Java/C2/Creating-object/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:27, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 objects உருவாக்கம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:05 இந்த tutorial லில் நாம் கற்கபோவது:


  • Reference Variables
  • Constructing objects மற்றும்
  • objectகளுக்கான Memory Allocation


00:13 இங்கு பயனாவது :
  • Ubuntu 11.10
  • JDK 1.6 மற்றும்
  • Eclipse IDE 3.7.0


00:23 இந்த tutorial ஐ தொடர Eclipse ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்க தெரிய வேண்டும்.


00:29 இல்லையெனில் அதற்கான tutorialகளை எங்கள் வலைதளத்தில் காணவும்
00:38 variables உம் methods உம் சேர்ந்து class ன் members ஐ அமைக்கிறது என தெரியும்.


00:43 class ன் members ஐ அணுக ,அந்த class க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டும்.
00:48 இப்போது object என்றால் என்ன என காணலாம்.


00:52 object என்பது class ன் instance.


00:55 ஒவ்வொரு object உம் state மற்றும் behaviorஐ கொண்டுள்ளன.


00:58 முன் tutorial ல் நாம் விவாதித்த human being class உதாரணத்தை நினைவுகொள்க


01:04 Object... அதன் state ஐ fields அல்லது variables ல் சேமிக்கிறது


01:08 அதன் behaviorஐ methods வழியாக வெளிப்படுத்துகிறது.



01:11 இப்போது reference variables பற்றி கற்போம்


01:15 Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும்.


01:19 மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது


01:23 objectsஐ refer செய்யும் variables... reference variables எனப்படும்.
01:28 முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய Student class க்கு வருவோம்.


01:37 இப்போது இந்த class லிருந்து main method ஐ நீக்குவோம்.


01:49 இப்போது Control மற்றும் S ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம்


01:55 அதே projectனுள் TestStudent என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம்


02:00 அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்.


02:03 இந்த class இல் main method உள்ளது


02:06 main method னுள் Student classக்கு ஒரு object ஐ உருவாக்குவேன்


02:11 அதற்கு main methodனுள் எழுதுக


02:17 Student space stud1 equal to new space Student opening மற்றும் closing brackets, semicolon.


02:34 Student classக்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன்.


02:37 இங்கே Student என்பது object உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும்


02:47 stud1 என்பது Student class ன் ஒரு object ஐ refer செய்யும் reference variable ஆகும்.


02:53 new keyword.... உருவாக்கப்பட வேண்டிய புதிய objectக்கு இடத்தை ஒதுக்குகிறது


02:59 stud1... Student class க்கான object இல்லை என்பதை காண்க.


03:03 இது உருவாக்கப்பட்ட புது objectக்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது.



03:09 இப்போது stud1 கொண்டிருப்பதைக் காணலாம்.


03:13 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud1 contains space plus stud1 பின் semicolon.


03:44 இப்போது file TestStudent dot javaஐ சேமித்து இயக்கவும்.
03:53 காணும் வெளியீடு


03:56 இங்கே Student என்பது உருவாக்கப்பட்ட புது object ன் class பெயர் ஆகும்


04:03 இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது object ன் memory address .


04:08 stud1 ஐ பயன்படுத்தி Student class ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும்.


04:15 இவை பற்றி வரும் tutorialகளில் காணலாம்.
04:18 இப்போது Student classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன்.


04:24 எனவே எழுதுக Student space stud2 equal to new space Student opening மற்றும் closing brackets semi-colon.
04:47 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud2 contains space plus stud2 பின் semicolon.


05:19 இப்போது இந்த fileஐ சேமித்து இயக்கலாம்.
05:25 stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன என காணலாம்.


05:31 அதாவது, stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன.


05:37 அவை வெவ்வேறு roll numbers மற்றும் names ஐ கொண்டுள்ளன.
05:44 இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம்.


05:51 எழுதுக Student stud2 equal to stud1.


06:01 ' file' ஐ சேமித்து இயக்குக.



06:06 இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் ஒரே objectஐ refer செய்கின்றன என காணலாம்


06:12 அதாவது stud1 மற்றும் stud2 .... roll number மற்றும் name உடன் ஒரே object ஐ refer செய்கின்றன
06:31 இந்த tutorialலில் நாம் கற்றது
06:34 Reference variables
06:35 new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல்
06:38 referenceகளை Assign செய்தல்


06:41 சுய மதிப்பீட்டுக்கு
06:43 TestEmployee என்ற மற்றொரு class உருவாக்குக.
06:46 emp1 என்ற reference variableஉடன் Employee classக்கு ஒரு object உருவாக்குக.


06:52 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:58 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:01 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:05 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:10 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:14 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
07:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07:31 மேலும் விவரங்களுக்கு
[1] 
07:40 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:43 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst