QGIS/C2/Vector-Data-Styling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல் Vector Data Styling குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- QGISல் vector dataவை load செய்வது |
00:14 | Style vector data ஐ பயன்படுத்தி, Single symbol styling , Categorized styling, Graduated styling, மற்றும் |
00:25 | Labeling அம்சங்கள் |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18 |
00:39 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:46 | இல்லையெனில் அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
00:51 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folderஐ நீங்கள் தரவிறக்க வேண்டும் |
01:01 | தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்யவும் |
01:05 | extract செய்யப்பட்ட folderல், world.shp fileஐ கண்டுபிடிக்கவும் |
01:11 | நான் ஏற்கனவே code fileஐ தரவிறக்கி, அதை Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன் |
01:19 | அதை திறக்க, code-file folder ஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
01:24 | world.shp fileஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
01:29 | context menu வில் இருந்து, தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
01:36 | QGIS interface திறக்கிறது |
01:39 | QGIS Tips dialog-box திறக்கிறது |
01:43 | dialog-box ஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
01:49 | முன்னிருப்பான பாணியில், உலக வரைப்படம் canvasல் load ஆகிறது |
01:54 | Layers Panelலில் நீங்கள் world layer ஐ காணலாம் |
01:58 | world layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
02:01 | context menu வில் இருந்து, Open Attribute Tableஐ தேர்ந்தெடுக்கவும் |
02:06 | இந்த layer க்கான Attribute table திறக்கிறது |
02:10 | row மற்றும் column வடிவத்தில் பல்வேறு அம்சங்களின் அனைத்து வும் பதிக்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம். |
02:18 | நாடுகளின் பெயர்கள் ADMIN column ல் கொடுக்கப்பட்டுள்ளன |
02:22 | Tableல் கீழ் உள்ள sliderஐ இழுத்து, POP_EST column க்கு செல்லவும் |
02:30 | இந்த column ல், பல்வேறு நாடுகளுக்கான மக்கள் தொகை பட்டியலிடப்பட்டிருக்கும் |
02:35 | அடுத்து, இங்கே காட்டப்பட்டுள்ள மக்கள்தொகை dataவை உலக வரைபடத்தில் பல்வேறு பாணிகளில் சித்தரிப்போம். |
02:43 | attribute tableஐ மூடவும் |
02:46 | world layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
02:49 | context menuவில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:53 | Layer Properties dialog-box திறக்கிறது |
02:57 | இடது panelலில் இருந்து, Style tab ஐ க்ளிக் செய்யவும் |
03:01 | Style tabல் பல்வேறு styling தேர்வுகள் கிடைக்கின்றன |
03:05 | dialog-boxன் மேல் இடது மூலையில் உள்ள, drop-down ஐ க்ளிக் செய்யவும் |
03:11 | இங்கு பல்வேறு styling தேர்வுகளை நீங்கள் காண்பீர்கள் |
03:15 | இந்த டுடோரியலில் முதல் மூன்றை ஆராய்வோம். |
03:19 | Single Symbol தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
03:22 | இந்த தேர்வு ஒரு பாணியைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது. |
03:27 | தேர்ந்தெடுக்கப்பட்ட பாணி layerல் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் பயன்படுத்தப்படும். |
03:32 | Fill panelன் கீழ் உள்ள, add Symbol layer Classify |
03:38 | Symbol layer typeன் கீழ் பல்வேறு style தேர்வுகள் தோன்றுகின்றன |
03:43 | இது polygon dataset என்பதால், நம்மிடம் இரண்டு அடிப்படை தேர்வுகள் இருக்கின்றன |
03:48 | உங்களுக்கு விருப்பமான பாணி மற்றும் நிறத்தால் நீங்கள் polygonஐ நிரப்பலாம் |
03:55 | Outline நிறம்,பாணி மற்றும் அகலத்தையும் மாற்றலாம். |
04:02 | Fill drop-down. க்கு அடுத்துள்ள drop-down arrow வை க்ளிக் செய்யவும் |
04:06 | வண்ண முக்கோணம் திறக்கிறது. |
04:09 | தேவையான வண்ணத்தை தேர்வு செய்ய வண்ண முக்கோணத்தை சுழற்றவும் . நான் நீல நிறத்தை தேர்வு செய்கிறேன். |
04:17 | இதேபோல், Outline வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
04:21 | நான் மஞ்சளை தேர்வு செய்கிறேன் |
04:25 | Fill styleக்கு Dense1 |
04:29 | Outline style, solid line. |
04:33 | Outline width, 0.46 millimeters. |
04:38 | ஆராய பல்வேறு style தேர்வுகள் உள்ளன. |
04:43 | நீங்கள் styling ஐ முடித்த பிறகு, Layers Properties dialog-box ன் கீழ்-இடது மூலையில் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
04:52 | Canvasல், நீங்கள் தேர்ந்தெடுத்த பாணி வகை layerக்கு பொருத்தப்பட்டு, பின் கிடைத்த புதிய பாணியைக் காண்பீர்கள். |
04:59 | இப்போது மக்கள் தொகை dataவை எவ்வாறு map செய்வது என்று பார்ப்போம். |
05:03 | மக்கள்தொகை வை mapping செய்வதில் Single Symbol style மிகவும் பயனுள்ளதாக இல்லை. |
05:09 | மற்றொரு styling தேர்வை ஆராய்வோம். |
05;13 | world layerஐ மீண்டும் ரைட்-க்ளிக் செய்து, Properties தேர்வை தேர்வு செய்யவும் |
05:19 | Layers Properties dialog-boxல், Style tab ல் இருந்து இம்முறை நாம் Categorizedஐ தேர்வு செய்வோம் |
05:26 | Categorized என்றால், layerல் உள்ள அம்சங்கள் வண்ணத்தின் வெவ்வேறு நிழல்களில் காண்பிக்கப்படும். |
05:33 | இந்த வண்ண நிழல்கள் attribute fieldகளில் உள்ள தனித்துவமான மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. |
05:39 | மக்கள்தொகை வை நாம் map செய்ய முயற்சிப்பதால், Column drop down ல் நாம் POP_ESTஐ தேர்ந்தெடுப்போம் |
05:48 | drop-down ல் இருந்து, உங்களுக்கு விருப்பமான ஒரு வண்ண rampஐ தேர்ந்தெடுக்கவும். நான் Bluesஐ தேர்ந்தெடுக்கிறேன் |
05:55 | நடு panelன் கீழ் உள்ள, Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
06:00 | நடுவில் உள்ள panel தொடர்புடைய மதிப்புகளுடன் பல்வேறு வகுப்புகளைக் காட்டுகிறது. |
06:07 | கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
06:11 | உலக வரைபடத்தில், வெவ்வேறு நாடுகள் நீல நிற shadeகளில் தோன்றுவதைக் காண்பீர்கள். |
06:17 | வரைபடத்தை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க, நடு mouse பட்டனை கீழே scroll செய்யவும் |
06:22 | மெல்லிய shadeகள் குறைந்த மக்கள் தொகையை குறிக்கின்றன. |
06:26 | அதர்த்தியான shadeகள் அதிக மக்கள் தொகையை குறிக்கின்றன. |
06:31 | மீண்டும், Layers Properties dialog-box ஐ திறக்கவும் |
06:37 | Style tabல், drop down பட்டனை க்ளிக் செய்யவும் |
06:41 | Graduated symbologyஐ ஆராய்வோம். Graduated தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:48 | Graduated symbology வகை, தனித்துவமான வகுப்புகளில் ஒரு columnல் உள்ள dataவை உடைக்க உங்களை அனுமதிக்கிறது. |
06:55 | ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு பாணியை நாம் தேர்வு செய்யலாம். |
07:00 | Column drop-downல் இருந்து, POP_ESTஐ தேர்ந்தெடுக்கவும் |
07:06 | மக்கள்தொகை dataவை குறைந்த, நடுத்தர மற்றும் உயர் என 3 வகுப்புகளாக வகைப்படுத்துவது பற்றி நாம் சிந்திக்கலாம். |
07:13 | Classes drop-down னின் கீழ், 3ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:18 | தொடர்புடைய மதிப்புகளைக் கொண்ட 3 வகுப்புகள் panelலில் தெரிவதை நீங்கள் காணலாம் |
07:25 | Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
07:28 | Mode drop-downஐ க்ளிக் செய்யவும் |
07:31 | இங்கு பல Mode தேர்வுகள் கிடைக்கின்றன |
07:35 | விஷயங்களை எளிமையாக வைத்திருக்க, Quantile modeஐ பயன்படுத்துவோம் |
07:40 | இந்த modeகள் dataவை தனி வகுப்புகளாக உடைக்க வெவ்வேறு புள்ளிவிவர வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. |
07:47 | ஒரு பண்புக்கூற்றை Graduated style லில் பயன்படுத்த, numerical field ஆக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க. |
07:55 | numerical மதிப்புகள் Integer அல்லது real மதிப்புகளாக இருக்கலாம். |
08:00 | String type வுடன் கூடிய Attribute field ஐ styling தேர்வுடன் பயன்படுத்த முடியாது |
08:06 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:10 | இப்போது வரைபடத்தில் நீங்கள் 3 வெவ்வேறு shadeகளில் நாடுகளைக் காண்பீர்கள். |
08:16 | இந்த வண்ண shadeகள் நாட்டின் மக்கள் தொகை dataவைக் குறிக்கிறது. |
08:22 | Layers Panel லில், இந்த layerக்கு 3 classகளைக் காண்பீர்கள். |
08:27 | மேலும் சில styling தேர்வுகள் உள்ளன |
08:31 | இந்த ஒவ்வொரு வகுப்பிற்கும் நாம் வேறுபட்ட பாணியையும் வண்ணத்தையும் தேர்வு செய்யலாம். |
08:37 | Layer Properties dialog-boxஐ மீண்டும் திறக்கவும் |
08:42 | Classes tab ல், Symbol column ன் கீழ், வண்ண box ஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
08:49 | Symbol Selector dialog-box திறக்கிறது |
08:53 | Color drop-down தேர்வில், drop-down arrow ஐ க்ளிக் செய்யவும். வண்ண முக்கோணம் திறக்கிறது |
09:01 | தேவையான வண்ணத்தை தேர்வு செய்ய வண்ண முக்கோணத்தை சுழற்றவும் . |
09:05 | குறைந்த மக்கள் தொகையைக் குறிக்க சிவப்பு நிறத்தை நான் தேர்வு செய்கிறேன் |
09:10 | Symbol selector dialog-boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:15 | இதேபோல் மற்ற இரண்டு வகுப்புகளுக்கும் நிறத்தை மாற்றவும். |
09:19 | நான் நடுத்தரத்திற்கு மஞ்சள் மற்றும் உயர் தரத்திற்கு பச்சை நிறத்தை தேர்வு செய்கிறேன். |
09:35 | Legend column ன் முதல் rowஐ டபுள்-க்ளிக் செய்யவும். முதல் row ற்கு, low என டைப் செய்யவும் |
09:42 | இரண்டாவது row ற்கு, Medium என டைப் செய்யவும். மூன்றாவது rowற்கு, High என டைப் செய்யவும். |
09:48 | தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளை edit செய்ய, Values column ன் கீழ் முதல் rowஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
09:54 | Enter class bounds text box திறக்கிறது. நீங்கள் விரும்பினால், குறைந்த மதிப்பு மற்றும் உயர்ந்த மதிப்பைத் edit செய்யலாம். |
10:04 | இப்போதைக்கு மதிப்புகளை அப்படியே விட்டுவிடுவோம். OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:10 | Layer Properties dialog boxல் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:15 | உலக வரைபடத்தைக் கவனிக்கவும். |
10:17 | குறைந்த, நடுத்தர, அதிக மக்கள் தொகையைக் குறிக்க இப்போது 3 வெவ்வேறு வண்ணங்கள் உள்ளன. |
10:24 | Layers Panelஐ கவனிக்கவும் |
10:27 | மக்கள்தொகை மதிப்புகள் பற்றிய எங்கள் விளக்கத்தை குறிக்க தெளிவாக குறிக்கப்பட்ட class பெயர்கள் மற்றும் வண்ணங்கள் உள்ளன |
10:36 | இந்த பாணி முந்தைய இரண்டு முயற்சிகளை விட மிகவும் பயனுள்ள வரைபடத்தை தெரிவிக்கிறது. |
10:42 | ஒரு vector file லில் எப்படி வேறுபட்ட அம்சங்களை label செய்வது என்று கற்போம் |
10:47 | செயல்விளக்கத்திற்கு நாடுகளின் பெயர்களை label செய்வோம் |
10:52 | Layer Properties dialog boxஐ மீண்டும் திறக்கவும் |
10:57 | இடது லில் இருந்து, Labels tabஐ தேர்ந்தெடுக்கவும் |
11:01 | முதல் text box drop-down ல், Show labels for this layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
11:08 | அம்சங்களின் பட்டியலில் உள்ள ADMIN column ல் நாடுகளின் பெயர்கள் உள்ளன. |
11:14 | Label with drop downல், ADMIN.ஐ தேர்ந்தெடுக்கவும் |
11:20 | style menu வில், Buffer ஐ தேர்ந்தெடுக்கவும் |
11:23 | Draw text buffer check boxஐ check செய்யவும் |
11:27 | textன் அளவை தேவைக்கேற்ப மாற்றலாம். |
11:32 | color drop-down ல் இருந்து ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் |
11:38 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
11:40 | உலக வரைபடத்தில் நாடுகளின் பெயர்கள் காட்டப்படுவதை காணலாம். |
11:46 | சுருங்கச் சொல்ல, |
11:48 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, QGISல் vector dataவை load செய்வது |
11:55 | Style vector data ஐ பயன்படுத்தி, Single symbol styling , Categorized styling, Graduated styling, மற்றும் |
12:07 | labelling அம்சங்கள் |
12:10 | பயிற்சியாக, |
12:12 | data set POP_EST ஐ 5 வகுப்புகளாக வகைப்படுத்தவும் |
12:19 | Graduated styling முறை, Equal Interval modeஐ பயன்படுத்தவும் |
12:24 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
12:29 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12;37 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:48 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
12:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
13:05 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |