்பு கீழ்நோக்கி இருக்கவேண்டும்.
05:21 முகக்கவசத்தின் மறுபக்கத்தை மறுபயன்பாட்டிற்காக நீங்கள் ஒருபோதும் உபயோகிக்க கூடாது
05:24 ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னும் அதை நன்கு சுத்தம் செய்யவும்.
05:28 உங்கள் முகத்தையோ கண்களையோ தொடக்கூடாது.
05:31 வீட்டிற்கு வந்ததும் கைகளை நன்கு கழுவவும்.
05:35 தையல் இயந்திரம் இல்லாமல் முகக்கவசத்தை எப்படி உருவாக்குவது என்பதை இப்போது பார்ப்போம்.
05:41 உங்களுக்கு தேவையானவை: 100% தூய பருத்தித்துணி அல்லது ஆடவர் உபயோகிக்கும் பருத்தியால் ஆன கைக்குட்டை
05:47 மற்றும் 2 ரப்பர் பேண்டுகள்.
05:50 பாதுகாப்பு முகக்கவசத்தை செய்வதற்கான செய்முறையை இப்போது விளக்குகிறேன்.
05:55 கைக்குட்டையை ஒரு பக்கத்திலிருந்து, நடு பகுதிக்கு சிறிது மேலே வருமாறு மடிக்கவும்.
06:01 இப்போது முதல் மடிப்பிற்கு மேலே கைக்குட்டையின் மறுபக்கம் செல்லுமாறு மடிக்கவும்.
06:07 இதை மீண்டும் நடுவிலிருந்து சமமாக மடிக்கவும்.
06:11 ஒரு ரப்பர் பேண்டை எடுத்து துணியின் இடது பக்கத்தில் கட்டவும்.
06:15 இப்போது மற்றொரு ரப்பர் பேண்டை மறுபுறம் கட்டவும்.
06:20 இரண்டு ரப்பர் பேண்டுகளின் நடுவில் உள்ள பகுதி போதிய அளவு பெரிதாக இருக்க உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
06:25 இது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூட உதவும்.
06:30 ரப்பர் பேண்டின் பக்கத்தில் இருக்கும் துணியின் ஒரு விளிம்பை எடுத்து அதன் மேலே மடிக்கவும்.
06:36 இருபுறமும் இதையே செய்யவும்.
06:38 இப்போது ஒரு மடிப்பை எடுத்து மற்றொரு மடிப்பிற்குள் சொருகவும்.
06:43 உங்கள் முகக்கவசம் இப்போது பயன்படுத்தத் தயாராக உள்ளது.
06:47 இந்த முகக்கவசத்தை அணிய, ரப்பர் பேண்டுனாலான நாடாவை உங்கள் காதுகளில் மாட்டிக்கொள்ளவும்.
06:53 முன்பு கூறியது போல் முகக்கவசம் உங்கள் வாய் மற்றும் மூக்கை சுற்றி பொருந்துகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
07:00 உங்கள் முகத்திற்கும் முகக்கவசத்திற்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது.
07:04 வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றவும்.
07:10 முகக்கவசத்தை அணிவதற்கு முன் உங்கள் கைகளை நன்கு கழுவவும்.
07:14 முகக்கவசம் ஈரமானாலோ அல்லது ஈரப்பதம் அடைந்தாலோ வேறு முகக்கவசத்தை பயன்படுத்தவும்.
07:21 முகக்கவசத்தை ஒருமுறை பயன்படுத்திய பிறகு, அடுத்த பயன்பாட்டிற்கு அதை துவைத்து வைக்கவும்.
07:27 வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியான முகக்கவசத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
07:32 முகக்கவசத்தை கழற்றும் போது முகக்கவசத்தின் முன் அல்லது வேறு எந்த மேற்பரப்பையும் தொடக்கூடாது.
07:38 பின்னால் உள்ள நாடாக்கள் அல்லது ரப்பர் பேண்டுகளை கொண்டு மட்டுமே அதை கழற்றவும்.
07:43 நாடாக்கள் கொண்ட முகக்கவசத்திற்கு எப்போதும் கீழே உள்ள நாடாவை முதலிலும் மேலே உள்ள நாடாவை அடுத்தும் அவிழ்க்கவும்.
07:51 அகற்றிய பின் உடனடியாக உங்கள் கைகளை சோப்பு தண்ணீரில் குறைந்தது 40 வினாடிகள் கழுவவும்.
07:58 நீங்கள் 65% ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியையும் பயன்படுத்தலாம்.
08:04 முகக்கவசத்தை சரியாக எப்படி சுத்தம் செய்வது என்று நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.
08:09 கட்டாயமாக இம்முறையைப் பின்பற்றவும்.
08:12 முகக்கவசத்தை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும்.
08:17 குறைந்தது 5 மணி நேரம் சூடான வெயிலில் உலர விடவும்.
08:21 இல்லையெனில் சுத்தம் செய்ய, ஒரு பிரஷர் குக்கரை நீங்கள் பயன்படுத்தலாம்.
08:25 ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீரை ஊற்றி, அதில் முகக்கவசத்தை போடவும்.
08:29 அதில் உப்பை சேர்த்து, குறைந்தது 10 நிமிடங்களுக்கு அதை கொதிக்க விடவும்.
08:33 பின், அதனை வெளியே எடுத்து ஒரு சுத்தமான இடத்தில் உலர விடவும்.
08:38 முகக்கவசத்தை சூடான நீரிலும் 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிடலாம்.
08:44 பிரஷர் குக்கர்/கொதிக்கும் நீர் உங்களிடம் இல்லை என்றால், ஒரு சோப்பை பயன்படுத்தவும்.
08:51 முகக்கவசத்தை சோப்பினால் துவைத்து சுத்தம் செய்யவும்
08:54 மற்றும் முகக்கவசத்தை 5 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்தவும்.
08:59 வெப்பப்படுத்த ஒரு சலவைப்பெட்டியை நீங்கள் பயன்படுத்தலாம்.
09:04 நீங்கள் இரண்டு முகக்கவசங்களை தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
09:09 நீங்கள் ஒன்றை அணிந்து கொண்டு, மற்றொன்றை துவைத்து உலர்த்திக்கொள்ளலாம்.
09:13 இப்போது, சுத்தமான முகக்கவசத்தை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்று கற்போம்.
09:18 ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொள்ளவும், சோப்பு மற்றும் தண்ணீரால் அதை நன்கு சுத்தம் செய்யவும்.
09:23 அதன் இருபுறங்களையும் நன்றாக உலர விடவும்.
09:27 கூடுதலான முகக்கவசத்தை இந்த சுத்தமான பையில் அடைத்து வைக்கவும்.
09:32 இப்போது நீங்கள் தினசரி பயன்பாட்டிற்கு உங்கள் முகக்கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
09:38 இத்துடன் நாம் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:41 இந்த டுடோரியலில், நாம் கற்றதை சுருங்கச் சொல்ல.
09:45 Coronavirusற்காக ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை அணிய வேண்டியதன் அவசியத்தை கற்றோம்.
09:51 முக்கியமான எச்சரிக்கைகள் பற்றியும் கற்றோம்.
09:54 வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தக்கூடாது.
09:59 COVID-19 நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடாது.
10:05 COVID-19 நோயாளிகளும் இந்த முகக்கவசங்களை பயன்படுத்தக்கூடாது.
10:10 அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட பாதுகாப்பு கியரை கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும்.
10:15 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் நாம் கற்றோம்.
10:19 வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் முழு பாதுகாப்பை அளிக்காது.
10:23 ஒரு முகக்கவசத்தை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தக்கூடாது மற்றும் யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
10:29 குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவும்.
10:34 அடிக்கடி உங்கள் கைகளை சோப்புடன் 40 விநாடிகளுக்கு கழுவவும்.
10:39 ஒரு தையல் இயந்திரத்துடனும் மற்றும் அது இல்லாமலும் ஒரு பாதுகாப்பு முகக்கவசத்தை செய்வதற்கான செயல்முறையையும் நாம் கற்றோம்.
10:45 பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவதற்கு முன் மற்றும் அகற்றும் போது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.
10:51 முகக்கவசத்தை சுத்தப்படுத்தவும் பாதுகாப்பாக வைப்பதற்குமான சரியான வழி.நன்றி

Contributors and Content Editors

Jayashree