Single-Board-Heater-System/C2/Connecting-SBHS-to-Computer/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | SBHSஐ கணிணியுடன் இணைப்பது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், Single Board Heater Systemஐ, "SBHS" என அழைப்போம். |
00:12 | இந்த ஸ்போகன் டுடோரியலில், SBHS மற்றும் கணிணிக்கு இடையே physical தொடர்பை அமைக்கவும், USB driverஐ நிறுவுவதற்கும் கற்போம். |
00:21 | SBHSஉடன் வேலை செய்ய, power cableஉடன் கூடிய SBHS, மற்றும், USB/RS232 communication cable தேவைப்படும். |
00:35 | ஒரு Windows இயந்திரத்தில், உங்கள் கணிணியில் உள்ள OS க்கு தொடர்புடையFTDI Virtual Com Port USB driverஉம் நமக்கு தேவைப்படும். |
00:44 | இதை, [www.ftdichip.com/Drivers/VCP.htm] ல் இருந்து நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். |
00:54 | இந்த வலைத்தளத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
00:59 | இந்த வலைத்தளத்தில், scroll down செய்து, உங்கள் OS க்கு தொடர்புடைய driver fileஐ தேர்வு செய்யவும். |
01:09 | Windowsக்கு, 32 bit 2.08.14 driver fileஐ நான்download செய்துள்ளேன். |
01:22 | ஒரு USB cable அல்லது RS232 cableஐ பயன்படுத்தி, single board heater systemஐயும் உங்கள் கணிணியையும் இணைக்கலாம். |
01:30 | உங்கள் கணிணியில் அதற்கு தொடர்புடைய portகளையும், SBHS ஐயும் அடையாளம் காணவும். |
01:35 | உங்கள் கணிணியின் back panelலில், நீங்கள் காணக்கூடிய USB portன் image இதோ. |
01:44 | கணிணியின் back panelலில், ஒரு Serial port, |
01:49 | SBHSல், USB மற்றும் ஒரு Serial port. |
01:54 | RS232 cableஐ, பயன்படுத்துவதற்கு முடிவு செய்யும் முன்பு, உங்கள் கணிணியில், RS232 port உள்ளதா என்று குறித்துக் கொள்ளவும். |
02:04 | USB மற்றும் serial cable 232க்கும் இடையே தேர்வு செய்த பிறகு, அதற்கு தொடர்புடைய, சில jumper அமைப்புகளை நீங்கள் செய்ய வேண்டும். |
02:12 | Jumper, ஒரு சிறிய கருப்பு நிற connector ஆகும். |
02:17 | அவைகளின் ஒரு ஜோடி இங்கு காட்டப்பட்டுள்ளது; ஒவ்வொரு jumperஉம் இரண்டு terminalகளை இணைக்க முடியும். |
02:26 | Figureல் காட்டப்பட்டுள்ள படி, SBHSல், jumperகள் நீக்கப்பட்ட connectorகள் இருக்கும். |
02:33 | இங்கு, இரு பக்கங்களிலும், மூன்று terminalகள் இருப்பதை நாம் காணலாம். |
02:39 | PCBல், இந்த connectorகளின் அருகில், USB மற்றும் RS232ன் labelகள், print செய்யப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். |
02:50 | இரு பக்கங்களிலும் இருக்கும் center terminal தான் common terminal. |
02:55 | ஒரு jumperஐ எடுத்து, ஒரு பக்கத்தின் common terminalஐயும், அதே பக்கத்தில் இருக்கும், label USBன் அருகில் இருக்கும் terminalஐயும் இணைக்கவும். |
03:06 | மற்றொரு jumperஐ எடுத்து, மற்ற பக்கத்திற்கு இதையே செய்யவும். |
03:11 | இணைப்பிற்கு USB portஐ தேர்வு செய்ய, இப்படி தான் jumperகளை அமைக்க வேண்டும். |
03:17 | இவ்வாறே, common terminalலிலும், label RS232ஐ நோக்கி இருக்கும் terminalலிலும், இரண்டு jumperகளையும் ஒருவர் வைத்து, இணைப்பிற்கு USB portஐ தேர்வு செய்யலாம். |
03:29 | இங்கு காட்டப்பட்டுள்ள படி, USB portஐ தேர்வு செய்ய, நான் jumper அமைப்புகளைconfigure செய்துள்ளேன். |
03:38 | jumper அமைப்பை செய்த பிறகு, power cableஐ, ஒரு 3 pin, 230 Volt AC house hold socket மற்றும் SBHSக்கு இணைக்கவும். |
03:51 | Mains power ONஐ switch செய்யவும். Power cabel connectorன் கீழ், SBHSன் SMPSன் மேல் ஒரு ON/OFF switch இருந்தாலும் இருக்கலாம். |
04:06 | கருவி வெற்றிகரமாக இயங்கி விட்டால், display, 'ON என்று மாற வேண்டும். |
04:12 | SBHSன் imageன் display, இதோ. |
04:16 | Displayல் தெரிவது, காட்டப்படுவதில் இருந்து வேறுபடலாம் என்பதை குறித்துக் கொள்ளவும். ஆனால் அது காலியாக மட்டும் இருக்கக் கூடாது. |
04:25 | SBHS ஐ power ON செய்த உடன், அதற்கான USB/RS232 cableஐ, SBHS மற்றும் கணிணியுடன் இணைக்கவும். |
04:33 | USB cableஐ, SBHS மற்றும் laptopஉடன் இணைத்ததற்கான படவிளக்கம் இதோ. |
04:42 | எப்போதும், முதலில், கருவியின் powerஐ ON செய்துவிட்டு, பின், USB/RS232 cableஐ இணைக்க நினைவில் கொள்ளவும். |
04:52 | அடுத்து, driverஐ நிறுவுதலைக் காண்போம். |
04:56 | FTDI VCP USB driver, முன்பு, ftdichip.comல் இருந்து download செய்யப்பட்டதை நினைவு கூறவும். |
05:04 | இங்கு, driver installationக்கு ஒரு guideஐயும் நீங்கள் காணலாம். Guideஐ, www.ftdichip.com ல் இருந்து download செய்யவும். |
05:13 | இந்த வலைத்தளத்திற்கு செல்வோம். |
05:22 | இடது panelலில், “Drivers”ஐ க்ளிக் செய்யவும். |
05:27 | Dropdown menuவில், “VCP Drivers” தேர்வு செய்யவும். |
05:33 | வலைப்பக்கத்தில், “Installation Guides” இணைப்பை க்ளிக் செய்யவும். |
05:41 | தேவையான operating system documentஐ தேர்வு செய்யவும். |
05:46 | நான், Windows 7 operating systemஐ பயன்படுத்துவதால், நான், “Windows 7 Installation Guide”ஐ பார்த்தேன். |
05:55 | உங்கள் தேவைக்கு ஏற்றவாறு, Operating System Guideஐ நீங்கள் தேர்வு செய்யலாம். |
06:00 | Driverஐ நிறுவுவதற்கு, இந்த guide, விரிவான படிப் படியாக வழிமுறைகளை கொண்டுள்ளது. |
06:07 | நான், உங்களுக்கு, Windows 7 PDF guide fileஐ காட்டுகிறேன். |
06:14 | இந்த guideல், விளக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றி, driverஐ நிறுவவும். |
06:21 | இதில் உள்ள வழக்கமான படிகள்: |
06:28 | device managerஐ திறப்பது |
06:40 | USB port ஐ கண்டறியவது |
06:51 | driver pathஐ வைப்பது |
07:03 | மற்றும், படிகளை மீண்டும் செய்வது. |
07:08 | Driver ஐ வெற்றிகரமாக நிறுவிய பிறகு, |
07:12 | கருவியை, COMமற்றும் LPTன் கீழ் பட்டியலிட வேண்டும். |
07:20 | இதை, இங்கு நான் காட்டுகிறேன். |
07:28 | உங்கள் கருவிக்கு, ஒரு COM numberஉம் கிடைக்க வேண்டும். |
07:32 | உதாரணத்திற்கு, இங்கு, "COM 3" என்று காட்டுப்படுகிறது. |
07:45 | இப்போது, இந்த டுடோரியலில் கற்றதை சுருங்கச் சொல்ல, |
07:51 | முதலில், SBHSஐயும், கணிணியையும் இணைக்கவும். இதில், RS232/USB port, Jumper settingsஐ தேர்வு செய்வது, SBHSஐ power ON செய்வது, ஆகியவை உள்ளடங்கும். |
08:05 | இரண்டாவது- USB driverஐ நிறுவுவது, installation guideஐ download செய்வது, guideஐ பின்பற்றி driverஐ நிறுவுவது. |
08:17 | இதன் வீடியோவை இங்கு காணவும்:http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial. |
08:27 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
08:37 | Spoken Tutorial திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:48 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:56 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
09:00 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:07 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1]. |
09:18 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |