Health-and-Nutrition/C2/Safe-preparation,-serving-and-storage-of-baby-food/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரித்தல், உணவூட்டுதல் மற்றும் சேமித்தல் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:09 இந்த டுட்டோரியலில், நாம் கற்க போவது குழந்தையின் உணவு குறித்த பாதுகாப்பு வழிமுறைகள்
00:15 அதன் தயாரிப்பு, உணவூட்டுதல்
00:18 மற்றும் சேமித்தல்
00:20 தொடங்குவோம்
00:22 பாதுகாப்பான முறையில் குழந்தையின் உணவை தயாரித்தல் மிகவும் முக்கியம்
00:26 உணவு மூலம் பரவும் தொற்றுநோயில் இருந்து குழந்தையை இது பாதுகாக்கிறது
00:31 பாதுகாப்பான உணவு தயாரிப்பில் முதல் படி, தனிப்பட்ட சுகாதாரம்
00:37 தனிப்பட்ட சுகாதாரம், இதே தொடரின் மற்றொரு டுட்டோரியலில் விளக்கப்பட்டுள்ளது
00:44 அடுத்த படி, சுத்தம் செய்தல்
00:47 சுத்தம் செய்ய வேண்டியவை, உணவு தயாரிக்கும் இடம்,
00:50 பாத்திரங்கள் மற்றும் நறுக்கும் பலகை
00:53 சுத்தம் செய்ய வெதுவெதுப்பான சோப்பு நீரை பயன்படுத்தவும்
00:57 எப்பொழுதும் உபயோகத்திற்கு முன்னும் பின்னும் சுத்தம் செய்யவும்
01:01 மேலும், சமைக்கப்படாத உணவுகளை கையாண்ட பின்னும் மற்றும்
01:05 மற்ற உணவுகளை கையாளுவதற்கு முன்னும் சுத்தம் செய்யவும்
01:09 குழந்தைகளுக்கான பாத்திரங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்
01:14 கொதிக்கும் நீரில் அவற்றை கழுவ வேண்டும்
01:18 காற்றினாலோ அல்லது சுத்தமான துணியினாலோ அவற்றை உலர்த்த வேண்டும்
01:24 அவற்றை எப்பொழுதும் மூடி வைக்கவும்
01:28 எல்லா உணவுப் பொருட்களும் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும்
01:32 பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்
01:38 அவைகளை உரிப்பதற்கு அல்லது வெட்டுவதற்கு முன் கழுவ வேண்டும்
01:41 இதனால் மாசுக்கள்,
01:44 புழுக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நீக்கப்படும்
01:47 சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு வெவ்வேறு நறுக்கும் பலகையை பயன்படுத்தவும்
01:53 சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளுக்கும், வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் நறுக்கும் பலகையை பயன்படுத்தவும்
02:00 இது சமைக்கப்படாத உணவு மற்றும் கறிகளில் இருந்து கிருமிகள் மற்ற உணவுகளுக்கு செல்வதை தவிர்க்கும்
02:07 சமையல் அறையின் துணியை அடிக்கடி துவைத்து மாற்றவும்
02:14 தீங்கு விளைவிக்கும் bacteria களை அழிக்க குழந்தையின் உணவை முறையாக சமைக்க வேண்டும்
02:20 ஆதலால், உணவூட்டும் முன்பு உணவு முழுமையாக சமைக்க பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்தவும்
02:27 உணவை சுவைத்து சரிபார்க்கவும்
02:31 சமைக்கப்படாத அறிகுறிகள் இருக்கிறதா எனப் பார்க்கவும்
02:36 அப்படி ஒரு அறிகுறி, இளஞ்சிவப்பு சதை அல்லது ரசம் கறியில் தென்படும்
02:43 இதுவே, குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகும்
02:49 அடுத்து, குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பார்ப்போம்
02:56 முதலில், குழந்தையின் சாப்பிடும் உடை மற்றும் பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யவும்
03:02 குழந்தை சாப்பிடும் இடம், நாற்காலி மற்றும் உட்காரும் இடங்களை ஈரத்துணியினால் துடைக்கவும்
03:09 உபயோகத்திற்கு முன் நன்கு உலர வைக்க வேண்டும்
03:12 உணவூட்டும் முன்பு தாய் மற்றும் குழந்தையின் கைகளை கழுவ வேண்டும்
03:18 விரங்களின் உதவியுடன் சாப்பிடும் குழந்தைகள் உணவிற்கு முன் கைகளை கழுவ வேண்டும்
03:24 உணவூட்டும் முன், அதன் வெப்பநிலையை சரிபார்க்கவும்
03:29 இதற்கு, ஒரு சிறிய அளவு உணவை மணிக்கட்டில் வைத்து சரி பார்கலாம்
03:36 சில நேரங்களில், சிறிய உணவுத் துகள்கள் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கலாம்
03:42 ஆதலால், உணவை நன்கு கலந்து விட வேண்டும்
03:47 குழந்தைக்கு உணவூட்டுதல் நிறைய நேரம் எடுக்கும்
03:50 அதனால், பயன்படுத்தும் கிண்ணம் அல்லது தட்டு எப்பொழுதும் மூடியிருக்க வேண்டும்
03:57 சரியாக மூடி வைப்பதனால், உணவை ஈ மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்
04:04 குழந்தைக்கு உணவூட்டும் பொழுது, தொண்டையில் அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
04:09 இதைத் தவிர்க்க, குழந்தையை நேராக உட்கார வைக்கவும்
04:15 சாப்பிடும் பொழுது, குழந்தை நடக்கவோ ஓடவோ கூடாது
04:19 குழந்தை சாப்பிடும் பொழுது கவனமில்லாமல் இருக்காதீர்கள்
04:24 குழந்தையை, உணவை மென்று மெதுவாக உண்ண ஊக்கப்படுத்துங்கள்
04:29 குழந்தைக்கு தொண்டையில் அடைப்பு உண்டாக்கக் கூடிய கடிமான உணவை கொடுக்காதீர்கள்
04:34 முழு கொட்டைகள் மற்றும் பச்சை காய்கறிகளின் துண்டுகள் இதற்கு உதாரணங்கள்
04:40 புட்டி பால் கொடுப்பதை தவிர்க்கவும்
04:43 இப்பொழுது, குழந்தையின் உணவை பாதுகாப்பாக சேமிப்பது குறித்து பார்ப்போம்
04:48 முதல் மற்றும் முக்கியமானது, புதிதாக சமைத்த உணவே குழந்தைக்கு சிறந்தது
04:54 மீதமுள்ள குழந்தையின் உணவை கொட்டி விடவும்
05:00 மீதமுள்ள உணவில் குழந்தையின் எச்சல் கலந்திருக்கும்
05:05 அதில் bacteria இருக்கக்கூடும்
05:08 இதை சேமித்து வைப்பதனால் bacteria கள் பண்மடங்காக பெருக்கக்கூடும்
05:15 சமைத்து முடித்ததும், உணவை கைகளால் தொடுவதை தவிர்க்கவும்
05:20 தூசி மற்றும் ஈக்களை தவிர்க்க, மூடியுடன் கொண்ட பாத்திரத்தில் வைக்கவும்
05:26 மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியே வைக்கவும்
05:31 சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவுகளை வெவ்வேறு இடத்தில் வைக்கவும்
05:37 சமைத்த உணவை 1-2 மணி நேரத்திற்கு மேல் அதிக வெப்பநிலையில் சேமித்து வைக்கக்கூடாது
05:44 குளிர் சாதனப் பெட்டி இருந்தால், குழந்தையின் உணவை அதில் சேமித்து வைக்கலாம்
05:49 குளிர் சாதனப் பெட்டி நல்ல வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும்
05:53 அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டும்
05:58 உணவு கெடாமல் இருக்க அதன் வெப்பநிலை 5°C இல் இருக்க வேண்டும்
06:04 குடிநீரில் தூசி, கைகள் மற்றும் கரண்டி ஆகியவை படாமல் பாதுகாக்கவும்
06:10 இந்த வழிமுறைகளை, குழந்தையின் உணவை தயாரித்தல்,
06:14 சேமித்தல் மற்றும் உணவூட்டதிலின் போது பின்பற்ற வேண்டும்
06:18 சத்துள்ள உணவை சுகாதாரமான முறையில் கொடுப்பதினால், குழந்தையின் வலிமை பெருகும்
06:23 மாறாக, சுகாதாரம் இல்லாமல் கொடுப்பதினால், அது குழந்தையை நோய்வாய்ப்பட செய்யலாம்
06:30 அதனால், குழந்தையை பாதிக்காமல் இருக்க, உணவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்
06:37 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி

Contributors and Content Editors

Arthi