OpenFOAM/C2/2D-Laminar-Flow-in-a-channel/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:43, 1 September 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMஐ பயன்படுத்தி, ஒரு channelலில், 2D Laminar Flow ஐ simulate செய்வது குறித்தspoken tutorial க்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: Channel ன் 2D geometry, Geometrymesh செய்வது, Paraviewல் Solving மற்றும் Post Processing results, மற்றும், analytic resultஐ பயன்படுத்திValidation செய்வது.
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:39 OpenFOAM பதிப்பு, 2.1.1 க்கு, ubuntu பதிப்பு 12.04 ல் ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
00:45 இனிமேல், எல்லா டுடோரியல்களும் , OpenFOAM பதிப்பு, 2.1.1 , மற்றும், ubuntu பதிப்பு 12.04ஐ பயன்படுத்தியே நடத்தப்படும்.
00:56 இந்த டுடோரியலுக்கு, முன்நிபந்தனையாக, OpenFOAMஐ பயன்படுத்தி, geometryஐ எப்படி உருவாக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
01:03 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்.
01:09 Downstreamல் இருக்கும், flow development நீளத்தை தீர்மானிக்க, ஒரு channelலில் உள்ள flowஐ நாம் simulate செய்கிறோம். Channel flow சிக்கலின் விளக்கம்.
01:19 Boundary ன் பெயர்கள், மற்றும் inlet conditionகள் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இருக்கின்றன.
01:26 flow develpoment length, இந்த formulaவினால் கொடுக்கப்படுகிறது, L= 0.05 * Re * D.
01:32 'Re' என்பதுReynolds number, மற்றும்'D' என்பதுchannel height ஆகும்.
01:37 Formulaஐ பயன்படுத்தினால், channelன் நீளம், 5 meterகளாக கிடைக்கிறது. மற்றும், உயரம், 1 meterஆக வைக்கப்படுகிறது.
01:45 Inlet velocity, 1 meter per second ஆகும். இதில், Reynolds number ( Re ), 100க்கு சமமாக இருக்கிறது.
01:53 இது ஒரு steady state problem ஆகும். அதனால், இந்த caseற்கு, நாம் ஒரு steady state incompressible solverஐ பயன்படுத்துகிறோம்.
02:01 இது, நமது caseன் file structure ஆகும். நாம் தேர்வு செய்கின்ற solverன் வகையில், folder உருவாக்கப்பட வேண்டும். Incompressible flow solversன், simpleFoam folderல், நான் ஏற்கனவே ஒரு folderஐ உருவாக்கிவிட்டேன்.
02:18 Folder, channel எனப் பெயரிடப்படுகிறது. இப்போது, நான் folderக்கு மாறுகிறேன்.
02:25 வேறு ஏதேனும் caseன், 0, Constant மற்றும் System folder களை , simpleFoam directoryல் copy செய்யவும்.
02:34 நான் pitzDaily caseன் file structureஐ copy செய்துள்ளேன்.
02:38 அதை channel folderஇனுள் paste செய்து, geometry, boundary face கள் மற்றும் boundary condition ல், தேவையான மாற்றங்களை செய்யவும்.
02:48 இப்போது, command terminalஐ நான் திறக்கிறேன்.
02:51 இதைச் செய்ய, உங்கள் keyboardல், Ctrl +Alt+ t keyகளை ஒன்றாக அழுத்தவும்.
02:57 Terminal லில், டைப் செய்கrun, பின் Enterஐ அழுத்தவும்.
03:01 இப்போது, டைப் செய்க, cd space tutorials, பின் Enterஐ அழுத்தவும்.
03:08 இப்போது, டைப் செய்க, cd space incompressible , பின் Enterஐ அழுத்தவும்.
03:15 டைப் செய்க, cd space simpleFoam, பின் Enterஐ அழுத்தவும்.
03:20 இப்போது, டைப் செய்க, cd space channel, பின் Enterஐ அழுத்தவும்.
03:28 இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
03:33 நீங்கள் மூன்று folderகளை காண்பீர்கள், 0, constant மற்றும் system.
03:37 இப்போது, டைப் செய்க, cd space constant, பின் Enterஐ அழுத்தவும்.
03:48 இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
03:52 இதில், fluidன் propertyகளை கொண்ட fileகளையும், polymesh என்று பெயரிடப்பட்ட ஒரு folderஐயும் காண்பீர்கள்.
03:59 RASProperties, Reynolds-averaged stress modelஐ கொண்டிருக்கிறது.
04:03 TransportProperties, transport model ஐ கொண்டிருக்கிறது, மற்றும், kinematic viscosity, அதாவது, (nu), இந்த caseல், 0.01 m²/sல் set செய்யப்பட்டிருக்கிறது.
04:17 இப்போது, terminalலில், டைப் செய்க, cd space polyMesh, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
04:30 BlockMeshDictஐ இங்கு நீங்கள் காணலாம்.
04:33 BlockMeshDictஐ திறக்க, terminalலில், டைப் செய்க, gedit space blockMeshDict, பின் Enterஐ அழுத்தவும். Scroll down செய்யவும்.
04:48 Geometry, meter களில் இருக்கிறது. அதனால்convertTometers, 1க்கு set செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து, channelன் vertexகளை நாம் வரையறுத்துள்ளோம்.
04:59 நாம் இங்கு ஒரு 100 X 100 mesh sizeஐ பயன்படுத்தியுள்ளோம், மற்றும் cell spacing, ( 1 1 1 )ல் வைக்கப்பட்டுள்ளது.
05:07 அடுத்து, boundary conditionகள், மற்றும் அதன் வகைகளான, inlet, outlet, top and bottomஐ set செய்துள்ளோம்.
05:19 இது ஒரு 2D Geometry ஆக இருப்பதினால், front and Back, emptyஆக வைக்கப்பட்டுள்ளன.
05:27 மேலும், இது ஒரு எளிய geometryஆக இருப்பதினால், mergePatchPairs மற்றும் edges, emptyஆக வைக்கப்பட வேண்டும். BlockMeshDict fileஐ மூடவும்.
05:38 Command terminalலில், டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும்.
05:44 மீண்டும் டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும்.
05:49 இப்போது, terminalலில், டைப் செய்க, cd space 0 (Zero), பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
05:58 இது channel caseக்கான, intial boundary condition களையும், wall function களையும் கொண்டிருக்கிறது.
06:05 அது, wall functionகளான, epsilon, k, nut, nuTilda போன்ற பல்வேறு fileகளையும், flowக்கான, initial conditionகளான, 'p' , 'R' மற்றும் capital 'U' ஐயும் கொண்டிருக்க வேண்டும்.
06:20 நான் slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
06:24 Turbulent kinetic energy என்ற 'k'ஐ , slideல் கொடுக்கப்பட்டுள்ள formulaவில் இருந்து கணக்கிடவும்.
06:29 இதில், Ux, Uy மற்றும்Uz என்பன, x, y மற்றும் z திசைகளில் இருக்கும், velocity componentகளாகும், மற்றும், U' ( dash ) = 0.05 தடவைகள் u actual.
06:43 கொடுக்கப்பட்டுள்ள formulaவில் இருந்து, epsilonஐ கணக்கிடவும். இதில், epsilon என்பது, rate of dissipation of turbulent energy, C mu ஒரு constant, மற்றும் அதன் மதிப்பு, 0.09 ஆகும்.
06:56 'l' என்பது, channelன் நீளம் ஆகும். இதை நான் சிறிதாக்குகிறேன்.
07:02 மேலுள்ள ஒவ்வொரு fileகளிலும், boundary nameகளை மட்டும் மாற்றவும்.
07:07 nut, nuTilda, R க்கு, முன்னிருப்பான மதிப்புகளே வைக்கப்படுகின்றன என்பதை கவனிக்கவும்.
07:13 மற்ற, fileகள், ஒவ்வொரு boundary faceகளுக்கும், initial மதிப்பை கொண்டிருக்க வேண்டும்.
07:21 இப்போது, terminalலில், டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும்.
07:27 System folderல் எந்த மாற்றமும் செய்வதற்கு இல்லை.
07:31 இப்போது, நாம், geometryஐ mesh செய்ய வேண்டும். இதைச் செய்ய, Command terminalலில், டைப் செய்க, blockMesh, பின் Enterஐ அழுத்தவும்.
07:40 Meshing செய்யப்பட்டுவிட்டது. இப்போது, நான் slideக்கு திரும்புகிறேன்.
07:45 நாம் இங்கு பயன்படுத்துகின்றsolverன் வகை , SimpleFoam ஆகும். அது, compressible மற்றும் turbulent flowகளுக்கு, ஒரு Steady-state solver ஆகும்.
07:55 இதை நான் சிறிதாக்குகிறேன். Command terminalலில், டைப் செய்க, simpleFoam, பின் Enterஐ அழுத்தவும்.
08:03 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், command terminalலில், காணப்படும்.
08:07 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், சிறிது நேரம் எடுக்கலாம்.
08:11 தீர்வு converge ஆன பிறகு, அல்லது, அதன் end time valueஐ அது அடைந்த பிறகு, iterationகள் நின்றுவிடும்.
08:16 Terminalலில், paraViewல், முடிவிகளைக் காண,
08:20 டைப் செய்க, paraFoam, பின் Enterஐ அழுத்தவும். இது, paraView windowஐ திறக்கும்.
08:28 ParaView windowவின் இடது பக்கத்தில் இருக்கும், APPLYஐ க்ளிக் செய்யவும். Geometryஐ இங்கு நீங்கள் காணலாம்.
08:35 Active variable control menuவின் மேல் இருக்கும், drop down menuஐ , solid colorல் இருந்து, capital Uக்கு மாற்றவும்.
08:50 Inletல், velocity magnitudeனின், initial stateஐ நீங்கள் காணலாம். ParaView windowவின் மேல் இருக்கும், VCR controlன், play பட்டனை க்ளிக் செய்யவும்.
09:00 Velocity magnitudeன் இறுதி மதிப்பை நீங்கள் காணலாம்.
09:07 Active variable control menuவின் இடது மேல் பக்கத்தின்color legend மீது toggle செய்து, மீண்டும்APPLYஐ க்ளிக் செய்யவும்.
09:16 இப்போது, Displayக்கு செல்லவும். Scroll down செய்யவும். நீங்கள் Rescaleஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
09:24 Flow முழுமையாக உருவான பிறகு, நடுவில், அது, அதிகபட்ச ஒரேசீரான velocityஐ பெறுவதை நாம் காணலாம். இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
09:36 பெறப்பட்ட முடிவுகளை, ஒரு channelலில், u(max)=1.5* Uavg, என்ற laminar flowக்கான analytical தீர்வுடன் validate செய்யலாம்.
09:46 OpenFoam ஐ பயன்படுத்தி, u(max) = 1.48 meters per second என்ற முடிவைப் பெறுகிறோம். இது ஒரு நல்ல பொருத்தமாகும். இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:57 இந்த டுடோரியலில், நாம் கற்றது: Channel ன் file structure, steady state solverஐ பயன்படுத்தி, தீர்வைப் பெற்றோம், paraviewல் geometryஐ பார்த்தோம், மற்றும், analytic resultகளுடன் validation செய்தோம்.
10:08 பயிற்சியாக, Reynold's Number equal to 1500 க்கான சிக்கலைத் தீர்த்து, analytical முடிவுடன், அதை validate செய்யவும்.
10:17 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:42 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:52 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree