OpenFOAM/C3/Creating-a-sphere-in-GMSH/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:14, 27 November 2017 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 GMSHல், ஒரு sphereஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு circular arcஐ உருவாக்குவது, ruled surfaceகளை உருவாக்குவது, '.geo' நீட்டிப்புடன் கூடிய fileஐ பயன்படுத்தி அடிப்படை கையாளுதல்களை செய்வது.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு14.04, மற்றும், GMSH பதிப்பு2.8.5ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 முன்நிபந்தனையாக, userக்கு, pointகளை உருவாக்குவது பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைதளத்தில், OpenFOAM தொடரில் இருக்கின்ற, GMSH ஸ்போகன் டுடோரியல்களை பார்க்கவும்.
00:38 தொடங்குவோம். Sphereன் தொடக்கம், (0,0,0)ல் உள்ளது, மற்றும், sphereன் மற்ற pointகள், காட்டப்பட்டுள்ளபடி உள்ளன.
00:48 இப்போது, terminalலில் இருந்து, GMSHஐ திறப்போம். Terminal ஐ திறக்க, Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தவும். இப்போது, டைப் செய்க: gmsh space sphere1.geo, பின், Enterஐ அழுத்தவும். GMSH திறக்கப்பட்டுவிட்டது.
01:09 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, நான் ஏற்கனவே, sphereக்கு, 7 pointகளை உருவாக்கிவிட்டேன். Sphereன் pointகளை உருவாக்க, முன்பு கூறப்பட்ட டுடோரியலைப் பார்க்கவும்.
01:19 இப்போது, ஒரு circular arcஐ எப்படி உருவாக்குவது என்று விளக்குகிறேன். GMSHல், ஒரு circular arc, கண்டிப்பாக, Pi.க்கு குறைவாகவே உருவாக்கப்படுகிறது.
01:27 ஒரு arcஐ உருவாக்க, இடது பக்க menuல், Circle arc optionஐ தேர்ந்தெடுக்கவும்.
01:32 இப்போது, வலது ஓரத்தில் இருக்கும் pointஐ , arcன் தொடக்க pointஆக தேர்ந்தெடுக்கிறேன். பின், இங்கிருக்கும் இந்த pointஐ , நடு pointஆக தேர்ந்தெடுக்கவும். இந்த pointன் coordinateகள், (0,0,0)ஆக இருப்பதை கவனிக்கவும்.
01:48 இறுதியாக, மேலிருக்கும் ஒரு pointஐ , arcன் end pointஆக நான் தேர்ந்தெடுக்கிறேன்.
01:54 எல்லா, arcகளும் உருவாக்கப்படும் வரை, செயல்முறையை திரும்பச் செய்யவும். எல்லா arcகளுக்கும் அதே நடு pointஐ வைக்க நினைவில் கொள்ளவும்.
02:02 இப்போது curved surfaceஐ உருவாக்க, இடது பக்க menuவில் இருந்து Ruled surface optionஐ தேர்ந்தெடுக்கவும். இங்கு விளக்கியுள்ளபடி, surfaceக்கான, bounding edgeகளை தேர்ந்தெடுக்கவும்.
02:20 தேர்ந்தெடுக்கப்பட்ட edgeகள், இப்போது, சிவப்பு நிறத்தில் இருப்பதை கவனிக்கவும். இந்த தேர்ந்தெடுப்பை, செயல்படுத்த, keyboardல் 'E'ஐ அழுத்தவும்.
02:29 Surface உருவாக்கப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, அது புள்ளிக்கோடுகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
02:37 செயல்முறையை திரும்பச் செய்து, sphereன் எல்லா 8 surfaceகளையும் உருவாக்கவும். அது முடிந்த பிறகு, உங்கள் sphere, பார்க்க, இவ்வாறு இருக்க வேண்டும்.
02:46 இப்போது, Home folderக்கு செல்லவும். Sphere1.geo fileஐ கண்டுபிடித்து, gedit Text Editor.ஐ பயன்படுத்தி, அதை திறக்கவும்.
02:54 நாம் தற்போது உருவாக்கிய geometrical entityகளுக்கு தொடர்புடைய தகவல், இங்கு சேமிக்கப்படுகின்றன.
03:00 GMSH, ல் பொதுவானsyntax: Geometrical entity, identification number அடைப்புக்குறிகளினுள். இது ஒரு expressionக்கு சமமாக கொடுக்கப்படுகிறது.
03:11 இங்கு, pointக்கான expression, Point, identification number , அடைப்புக்குறிகளினுள். அது, பொதுவாக, 1ல் இருந்து தொடங்குகின்ற அடுத்த integerஆக இருக்கும். Equals to, X, Y, Z coordinateகள், மற்றும், mesh element size ன் மதிப்பு, braceகளினுள்.
03:30 இந்த மதிப்பே, நமக்கு விருப்பமான mesh element size ஆகும். Mesh elementகளின் அளவு, பின், initial meshல், இந்த மதிப்புகளை, linearஆக interpolate செய்வதன் மூலம், கணக்கிடப்படுகிறது.
03:41 Sphereன், pointகளினுடைய numerical மதிப்பை, ஒரு variable 's'க்குள் இடமாற்றுவோம்.
03:49 தொடக்கத்தில், டைப் செய்க: "s = 0.1;". இது, sphereன், mesh element sizeன், மதிப்பை குறிப்படுவதற்காகும்.
04:01 Boundary layerஐ capture செய்ய, sphereக்கு அருகே உள்ள meshஐ refine செய்வோம். இதற்கு, பின்வரும் வரியை பயன்படுத்துவோம்: Mesh.CharacteristicLengthFromCurvature = 0.05;.
04:15 Syntax: Mesh.CharacteristicLengthFromCurvature, geometry entityகளின் curvatureக்கு தகுந்தவாறு, meshஐ மாற்றும்.
04:25 Volumeஐ உருவாக்குவதற்கு, நமக்கு, எல்லா boundary surfaceகளும் தேவை. இதற்கு, fileன் இறுதியில், டைப் செய்க: "Surface Loop()", அதைத் தொடர்ந்து, அதன் integer, அதாவது, அடுத்த integer, அடைப்புக்குறியினுள். இதற்கு சமமாக, braceகளினுள், sphereன் எல்லா surfaceகளின் identityகள் இருக்கும்.
04:48 இங்கு, 14, 16, 18, 20, 22, 24, 26 மற்றும்28 identityக்களாகும்.
05:05 இப்போது, sphere1.geoஐ சேமித்து மூடவும்.
05:10 GMSH interfaceக்கு மாறுவோம். இடது பக்க menuவில், Physical groupsஐ க்ளிக் செய்யவும். பின் Add, பின் Surface. Sphereன் எல்லா surfaceகளையும் தேர்ந்தெடுக்கவும்.
05:26 இந்த தேர்ந்தெடுப்பை செயல்படுத்த, keyboardல் 'E'ஐ அழுத்தவும்.
05:30 இப்போது, மீண்டும், sphere1.geo fileஐ Text Editorல் திறக்கவும். கீழே, ஒரு புது code வரி சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
05:42 இந்த எண்ணுக்கு பதிலாக, மேற்கோள்களினுள், sphereஐ வைக்கவும். Post processing அல்லது வேறு ஏதேனும் செய்யும் சமயத்தில், sphereன் boundaryகளை எளிதாக அடையாளம் காண, இது உதவி புரியும்.
05:54 இப்போது, fileஐ சேமித்து மூடவும். இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
06:01 இந்த டுடோரியலில் நாம் கற்றது: curved வரிகள் மற்றும் surfaceகளை உருவாக்குவது, ஒரு sphereஐ உருவாக்குவது, .geo நீட்டிப்புடன் கூடிய fileஐ பயன்படுத்தி அடிப்படை கையாளுதல்களை செய்வது.
06:13 பயிற்சியாக, பெரிய radius ஐ கொண்ட ஒரு sphereஐ உருவாக்கவும்.
06:17 OpenFOAM தொடர், FOSSEE Project, IIT Bombayஆல் உருவாக்கப்படுகிறது.
06:21 FOSSEE என்றால், Free and Open Source Software for Education என்று பொருள். இந்த திட்டம், இலவச மற்றும் open source software toolகளை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, http://fossee.in/ ஐ பார்க்கவும்.
06:33 இந்த இணைப்பில் உள்ள வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:40 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
06:49 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya