Spoken-Tutorial-Technology/C2/Editing-a-spoken-tutorial-using-Movie-Maker/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:07 | அன்பு நண்பர்களே, CDEEP IIT பாம்பே சார்பாக உங்களை இந்த செய்முறை விளக்க பயிற்சிக்கு வரவேற்கிறோம். |
00:13 | இந்த பயிற்சியில் Windows Movie Maker ஐ பயன்படுத்தி எவ்வாறு edit செய்வது என்பதை அறிந்துகொள்வோம். |
00:19 | Windows Movie Maker என்பது Microsoft கழகத்தின் ஒரு எடிட்டிங் மென்பொருள். |
00:24 | இது அனைத்து புதிய Windows OS version - Me, XP, Vista வில் உள்ளது. |
00:29 | உங்கள் கம்ப்யூட்டரில் இந்த மென்பொருள் இல்லை என்றால் நீங்கள் www.microsoft.com/downloads என்ற இணையதளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். |
00:42 | இந்த movie clip ஐ கேட்க உங்களுக்கு speaker அல்லது headset தேவைப்படும் |
00:47 | இந்த மென்பொருளை உபயோகிக்க Windows Movie Maker பட்டனை இரண்டு முறை கிளிக் செய்யவும். |
00:52 | உங்கள் திரையில் movie project ஐ காணலாம். நீங்கள் வலது மேல்புறத்தில் மெயின் மேனுவை காணலாம். |
00:59 | இதில் நிறைய optionகள் உள்ளது இவற்றை விரிவாக இந்த பயிற்சியில் அறிந்துகொள்ளலாம். |
01:05 | திரையில் இடது புறத்தில் movie Tasks Panel உள்ளது, மத்தியில் Collection பநெல் மற்றும் வலது புறத்தில் display panel ஐ நீங்கள் காணலாம். |
01:14 | நீங்கள் Windows Movie Maker ஐ முதல்முறையாக உபயோக படுத்தும் போது collection panel காலியாக இருக்கும். |
01:21 | தேவையான அனைத்து video clips, audio narrations மற்றும் music files ஐ import செய்யும் போது அதனை collection panel இல் காணலாம். |
01:30 | நீங்கள் இந்த மென்பொருளை முன்பே பயன்படுத்தி இருந்தால், நீங்கள் முன்பு பயன்படுத்திய video மற்றும் audio clips உங்கள் collection panel இல் தெரியும். |
01:40 | CRTL+A ஐ அழுத்தி collection panel ல் உள்ள அனைத்தையும் தேர்வு செய்து ஏதாவது ஒரு clip ல் right click செய்வதன் மூலம் இதை delete செய்யலாம் |
01:52 | இதனால் screen ல் காலியான movie project கிடைக்கும். இப்போது உங்களுக்கு தேவையான file களை Windows Movie Maker க்கு import செய்து கொள்ளலாம்er க்கு import செய்யலாம். |
02:02 | Movie task panel இல் பலவிதமான option களை காணலாம், இதில் Capture Video, Edit Movie, Finish Movie மற்றும் Movie Making Tips ஆகியவை முக்கியமான ஒன்றாகும். |
02:12 | capture video option இல் import video option ஐ காணலாம், அதை click செய்யவும். |
02:19 | மாற்றாக நீங்கள் Main menu வில் உள்ள file button ஐ click செய்து Import into Collections sub-option ஐ தேர்வு செய்யலாம். |
02:27 | இவை இரண்டும் Import File dialog box ஐ திரையில் open செய்யும். |
02:32 | இங்கு நீங்கள் எடிட் செய்வதற்கு தேவையான videoவை சரியான path மற்றும் file name கொடுத்து தேர்வு செய்யலாம். |
02:39 | நான் இந்த videoவை தேர்வு செய்து import button ஐ click செய்கிறேன். |
02:50 | தேவையான வீடியோ collection panel இல் உள்ளது, வீடியோவின் அளவு பெரியதாக இருப்பின் Windows Movie Maker தானாகவே சிறு சிறு clips களாக split செய்துகொள்ளும். |
03:01 | Keyboard இல் CTRL+A key ஐ press செய்து அனைத்து clips களையும் தேர்வு செய்யவும், இப்போது mouse இல் right click செய்து Add to Timeline option ஐ தேர்வு செய்யவும். |
03:17 | clips கள் timeline இல் வரிசையாக இருக்கும், நீங்கள் ஒவ்வொரு clips ஆகcollection panel இல் இருந்து drag செய்தும் time line இல் add செய்யலாம். |
03:31 | Vista ஐ பயன்படுத்தும்பொழுது movie clips ல் சிறு சிறு clipகளாக clip செய்யாது |
03:40 | Clip ன் மீது right click செய்து active timeline option ஐ தேர்வு செய்யவும் |
03:46 | இது movie clip ஐயும் timeline ல் add செய்யும் |
03:54 | சிறிய நீல செவ்வகத்தை timeline இன் மேல்புறத்தில் கவனிக்கவும், இது frame-head என அழைக்கபடும். இது video வின் தற்போதைய position ஐ காண்பிக்கும். |
04:05 | பொதுவாக இது timeline இன் ஆரம்பத்தில் இருக்கும். முதல் clip ஐ click செய்யவும். |
04:12 | Display panel இல் video வின் முதல் frame ஐ காணலாம். video play செய்யும்போது display panel இல் நீங்கள் காணலாம். |
04:22 | நீங்கள் VCR control button களை display panel அடியில் காணலாம், இதை பற்றி விரிவாக காண்பதற்கு முன்பு, நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன். |
04:37 | முதல் button play மற்றும் pause, இது play mode இல் இருக்கும் போது frame head முன் புறமாக நகர்ந்து செல்லும். |
04:45 | இது pause mode இல் இருக்கும் போது frame head தன் நிலையிலே நிற்கும். |
04:49 | இரண்டாவது button playback ஐ stop செய்வதற்கு பயன் படுகிறது, இதை click செய்யும்போது playback stop ஆகும் ஆனால் frame head மறுபடியும் time line இன் ஆரம்பத்திற்கு சென்றுவிடும். |
05:02 | இப்போது நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன். |
05:08 | முன்றாவது button ஒரு clip ஐ rewind செய்ய உதவும், இப்போது frame head ஒரு clip பின்நோக்கி செல்வதை காணலாம். |
05:22 | ஆறாவது button ஒரு clip ஐ forward செய்ய உதவும், |
05:33 | நான்காவது மற்றும் ஐந்தாவது button கள் இவ்வாறு rewind மற்றும் forward செய்ய உதவும். |
05:50 | இது split button என அழைக்கபடுகிறது, இது audio மற்றும் video clip களை தற்போதைய position இல் இரண்டாக split செய்ய உதவும். |
05:59 | இதன் செய்முறையை இப்பொழுது காண்போம் |
06:02 | நான் frame set ஐ இங்கு நகர்த்துகிறேன் பின் split button ஐ click செய்கிறேன் |
06:09 | இரண்டாக split செய்யப்பட்ட video clip ஐ காணவும் |
06:14 | இது மிகவும் சக்திவாய்ந்த editing tool ஆகும். |
06:21 | இப்போது timeline இன் layout ஐ விரிவாக காணலாம், timeline முன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது அவை Video, audio/music, மற்றும் title overlay. |
06:35 | video வின் அருகில் உள்ள plus குறியை click செய்யவும். |
06:38 | இது video timeline ஐ expand செய்து audio timeline ஐ காண்பிக்கும். |
06:43 | இது dubbing செய்வதற்கு உதவியானது. |
06:43 | Dubbing செய்வது எப்படி என்பதை மற்றொரு செய்முறை விளக்கப்பயிற்சியில் தெரிவித்து உள்ளோம், ஆர்வமானவர்கள் அதனை காணலாம் |
06:53 | நான் இப்போது video timeline button ஐ click செய்து collapse செய்கிறேன். |
07:01 | Timeline ற்கு மேல் உள்ள icon கள் edit செய்வதற்கு உதவுகிறது. |
07:06 | Zoom button, video timeline ஐ stretch செய்வதால் ஒவ்வொரு video frame களை edit செய்யலாம். |
07:15 | Zoom out button, video வை collapse செய்வதால் நாம் மொத்த video வை timeline ற்குள் காணலாம். |
07:24 | இது rewind timeline button. இதை press செய்யும் பொது frame head உங்கள் வீடியோவின் ஆரம்பத்திற்குசெல்லும். |
07:34 | இது play timeline button, இதை click செய்வதன் மூலம் வீடியோவைdisplay panel இல் play செய்யலாம். |
07:44 | இது VCR control play button போலவேபணிபுரிகிறது. |
07:48 | Windows Movie Maker ஐ பற்றி இன்னும் அறிந்து கொள்ள movie tasks panel இல் உள்ள Movie Making Tips option ஐ ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். |
08:00 | இப்போது நாம் Windows Movie Maker screen இன் அடிப்படை layout ஐ பார்த்தோம், நாம் எவ்வாறு video portion ஐ add மற்றும் remove செய்வது என்பதை காணலாம். |
08:11 | Video import செய்தப்பிறகு அதனை ஆரம்பம் முதல் முடிவு வரை play செய்து, எந்த எந்த இடங்களை நீங்கள் edit செய்ய வேண்டும் என்பதை குறித்து கொள்ளவும். |
08:25 | நான் இந்த இடத்தில் சிறு நொடிகள் வீடியோவை remove செய்ய வேண்டும் அதனால் frame head ஐ இங்கு நகர்த்தி clip ஐ play செய்கிறேன். |
08:38 | இங்கு playback ஐ pause செய்கிறேன் ஏன் என்றால், இதுதான் நான் remove செய்ய வேண்டிய video வின் ஆரம்பப்பகுதி. |
08:45 | இப்பொழுது நான் split button ஐ click செய்கிறேன், இந்த இடத்தில் clip இரண்டாக பிரிவதை
கவனிக்கவும். |
08:52 | இங்கு நான் மீண்டும் play செய்து delete செய்ய வேண்டிய video முடியும் இடத்தில் pause செய்து spilt button ஐ click செய்வதன்மூலம் video மறுபடியும் split செய்வதை காணலாம். |
09:08 | இப்பொழுது நான் இந்தclip ஐ select செய்து keyboard ல் உள்ள delete key ஐ press செய்வதன் மூலம் வீடியோவை remove செய்யலாம். |
09:17 | அடுத்த clip முன்னோக்கி நகர்ந்து முந்தைய clip ல் உடன் சேர்வதை கவனிக்கவும் |
09:22 | நீங்கள் clip ஐ delete செய்யும் போது audio மற்றும் video இரண்டும் delete ஆவதை நினைவில் கொள்ளவும் |
09:29 | இதை போலவே நாம் வீடியோவில் இருந்து மற்ற portion களை delete செய்யலாம். |
09:35 | இனி நாம் எப்படி மற்றொரு வீடியோவை add செய்வது என்பதை பார்போம். |
09:40 | நான் இந்த சிறிய clip ஐ என் வீடியோவில் சேர்க்க விரும்புகிறேன். |
09:49 | அதனால் நான் இந்த வீடியோவை collection panel ற்கு import செய்து கொள்கிறேன், |
10:00 | clip இப்பொழுது collection panel ல் உள்ளது. |
10:03 | நான் இந்த clip ஐ drag செய்து timeline இல் வேண்டிய இடத்தில drop செய்வதம் மூலம் clip timeline இல் தெரிகிறது. |
10:15 | நீங்கள் புதிய clip ஐ மற்றொரு clip ன் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ மட்டும் add செய்ய முடியும் என்பதை கவனிக்கவும் |
10:15 | நீங்கள் clip ன் இடையில் மற்றொரு clip ஐ add செய்ய விரும்பினால் timeline ல் உள்ள clip ஐ split செய்து புதிய clip ஐ add செய்ய வேண்டும் |
10:34 | இதை போலவே, நாம் எந்த ஒரு portion ஐயும் வீடியோவில் add செய்யலாம். |
10:41 | இதே முறையை பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவீடியோக்களை இனணக்கலாம். |
10:46 | நான் இப்பொழுது எவ்வாறு clip அல்லது clip portion இன் நீளத்தை அதிகப்படுத்துவது என்பதை செய்து காட்ட விரும்புகிறேன். |
10:54 | இது dubbing செய்யும் பொழுது மிக உதவியாக இருக்கும். |
10:58 | சில சமயங்களில் dub செய்ய வேண்டிய மொழி original மொழியை விட அதிக வார்த்தைகள் கொண்டாக இருக்கும், அந்த நேரங்களில் நமக்கு video clip களில் அதிக நேரம்தேவைப்படும். |
11:10 | உங்களுக்கு தேவையான பகுதியை முன்பு சொன்ன முறைப்படிதேர்வு செய்யவும். நான் இதை செய்து காட்டுகிறேன், |
11:22 | வீடியோவை இங்கு splitசெய்யவும் |
11:26 | play மற்றும் pause, மறுபடியும் வீடியோவை split செய்யவும் |
11:31 | split செய்த பகுதியை தேர்வு செய்து mouse இல் right click செய்து copy ஐ தேர்வு செய்யவும் |
11:40 | frame head ஐ paste செய்ய வேண்டிய இடத்திற்கு நகற்றவும் மீண்டும் right click செய்து paste ஐ தேர்வு செய்யவும். |
11:49 | மாற்றாக நீங்கள் keyboard இல் CTRL+C ஐ copy செய்வதற்கும் மற்றும் CTRL+V ஐ paste செய்வதற்கும் பயன்படுத்தலாம். |
11:58 | இந்த முறைப்படி நான் clip ஐ தேவையான நொடிகள் அதிகப்படுத்தி உள்ளேன் |
12:05 | clip ஐ அதிக நீளத்திற்கு அதிகப்படுத்தி editing ன் முடிவில் தேவையற்ற பகுதிகளை cut செய்வது சிறந்த முறையாகும் |
12:12 | பொதுவாக mouse movement இல்லாத clip ஐ தேர்வு செய்யவும் |
12:16 | அதிக mouse movementகள் பார்வையாளர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் |
12:20 | இதை நீங்கள் video extend செய்யும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும் |
12:25 | இவ்வாறாக நாம் windows moviemaker ல் அடிப்படை editing பண்புகளை அறிந்துகொண்டோம் |
12:31 | இந்த வசதிகளை, உங்கள் வீடியோவை Windows Movie Maker ல் edit செய்ய பயன்படுத்துங்கள். |
12:37 | முன்பு சொன்னதை போல் நீங்கள் எவ்வாறு dubbing செய்வது என்கின்ற செய்முறை பயிற்சியை காண விரும்பலாம். |
12:43 | நீங்கள் editing மற்றும் dubbing இன் அடிப்படையை கற்ற பிறகு, எவ்வாறு video effects மற்றும் transition, title அல்லது credit மற்றும் audio அல்லது music ஐ உங்கள் வீடியோவில் add செய்வது என்பதை மற்ற செய்முறை விளக்கப்பயிற்சியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். |
13:01 | மேலும் விவரங்களுக்கு நேயர்கள் எங்களது www.spoken-tutorial.org இணையதளத்தை காணலாம் இந்த |
13:10 | பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். |
13:14 | இப்படிக்கு அன்புமதி, CDEEP, IIT Bombay ற்காக. இந்த செய்முறை பயிற்சியை கண்டதற்கு நன்றி. |