Arduino/C2/Arduino-with-Tricolor-LED-and-Push-button/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Interfacing Arduino with Tricolor LED and Pushbutton குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு tricolor LED Arduino board க்கு இணைப்பது,
00:17 tricolor LED ஐ பிலிங்க் செய்ய வைக்க ஒரு programஐ எழுதுவது மற்றும் பிலிங்க்கிங்கை கட்டுப்படுத்த ஒரு Push buttonஐ பயன்படுத்துவது
00:27 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:31 Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:39 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு மற்றும் C அல்லது C++ programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு,
00:52 பின்வரும் சில வெளிப்புற சாதனங்களும் நமக்கு தேவைப்படுகின்றன: Tricolor LED, Resistor,
01:01 Breadboard, Jumper Wires மற்றும் Pushbutton.
01:08 இந்தப் பரிசோதனைக்குத் தேவையான வெளிப்புறச் சாதனங்களின் படங்களைப் பார்ப்போம்.
01:16 இது Common Cathode Tricolor LED எனவும் அழைக்கப்படுகிறது
01:22 இது நான்கு pinகளை கொண்டுள்ளது. Cathode மிக நீளமான pin ஆகும்
01:27 மீதமுள்ள மூன்று pinகள் சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ண LEDகளுக்கானவை.
01:34 Cathode pin என்பது சிவப்பு, பச்சை மற்றும் நீல LEDகளுக்குப் பொதுவான ground pin ஆகும்.
01:42 Resistor என்பது எலக்ட்ரானிக் சர்க்யூட்டில் மின்னோட்டத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு மின் கூறு ஆகும்.
01:50 செயலில் உள்ள சாதனத்திற்கு ஒரு குறிப்பிட்ட மின்னழுத்தத்தை வழங்க கூட Resistorகளை பயன்படுத்தப்படலாம்.
01:57 எலக்ட்ரானிக் சர்க்யூட்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் breadboard இது தான்.
02:03 இதில் பல ஓட்டைகள் உள்ளன. இந்த துளைகளில் மின்னணு கூறுகள் சொருகப்பட்டு கம்பிகளைப் பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
02:12 Jumper wireகள் என்பன ஒவ்வொரு முனையிலும் திடமான முனையுடன் கூடிய குறுகிய மின் கம்பிகள் ஆகும்.
02:19 Jumper wireகள் ஒரு breadboardல் கூறுகளை ஒன்றோடொன்று இணைக்கப் பயன்படுகிறது.
02:25 இப்போது இணைப்பு circuitன் விவரங்களைப் பார்ப்போம்.
02:30 இந்த circuit மிகவும் எளிமையானது. Cathode pin இதுபோன்ற கருப்பு கம்பியைப் பயன்படுத்தி ground pin இன் Arduino போர்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:41 சிவப்பு, பச்சை மற்றும் நீலம் pinகள், pin எண்கள் 12, 11 மற்றும் 10 உடன் resistorகளைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளன.
02:51 நமக்கு ஏன் இங்கே resistorகள் தேவை? இது LEDகளுக்கு கொடுக்கப்படுகின்ற voltage ஐ கட்டுப்படுத்துவதற்கு ஆகும்.
02:58 ஒவ்வொரு நிறத்திற்கும் மூன்று மின்னோட்டத்தை கட்டுப்படுத்தும் resistorகள் தேவை. இங்கே, நான் 100 ohm resistorகளை பயன்படுத்துகிறேன்
03:08 நான் உங்களுக்கு நேரலை demoவை காட்டுகிறேன்.
03:11 இதுவே மினி breadboard. இங்கு நான் tricolor LED மற்றும் resistorகள் ஆகியவற்றை இணைத்துள்ளேன்.
03:18 இதைத்தான் circuit diagramல் நாம் பார்த்தோம்.
03:23 இப்போது இந்த circuit வேலை செய்ய ஒரு programஐ எழுத வேண்டும்.
03:28 Arduino IDEஐ திறப்போம்
03:32 எந்தவொரு Arduino program உம் இரண்டு அடிப்படை functionகளுடன் வருகிறது என்பதை நாம் அறிவோம்- Void setup மற்றும் Void loop.
03:41 Void setup function ஒரு microcontroller.ஐ அமைப்பதற்கானது.
03:46 இங்கே, நமது பரிசோதனையில் நாம் பயன்படுத்தும் pinகளை அமைக்க வேண்டும்.
03:52 இப்போது, Void setup functionக்கான codeஐ நாம் எழுதுவோம்
03:57 circuit diagram ல், pin எண் 10, நீல LEDக்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
04:05 Arduino IDEல் டைப் செய்க: pinMode open bracket 10 comma OUTPUT close bracket Semicolon.
04:16 இவ்வாறே, காட்டப்பட்டுள்ளப்படி மற்ற pinகளுக்கான codeஐ டைப் செய்யவும்:
04:21 pinஎண் 11 பச்சை LEDஐயும் மற்றும் 12 சிவப்பு LEDஐயும் குறிக்கிறது. இப்போது நாம் pinகளை கட்டமைத்து விட்டோம்
04:32 அடுத்து, Void loop functionக்கான codeஐ நாம் எழுதுவோம். Void loop function என்பது ஒரு காலவரையற்ற ‘while’ loop ஆகும்
04:42 இந்தக் code, Blink LED program க்கு நாம் எழுதியது போலவே ஆகும். ஆனால் இந்த மூன்று LEDகளுக்கும் ஒரே மாதிரியான codeகளை நாம் எழுத வேண்டும்.
04:54 இந்த codeன் நான்கு வரிகளும், நீல நிற LEDயை 500 மில்லி millisecondகள் தாமதத்துடன் ஒளிரச் செய்யும்.
05:02 மற்ற pinsகளுக்கும் அதே codeஐ Copy மற்றும் paste செய்யவும்
05:07 pin எண்ணை பச்சை நிற LEDக்கு 11 ஆகவும், சிவப்பு நிற LEDக்கு 12 ஆகவும் மாற்றவும்
05:16 இந்த program ஐ save செய்வோம்
05:19 முதலில் Fileஐயும், பின் Saveஐயும் க்ளிக் செய்யவும். Fileன் பெயரை tricolor hyphen LED என enter செய்யவும்
05:28 இப்போது microcontroller ஆனது, 10, 11 மற்றும் 12க்கு மாற்று சிக்னல்களை அனுப்புவதற்கு HIGH மற்றும் LOW என program செய்யப்பட்டுள்ளது
05:40 அடுத்த படி, programஐ compile செய்து, பின் upload செய்வது
05:44 Sketch menuவில், Compileஐ க்ளிக் செய்யவும்
05:49 IDEன் கீழே நாம் compilation நிலையை பார்க்க முடியும்
05:56 microcontrollerக்கு programஐ upload செய்ய, Sketch menu வை க்ளிக் செய்து, பின் Uploadஐ க்ளிக் செய்யவும்
06:04 சிவப்பு, நீலம் மற்றும் பச்சை LEDகள் பிலிங்க் ஆவதை நாம் காணலாம்.
06:10 பிலிங்க்கிங் தொடர்கிறது. ஏனென்றால், எங்கள் program ஒரு காலவரையற்ற loopல் void loop functionஐ செயல்படுத்துகிறது.
06:20 அடுத்து, பிலிங்க்கிங்கை கட்டுப்படுத்த, அதே circuitக்கு push buttonஐ எவ்வாறு இடைமுகம் செய்வது என்று பார்ப்போம்.
06:28 Pushbutton என்பது, நீங்கள் அதை அழுத்தும் போது, circuitல் உள்ள இரண்டு புள்ளிகளை இணைக்கும் ஒரு கூறு ஆகும்.
06:35 மேலே நாம் அழுத்தக்கூடிய ஒரு பட்டனை நீங்கள் காணலாம். நமது சோதனையில், நீங்கள் பட்டனை அழுத்தும்போது அது tricolor LEDயை இயக்கும்.
06:48 ஒரு pushbutton மூலம் இந்த சோதனைக்கு அதே சர்க்யூட்டைப் பயன்படுத்துகிறோம்.
06:54 Pushbutton, momentary switch எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் அதை அழுத்தியவுடன், tricolor LED ஒளிரும்.
07:03 நீங்கள் சுவிட்சை விடுவித்தால், tricolor LED வேலை செய்யாது. pushbuttonboardஉடன் இணைத்துள்ளோம்.
07:11 Pushbuttonனின் ஒரு கால் 5 வோல்ட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இங்கே பழுப்பு நிற கம்பியில் காட்டப்பட்டுள்ளது.
07:20 மற்றொரு கால் மஞ்சள் நிற கம்பியில் இங்கே காட்டப்பட்டுள்ள pin எண் 4 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
07:27 இங்கே, pushbutton உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு resistorஐ பார்க்கலாம்.
07:32 நமக்கு ஏன் இங்கு resistor தேவை? Pin 4, inputஆக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது சில input voltageஐ எதிர்பார்க்கிறது.
07:42 pushbutton அழுத்தப்படும் போது, அது pin4 முதல் 5 வோல்ட் வரை இணைக்கிறது, மேலும் HIGHஐ நாம் காண்கிறோம்
07:50 இந்த கட்டத்தில், மின்னோட்டமானது ground pinக்கு செல்வதைத் தடுக்க resistor உதவுகிறது.
07:58 pushbutton அழுத்தப்படாவிட்டாலும், நாம் சிறிது voltageஐ அனுப்ப வேண்டும்.
08:05 ground pin மூலம் இணைக்கப்பட்டுள்ள resistor, zero voltஐ வழங்கும்.
08:12 இது சில inputஐ பெறுவதால் microcontroller செயலில் இருக்கும்.
08:18 இணைப்பிற்கான நமது நேரடி வீடியோவைப் பார்ப்போம்.
08:22 push button இப்படித்தான் இருக்கும்.
08:25 circuit வரைபடத்தில் நான் விளக்கியதைப் போலவே மற்ற இணைப்புகளையும் நீங்கள் பார்க்கலாம்.
08:32 இப்போது, இந்த circuit வேலை செய்ய நமது programஐ மாற்றுவோம்.
08:37 Arduino IDEக்கு திரும்பவும். இது நமது முந்தைய program.
08:44 pin எண் 4க்கு புதிய அமைப்பைச் சேர்க்கிறேன்.
08:47 நாம் ஏன் mode INPUT ஆக கொடுக்க வேண்டும்? ஏனெனில் - Pushbutton அழுத்தப்படும் போது, சர்க்யூட் நிறைவடைந்து, pin எண் 4 ஒரு inputஐ பெறுகிறது.
09:02 switch அழுத்தப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க conditional statement ஒன்றை நாம் எழுத வேண்டும்.
09:09 void loop functionல், நாம் 'if' statementஐ எழுதுவோம்
09:15 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, codeஐ டைப் செய்யவும். இதன் பொருள் என்ன என்பதை விளக்குகிறேன்.
09:22 pin எண் 4 ஐ input, ஆக பெற்றால், இது சுருள் அடைப்புக்குறிகளுக்குள் இடையே குறிப்பிடப்பட்ட codeஐ இயக்கும்.
09:31 Outputஐ விரைவாகக் காண, delay 100 milliseconds ஆகக் குறைக்கிறேன்.
09:39 coding இப்போது முடிந்துவிட்டது
09:42 நமது programஐ compile செய்து, upload செய்வோம்
09:47 அடுத்து, pushbuttonஐ அழுத்தி, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
09:53 tricolor LED, ON ஆக இருப்பதை நாம் காண்கிறோம்
09:58 இன்னும் ஒரு முறை அழுத்தவும். இது வேலை செய்கிறது.
10:02 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
10:07 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு tricolor LED Arduino board க்கு இணைப்பது,
10:13 tricolor LED ஐ பிலிங்க் செய்ய வைக்க ஒரு programஐ எழுதுவது மற்றும் பிலிங்க்கிங்கை கட்டுப்படுத்த ஒரு Push buttonஐ பயன்படுத்துவது
10:22 பின்வரும் பயிற்சியை செய்யவும். அதே programஐ எதிர் வழியில் மாற்றவும்.
10:28 பட்டனை அழுத்தினால், input LOW ஆக வருமாறு வைக்கவும். Programஐ compile செய்து, upload செய்யவும்
10:35 tricolor LEDயில் பிலிங்க்கிங்கை கவனிக்கவும்.
10:39 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:46 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:55 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
10:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
11:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree