OpenFOAM/C3/Turbulent-Flow-in-a-Lid-driven-Cavity/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:05, 30 October 2017 by Jayashree (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMஐ பயன்படுத்தி, Lid Driven Cavityல், ஒரு turbulent flowஐ செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: OpenFOAMல், turbulent caseஐ தீர்ப்பது, Paraviewல், streamlineகளை plot செய்வது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:33 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Turbulence modelling பற்றிய அடிப்படை அறிவும், ஒரு Lid driven cavityல், flowஐ எப்படி தீர்ப்பது என்பதும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:43 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்.
00:50 Geometry மற்றும் boundary conditionகளில், இந்த சிக்கல், அடிப்படை நிலை டுடோரியலில் விவாதிக்கப்பட்ட, 'Lid Driven Cavity' சிக்கலுக்கு ஒத்ததாகும்.
00:59 OpenFoam directoryல், இந்த சிக்கல், 'pisoFoam' solverல் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.
01:07 Boundary conditionகள், Lid velocity U =1 m/s ஆகும். ஒரு, Reynolds number Re =10000க்கு, இதை நாம் தீர்க்கிறோம்.
01:20 PisoFoam எனப்படுகின்ற, Newtonian fluid ன், in-compressible, turbulent flow க்கு, ஒரு transient solverஐ நாம் பயன்படுத்துகின்றோம்.
01:29 இப்போது, Ctrl +Alt+ t keyகளை ஒன்றாக அழுத்தி, terminal windowஐ திறப்போம்.
01:37 Terminal windowவில், டைப் செய்கrun, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, cd space tutorials, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, cd space incompressible , பின் Enterஐ அழுத்தவும்.
01:59 இப்போது, டைப் செய்க, cd space pisoFoam, ( இங்கு, F, capitalஆக இருப்பதை கவனிக்கவும்) . பின் Enterஐ அழுத்தவும்.
02:10 இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். les மற்றும்ras என்ற இரண்டு folderகளை இங்கு நீங்கள் காணலாம். reynolds average stress எனப்படுகின்ற"ras" folderனுள், நமது சிக்கலின் setup உள்ளது.
02:26 நமது folderன் பெயர், cavity. இப்போது, டைப் செய்க, cd space ras, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
02:39 நீங்கள் cavity folderஐ காணலாம். இதை நான் இப்போது துடைக்கிறேன். இப்போது, டைப் செய்க, cd space cavity, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
02:57 0, constant மற்றும் system என்ற மூன்று folderகளை நீங்கள் காணலாம். '0' (zero) directoryயினுள் இருக்கின்ற fileகளினுள், initial conditionகள் குறிப்பிடப்படுகின்றன.
03:08 '0' (zero) directoryயினுள் இருக்கின்ற fileகளை நாம் காண்போம்.
03:12 இதைச் செய்ய, command terminalலில், டைப் செய்க, cd space 0, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
03:22 epsilon, k, nut, nutilda, p, R மற்றும் U என்று, fileகள் பெயரிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
03:30 Inlet parameterகள் மாறாதவரைக்கும், இந்த fileகள் முன்னிருப்பாக வைக்கப்பட வேண்டும். மாற்றங்கள் ஏதேனும் செய்யப்படவேண்டுமெனில், இந்த மதிப்புகளை கணக்கிட,
03:41 Simulating flow in a channel using OpenFoam குறித்த டுடோரியலை பார்க்கவும்.
03:47 இப்போது, டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். இதை நான் துடைக்கிறேன். Constant folder ஐ திறப்போம். இதைச் செய்ய, டைப் செய்க, cd space constant, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
04:08 இதில், blockMeshDictயினுள், caseன் geometryஐ , polyMesh folder கொண்டிருப்பதையும், fluid propertyகளையும் நீங்கள் காண்பீர்கள்.
04:19 இந்த caseல், transportPropertiesஐ தவிர, RASProperties மற்றும் turbulenceProperties, என்று பெயரிடப்பட்ட மேலும் இரண்டு fileகளை நீங்கள் காண்பீர்கள்.
04:29 இந்த இரண்டு fileகளை திறப்போம்.
04:32 Terminalலில், டைப் செய்க, gedit (space) RASProperties, பின் Enterஐ அழுத்தவும். இதை, capture areaக்கு நான் இழுக்கிறேன்.
04:49 Scroll down செய்யவும். இந்த caseற்கான Reynolds average stress model ஐ , RASProperties கொண்டிருக்கிறது. அது kepsilon என வைக்கப்படுகிறது. இதை மூடவும்.
05:03 இப்போது, command terminalலில், டைப் செய்க, gedit (space) turbulentproperties, பின் Enterஐ அழுத்தவும்.
05:15 Scroll down செய்யவும். இந்த caseற்கான simulation Type model, RASModel என வைக்கப்படுகிறது. இதை மூடவும்.
05:25 இப்போது, transportProperties modelஐ திறப்போம். இதைச் செய்ய, Terminalலில், டைப் செய்க, gedit space transportProperties, பின் Enterஐ அழுத்தவும்.
05:36 இங்கு நாம் பயன்படுத்துகின்ற, transportModel , Newtonian , மற்றும், viscosity, 1 e raise to -4 என வைக்கப்படுகிறது. இதை மூடவும்.
05:46 இந்த caseல், நாம் geometryஐ மாற்றவில்லை. அதனால், நாம் polyMesh folderயினுள் சென்று, blockMeshDict fileஐ பார்க்க வேண்டாம்.
05:54 அதை அப்படியே வைத்துவிடலாம். Terminalலில், டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். System folderயினுள், எந்த மாற்றங்களும் இல்லாததனால், அதை முன்னிருப்பாக வைப்போம்.
06:08 நாம் இப்போது setupஐ முடித்துவிட்டோம். நாம் geometryஐ mesh செய்யலாம். இதைச் செய்ய, terminal windowவில், டைப் செய்க, block mesh, பின் Enterஐ அழுத்தவும். Meshing முடிந்துவிட்டது.
06:22 இப்போது, நாம் solverrun செய்யலாம். இதைச் செய்ய, terminalலில், டைப் செய்க, pisoFoam, பின் Enterஐ அழுத்தவும். ஓடிக்கொண்டிருக்கின்ற iterationகளை terminal windowவில் காணலாம்.
06:34 Iterationகள் நிற்க, சிறிது நேரம் எடுக்கலாம்.
06:40 Time stepன் முடிவில், ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள் நின்றுவிடும். முடிவுகளை காண, paraView windowஐ திறப்போம். இதைச் செய்ய, terminalலில், டைப் செய்க, paraFoam, பின் Enterஐ அழுத்தவும். இது, paraView windowஐ திறக்கும்.
06:57 இடது பக்கத்தில், Object Inspector menuவில் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும். நீங்கள் lid driven cavity geometryஐ காணலாம். பொதுவான காட்சி surface plotகள் ஆகும்.
07:09 Columnல், displayஐ , Surfaceக்கு மாற்றி, drop-down menu வில், solid colorல் இருந்து, 'U'க்கு மாற்றவும். Velocityன் initial conditionஐ நீங்கள் காணலாம்.
07:22 இப்போது, paraView window வின் முதலில், நீங்கள் VCR controlஐ காணலாம். play பட்டனை க்ளிக் செய்யவும். Cavityயினுள் இருக்கும், fluidன் ஓட்டத்தை நீங்கள் காணலாம்.
07:34 ParaView active variable control menuவின் மேல் இடது பக்கத்தில் இருக்கும் color legend மீதும் நீங்கள் toggle செய்யலாம். அதை க்ளிக் செய்யவும். நீங்கள் color legendஐ காணலாம்.
07:46 இப்போது stream lineகளை காண, paraView menu bar ன் முதலில் இருக்கும், Filters > Common > Stream Tracersக்கு செல்லவும். அதை க்ளிக் செய்யவும்.
07:58 Object inspector menuன் இடது பக்கத்தில், Applyஐ நீங்கள் காணலாம். அதை க்ளிக் செய்யவும். Lid driven cavityன் நடுவில், stream lineகளை நீங்கள் காணலாம்.
08:10 Stream line களை பார்க்க பயன்படுத்தப்படுகின்ற orientationஐயும் நீங்கள் மாற்றலாம். இதை செய்ய, scroll downசெய்யவும். Seed Typeஐ நீங்கள் காணலாம்.
08:21 இதை வலது பக்கத்திற்கு இடம் மாற்றுகிறேன். Point Sourceல் இருந்து, Line Sourceக்கு மாற்றவும்.
08:27 X, Y மற்றும்Z axisகளை நீங்கள் காணலாம். நீங்கள் stream lineகளை காண விருப்பப்படுகின்ற, இவற்றினுள் ஒரு axisஐ தேர்ந்தெடுக்கவும்.
08:36 நான் Y axis ஐ தேர்ந்தெடுத்து, Applyஐ க்ளிக் செய்கிறேன். Y axisன் நெடுகிலும் நீங்கள் stream lineகளை காணலாம்.
08:44 இவ்வாறே, X axis ஐ தேர்ந்தெடுத்து, X axisன் நெடுகிலும்stream lineகளை நீங்கள் plot செய்யலாம். இப்போது, இதை delete செய்யவும்.
08:53 Plot over lineஐயும் பயன்படுத்தி, X மற்றும் Y axis நெடுகிலும், velocityஐ நீங்கள்plot செய்யலாம். இதை செய்ய, Filters > Data Analysis > Plot over lineக்கு செல்லவும்.
09:06 Dataவை, .(dot) csv file என சேமிக்கவும். File menuவில், Save Dataஐ க்ளிக் செய்யவும்.
09:13 இந்த dataஐ , LibreOffice spreadsheet , அல்லது, உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு plotting softwareலும், நீங்கள் plot செய்யலாம். இப்போது, slideகளுக்கு நான் திரும்பச் செல்கிறேன்.
09:23 கிடைத்த முடிவுகளை, Reynolds Number Re = 10000க்கு, Ghia et.al ன் முடிவுகளை பயன்படுத்தி, validate செய்யலாம்.
09:32 இந்த டுடோரியல், இவ்வளவு தான் கொண்டுள்ளது. சுருங்கச் சொல்ல,
09:34 Turbulent Flow in a Lid Driven Cavity, மற்றும், paraViewல் plotting streamlines . இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:44 பயிற்சியாக, cavityயின் grid sizeஐ மாற்றவும். அதை, (100 100 1)க்கு மாற்றி, streamlineகளை பயன்படுத்தி, முடிவுகளை paraviewல் காணவும்.
09:55 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:05 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:20 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:30 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Priyacst