Health-and-Nutrition/C2/Safe-preparation,-serving-and-storage-of-baby-food/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரித்தல், உணவூட்டுதல் மற்றும் சேமித்தல் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:09 | இந்த டுட்டோரியலில், நாம் கற்க போவது குழந்தையின் உணவு குறித்த பாதுகாப்பு வழிமுறைகள் |
00:15 | அதன் தயாரிப்பு, உணவூட்டுதல் |
00:18 | மற்றும் சேமித்தல் |
00:20 | தொடங்குவோம் |
00:22 | பாதுகாப்பான முறையில் குழந்தையின் உணவை தயாரித்தல் மிகவும் முக்கியம் |
00:26 | உணவு மூலம் பரவும் தொற்றுநோயில் இருந்து குழந்தையை இது பாதுகாக்கிறது |
00:31 | பாதுகாப்பான உணவு தயாரிப்பில் முதல் படி, தனிப்பட்ட சுகாதாரம் |
00:37 | தனிப்பட்ட சுகாதாரம், இதே தொடரின் மற்றொரு டுட்டோரியலில் விளக்கப்பட்டுள்ளது |
00:44 | அடுத்த படி, சுத்தம் செய்தல் |
00:47 | சுத்தம் செய்ய வேண்டியவை, உணவு தயாரிக்கும் இடம், |
00:50 | பாத்திரங்கள் மற்றும் நறுக்கும் பலகை |
00:53 | சுத்தம் செய்ய வெதுவெதுப்பான சோப்பு நீரை பயன்படுத்தவும் |
00:57 | எப்பொழுதும் உபயோகத்திற்கு முன்னும் பின்னும் சுத்தம் செய்யவும் |
01:01 | மேலும், சமைக்கப்படாத உணவுகளை கையாண்ட பின்னும் மற்றும் |
01:05 | மற்ற உணவுகளை கையாளுவதற்கு முன்னும் சுத்தம் செய்யவும் |
01:09 | குழந்தைகளுக்கான பாத்திரங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும் |
01:14 | கொதிக்கும் நீரில் அவற்றை கழுவ வேண்டும் |
01:18 | காற்றினாலோ அல்லது சுத்தமான துணியினாலோ அவற்றை உலர்த்த வேண்டும் |
01:24 | அவற்றை எப்பொழுதும் மூடி வைக்கவும் |
01:28 | எல்லா உணவுப் பொருட்களும் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும் |
01:32 | பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமான நீரினால் கழுவ வேண்டும் |
01:38 | அவைகளை உரிப்பதற்கு அல்லது வெட்டுவதற்கு முன் கழுவ வேண்டும் |
01:41 | இதனால் மாசுக்கள், |
01:44 | புழுக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நீக்கப்படும் |
01:47 | சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு வெவ்வேறு நறுக்கும் பலகையை பயன்படுத்தவும் |
01:53 | சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளுக்கும், வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் நறுக்கும் பலகையை பயன்படுத்தவும் |
02:00 | இது சமைக்கப்படாத உணவு மற்றும் கறிகளில் இருந்து கிருமிகள் மற்ற உணவுகளுக்கு செல்வதை தவிர்க்கும் |
02:07 | சமையல் அறையின் துணியை அடிக்கடி துவைத்து மாற்றவும் |
02:14 | தீங்கு விளைவிக்கும் bacteria களை அழிக்க குழந்தையின் உணவை முறையாக சமைக்க வேண்டும் |
02:20 | ஆதலால், உணவூட்டும் முன்பு உணவு முழுமையாக சமைக்க பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்தவும் |
02:27 | உணவை சுவைத்து சரிபார்க்கவும் |
02:31 | சமைக்கப்படாத அறிகுறிகள் இருக்கிறதா எனப் பார்க்கவும் |
02:36 | அப்படி ஒரு அறிகுறி, இளஞ்சிவப்பு சதை அல்லது ரசம் கறியில் தென்படும் |
02:43 | இதுவே, குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகும் |
02:49 | அடுத்து, குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பார்ப்போம் |
02:56 | முதலில், குழந்தையின் சாப்பிடும் உடை மற்றும் பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யவும் |
03:02 | குழந்தை சாப்பிடும் இடம், நாற்காலி மற்றும் உட்காரும் இடங்களை ஈரத்துணியினால் துடைக்கவும் |
03:09 | உபயோகத்திற்கு முன் நன்கு உலர வைக்க வேண்டும் |
03:12 | உணவூட்டும் முன்பு தாய் மற்றும் குழந்தையின் கைகளை கழுவ வேண்டும் |
03:18 | விரங்களின் உதவியுடன் சாப்பிடும் குழந்தைகள் உணவிற்கு முன் கைகளை கழுவ வேண்டும் |
03:24 | உணவூட்டும் முன், அதன் வெப்பநிலையை சரிபார்க்கவும் |
03:29 | இதற்கு, ஒரு சிறிய அளவு உணவை மணிக்கட்டில் வைத்து சரி பார்கலாம் |
03:36 | சில நேரங்களில், சிறிய உணவுத் துகள்கள் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கலாம் |
03:42 | ஆதலால், உணவை நன்கு கலந்து விட வேண்டும் |
03:47 | குழந்தைக்கு உணவூட்டுதல் நிறைய நேரம் எடுக்கும் |
03:50 | அதனால், பயன்படுத்தும் கிண்ணம் அல்லது தட்டு எப்பொழுதும் மூடியிருக்க வேண்டும் |
03:57 | சரியாக மூடி வைப்பதனால், உணவை ஈ மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம் |
04:04 | குழந்தைக்கு உணவூட்டும் பொழுது, தொண்டையில் அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது |
04:09 | இதைத் தவிர்க்க, குழந்தையை நேராக உட்கார வைக்கவும் |
04:15 | சாப்பிடும் பொழுது, குழந்தை நடக்கவோ ஓடவோ கூடாது |
04:19 | குழந்தை சாப்பிடும் பொழுது கவனமில்லாமல் இருக்காதீர்கள் |
04:24 | குழந்தையை, உணவை மென்று மெதுவாக உண்ண ஊக்கப்படுத்துங்கள் |
04:29 | குழந்தைக்கு தொண்டையில் அடைப்பு உண்டாக்கக் கூடிய கடிமான உணவை கொடுக்காதீர்கள் |
04:34 | முழு கொட்டைகள் மற்றும் பச்சை காய்கறிகளின் துண்டுகள் இதற்கு உதாரணங்கள் |
04:40 | புட்டி பால் கொடுப்பதை தவிர்க்கவும் |
04:43 | இப்பொழுது, குழந்தையின் உணவை பாதுகாப்பாக சேமிப்பது குறித்து பார்ப்போம் |
04:48 | முதல் மற்றும் முக்கியமானது, புதிதாக சமைத்த உணவே குழந்தைக்கு சிறந்தது |
04:54 | மீதமுள்ள குழந்தையின் உணவை கொட்டி விடவும் |
05:00 | மீதமுள்ள உணவில் குழந்தையின் எச்சல் கலந்திருக்கும் |
05:05 | அதில் bacteria இருக்கக்கூடும் |
05:08 | இதை சேமித்து வைப்பதனால் bacteria கள் பண்மடங்காக பெருக்கக்கூடும் |
05:15 | சமைத்து முடித்ததும், உணவை கைகளால் தொடுவதை தவிர்க்கவும் |
05:20 | தூசி மற்றும் ஈக்களை தவிர்க்க, மூடியுடன் கொண்ட பாத்திரத்தில் வைக்கவும் |
05:26 | மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியே வைக்கவும் |
05:31 | சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவுகளை வெவ்வேறு இடத்தில் வைக்கவும் |
05:37 | சமைத்த உணவை 1-2 மணி நேரத்திற்கு மேல் அதிக வெப்பநிலையில் சேமித்து வைக்கக்கூடாது |
05:44 | குளிர் சாதனப் பெட்டி இருந்தால், குழந்தையின் உணவை அதில் சேமித்து வைக்கலாம் |
05:49 | குளிர் சாதனப் பெட்டி நல்ல வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும் |
05:53 | அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டும் |
05:58 | உணவு கெடாமல் இருக்க அதன் வெப்பநிலை 5°C இல் இருக்க வேண்டும் |
06:04 | குடிநீரில் தூசி, கைகள் மற்றும் கரண்டி ஆகியவை படாமல் பாதுகாக்கவும் |
06:10 | இந்த வழிமுறைகளை, குழந்தையின் உணவை தயாரித்தல், |
06:14 | சேமித்தல் மற்றும் உணவூட்டதிலின் போது பின்பற்ற வேண்டும் |
06:18 | சத்துள்ள உணவை சுகாதாரமான முறையில் கொடுப்பதினால், குழந்தையின் வலிமை பெருகும் |
06:23 | மாறாக, சுகாதாரம் இல்லாமல் கொடுப்பதினால், அது குழந்தையை நோய்வாய்ப்பட செய்யலாம் |
06:30 | அதனால், குழந்தையை பாதிக்காமல் இருக்க, உணவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் |
06:37 | இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி |