QGIS/C4/Interpolation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:42, 3 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல், Interpolation Methods குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Interpolation முறைகள்
00:12 Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN)
00:18 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:24 QGIS பதிப்பு 2.18
00:28 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:34 முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:40 இந்த டுடோரியலுக்கு தேவையான data fileகள் Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன
00:46 அதை தரவிறக்கி, folderன் contentகளை extract செய்யவும்
00:51 நான் Desktopல் இந்த folderஐ சேமித்துள்ளேன். folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்
00:59 extract செய்யப்பட்ட folderல், Air Stations.shpஐ கண்டுபிடிக்கவும்
01:04 இந்த file மகாராஷ்டிராவில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களைக் காட்டுகிறது.
01:10 Interpolation தனித்துவமான புள்ளிகளிலிருந்து தொடர்ச்சியான மேற்பரப்பை உருவாக்குவதற்கான ஒரு முறை ஆகும்
01:17 QGISல், interpolationக்கு இரண்டு வகையான முறைகள் உள்ளன
01:22 Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN)
01:28 Interpolation Plugin, Point layerல் இருந்து interpolated rasterஐ உருவாக்க பயன்படுகிறது
01:35 QGIS interfaceஐ திறக்கவும்
01:38 நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன்
01:43 இங்கு காட்டியுள்ளபடி, Plugins menu வை பயன்படுத்தி interpolation plugin ஐ enable செய்யவும்
01:49 Interpolation pluginக்கான check-box ஐ check செய்யவும். dialog-box ஐ மூடவும்
01:56 Raster menuவை திறக்கவும்
01:59 Interpolationதேர்வு இப்போது Raster menu விற்கு சேர்க்கப்படுகிறது
02:04 Add Vector Layer toolஐ க்ளிக் செய்யவும். Add vector layer dialog-box திறக்கிறது
02:11 Browseபட்டனை க்ளிக் செய்து, Code files folderக்கு செல்லவும். இங்கு நாம் இரண்டு fileகளை தேர்ந்தெடுப்போம்
02:20 AirStations.shp fileஐ தேர்ந்தெடுக்கவும்
02:24 Keyboardல் Ctrl key ஐ அழுத்திக்கொண்டே, MH_Districts.shpஐ க்ளிக் செய்யவும்
02:32 Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:35 Add vector layer dialog-boxல் உள்ள, Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:40 Canvas ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் வரைபடத்தைக் காண்கிறோம்.
02:45 ஒவ்வொரு மாவட்டத்திலும் Air stationகளின் இருப்பிடங்கள் புள்ளி அம்சங்களாகக் காட்டப்படுகின்றன.
02:52 இந்த புள்ளி அம்சங்களை label செய்வோம்
02:56 Air Stations layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
03:00 Layer Properties dialog box ஐ திறக்க, Properties தேர்வை க்ளிக் செய்யவும்
03:06 இடது panelலில் உள்ள, Labels தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:11 மேலே உள்ள drop-downஐ க்ளிக் செய்யவும்
03:15 Drop-downல் இருந்து, Show labels for this layerஐ தேந்தெடுக்கவும்
03:20 Label with drop-downல், Air underscore Pollut ஐ தேந்தெடுக்கவும். கீழே scroll செய்யவும்
03:28 label style ஐ மாற்றுவதற்கான பல்வேறு தேர்வுகளை நீங்கள் இங்கு பார்ப்பீர்கள்
03:33 தேவையான style ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்யவும்
03:38 Canvasல், புள்ளிகளுடன் கூடிய labelகள் காட்டப்படும்
03:43 Air Stations dot shp layer.க்கான attribute table ஐ திறக்கவும்
03:49 attribute tableலில், ஒவ்வொரு நிலையத்திற்குமான Nitrogen Oxides அளவுகள் வழங்கப்படுகின்றன.
03:57 Nox attributeனால், Air Stations layerஐ interpolate செய்வோம்
04:03 இங்கு interpolationக்கு IDW methodஐ பயன்படுத்துவோம். attribute tableஐ மூடவும்
04:11 Inverse Distance Weighting முறை மாதிரி புள்ளிகளுக்கு எடையை அளிக்கிறது.
04:17 வெப்பநிலை, மழை, மக்கள் தொகை போன்ற dataகளை interpolate செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
04:26 QGIS interfaceக்கு திரும்பவும்
04:29 Raster menuவை க்ளிக் செய்யவும்
04:32 interpolation pluginஐ க்ளிக் செய்யவும்
04:35 Interpolation plugin dialog-box திறக்கிறது
04:39 Input பிரிவில், Vector layersக்கான தேர்வாக Air Stationsஐ தேர்ந்தெடுக்கவும்
04:46 இங்கு முன்னிருப்பாக, Air Stations layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது
04:52 Interpolation attributeக்கு NOxஐ தேர்ந்தெடுக்கவும்
04:57 Add பட்டனை க்ளிக் செய்யவும்
05:00 இது Air Stations dot shp layerNitrogen Oxide அம்சத்துடன் சேர்த்துவிடும்
05:06 Typedrop-downல், Points ஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு முன்னிருப்பாக Points தேர்ந்தெடுக்கப்படுகிறது
05:14 Output பிரிவுக்கு செல்லவும்
05:17 Interpolation methodஐ, Inverse Distance Weightingஆக தேர்ந்தெடுக்கவும். எல்லா settingகுகளையும் ஆக வைத்திருக்கவும்
05:26 Output fileக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்
05:30 விருப்பமான folderலில், outputஐ IDW underscore Stationsஆக சேமிக்கவும். நான் அதை Desktopல் சேமிக்கிறேன்
05:40 Add result to project uncheck செய்யப்படாமல் இருந்தால், அதை check செய்யவும்
05:45 OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:47 black மற்றும் white பகுதிகளைக் கொண்ட வரைபடம் திரையில் காண்பிக்கப்படும்.
05:53 வெள்ளை பகுதிகள் அதிக அளவு Nitrogen Oxideகளை குறிக்கின்றன.
05:58 கறுப்புப் பகுதிகள் குறைந்த அளவு Nitrogen Oxideகளை 'குறிக்கின்றன.
06:03 மேலும் தெளிவுக்கு , layerன் symbology ஐ மாற்றுவோம்.
06:08 IDW layerக்கான Layer propertiesகளை திறக்கவும்
06:13 இடது panelலில், Style தேர்வை க்ளிக் செய்யவும்
06:17 Render typeக்கு, Single band Pseudocolorஐ தேர்ந்தெடுக்கவும்
06:22 Interpolation drop-downல் இருந்து Discreteஐ தேர்ந்தெடுக்கவும்
06:26 நிற drop-down ல் இருந்து Spectralஐ தேர்வு செய்யவும். Invert check-boxஐ check செய்யவும்
06:33 Classify பட்டனை க்ளிக் செய்யவும்
06:36 மற்ற அனைத்து settingகளையும் முன்னிருப்பாக வைக்கவும்
06:40 Apply மற்றும் OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:44 Canvasல் Spectral வண்ணங்களில் உள்ள பகுதிகளுடன் வரைபடம் காட்டப்படும்.
06:50 சிவப்பு நிறப் பகுதிகளில் Nitrogen Oxideகளின் அதிக செறிவு உள்ளது.
06:56 நீலப் பகுதிகளில் குறைந்த பட்சம் Nitrogen Oxideகள் உள்ளன.
07:01 tool bar ல் உள்ள Save toolஐ பயன்படுத்தி, projectஐ சேமிக்கவும்
07:06 பொருத்தமான பெயரைக் கொடுங்கள். தகுந்த இடத்தைத் தேர்வுசெய்க.
07:12 Save பட்டனை க்ளிக் செய்யவும்
07:15 இப்போது Triangulated Irregular Network interpolation முறையை கற்றுக்கொள்வோம்
07:22 முக்கோணங்களால் உருவான மேற்பரப்பை உருவாக்க TIN பயன்படுத்தப்படுகிறது.
07:28 இது nearest neighbor point தகவலை அடிப்படையாகக் கொண்டது.
07:33 TIN முறை பொதுவாக elevation dataக்கு பயன்படுத்தப்படுகிறது.
07:38 ஒரு புதிய QGIS window வை திறக்கவும். tool bar ல் உள்ள New tool ஐ க்ளிக் செய்யவும்
07:45 Points dot shp layer. ஐ load செய்ய, Add Vector Layer tool ஐ பயன்படுத்தவும்
07:52 Points layerன் Attribute tableஐ திறக்கவும்
07:56 ஒவ்வொரு புள்ளி அம்சத்திற்குமான Elevation data வை கவனிக்கவும்
08:01 Attribute tableஐ மூடவும்
08:04 மீண்டும் Raster menu வில் உள்ள Interpolation windowவை திறக்கவும்
08:09 Inputபிரிவில், Vector layers drop-down ல் Points layerஐ தேர்ந்தெடுக்கவும். Interpolation attributeஆக elevation ஐ தேர்ந்தெடுக்கவும்
08:20 Add பட்டனை க்ளிக் செய்யவும். இது interpolatingகுக்கு elevation attributeஉடன் கூடிய Points layerஐ சேர்க்கும்
08:28 Type drop-downல் உள்ள Points, தானாகவே தேர்வு செய்யப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிடவும்
08:34 Output பிரிவில், Interpolation methodஆக Triangular interpolationஐ தேர்ந்தெடுக்கவும்
08:41 output fileஐ TIN-Stations என சேமித்து, OK button. பட்டனை க்ளிக் செய்யவும்
08:49 Canvasல் triangulated interpolationஐக் காட்டும் வரைபடம் தோன்றுகிறது .
08:54 இந்த layerக்கான symbologyஐ மாற்றவும்
08:58 நாம் IDW layerக்கு செய்த அதே படிகளை பின்பற்றவும்
09:12 வரைபடம் இப்போது Spectral வண்ணங்களில் காட்டப்படுகிறது . சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அதிக உயரத்தைக் குறிக்கின்றன.
09:21 நீல நிறத்தில் உள்ள பகுதிகள் குறைந்த உயரத்தைக் குறிக்கின்றன.
09:25 toolbar ல் உள்ள Save tool ஐ பயன்படுத்தி, வரைபடங்களை சேமிக்கவும்
09:30 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, - Interpolationனின் இரண்டு முறைகள்
09:37 Inverse Distance Weighting (IDW) மற்றும் Triangulated Irregular Network (TIN)
09:43 பயிற்சியாக, SO2 attributeஉடன் கூடிய IDW interpolated வரைபடத்தை Air Stations layerக்காக உருவாக்கவும்
09:52 இங்கு காட்டியுள்ளபடி உங்கள் வரைபடம் இருக்கவேண்டும்
09:56 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:03 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்
10:13 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
10:17 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree