Scilab/C4/Calling-User-Defined-Functions-in-XCOS/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Xcosல், user-defined functionகளை call செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:09 | Scilabல், ஒரு squaring functionஐ எழுதுவது |
00:12 | Xcosல், scifunc blockஐ பயன்படுத்துவது |
00:15 | பல plotகளை வரைய, MUX blockஐ பயன்படுத்துவது |
00:19 | பல input மற்றும் outputகளை கொண்ட, functionகளை call செய்வது |
00:24 | Scilab version 5.3.3 நிறுவப்பட்ட, Ubuntu 12.04 operating system பயன்படுத்தப்பட்டுள்ளது. |
00:32 | Scilabன் அடிப்படை, மற்றும், |
00:35 | Xcosன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். |
00:38 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும். |
00:44 | உங்கள் கணிணியில், Scilabஐ தொடங்கவும். |
00:47 | Scilab Console'லில் டைப் செய்க: editor, பின், Enterஐ அழுத்தவும். |
00:53 | பின், பின்வரும் codeஐ டைப் செய்க: |
00:55 | function space y is equal to squareit open bracket a close bracket. |
01:07 | Enter keyஐ அழுத்தி, பின், டைப் செய்க: |
01:10 | y is equal to a raise to 2 |
01:14 | இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும். |
01:17 | Function, a என்ற ஒரு input variableஐயும், b' என்ற ஒரு output variableஐயும் கொண்டிருக்கிறது. |
01:24 | Functionனின் பெயர், squareit ஆகும். |
01:27 | இந்த function, variable aஐ , square செய்யும் பணியை செய்கிறது. |
01:31 | முடிவை, அது y.ல் சேமிக்கிறது. |
01:34 | இந்த fileஐ , விரும்பிய directoryல் சேமிப்போம். |
01:38 | Squareit என்ற பெயருடன், மற்றும், .sci நீட்டிப்புடன், இந்த fileஐ சேமிக்கிறேன். |
01:44 | இங்கு, .sci formatல், functionகளை சேமிக்கும் மரபை நாம் பின்பற்றுகிறோம். |
01:50 | Scilab consoleக்கு மாறவும். |
01:53 | இப்போது, டைப் செய்க: Xcos, பின், Enterஐ அழுத்தவும். |
01:57 | இரண்டு windowக்கள் திறக்கும், |
01:59 | ஒரு Palette browser, மற்றும், ஒரு Untitled Xcos window. |
02:04 | இப்போது, Xcos diagramஐ செய்வோம். |
02:06 | இது, தற்போது உருவாக்கப்பட்ட, squareit functionஐ அணுகும். |
02:10 | இதை, scifunc blockஐ பயன்படுத்தி, செய்யலாம். |
02:14 | Palette browser windowக்கு மாறவும். |
02:17 | Pallet browserல் இருக்கும், User-Defined functionஐ க்ளிக் செய்யவும். |
02:21 | இந்த sectionல், scifunc_block_mஐ கண்டறியவும். |
02:27 | அதை இழுத்து, untitled Xcos windowவில் விடவும். |
02:32 | சிறந்த பார்வைக்கு, untitled Xcos windowஐ பெரிதாக்குகிறேன். |
02:36 | அதற்கு, நீங்கள் காண்பது போல், zoom பட்டனை பயன்படுத்துகிறேன். |
02:40 | இப்போது, scifunc blockஐ configure செய்ய, அதை, டபுள்- க்ளிக் செய்யவும். |
02:44 | Scilab Multiple Values Request என்ற பெயருடைய window திறக்கும். |
02:49 | இந்த window, scifunc blockன், input மற்றும் output portகளின் எண்ணிக்கையை மாற்ற அனுமதிக்கும். |
02:56 | நம் squareit function, ஒரே ஒரு input மற்றும் output variableஐ பெற்றுள்ளது. |
03:00 | அதனால், நாம் settingகளை மாற்றாமல் வைத்திருப்போம். |
03:03 | OKஐ க்ளிக் செய்யவும். |
03:05 | ஒரு புது Scilab Input Value Request window திறக்கும். |
03:09 | Text boxல், input மற்றும் output variableகளுடன், function பெயரை டைப் செய்க. |
03:14 | இந்த function, scifunc block எனப்படும். |
03:18 | இருக்கின்ற text boxல், |
03:20 | முன்னிருப்பான function பெயரை திருத்தவும். |
03:22 | டைப் செய்க: y1 equal to squareit, அடைப்புக்குறியை திறக்கவும், u1, அடைப்புக்குறியை மூடவும். |
03:31 | இங்கு, input மற்றும் output variableகள், முறையே, u1 மற்றும் y1ஆக இருப்பதைக் காணலாம். |
03:37 | இவை, உண்மையான functionல் பயன்படுத்தப் பட்டிருக்கும், variable பெயர்களின் படி அல்லாமல், கண்டிப்பாக, u மற்றும் y வடிவில் இருக்க வேண்டும். |
03:45 | OKஐ க்ளிக் செய்யவும். |
03:47 | மற்றொரு Scilab Input Value Request window திறக்கும். |
03:51 | பின் தோன்றும், அடுத்தடுத்த 3 windowக்களில், OKஐ தொடர்ந்து க்ளிக் செய்து கொண்டே இருக்கவும். |
03:56 | Scifunc block, இப்போது configure ஆகி விட்டது. |
04:00 | அடுத்து, ஒரு sinusoid generator blockஐ சேர்ப்போம். |
04:04 | Palette browser windowல், Sources sectionஐ க்ளிக் செய்யவும். |
04:08 | Sinusoid generator blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும். |
04:14 | வசதிக்கு, blockஐ , scifunc blockன் இடது பக்கமாக வைக்கவும். |
04:20 | இப்போது, output variableஐ plot செய்ய, நமக்கு, ஒரு block தேவைப்படுகிறது. |
04:23 | Palette browser windowல், Sinks sectionஐ க்ளிக் செய்யவும். |
04:29 | CScope blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும். |
04:34 | Blockஐ , scifunc blockன் வலது பக்கமாக வைக்கவும். |
04:38 | வசதிக்கு, அதை, scifunc blockல் இருந்து தள்ளி வைக்கவும். |
04:43 | CScope block, ஒரு சிவப்பு input portஐ கொண்டுள்ளதை கவனிக்கவும். |
04:47 | இது ஒரு event input ஆகும். |
04:49 | நமக்கு, ஒரு event generator block தேவை. |
04:52 | Palette browser windowல், Sources sectionஐ க்ளிக் செய்யவும். |
04:57 | CLOCK underscore c blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும். |
05:05 | அதை, CScope blockற்கு மேல் வைக்கவும். |
05:08 | CScope block, ஒரே ஒரு input portஐ கொண்டுள்ளதை கவனிக்கவும். |
05:13 | ஆனால், நமக்கு, ஒரே plot windowவில், input மற்றும் output variableகள் இரண்டையும், plot செய்ய வேண்டும். |
05:18 | அதனால், நமக்கு, ஒரு multiplexer block தேவைப்படுகிறது. |
05:22 | இந்த block, இரண்டு inputகளை multiplex செய்து, outputஐ , ஒரே output portல் உருவாக்குகிறது. |
05:28 | Palette browser windowவில், Signal Routing sectionஐ க்ளிக் செய்யவும். |
05:33 | MUX blockஐ இழுத்து, Untitled Xcos windowவில் விடவும். |
05:39 | அந்த blockஐ , scifunc block மற்றும் CScope blockக்கு இடையே வைக்கவும். |
05:43 | Mux blockஐ , resize செய்து, realign செய்கிறேன். |
05:47 | இப்போது, blockகளை ஒருங்கிணைப்போம். |
05:51 | Sinusoid generator blockன் output portஐ , scifunc blockன், input portக்கு இணைக்கவும். |
05:57 | இப்போது, scifunc blockன் output portஐ , MUX.ன், lower input portக்கு இணைக்கவும். |
06:04 | MUX blockன் output portஐ , CScope blockன், input portக்கு இணைக்கவும். |
06:10 | CLOCK underscore c blockன் output portஐ , CScope blockன், event input portக்கு இணைக்கவும். |
06:19 | நாம், sine inputஐயும் plot செய்ய வேண்டும். |
06:22 | நாம், Sinusoid generator blockஐ , MUX.க்கு இணைக்க வேண்டும். |
06:26 | MUX blockன், upper input portஐ க்ளிக் செய்யவும். |
06:30 | பின், விடுவிக்காமல், Sinusoid generator block மற்றும் scifunc blockக்கு இடையே உள்ள இணைப்பை நோக்கி, உங்கள் mouse pointer ஐ நகர்த்தவும். |
06:39 | இணைப்பை வளைக்க, mouse பட்டனை விடுவிக்கவும், அல்லது, சில இடங்களில் க்ளிக் செய்யவும். |
06:44 | இணைப்பின் மீது pointerஐ கொண்டு வர, இணைப்பு பச்சையாக மாறுகிறது. |
06:49 | இந்த blockகளுக்கு இடையே இணைப்பை உருவாக்க, mouse பட்டனை விடுவிக்கவும், அல்லது, ஒரு முறை க்ளிக் செய்யவும். |
06:55 | இப்போது, மற்ற blockகளின் configurationஐ காண்போம். |
06:59 | Sinusoid generator blockன், frequency, magnitude மற்றும் phaseஐ , நாம் மாற்ற முடியும். |
07:04 | இதைச் செய்ய, Sinusoid generator blockஐ டபுள்- க்ளிக் செய்யவும். |
07:09 | Configuration window திறக்கும். |
07:11 | Magnitude மற்றும் Frequencyஐ 1ஆகவும், Phaseஐ 0ஆகவும் வைப்போம். |
07:18 | Configuration windowஐ மூட, OKஐ க்ளிக் செய்யவும். |
07:21 | இப்போது, CScope blockஐ configure செய்வோம். |
07:25 | CScope blockன், configuration windowஐ திறக்க, அதை, டபுள்- க்ளிக் செய்யவும். |
07:30 | Ymin parameterஐ , minus 2க்கும், Ymax parameterஐ , 2க்கும் மாற்றவும். |
07:37 | Refresh periodன் மதிப்பை 10க்கு மாற்றவும். |
07:41 | இந்த மதிப்பை, மனதில் குறித்துக் கொள்ளவும். |
07:44 | Buffer sizeன் மதிப்பை 2க்கு மாற்றவும். |
07:47 | OKஐ க்ளிக் செய்யவும். |
07:50 | இப்போது, CLOCK_c blockஐ configure செய்வோம். |
07:54 | அதன் configuration windowஐ திறக்க, block ஐ டபுள்- க்ளிக் செய்யவும். |
07:58 | Periodன் மதிப்பை, 0.1ஆக வைக்கவும். |
08:02 | Initialisation Timeஐ , 0க்கு மாற்றவும். |
08:06 | OKஐ க்ளிக் செய்யவும். |
08:08 | இப்போது, Simulation parameterகளை மாற்றுவோம். |
08:12 | Untitled Xcos windowவின் menu barல் இருக்கும், Simulation tabஐ க்ளிக் செய்யவும். |
08:17 | இப்போது, drop down menuவில் இருந்து, Setupஐ க்ளிக் செய்யவும். |
08:22 | CScope blockன், Refresh periodக்கு பொருந்துமாறு, Final Integration timeஐ மாற்றவும். |
08:28 | Refresh periodன் மதிப்பு, 10ஆக இருந்தது. |
08:32 | அதனால், Final integration timeன் மதிப்பை, 10ஆக வைக்கவும். |
08:36 | OKஐ க்ளிக் செய்யவும். |
08:38 | இப்போது, Fileஐ க்ளிக் செய்து, பின், Xcos diagramஐ சேமிக்க, Saveஐ க்ளிக் செய்யவும். |
08:44 | Xcos diagramஐ , சேமிக்க, விரும்பிய directoryஐ தேர்வு செய்யவும். |
08:48 | எனினும், squareit.sci fileஐ சேமித்த அதே folderல், இதை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறது. |
08:56 | OKஐ க்ளிக் செய்யவும். |
08:58 | Scifunc block, squareit functionஐ call செய்யும் என்பதை கவனிக்கவும். |
09:02 | இதன் பொருள், Xcos diagramஐ இயக்குவதற்கு முன்பு, நாம், squareit functionஐ , முதலில் load செய்ய வேண்டும் என்பதாகும். |
09:09 | Squareit.sci file, திறந்தவாறு உள்ள, Scilab editor windowக்கு மாறவும். |
09:16 | Editorன், menu barல் இருக்கும், Execute பட்டனை க்ளிக் செய்யவும். |
09:21 | இது, squareit functionஐ load செய்யும். |
09:24 | இப்போது, Xcos diagramஐ , நாம் இயக்கலாம். |
09:28 | Xcos diagram file திறக்கவும். |
09:31 | Xcos windowவின், menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும். |
09:37 | ஒரு graphic window தோன்றும். |
09:39 | இந்த window, இரண்டு plotகளை கொண்டிருக்கும். |
09:42 | Input sine wave, கறுப்பு நிறத்திலும், output sine wave, பச்சை நிறத்திலும் இருக்கும். |
09:47 | Squareit functionல் செயல்படுத்தப்பட்ட squaring function, input sine waveஐ , square செய்திருப்பதை கவனிக்கவும். |
09:55 | அதனால், output sine wave, positive axisக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டது. |
10:00 | Plot windowஐ மூடவும். |
10:02 | இப்போது, ஒன்றுக்கு மேற்பட்ட, input மற்றும் output variableகளை கொண்ட, ஒரு functionஐ call செய்ய, scifunc blockஐ , edit செய்யக் கற்போம். |
10:10 | Scilab editor windowக்கு மாறவும். |
10:13 | இரண்டு input மற்றும் output variableகளை கொள்ள, squareit functionஐ , edit செய்யவும். |
10:19 | Output variableஐ , open square bracket y comma z close the square bracket, என, edit செய்யவும். |
10:28 | Input variableகளை, open bracket a comma b close bracket, என edit செய்யவும். |
10:36 | Square செய்யப்பட்ட, outputஐ , 1 unitக்கு மாற்ற, functionஐ மாற்றுவோம். |
10:41 | Main function வரியை, பின்வறுமாறு edit செய்யவும்: |
10:44 | y is equal to b plus a raise to இரண்டு, இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும். |
10:51 | Inputல், பாதியை, amplitudeஆக கொண்டிருக்கும், ஒரு outputஐயும் உருவாக்கவும். |
10:56 | Enter keyஐ அழுத்தி, அடுத்த வரிக்கு சென்று, டைப் செய்க: |
11:01 | z is equal to 0.5 multiplied by a, இறுதியில், ஒரு semicolonஐ வைக்கவும். |
11:10 | இப்போது, fileஐ சேமிக்கவும். |
11:12 | Xcos windowக்கு மாறவும். |
11:15 | Scifunc blockஐ , configure செய்ய, அதை, டபுள்- க்ளிக் செய்யவும். |
11:19 | Input port size fieldலில், 1 comma 1க்கு பிறகு, ஒரு semicolonஐ வைத்து, பின், மீண்டும் டைப் செய்க: 1 comma one. |
11:27 | இவ்வாறே, output port size fieldலில், 1 comma 1க்கு பிறகு, ஒரு semicolonஐ வைத்து, பின், மீண்டும் டைப் செய்க: 1 comma 1. |
11:36 | OKஐ க்ளிக் செய்யவும். |
11:38 | ஒரு புது, Scilab Input Value Request window திறக்கும். |
11:41 | Text boxல், |
11:43 | y1க்கு பிறகு, ஒரு commaஐ வைத்து, பின், டைப் செய்க: y2 |
11:48 | y1 மற்றும், y2ஐ , சதுர அடைப்பக்குறிக்குள் வைக்கவும். |
11:52 | இப்போது, u1க்கு பிறகு, ஒரு commaஐ வைத்து, பின், டைப் செய்க: u2. |
11:57 | OKஐ க்ளிக் செய்யவும். |
11:59 | மற்றொரு Scilab Input Value Request window திறக்கும். |
12:03 | பின் தோன்றும், அடுத்தடுத்த 3 windowக்களில், OKஐ தொடர்ந்து க்ளிக் செய்து கொண்டே இருக்கவும். |
12:08 | Scifunc block, இப்போது configure ஆகி விட்டது. |
12:11 | Scifunc blockஐ , realign செய்கிறேன். |
12:14 | Palette browser windowக்கு மாறவும். |
12:17 | Sources sectionல், Constant underscore m blockஐ இழுத்து, Xcos windowவில் விடவும். |
12:24 | அதை, Sinusoid generator blockக்கு கீழே வைக்கவும். |
12:28 | Constant underscore m blockஐ , scifunc blockன், lower inputக்கு இணைக்கவும். |
12:36 | இந்த blockன் முன்னிருப்பான மதிப்பு 1 ஆகும். |
12:39 | அதை, மாற்றாமல் வைத்திருக்கவும். |
12:41 | MUX blockஐ , டபுள்- க்ளிக் செய்யவும். |
12:44 | Input port sizeஐ , 3க்கு மாற்றவும். |
12:47 | OKஐ க்ளிக் செய்யவும். MUX blockஐ resize செய்து, பின், MUX மற்றும் CSCOPE block ஐ , சரியாக இணைக்கிறேன். |
12:59 | Scifunc blockன், lower output portஐ , MUX blockன், lower input portக்கு இணைக்கவும். |
13:07 | Fileஐ க்ளிக் செய்து, பின், xcos fileஐ , சேமிக்க, Saveஐ , தேர்வு செய்யவும். |
13:12 | Squareit.sci file, திறந்தவாறு உள்ள, Scilab editor windowக்கு மாறவும். |
13:18 | Editorன், menu barல் இருக்கும், Execute பட்டனை க்ளிக் செய்யவும். |
13:23 | இது, squareit functionஐ load செய்யும். |
13:26 | இப்போது, Xcos diagramஐ , நாம் இயக்கலாம். |
13:30 | Xcos windowவின், menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும். |
13:35 | ஒரு graphic window தோன்றும். |
13:38 | இந்த window, மூன்று plotகளை கொண்டிருக்கும். |
13:40 | Input sine wave, கறுப்பு நிறத்திலும், |
13:43 | output sine wave, பச்சை நிறத்திலும், மற்றும் |
13:45 | amplitude scaled input, சிவப்பு நிறத்திலும் இருக்கும். |
13:49 | Function, எதிர்பார்த்தபடி, input sine waveஐ , square செய்ததுடன், அதை, 1 unit offsetஉடன் இடம் மாற்றியிருப்பதை கவனிக்கவும். |
13:59 | மேலும், எதிர்பார்த்தபடி, input sine wave,ன் amplitude , scale செய்யப்படுகிறது. |
14:05 | Plot windowஐ மூடவும். |
14:08 | இப்போது, சுருங்கச் சொல்ல. |
14:10 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
14:12 | Scilabல், ஒரு squaring functionஐ எழுதுவது |
14:15 | Xcosல், scifunc blockஐ பயன்படுத்துவது |
14:19 | பல plotகளை வரைய, MUX blockஐ பயன்படுத்துவது |
14:22 | பல input மற்றும்outputகளை கொண்ட, functionகளை call செய்வது |
14:26 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
14:29 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
14:33 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
14:37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
14:40 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
14:43 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
14:47 | மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
14:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
14:57 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
15:05 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
15:15 | இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்புகிறேன். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது சண்முகப்பிரியா |