Python-3.4.3/C2/Using-plot-command-interactively/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். IPython ல் ஐ ஆக பயன்படுத்துவது குறித்த டுடோரியலுக்கு வருக
00:08 இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: கணித functionகளின் எளிய plotகளை உருவாக்குவது, plotகளை மேலும் புரிந்துகொள்ள, Plot windowவை பயன்படுத்துவது
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, Python 3.4.3 மற்றும் IPython 5.1.0
00:34 இந்த டுடோரியலை பறிச்சி செய்ய தேவையான முன்நிபந்தனைகள்-ipython console.லில் களை அடிப்படை Python commandகளை, எப்படி செய்யவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்
00:44 இல்லையெனில், தொடர்புடைய Python டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:50 முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம்
00:58 இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
01:05 pylab package ஐ தொடக்குவோம். percentage pylab என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
01:16 முதலில் Pylab என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வோம்
01:20 Pylab ஒரு வசதியான Python module- இது plotting செயல்பாட்டை வழங்குகிறது மற்றும் மற்றும் கணித மற்றும் அறிவியல் function களை கொண்டுள்ளது
01:32 percentage pylab iPython consoleலில் run செய்தவுடன், நீங்கள் பின்வரும் செய்தியை காண்பீர்கள்- “Using matplotlib backend: TkAgg ”.
01:41 இதன் பொருள், matplotlib run செய்து கொண்டிருக்கிறது
01:45 ஆனால் சில நேரங்களில் நீங்கள் ஒரு errorஐ பெறலாம்- “ImportError: No module named matplotlib”.
01:55 அத்தகைய வழக்குகளில், நீங்கள் matplotlibஐ மீண்டும் நிறுவி, இந்த commandஐ மீண்டும் run செய்யவேண்டும்
02:02 ipython consoleக்கு நாம் மீண்டும் வருவோம். ipython console. லில், 'linspace'ஐ தொடர்ந்து ஒரு கேள்விக்குறியை டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
02:14 command , linspace . linespace. அல்ல என்பதை கவனிக்கவும்
02:20 காட்டப்படுகின்ற தகவல், linspace, start மற்றும் stop இடைவெளியில் கணக்கிடப்படும் சம இடைவெளி எண்களை வழங்குகிறது என்று கூறுகிறது
02:34 documentation ல் இருந்து வெளியேறி, மற்றும் console.க்கு திரும்ப வர, q ஐ அழுத்தவும்
02:41 1 முதல் 100 வரை 100 புள்ளிகளை உருவாக்க முயற்சிப்போம். டைப் செய்க: linspace brackets 1 comma 100 comma 100
02:58 இங்கு 1 என்பது start , 100 என்பது stop அடுத்த 100 என்பது புள்ளிகளின் எண்ணிக்கை. இப்போது Enterஐ அழுத்தவும்
03:09 1 முதல் 100 வரையிலான எண்களின் வரிசை காட்டப்படுவதை நீங்கள் காணலாம்
03:15 இப்போது 0 மற்றும் 1 க்கு இடையில் 200 புள்ளிகளை உருவாக்க முயற்சிப்போம்.
03:21 linspace brackets 0 comma 1 comma 200 என டைப் செய்து, Enterஐ அழுத்துவதன் மூலம் நாம் அதை செய்கிறோம்
03:36 எண்களின் எதிர்பார்க்கப்படுகின்ற வரிசை இங்கே உள்ளது.
03:40 linspace,லில், start மற்றும் stop point கள், integerகள், decimalகள் அல்லது constantகளாக இருக்கலாம்
03:48 இப்போது len function ஐ பற்றி கற்றுக்கொள்வோம்
03:52 முதலில் minus pi மற்றும் piக்கு இடையே 100 புள்ளிகளை உருவாக்குவோம்.
03:58 அதனால் linspace brackets minus pi comma pi comma 100 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
04:10 இங்கு 'pi' என்பது pylabஆல் வரையறுக்கப்படுகின்ற ஒரு constant ஆகும்
04:15 இப்போது, இதை, t என்று variableலில் save செய்வோம்
04:22 இப்போது நாம் len bracket t என்று டைப் செய்து, பின் Enterஐ அழுத்தினால், minus pi மற்றும் piக்கு இடையே உள்ள pointகளின் எண்னிக்கை நமக்கு கிடைக்கும்
04:32 len function கொடுக்கப்பட்ட வரிசையில் இருக்கும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் கொடுக்கிறது.
04:37 அடுத்து, minus pi மற்றும் pi.க்கு இடையே ஒரு cosine curve ஐ plot செய்ய முயற்சிப்போம்
04:43 இதற்கு நாம் plot command ஐ பயன்படுத்துகிறோம். plot brackets t comma cos(t) என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
04:59 cosine plotல் இருந்து, cos(t) புள்ளி t உடன் தொடர்புடைய ஒவ்வொரு புள்ளியிலும் cosine மதிப்பைப் பெறுகிறது என்பதை நாம் காண்கிறோம்
05:09 cosine equals to cos(t) என்று டைப் செய்வதன் மூலம், cos(t) ன் மதிப்பை, cosineஎன்ற variableக்கு நாம் ஒதுக்கலாம்
05:21 plot(t comma cosine) என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தி, plot செய்யவும்
05:31 Plotஐ clear செய்ய, நாம் clf() function ஐ பயன்படுத்த வேண்டும். இது பழைய plotகள், புதிய plotகளுடன் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொள்வதை தவிர்க்கிறது
05:42 consoleலில், clf() என டைப் செய்து, பின் Enter. ஐ அழுத்தவும். முந்தைய plot clear செய்யப்படுகிறது மற்றும் ஒரு காலி plot window காட்டப்படுகிறது
05:56 இப்போது ஒரு sine plot ஐ plot செய்ய முயற்சிப்போம்
06:00 plot brackets t comma sin(t) என டைப் செய்து, பின் Enter. ஐ அழுத்தவும். ஒரு sine plot காட்டப்படுகிறது
06:14 plot window,வில் plotஐ தெளிவாக புரிந்துகொள்ள, அதில் கிடைக்கும் பல்வேறு விருப்பத்தேர்வுகளை பயன்படுத்தலாம். இந்த விருப்பத்தேர்வுகளை பார்ப்போம்.
06:25 mouse pointerஐ plotன் மேல் நகர்த்துவது, plotன் ஒவ்வொரு புள்ளியின் இடத்தையும் நமக்குத் தருகிறது
06:33 Windowவின் கீழ் இடது பக்கத்தில், சில பட்டன்கள் இருப்பதை பார்க்கவும்
06:39 அவற்றில் வலது பக்கத்தில் கடைசியாக இருப்பது, fileஐ சேமிப்பதற்காகும். அதை க்ளிக் செய்து fileன் பெயரை டைப் செய்யவும்
06:47 plotக்கு sin underscore curve என்ற பெயரை வைத்து, pdf formatல் அதை save செய்வோம்
06:54 இங்குள்ள dropdown ஐ க்ளிக் செய்யவும். Fileஐ சேமிக்க பல formatகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். png, eps, pdf, மற்றும் ps போன்ற பல formatகள் உள்ளன
07:08 சேமிக்கும் நேரத்தில் நாம் விரும்பும் formatஐ குறிப்பிட வேண்டும்.
07:14 save பட்டனுக்கு இடது பக்கத்தில், slider பட்டன் உள்ளது. இந்த பட்டனை பயன்படுத்தி, plot windowவின் ஓரங்களைக் நாம் குறிப்பிடலாம்.
07:24 sliderபட்டனின் இடது பக்கத்தில் zoom பட்டன் உள்ளது. அது plotஇனுள் zoom செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. zoom செய்ய அந்த பகுதியை குறிப்பிடவும்.
07:37 plotன் axisகளை நகர்த்துவதற்கு, zoom, ன் இடது பக்கத்தில் இருக்கும் பட்டனை பயன்படுத்தலாம்
07:41 இடது மற்றும் வலது அம்புக்குறி iconகளுடன் இருக்கும் அடுத்த இரண்டு பட்டன்கள், plotன் நிலையை மாற்றும்.
07:48 இது plotன் முந்தைய அல்லது அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது browserல் பின் மற்றும் முன்னோக்கி பட்டனை போல் செயல்படுகிறது.
07:57 கடைசியானது 'home', இது ஆரம்ப plot. ஐ குறிக்கிறது.
08:03 வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
08:09 (sin(x) multiplied by sin(x)) divided by xஐ plot செய்யவும் 1. plotsinsquarebyx dot pdf என Save செய்யவும். 2. Zoomசெய்து maximaவை கண்டுபிடிக்கவும். 3. அதை ஆரம்ப நிலைக்கு கொண்டு வரவும்
08:26 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: pylabஉடன் IPythonஐ தொடங்குவது, ஒரு பகுதியில் சம இடைவெளி புள்ளிகளை உருவாக்க linspace functionஐ பயன்படுத்துவது,
08:42 len' functionஐப் பயன்படுத்தி தொடர்களின் நீளத்தைக் கண்டறிவது, plotஐப் பயன்படுத்தி கணிதச் functionகளை plot செய்வது, clf ஐப் பயன்படுத்தி வரைதல் பகுதியை clear செய்வது.
08:53 plot window வின் UIல், பின்வரும் பட்டன்களை பயன்படுத்துவது-
save, zoom, move axis, back and forward, Home.
09:04 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் இங்கே உள்ளன - 1. minus pi by 2 மற்றும் pi by 2க்கு இடையே 100 சம இடைவெளி புள்ளிகளை உருவாக்கவும்.
09:15 2. ஒரு வரிசையின் நீளத்தை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?
09:19 3. linspace(minus pi comma pi comma 100) command என்ன செய்யும்?
09:26 விடைகள்- . minus pi by 2 மற்றும் pi by 2க்கு இடையே 100 சம இடைவெளி புள்ளிகளை உருவாக்க நாம் linspace(minus pi by 2 comma pi by 2 comma 100) commandஐ பயன்படுத்துகிறோம்.
09:43 ஒரு வரிசையின் நீளத்தைக் கண்டறியப் பயன்படும் function, len(sequence underscore name) ஆகும்
09:50 linspace(minus pi comma pi comma 100) command, -pi இலிருந்து piக்கு minus pi மற்றும் pi இரண்டும் உட்பட 100 சம இடைவெளி மாதிரிகளை வழங்கும்
10:06 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. உங்களிடம் தரமான அலைவரிசை இல்லையென்றால், அதை தரவிறக்கி பார்க்கலாம்.
10:16 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:24 இந்த Spoken Tutorial?லில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
10:27 உங்களின் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் FOSSEE குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த தளத்தை பார்க்கவும்
10:39 உங்களுக்கு Pythonல் பொது/தொழில்நுட்ப கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த இணைப்பில் உள்ள forumஐ பார்க்கவும்
10:46 FOSSEEகுழு பிரபலமான புத்தகங்களின் பல தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் codingஐ ஒருங்கிணைக்கிறது.
10:51 இதை செய்பவர்களுக்கு நாங்கள் கௌரவத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
11:00 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:07 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree