Spoken-Tutorial-Technology/C2/Editing-a-spoken-tutorial-using-Movie-Maker/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:07 அன்பு நண்பர்களே, CDEEP IIT பாம்பே சார்பாக உங்களை இந்த செய்முறை விளக்க பயிற்சிக்கு வரவேற்கிறோம்.
00:13 இந்த பயிற்சியில் Windows Movie Maker ஐ பயன்படுத்தி எவ்வாறு edit செய்வது என்பதை அறிந்துகொள்வோம்.
00:19 Windows Movie Maker என்பது Microsoft கழகத்தின் ஒரு எடிட்டிங் மென்பொருள்.
00:24 இது அனைத்து புதிய Windows OS version - Me, XP, Vista வில் உள்ளது.
00:29 உங்கள் கம்ப்யூட்டரில் இந்த மென்பொருள் இல்லை என்றால் நீங்கள் www.microsoft.com/downloads என்ற இணையதளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
00:42 இந்த movie clip ஐ கேட்க உங்களுக்கு speaker அல்லது headset தேவைப்படும்
00:47 இந்த மென்பொருளை உபயோகிக்க Windows Movie Maker பட்டனை இரண்டு முறை கிளிக் செய்யவும்.
00:52 உங்கள் திரையில் movie project ஐ காணலாம். நீங்கள் வலது மேல்புறத்தில் மெயின் மேனுவை காணலாம்.
00:59 இதில் நிறைய optionகள் உள்ளது இவற்றை விரிவாக இந்த பயிற்சியில் அறிந்துகொள்ளலாம்.
01:05 திரையில் இடது புறத்தில் movie Tasks Panel உள்ளது, மத்தியில் Collection பநெல் மற்றும் வலது புறத்தில் display panel ஐ நீங்கள் காணலாம்.
01:14 நீங்கள் Windows Movie Maker ஐ முதல்முறையாக உபயோக படுத்தும் போது collection panel காலியாக இருக்கும்.
01:21 தேவையான அனைத்து video clips, audio narrations மற்றும் music files ஐ import செய்யும் போது அதனை collection panel இல் காணலாம்.
01:30 நீங்கள் இந்த மென்பொருளை முன்பே பயன்படுத்தி இருந்தால், நீங்கள் முன்பு பயன்படுத்திய video மற்றும் audio clips உங்கள் collection panel இல் தெரியும்.
01:40 CRTL+A ஐ அழுத்தி collection panel ல் உள்ள அனைத்தையும் தேர்வு செய்து ஏதாவது ஒரு clip ல் right click செய்வதன் மூலம் இதை delete செய்யலாம்
01:52 இதனால் screen ல் காலியான movie project கிடைக்கும். இப்போது உங்களுக்கு தேவையான file களை Windows Movie Maker க்கு import செய்து கொள்ளலாம்er க்கு import செய்யலாம்.
02:02 Movie task panel இல் பலவிதமான option களை காணலாம், இதில் Capture Video, Edit Movie, Finish Movie மற்றும் Movie Making Tips ஆகியவை முக்கியமான ஒன்றாகும்.
02:12 capture video option இல் import video option ஐ காணலாம், அதை click செய்யவும்.
02:19 மாற்றாக நீங்கள் Main menu வில் உள்ள file button ஐ click செய்து Import into Collections sub-option ஐ தேர்வு செய்யலாம்.
02:27 இவை இரண்டும் Import File dialog box ஐ திரையில் open செய்யும்.
02:32 இங்கு நீங்கள் எடிட் செய்வதற்கு தேவையான videoவை சரியான path மற்றும் file name கொடுத்து தேர்வு செய்யலாம்.
02:39 நான் இந்த videoவை தேர்வு செய்து import button ஐ click செய்கிறேன்.
02:50 தேவையான வீடியோ collection panel இல் உள்ளது, வீடியோவின் அளவு பெரியதாக இருப்பின் Windows Movie Maker தானாகவே சிறு சிறு clips களாக split செய்துகொள்ளும்.
03:01 Keyboard இல் CTRL+A key ஐ press செய்து அனைத்து clips களையும் தேர்வு செய்யவும், இப்போது mouse இல் right click செய்து Add to Timeline option ஐ தேர்வு செய்யவும்.
03:17 clips கள் timeline இல் வரிசையாக இருக்கும், நீங்கள் ஒவ்வொரு clips ஆகcollection panel இல் இருந்து drag செய்தும் time line இல் add செய்யலாம்.
03:31 Vista ஐ பயன்படுத்தும்பொழுது movie clips ல் சிறு சிறு clipகளாக clip செய்யாது
03:40 Clip ன் மீது right click செய்து active timeline option ஐ தேர்வு செய்யவும்
03:46 இது movie clip ஐயும் timeline ல் add செய்யும்
03:54 சிறிய நீல செவ்வகத்தை timeline இன் மேல்புறத்தில் கவனிக்கவும், இது frame-head என அழைக்கபடும். இது video வின் தற்போதைய position ஐ காண்பிக்கும்.
04:05 பொதுவாக இது timeline இன் ஆரம்பத்தில் இருக்கும். முதல் clip ஐ click செய்யவும்.
04:12 Display panel இல் video வின் முதல் frame ஐ காணலாம். video play செய்யும்போது display panel இல் நீங்கள் காணலாம்.
04:22 நீங்கள் VCR control button களை display panel அடியில் காணலாம், இதை பற்றி விரிவாக காண்பதற்கு முன்பு, நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன்.
04:37 முதல் button play மற்றும் pause, இது play mode இல் இருக்கும் போது frame head முன் புறமாக நகர்ந்து செல்லும்.
04:45 இது pause mode இல் இருக்கும் போது frame head தன் நிலையிலே நிற்கும்.
04:49 இரண்டாவது button playback ஐ stop செய்வதற்கு பயன் படுகிறது, இதை click செய்யும்போது playback stop ஆகும் ஆனால் frame head மறுபடியும் time line இன் ஆரம்பத்திற்கு சென்றுவிடும்.
05:02 இப்போது நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன்.
05:08 முன்றாவது button ஒரு clip ஐ rewind செய்ய உதவும், இப்போது frame head ஒரு clip பின்நோக்கி செல்வதை காணலாம்.
05:22 ஆறாவது button ஒரு clip ஐ forward செய்ய உதவும்,
05:33 நான்காவது மற்றும் ஐந்தாவது button கள் இவ்வாறு rewind மற்றும் forward செய்ய உதவும்.
05:50 இது split button என அழைக்கபடுகிறது, இது audio மற்றும் video clip களை தற்போதைய position இல் இரண்டாக split செய்ய உதவும்.
05:59 இதன் செய்முறையை இப்பொழுது காண்போம்
06:02 நான் frame set ஐ இங்கு நகர்த்துகிறேன் பின் split button ஐ click செய்கிறேன்
06:09 இரண்டாக split செய்யப்பட்ட video clip ஐ காணவும்
06:14 இது மிகவும் சக்திவாய்ந்த editing tool ஆகும்.
06:21 இப்போது timeline இன் layout ஐ விரிவாக காணலாம், timeline முன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது அவை Video, audio/music, மற்றும் title overlay.
06:35 video வின் அருகில் உள்ள plus குறியை click செய்யவும்.
06:38 இது video timeline ஐ expand செய்து audio timeline ஐ காண்பிக்கும்.
06:43 இது dubbing செய்வதற்கு உதவியானது.
06:43 Dubbing செய்வது எப்படி என்பதை மற்றொரு செய்முறை விளக்கப்பயிற்சியில் தெரிவித்து உள்ளோம், ஆர்வமானவர்கள் அதனை காணலாம்
06:53 நான் இப்போது video timeline button ஐ click செய்து collapse செய்கிறேன்.
07:01 Timeline ற்கு மேல் உள்ள icon கள் edit செய்வதற்கு உதவுகிறது.
07:06 Zoom button, video timeline ஐ stretch செய்வதால் ஒவ்வொரு video frame களை edit செய்யலாம்.
07:15 Zoom out button, video வை collapse செய்வதால் நாம் மொத்த video வை timeline ற்குள் காணலாம்.
07:24 இது rewind timeline button. இதை press செய்யும் பொது frame head உங்கள் வீடியோவின் ஆரம்பத்திற்குசெல்லும்.
07:34 இது play timeline button, இதை click செய்வதன் மூலம் வீடியோவைdisplay panel இல் play செய்யலாம்.
07:44 இது VCR control play button போலவேபணிபுரிகிறது.
07:48 Windows Movie Maker ஐ பற்றி இன்னும் அறிந்து கொள்ள movie tasks panel இல் உள்ள Movie Making Tips option ஐ ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.
08:00 இப்போது நாம் Windows Movie Maker screen இன் அடிப்படை layout ஐ பார்த்தோம், நாம் எவ்வாறு video portion ஐ add மற்றும் remove செய்வது என்பதை காணலாம்.
08:11 Video import செய்தப்பிறகு அதனை ஆரம்பம் முதல் முடிவு வரை play செய்து, எந்த எந்த இடங்களை நீங்கள் edit செய்ய வேண்டும் என்பதை குறித்து கொள்ளவும்.
08:25 நான் இந்த இடத்தில் சிறு நொடிகள் வீடியோவை remove செய்ய வேண்டும் அதனால் frame head ஐ இங்கு நகர்த்தி clip ஐ play செய்கிறேன்.
08:38 இங்கு playback ஐ pause செய்கிறேன் ஏன் என்றால், இதுதான் நான் remove செய்ய வேண்டிய video வின் ஆரம்பப்பகுதி.
08:45 இப்பொழுது நான் split button ஐ click செய்கிறேன், இந்த இடத்தில் clip இரண்டாக பிரிவதை

கவனிக்கவும்.

08:52 இங்கு நான் மீண்டும் play செய்து delete செய்ய வேண்டிய video முடியும் இடத்தில் pause செய்து spilt button ஐ click செய்வதன்மூலம் video மறுபடியும் split செய்வதை காணலாம்.
09:08 இப்பொழுது நான் இந்தclip ஐ select செய்து keyboard ல் உள்ள delete key ஐ press செய்வதன் மூலம் வீடியோவை remove செய்யலாம்.
09:17 அடுத்த clip முன்னோக்கி நகர்ந்து முந்தைய clip ல் உடன் சேர்வதை கவனிக்கவும்
09:22 நீங்கள் clip ஐ delete செய்யும் போது audio மற்றும் video இரண்டும் delete ஆவதை நினைவில் கொள்ளவும்
09:29 இதை போலவே நாம் வீடியோவில் இருந்து மற்ற portion களை delete செய்யலாம்.
09:35 இனி நாம் எப்படி மற்றொரு வீடியோவை add செய்வது என்பதை பார்போம்.
09:40 நான் இந்த சிறிய clip ஐ என் வீடியோவில் சேர்க்க விரும்புகிறேன்.
09:49 அதனால் நான் இந்த வீடியோவை collection panel ற்கு import செய்து கொள்கிறேன்,
10:00 clip இப்பொழுது collection panel ல் உள்ளது.
10:03 நான் இந்த clip ஐ drag செய்து timeline இல் வேண்டிய இடத்தில drop செய்வதம் மூலம் clip timeline இல் தெரிகிறது.
10:15 நீங்கள் புதிய clip ஐ மற்றொரு clip ன் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ மட்டும் add செய்ய முடியும் என்பதை கவனிக்கவும்
10:15 நீங்கள் clip ன் இடையில் மற்றொரு clip ஐ add செய்ய விரும்பினால் timeline ல் உள்ள clip ஐ split செய்து புதிய clip ஐ add செய்ய வேண்டும்
10:34 இதை போலவே, நாம் எந்த ஒரு portion ஐயும் வீடியோவில் add செய்யலாம்.
10:41 இதே முறையை பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவீடியோக்களை இனணக்கலாம்.
10:46 நான் இப்பொழுது எவ்வாறு clip அல்லது clip portion இன் நீளத்தை அதிகப்படுத்துவது என்பதை செய்து காட்ட விரும்புகிறேன்.
10:54 இது dubbing செய்யும் பொழுது மிக உதவியாக இருக்கும்.
10:58 சில சமயங்களில் dub செய்ய வேண்டிய மொழி original மொழியை விட அதிக வார்த்தைகள் கொண்டாக இருக்கும், அந்த நேரங்களில் நமக்கு video clip களில் அதிக நேரம்தேவைப்படும்.
11:10 உங்களுக்கு தேவையான பகுதியை முன்பு சொன்ன முறைப்படிதேர்வு செய்யவும். நான் இதை செய்து காட்டுகிறேன்,
11:22 வீடியோவை இங்கு splitசெய்யவும்
11:26 play மற்றும் pause, மறுபடியும் வீடியோவை split செய்யவும்
11:31 split செய்த பகுதியை தேர்வு செய்து mouse இல் right click செய்து copy ஐ தேர்வு செய்யவும்
11:40 frame head ஐ paste செய்ய வேண்டிய இடத்திற்கு நகற்றவும் மீண்டும் right click செய்து paste ஐ தேர்வு செய்யவும்.
11:49 மாற்றாக நீங்கள் keyboard இல் CTRL+C ஐ copy செய்வதற்கும் மற்றும் CTRL+V ஐ paste செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
11:58 இந்த முறைப்படி நான் clip ஐ தேவையான நொடிகள் அதிகப்படுத்தி உள்ளேன்
12:05 clip ஐ அதிக நீளத்திற்கு அதிகப்படுத்தி editing ன் முடிவில் தேவையற்ற பகுதிகளை cut செய்வது சிறந்த முறையாகும்
12:12 பொதுவாக mouse movement இல்லாத clip ஐ தேர்வு செய்யவும்
12:16 அதிக mouse movementகள் பார்வையாளர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும்
12:20 இதை நீங்கள் video extend செய்யும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும்
12:25 இவ்வாறாக நாம் windows moviemaker ல் அடிப்படை editing பண்புகளை அறிந்துகொண்டோம்
12:31 இந்த வசதிகளை, உங்கள் வீடியோவை Windows Movie Maker ல் edit செய்ய பயன்படுத்துங்கள்.
12:37 முன்பு சொன்னதை போல் நீங்கள் எவ்வாறு dubbing செய்வது என்கின்ற செய்முறை பயிற்சியை காண விரும்பலாம்.
12:43 நீங்கள் editing மற்றும் dubbing இன் அடிப்படையை கற்ற பிறகு, எவ்வாறு video effects மற்றும் transition, title அல்லது credit மற்றும் audio அல்லது music ஐ உங்கள் வீடியோவில் add செய்வது என்பதை மற்ற செய்முறை விளக்கப்பயிற்சியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.
13:01 மேலும் விவரங்களுக்கு நேயர்கள் எங்களது www.spoken-tutorial.org இணையதளத்தை காணலாம் இந்த
13:10 பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
13:14 இப்படிக்கு அன்புமதி, CDEEP, IIT Bombay ற்காக. இந்த செய்முறை பயிற்சியை கண்டதற்கு நன்றி.

Contributors and Content Editors

Gyan, Priyacst