Arduino/C2/Arduino-components-and-IDE/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Arduino components and IDE. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino மற்றும் கணினிக்கு இடையே ஒரு பிஸிக்கல் இணைப்பை எவ்வாறு அமைப்பது,
00:16 Arduino hardware மற்றும் Arduino programming language.
00:21 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:31 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு, Arduino UNO Board, USB power cable மற்றும் ஒரு கணினி
00:43 முதலில் இங்கு காட்டப்பட்டுள்ளபடி, USB cable ஐ பயன்படுத்தி, Arduino boardஐ கணினிக்கு இணைக்க வேண்டும்
00:51 பச்சை power LED, ON ஆகிறது. இணைப்பு செயல்படுகிறது என்பதை இது குறிக்கிறது.
00:59 இப்போது, Arduino hardware ல் கிடைக்கின்ற பல்வேறு கூறுகளை பார்ப்போம்
01:06 முக்கியமான கூறு, ATMEGA 328 microcontroller chip. ஆகும்
01:13 இது 'Arduino இன் இதயமாகும், அங்கு நீங்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்ய programஐ எழுதலாம்
01:20 இந்த microcontroller, உட்புறமாக உள்ள ROM, RAM மற்றும் ஒரு Arduino BootLoader.ஐ கொண்டிருக்கிறது
01:29 Arduino BootLoader என்றால் என்ன? சாதனம் மின்சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது செயல்படுத்தப்படும் முதல் program இதுவாகும்.
01:40 இவை digital pinகள் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு input அல்லது output ஆக program செய்யப்படலாம்
01:49 Digital என்றால், அவை ON அல்லது OFF ஆக இருக்கலாம், அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம்
01:55 எடுத்துக்காட்டாக, LEDயை மங்கச் செய்வது, audio signalகளை உருவாக்குதல் போன்றவை.
02:02 பிற சாதனங்களுடனான serial communicationக்கு pin எண் 0 மற்றும் 1ஐப் பயன்படுத்தலாம்.
02:10 இங்கே, 0-RX என்பது பெறுதலைக் குறிக்கிறது, 1-TX என்பது அனுப்புதலை குறிக்கிறது.
02:20 இவை A0 இலிருந்து A5 வரை உள்ளவை குறிக்கப்பட்ட Analog pins கள் ஆகும். இவை inputகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
02:31 அவை analog signalகளை எடுத்து, அவற்றை கணினி புரிந்து கொள்ள கூடிய digital signalகளாக மாற்றுகின்றன.
02:40 இவை boardல் உட்பொதிக்கப்பட்ட அனுப்பும் மற்றும் பெறும் LEDக்கள் ஆகும். நாம் dataவை அனுப்பும்போது அல்லது பெறும்போது இவை பிலிங்க் ஆகும்.
02:51 இது troubleshootingக்கு மிகவும் உதவுகிறது
02:55 இந்த reset பட்டனை அழுத்தினால், program நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கும்.
03:03 இது boardல் இருந்து எதையும் அழிக்காது.
03:08 இது வெளிப்புற சக்தி மூலத்தைப் பயன்படுத்தும் போது, இது Arduino boardக்கான உள்ளீட்டு மின்னழுத்தமாகும்.
03:16 இவை Ground pins ஆகும், இவை board. உள்ள மிகக் குறைந்த மின்னழுத்தத்திற்கு அணுகலை கொடுக்கும்
03:23 board.ஐ program செய்ய, USB interfaceஐ பயன்படுத்தலாம். மேலும், board மற்றும் கணினிக்கு இடையேயான serial தொடர்புக்கும் பயன்படுத்த முடியும்.
03:35 boardக்கு சக்தியேற்ற, எங்களிடம் இந்த வெளிப்புற power adapter உள்ளது.
03:41 அடுத்து நாம் Arduino programming language ஐ பற்றி பார்ப்போம்
03:46 Arduino programகளை மூன்று முக்கிய பாகங்களாக பிரிக்கலாம். Control Structure statements, Operators, variables மற்றும் constants,
03:57 மற்றும், Functions.
04:00 control statementகளாவன: if, if..else, for, while, do..while, switch case etc.
04:11 இவை எந்த programming languageஇலும் ஒரே மாதிரியானவை.
04:16 பின்பு நம்மிடம், arithmetic operator கள், comparison operator கள் and boolean operator கள் உள்ளன
04:24 மற்ற programming languageகளைப் போலவே இதிலும் variable கள் மற்றும் constantகள் உள்ளன.
04:31 pinMode(), digitalWrite(), digitalRead(), delay(), analogRead(), analogWrite() போன்ற built-in functionsகள் உள்ளன
04:46 இவை முக்கியமான functionகள் ஆகும், இவை பெரும்பாலும் Arduino திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
04:52 Arduino IDE இன் இந்த programming language ஐ எவ்வாறு குறிப்பிடுவது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.
04:58 Arduino IDEஐ நாம் திறப்போம்
05:01 Arduino IDEல் இருக்கும் Help menu வை க்ளிக் செய்யவும். பின், Reference.ஐ க்ளிக் செய்யவும்
05:08 இது உங்களுடைய browser ல் ஒரு offline pageஐ திறக்கிறது
05:12 உதாரணத்திற்கு, 'digitalWrite()' built-in functionஐ நீங்கள் பார்க்க விரும்பினால், function பெயரை க்ளிக் செய்யவும்
05:22 இங்கு, digitalWrite() function.னின் விளக்கம், syntax மற்றும் மாதிரி programஐ நீங்கள் காணலாம்
05:31 பல built-in functionகள் உள்ளன மற்றும் நமது தேவையைப் பொறுத்து இந்த கையேட்டைப் பார்க்கலாம்.
05:39 சில முக்கியமான built-in functionகள் பற்றி அடுத்தடுத்த டுடோரியல்களில் கற்றுக்கொள்வோம்.
05:47 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
05:52 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino மற்றும் கணினிக்கு இடையே ஒரு பிஸிக்கல் இணைப்பை எவ்வாறு அமைப்பது,
06:00 Arduino hardware , Arduino programming language.
06:05 பயிற்சியாக- Arduino IDEஐ திறக்கவும்.
06:09 Help Menuவை க்ளிக் செய்து, Referenceஐ தேர்ந்தெடுக்கவும்
06:14 delay(), pinMode() and digitalRead() போன்ற built-in functionகளை பார்க்கவும்
06:22 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
06:30 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:42 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
06:47 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
06:57 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:07 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree