Arduino/C2/Analog-to-Digital-Conversion/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:31, 27 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Arduino.வை பயன்படுத்தி Analog to Digital Conversion குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ADC i.e. Analog to Digital Conversion
00:14 Arduinoவில் ADC pinகள், ADC Resolution
00:19 DHT11 Temperature and Humidity sensor
00:23 Serial Monitor மற்றும் Serial Plotter
00:27 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Electronics மற்றும் C or C++ programming language languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்.
00:37 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:43 Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE
00:50 பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: DHT11 sensor
00:57 Breadboard மற்றும் Jumper wires
01:02 இந்த டுடோரியலில், DHT11 sensor ஐப் பயன்படுத்தி வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிவோம்.
01:09 இந்த sensor, analog மதிப்புகளைச் சேகரித்து, அதை Arduino Unoக்கு வழங்குகிறது.
01:15 Arduino ADC pinகள் இந்த analog மதிப்புகளை digital மதிப்புகளாக மாற்றும்.
01:21 அடுத்து, resolution. என்ற கருத்தைப் புரிந்துகொள்வோம்.
01:25 Arduino Uno, 10-bit resolutionஐ கொண்டுள்ளது
01:28 இதன் பொருள், இது (2 to the power of 10)ஐ கண்டறிய முடியும். அதாவது, 1024 discrete analog levels.
01:37 Resolution என்பது அளவிடக்கூடிய smallest change ஆகும்
01:42 Arduino 5 வோல்ட் output மின்னழுத்தத்தை அளிக்கிறது, எனவே 5 வோல்ட்களை 1024 அளவுகளால் வகுத்தால் 4.89 miliVoltகள்
01:56 அதாவது, Arduino Uno 4.8 9miliVolts இன் குறைந்தபட்ச மாற்றத்திற்கு sensitive ஆக இருக்கலாம்.
02:04 இது DHT11க்கான circuit இணைப்பை Arduino உடன் காட்டுகிறது.
02:10 Arduino Uno ஆனது 6 in-built ADC channelகளைக் கொண்டுள்ளது (A0 முதல் A5 வரை).
02:17 ADC channelகள் 0-5 volts வரம்பில் analog signalஐ read செய்கிறது
02:23 DHT11 sensorன் pin 1, Arduino இன் 5 வோல்ட் pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:30 DHT11 sensor ன் pin 2, Data pin ஆகும்
02:35 sensorன் இந்த Data pin, Arduino இன் analog pin A0 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:42 DHT11 sensorன் Pin 3 ஆனது Arduino இன் ground pin உடன் இணைக்கப்பட்டுள்ளது.
02:48 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் live setup ஆகும்.
02:53 இப்போது நாம் programஐ Arduino IDE.ல் எழுதுவோம்
02:57 Arduino IDE.ஐ திறக்கவும்
03:00 இந்த programஐ run செய்ய, முதலில், நாம் DHT11 arduino libraryஐ தரவிறக்க வேண்டும்
03:06 menu bar ல் உள்ள Sketch menu வை க்ளிக் செய்யவும்
03:10 Include Libraryஐ தேர்ந்தெடுத்து, பின் Manage Libraries தேர்வை க்ளிக் செய்யவும்
03:16 ஒரு புதிய window தோன்றும்
03:19 மேல் வலது மூலையில், நாம் ஒரு search tab ஐ காணலாம். இங்கு, DHT11 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
03:28 DHT11 sensor.க்கான பல்வேறு libraryக்களை நாம் காணலாம்
03:33 திரையின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT by Winlin.ஐ தேர்ந்தெடுக்கவும்
03:39 version drop down boxல், libraryன் சமீபத்திய பதிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம்
03:45 libraryஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும்
03:49 DHT11 library, இப்போது Arduino IDEவில் நிறுவப்பட்டுவிட்டது
03:54 Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்
03:59 இந்த libraryprogramக்கு சேர்ப்போம்
04:02 Sketch menuவை க்ளிக் செய்து, Include Library.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:06 புதிதாக தரவிறக்கப்பட்ட library, பொதுவாக இறுதியில் தோன்றும்
04:11 அதனால், பட்டியலின் கீழுக்கு scroll செய்து, SimpleDHT.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:17 header file SimpleDHT.h , code window விற்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்
04:24 காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
04:27 இங்கு நாம், A0. உடன் இணைக்கப்பட்டுள்ள DHT11 sensorன் data pin ஐ initialize செய்துள்ளோம்
04:34 இந்த command ஒரு DHT objectஐ உருவாக்குகிறது
04:38 void setup functionன் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்:
04:43 Serial.begin() function, serial communicationஐ initiate செய்கிறது
04:48 அது serial data transmission.க்கு, data rate bits per secondல் set செய்கிறது
04:54 9600, baud rateஐ குறிப்பிடுகிறது
04:58 delay(500)என்பது, sensor முதல் bootக்கான delay time ஆகும்
05:03 Serial.print command, இங்கு குறிப்பிட்டுள்ளபடி, headerஐ print செய்கிறது
05:08 இப்போது நாம், void loop.க்கான codeஐ எழுதுவோம்
05:12 நாம் DHT sensor output க்கு, இரண்டு variableகள், temperature மற்றும் humidityஐ உருவாக்கியுள்ளோம்
05:20 dht11.read,, sensorல் இருந்து dataவை read செய்கிறது
05:25 அது முடிவை microcontroller’s register.ல் சேமிக்கிறது
05:29 இந்த வரிகள், வெப்பநிலையை degree Celsiusயிலும் மற்றும் ஈரப்பதத்தை percentageயிலும் print செய்கிறது
05:36 delay(2000), தற்போதைய ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவீடுகளை ஒவ்வொரு 2 secondsஉம் புதுப்பிக்கிறது
05:43 இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்
05:51 உங்கள் program.ஐ சரி பார்க்க, compile பட்டனை க்ளிக் செய்யவும்
05:55 தற்போதைய programஐ சேமிக்க, ஒரு pop up window தோன்றும். programஐ, DHT11. என சேமிக்கவும்
06:05 இப்போது, தற்போதைய program Arduino.வில் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும்
06:11 நாம் outputஐ Serial monitor screen.ல் பார்க்கலாம்
06:15 இதற்கு, Tools menu வை க்ளிக் செய்து, Serial monitor.ஐ தேர்ந்தெடுக்கவும்
06:21 serial monitor window திறக்கிறது
06:25 தற்போதைய இடத்தின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் எதிர்பார்த்தபடி காட்டப்படுகிறது. Window வை மூடவும்
06:33 அடுத்து நாம் outputஐ, serial plotterல் பார்ப்போம்
06:37 programஐ மாற்றுவோம்
06:40 Serial.print( “Temperature & Humidity :”);வரியை காட்டப்பட்டுள்ளபடி Comment செய்யவும்:
06:47 Temperature மற்றும் Humidity textஐ இது print செய்யாது
06:52 Plot செய்வதற்கு, நமக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் மதிப்புகள் மட்டுமே தேவை.
06:58 முடிவுகளை serial plotterல் காண, தற்போதைய programஐ upload செய்வோம்
07:04 tools menuவை க்ளிக் செய்து, serial plotter. ஐ தேர்ந்தெடுக்கவும். serial plotter window திறக்கிறது
07:12 இரண்டு கோடுகள் ஒரே நேரத்தில் புள்ளிகளைத் plot செய்வதை காணலாம்.
07:18 நீலக் கோடு 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறிக்கிறது.
07:25 சிவப்பு கோடு என்பது 45% க்கு அருகில் இருக்கும் ஈரப்பதம் அளவாகும்.
07:31 சோதனை எங்கு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அளவீடுகள் மாறுபடும்.
07:36 இப்போது sensorஐ உங்கள் கைகளால் மூடவும், ஏற்ற இறக்கமான அளவீடுகளை நீங்கள் காண்பீர்கள்.
07:43 Windowவை மூடவும்
07:45 இது 20% முதல் 80% க்கு இடையே உள்ள, ∓5% RH உடன் கூடிய humidity அளவீடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, (Relative Humidity)
07:56 0 முதல் 50 °C க்கு இடையே உள்ள, ∓2 °C உடன் கூடிய வெப்பநிலை அளவீடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
08:06 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
08:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ADC i.e. Analog to Digital Conversion
08:19 Arduinoல் ADC pinகள், ADC Resolution
08:25 DHT11 Temperature மற்றும் Humidity sensor, Serial Monitor மற்றும் Serial Plotter
08:33 பயிற்சியாக: Arduinoன் built in LED pin 13ஐ ஒளிரச் செய்வதன் மூலம் அலாரத்தை எழுப்பவும்
08:41 மேலே உள்ள codeஐ மாற்றவும். குறிப்பு: If-else statementஐ பயன்படுத்தவும்
08:48 serial monitorல் நீங்கள் பெறும் வெப்பநிலை மதிப்பில் 1 அல்லது 2 °C ஐ சேர்க்கவும்.
08:55 வெப்பநிலை readingஐ அதிகரிக்க, DHT11 sensorஐ உங்கள் கைகளால் மூடவும்.
09:02 source code க்கு இந்த டுடோரியலின் Assignment இணைப்பை பார்க்கவும்
09:07 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
09:15 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:21 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
09:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
09:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree