QGIS/C2/Geometric-Properties-of-Vectors/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Geometric Properties of Vectors குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- attribute tableலில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களை வரைபடத்தில் காட்டுவது
00:14 attribute tableக்கு columnகளை சேர்ப்பது
00:18 attributes க்கு புள்ளிவிவரங்களை கணக்கிடுவது
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18
00:34 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:41 இல்லையெனில் அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
00:46 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folderஐ நீங்கள் தரவிறக்க வேண்டும்
00:56 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்யவும்
01:00 extract செய்யப்பட்ட folderல், IND_rails.shp fileஐ கண்டுபிடிக்கவும்
01:08 நான் ஏற்கனவே code fileஐ தரவிறக்கி, அதை Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன்
01:15 அதை திறக்க, Desktopல் உள்ள, code-file folder ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
01:21 IND_rails.shp fileஐ ரைட்-க்ளிக் செய்யவும்
01:27 context menu வில் இருந்து, Open with QGIS Desktop தேர்வை தேர்ந்தெடுக்கவும்
01:35 QGIS interface திறக்கிறது
01:38 QGIS tips dialog-boxஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும்
01:44 இரயில் பாதைகளை குறிக்கும் கோடுகளுடன் இந்தியாவின் வரைபடம் canvasல் திறக்கிறது.
01:51 செயல்படும் ரயில் சாலைகளுக்கான வரி நீளங்களை கணக்கிடுவோம்.
01:57 இந்த தகவலைக் காண நாம் attribute tableஐ திறக்க வேண்டும்.
02:02 Layers Panelலில் உள்ள IND_rails layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
02:09 context menuவில் இருந்து, Open Attribute Table தேர்வை தேர்ந்தெடுக்கவும்
02:14 Attribute table திறக்கிறது
02:17 EXS_DESCRIஎன்ற ஒரு attributeஐ இந்த table கொண்டிருக்கிறது
02:25 செயல்படும் அம்சங்களைத் தேர்ந்தெடுக்க இந்த attributeன் மதிப்பைப் பயன்படுத்தலாம்.
02:31 இந்த column ஒரு குறிப்பிட்ட ரயில் பாதையின் நிலையைக் காட்டுகிறது.
02:36 இவை, Operational, Unexamined அல்லது Unsurveyed மற்றும் not Usable என வகைப்படுத்தப்படுகிறது
02:48 செயல்படும் lineகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
02:52 attribute table windowவில், tool bar ல் உள்ள Select features using an expression tool ஐ க்ளிக் செய்யவும்
03:00 ஒரு புதிய dialog-box Select By Expression திறக்கிறது
03:05 Function Editor panel லில், Fields and Values தேர்வுக்கு அடுத்ததாக உள்ள கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
03:13 பட்டியலில் இருந்து EXS_DESCRI attributeஐ தேர்ந்தெடுக்கவும்
03:21 அதை டபுள்-க்ளிக் செய்து, Expression text பகுதிக்கு அதை சேர்க்கவும்
03:26 single quotesல், "EXS_DESCRI" equal to Operational என டைப் செய்து expressionஐ முடிக்கவும்
03:37 இங்கு syntax, case-sensitive ஆகும் என்பதை கவனிக்கவும்
03:42 attribute table.லில் தோன்றும் சொற்களைத் அப்படியே டைப் செய்க.
03:47 “O” ல் இருக்கும் Operational, capital எழுத்தாகும்
03:52 Tableன் கீழ் இருக்கும் Select பட்டனை க்ளிக் செய்து, பின் Close பட்டனை க்ளிக் செய்யவும்
03:59 attribute tableலில், Operational category தேர்ந்தெடுக்கப்படுகிறது
04:04 attribute tableஐ மூடவும்
04:07 வரைபடத்தில், Operational categoryல் வரும் அனைத்து lineகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
04:14 இந்த lineகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும்.
04:17 இப்போது நமது தேர்வை புதிய shapefile. லில் சேமிப்போம்.
04:22 IND_rail layerஐ ரைட்-க்ளிக் செய்து, Save As.... தேர்வை தேர்ந்தெடுக்கவும்
04:31 Save Vector Layer as ….. dialog-box திறக்கிறது
04:35 File name fieldக்கு அடுத்ததாக உள்ள, Browse பட்டனை க்ளிக் செய்யவும்
04:40 Save Layer As... dialog-box திறக்கிறது
04:44 output file க்கு railway.shp. என பெயரிடவும்
04:49 ஓர் இடத்தை தேர்ந்தெடுக்கவும், நான் Desktop.ஐ தேர்வு செய்கிறேன். Save பட்டனை க்ளிக் செய்யவும்
04:57 இப்போது இந்த layerக்கு CRSஐ தேர்ந்தெடுப்போம். Select CRS பட்டனை க்ளிக் செய்யவும்
05:04 Coordinate Reference System Selector dialog-box திறக்கிறது
05:09 நீளத்தைக் கணக்கிடுவதில் நாங்கள் ஆர்வமாக இருப்பதால், ஒரு equidistance projectionஐ தேர்ந்தெடுப்போம்.
05:16 Filter search boxல் Indian 1975 என டைப் செய்யவும்
05:22 Geographic Coordinate Systemsல், உலகத்தின் Coordinate Reference Systemsன் கீழ், Indian 1975 EPSG:4240.ஐ தேர்ந்தெடுக்கவும்
05:36 OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:39 Save vector layer as... dialog-boxல் முன்னிருப்பாக, Add saved file to map ஏற்கனவே check செய்யப்பட்டிருக்கிறது
05:48 Save only selected features check boxஐ check செய்யவும்
05:53 OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:56 ஏற்றுமதி செயல்முறை முடிந்ததும், Layers Panelலில் railway என்ற புதிய layer ஒன்று load செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்
06:04 நமக்கு தேவை இல்லாததால், , Layers Panelலில், IND_rail layerக்கு அடுத்ததாக உள்ள boxஐ, அதை turn off செய்வதற்கு uncheck செய்யவும்
06:15 Canvas ல் செயல்படும் ரயில் பாதைகளை மட்டுமே கொண்ட இந்திய வரைபடத்தைக் நீங்கள் காண்பீர்கள்.
06:22 railway layerஐ ரைட்-க்ளிக் செய்து Open Attribute Tableஐ தேர்ந்தெடுக்கவும்
06:29 இப்போது ஒவ்வொரு அம்சத்தின் நீளத்துடன் ஒரு columnஐ சேர்ப்போம்.
06:34 tool barல் உள்ள Toggle editing tool ஐ க்ளிக் செய்து, layerஐ editing modeல் வைக்கவும்
06:41 பின்னர் tool barன் வலது புற மூலையில் இருக்கும் Open field calculator பட்டனை க்ளிக் செய்யவும்
06:49 Field Calculator dialog-boxல், Create a new field check boxஐ செக் செய்யவும்
06:55 Output field name text boxல், டைப் செய்க length-km
07:02 Output field typeக்கு Decimal number (real)ஐ தேர்வு செய்யவும்
07:07 output Precision ஐ 2க்கு மாற்றவும்
07:10 Function editor panelலில், Geometry க்கு அடுத்ததாக உள்ள முக்கோணத்தை க்ளிக் செய்து, $lengthஐ தேர்ந்தெடுக்கவும்
07:20 $lengthExpression text box க்கு சேர்க்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்
07:26 Expressionஐ $length வகுத்தல் 1000 என முடிக்கவும்
07:32 text window வின் மேலுள்ள Division Operator பட்டனை க்ளிக் செய்யவும்
07:37 keyboard ல் 1000 என டைப் செய்யவும்
07:40 நாம் output lengthஐ 1000ஆல் வகுக்க வேண்டும். ஏனெனில் railway layer CRS மீட்டர் யூனிட்டில் உள்ளது, ஆனால் நாம் கிலோ மீட்டரில் வெளியீட்டை நாங்கள் விரும்புகிறோம்.
07:52 OK பட்டனை க்ளிக் செய்யவும்
07:55 Editingஐ நிறுத்த Toggle editing tool ஐ க்ளிக் செய்யவும்
08:00 Stop editing dialog-boxல், attribute tableக்கு மாற்றங்களை சேமிக்க, Save பட்டனை க்ளிக் செய்யவும்
08:07 attribute tableலில், Length_km என்ற ஒரு புதிய column சேர்க்கப்பட்டுள்ளது
08:15 இப்போது Railway layerல் ஒவ்வொரு தனி lineனின் நீளமும் உள்ளது.
08:20 நாம் அனைத்தையும் சேர்த்து மொத்த நீளத்தைக் கண்டுபிடிக்கலாம்.
08:25 attribute table.ஐ மூடவும்
08:28 menu bar வில் Vector menu ஐ க்ளிக் செய்யவும். Analysis Tools தேர்வை தேர்ந்தெடுக்கவும்
08:36 sub-menu வில், Basic Statistics for numeric toolsஐ க்ளிக் செய்யவும்
08:42 ஒரு dialog-box திறக்கிறது
08:45 Input vector layerக்கு railwayஐ தேர்ந்தெடுக்கவும்
08:50 Field to calculate statistics onக்கு length_kmஐ தேர்வு செய்யவும்
08:57 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Run பட்டனை க்ளிக் செய்யவும்
09:03 Results window திறக்கிறது
09:06 இங்கே நீங்கள் பல்வேறு புள்ளிவிவர முடிவுகளைக் காண்பீர்கள்.
09:11 இங்கே காட்டப்பட்டுள்ள Sum value இரயில் பாதைகளின் மொத்த நீளம்.
09:16 வேறு projection தேர்ந்தெடுக்கப்பட்டால் பதில் சற்று மாறுபடும் என்பதை கவனிக்கவும்
09:23 நடைமுறையில், சாலைகள் மற்றும் பிற நேரியல் அம்சங்களுக்கான வரி நீளம் தரையில் அளவிடப்படுகிறது.
09:30 இந்த மதிப்புகள் datasetக்கு attributeகளாக வழங்கப்படுகின்றன.
09:35 மேலே காட்டப்பட்ட முறை அத்தகைய attribute இல்லாத நிலையில் செயல்படுகிறது .மேலும் உண்மையான வரி நீளங்களின் தோராயமாக செயல்படுகிறது.
09:46 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
09:51 attribute tableலில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களை வரைபடத்தில் காட்டுவது, attribute tableக்கு columnகளை சேர்ப்பது, attributes க்கு புள்ளிவிவரங்களை கணக்கிடுவது
10:04 பயிற்சியாக, Code files இணைப்பில் இருந்து தரவிறக்கப்பட்ட code file world_1.shpஐ பயன்படுத்தவும்
10:14 வெவ்வேறு நாடுகளுக்கு ஸ்கொயர் கிலோமீட்டரில் பரப்பளவைக் கண்டறியவும்.
10:20 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி, இங்கு காட்டியுள்ளபடி இருக்கவேண்டும்
10:26 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:34 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
10:41 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:45 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
10:49 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
11:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree