Python-3.4.3/C2/Saving-plots/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். "Saving Plots" குறித்த டுடோரியலுக்கு வருக
00:06 இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள் பின்வருவனவற்றை செய்ய இயலும்: savefig() functionஐ பயன்படுத்தி plotகளை சேமிப்பது, plotகளை வெவ்வேறு formatகளில் சேமிப்பது,
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, Python 3.4.3, IPython 5.1.0
00:28 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Plot commandஐ interactiveஆக பயன்படுத்த உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, முன்நிபந்தனை Python டுடோரியல்களை பார்க்கவும்
00:40 முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
00:54 'pylab' packageஐ initialise செய்வோம். percentage pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:05 minus 3 pi ல் இருந்து 3 pi. வரை, ஒரு sine curveஐ plot செய்வோம்
01:10 முதலில், plotக்கு தேவையான pointகளை கணக்கிடுவோம்
01:14 அதற்கு, consoleலில் டைப் செய்க: x equals to linspace(minus 3 star pi comma 3 star pi comma 100)
01:28 variable xஇல் சேமிக்கப்பட்ட புள்ளிகளுக்கு ஒரு sine curveஐ plot செய்வோம்
01:33 consoleலில் டைப் செய்க: plot(x comma sin(x)) , பின் Enter.ஐ அழுத்தவும். இந்த டுடோரியல் முடியும் வரை plot windowவை மூட வேண்டாம்
01:47 நாங்கள் மிகவும் அடிப்படையான sine plotஐ செய்திருப்பதை நீங்கள் இங்கே காணலாம். இப்போது plot.ஐ எப்படி save செய்வது என்று பார்ப்போம்
01:54 Plotஐ சேமிப்பதற்கு, நாம் 'savefig()' function.ஐ பயன்படுத்துவோம். Syntax: savefig(fname). savefig function, fileன் பெயரை ஒரு argumentஆக எடுத்துக்கொள்கிறது
02:05 டைப் செய்க: savefig('sine.png') , பின் Enter.ஐ அழுத்தவும்.
02:12 இது, இப்போதுள்ள working directoryல் fileஐ சேமிக்கிறது
02:16 Fileன் பெயரில் dot க்கு பிறகு உள்ள characterகள் extension ஆகும். நீங்கள் fileஐ save செய்ய விரும்பும் formatஐ இது தீர்மானிக்கிறது
02:27 தற்போதைய working directory ஐ சரிபார்க்க, consoleலில் pwd என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
02:34 Fileஐ ஒரு வேறுபட்ட directoryல் சேமிக்க, fileன் பெயருக்கு முன்னால், directoryன் முழு pathஐயும் டைப் செய்யவும். டைப் செய்க: savefig('slash home slash fossee slash sine.png')
02:53 மேலுள்ள file path , Linuxஐ அடிப்படையாக கொண்ட file systemகளுக்கு மட்டுமானது என்பதை கவனிக்கவும்
02:59 Windows, க்கு, இங்கு காட்டப்பட்டுள்ள முழு file pathஐயும் கொடுக்கவும். இங்கு fossee என்பது, Windowsல் உள்ள username ஆகும் மற்றும் sine.png file ஐ Desktopல் சேமிக்கவேண்டும்
03:15 இங்கு நாம் ஒரு extension dot png.ஐ பயன்படுத்தியுள்ளோம். Image PNG' fileஆக சேமிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.
03:24 இப்போது நாம் முன்பு சேமித்த, sine.png fileஐ கண்டுபிடிப்போம்.
03:30 நாம் fileஐ (slash)home(slash)fosseeல் சேமித்துள்ளோம்
03:35 File browserஐ பயன்படுத்தி, (slash)home(slash)fosseeக்கு செல்வோம்
03:40 Plot செய்யப்பட்ட sine curve. ஐ பார்க்க, sine.png file ஐ திறக்கவும்
03:46 savefig plotஐ பின்வரும் பல formatகளில் சேமிக்கலாம்- pdf - portable document format, ps - post script,
03:57 eps - encapsulated post script, LaTeX document களுடன் பயன்படுத்தவேண்டும், svg - scalable vector graphics, .png - portable network graphics .
04:10 வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும் மற்றும் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
04:16 sine ploteps formatல் சேமிக்கவும். இந்த பயிற்சியின் outputஐ பார்ப்போம்
04:23 டைப் செய்க: savefig('slash home slash fossee slash sine.eps'), பின் Enter.ஐ அழுத்தவும்
04:35 இப்போது, slash home slash fosseeக்கு சென்று, உருவாக்கப்பட்ட புதிய fileஐ பார்ப்போம். sine.eps fileஐ நாம் இங்கு காண்கிறோம்
04:48 வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும் மற்றும் வீடியோவை மீண்டும் தொடங்கவும். sine plotஐ, PDF, PS மற்றும் SVG formatகளில் சேமிக்கவும்
05:00 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: 1. savefig() functionஐ பயன்படுத்தி plotகளை சேமிப்பது, 2. plotகளை pdf, ps, png, svg மற்றும் eps போன்ற வெவ்வேறு formatகளில் சேமிப்பது,
05:17 நீங்கள் தீர்க்க வேண்டிய சில பயிற்சி கேள்விகள் இங்கே உள்ளன. 1. ஒரு plotஐ சேமிக்க எந்த command பயன்படுத்தப்படுகிறது? saveplot(), savefig(), savefigure(), saveplt(). 2. savefig('sine.png'), plotஐ எதில் சேமிக்கிறது? root directory 'slash' (on GNU/Linux, Unix based systems), 'C:' (on windows)
05:40 full pathஉம் கொடுக்கப்படாததால் errorஐ காட்டும், தற்போதைய working directory, “slash documents.” போன்ற முன் வரையறுக்கப்பட்ட directory.
05:50 விடைகள்- 1. ஒரு plotஐ சேமிக்க, நாம் savefig() function.ஐ பயன்படுத்துகிறோம். 2. முழு pathஉம் கொடுக்காமல் நாம் ஒரு fileஐ சேமித்தால், அது தற்போதைய working directoryல் சேமிக்கப்படும்
06:02 இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும்.
06:07 இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும்
06:12 FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது
06:16 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
06:25 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree