Python-3.4.3/C2/Multiple-plots/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | எல்லோருக்கும் வணக்கம். "Multiple plots" குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலின் முடிவில், நீங்கள் பின்வருவனவற்றை செய்ய இயலும்: ஒன்றின் மேல் ஒன்று உள்ள பல plotகளை வரைவது, |
00:15 | figure commandஐ பயன்படுத்துவது, |
00:17 | legend command ஐ பயன்படுத்துவது, |
00:20 | plotக்களுக்கு இடையே மாறுவது மற்றும் plotகளை சேமிப்பது போன்ற சில operationகளை ஒவ்வொன்றின் மீதும் செய்வது |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system, |
00:36 | Python 3.4.3, IPython 5.1.0 |
00:42 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: plot களை interactiveஆக பயன்படுத்துவது, |
00:49 | ஒரு plotஐ embellish செய்வது, plotகளை சேமிப்பது. |
00:53 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, முன்நிபந்தனை Python டுடோரியல்களை பார்க்கவும் |
00:59 | முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். |
01:07 | இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:13 | 'pylab' packageஐ initialise செய்வோம். percentage pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும் |
01:21 | command 'linspace'ஐ பயன்படுத்தி, நமது plot க்கு pointகளின் ஒரு setஐ உருவாக்குவோம் |
01:29 | டைப் செய்க: x equals to linspaceஅடைப்புக்குறிக்குள், 0 comma 50 comma 10. |
01:39 | இப்போது, இந்த pointகளை பயன்படுத்தி, ஒரு sine curveஐ வரைவோம். டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள், x comma sin(x). |
01:51 | sine curve, ஒரு மென்மையான வளைவு அல்ல என்பதை நாம் காணலாம். இதற்கு உண்மையில் என்ன காரணம்? |
01:59 | 0 முதல் 50 வரையிலான இந்த பெரிய இடைவெளியில் 10 புள்ளிகளை நாங்கள் தேர்ந்தெடுத்ததால் இது நடந்தது. |
02:08 | 'Plot' function, analytical function ஐ plot செய்யாது |
02:12 | அது analytical function கொடுத்த pointகளை plot செய்கிறது |
02:17 | இப்போது, 0 மற்றும் 50க்கு இடையில் 500 புள்ளிகளைப் பெறுவதற்கு linspace commandஐ பயன்படுத்தி மீண்டும் sine curve ஐ வரைவோம். |
02:29 | டைப் செய்க: y equals to linspaceஅடைப்புக்குறிக்குள், 0 comma 50 comma 500. |
02:39 | plot அடைப்புக்குறிக்குள், y comma sin(y). |
02:45 | இப்போது நாம் மென்மையான வளைவுடன் கூடிய ஒரு sine curveஐ பார்க்கிறோம். |
02:50 | நம்மிடம் இரண்டு plotகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருப்பதை கவனிக்கவும் |
02:56 | pylabல், முன்னிருப்பாக, எல்லா plotகளும் ஒன்றன் மேல் ஒன்று இருக்கின்றன |
03:01 | இரண்டு ஒன்றன் மேல் ஒன்று உள்ள plotகளை வேறுபடுத்திப் பார்க்க நாம் 'legend' command.ஐ பயன்படுத்துகிறோம். |
03:07 | டைப் செய்க: legend அடைப்புக்குறிக்குள், square brackets sin(x) comma sin(y). |
03:16 | legend command, stringகளின் ஒரு listஐ parameterஆக எடுத்துக்கொள்கிறது |
03:21 | பின் அது, அவைகள் உருவாக்கப்பட்ட அதே வரிசையில், stringகளை plotகளுக்கு ஒதுக்குகிறது |
03:27 | இப்போது, plot பகுதியில் இரண்டு sine curveகளுக்கு legendகள் காட்டப்படுவதைக் காணலாம். |
03:34 | plot windowவை clear செய்ய, IPython terminalலில் இப்போது டைப் செய்க clf() |
03:41 | வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும். |
03:46 | இரண்டு plotகளை வரையவும், முதலாவது plot, y equals to 4x square வடிவத்தை கொண்ட ஒரு parabola ஆகும், |
03:56 | மற்றும் இரண்டாவது, minus 5 முதல் 5 வரை இருக்கும், y equals to 2x plus 3 என்ற வடிவத்தை கொண்ட ஒரு நேர்கோடாகும் |
04:05 | ஒவ்வொரு plotஉம் என்ன செய்கிறது என்பதைக் குறிக்க legendகளை பயன்படுத்தவும். |
04:11 | தீர்வுக்கு terminalக்கு மாறவும். டைப் செய்க: x is equal to linspace, அடைப்புக்குறிக்குள் minus 5 comma 5 comma 100. |
04:25 | பின்வரும் commandகளை பயன்படுத்தி, இரண்டு plotகளையும் வெவ்வேறு வண்ணங்களில் நாம் பெறலாம் |
04:31 | plot அடைப்புக்குறிக்குள் x comma 4 multiplied by, அடைப்புக்குறிக்குள் x multiplied by x. |
04:42 | plot அடைப்புக்குறிக்குள் x comma 2 multiplied by x plus 3. |
04:50 | இப்போது plotகளை அடையாளம் காண, ஒரு legendஐ சேர்ப்போம் |
04:55 | டைப் செய்க: legend அடைப்புக்குறிக்குள் சதுர அடைப்புக்குறிக்குள் r, inverted commas உள் dollar y is equal to 4 x square dollar comma r, inverted commas உள் dollar y equals to 2x plus 3 dollar. |
05:19 | legend, plotக்கு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
05:24 | அடுத்து, நாம் plotகளுக்கு இடையே மாறவும், plotக்களை சேமிப்பது போன்ற operationகளை செய்யவும் கற்றுக்கொள்வோம் |
05:33 | இதை எப்படி நிறைவேற்றுவது என்று பார்ப்போம். ஆனால், அதை செய்வதற்கு முன், நமது screenஐ clear செய்வோம். டைப் செய்க: clf() |
05:43 | டைப் செய்க: x equals to linspace அடைப்புக்குறிக்குள் 0 comma 50 comma 500. |
05:53 | தனிப்பட்ட plotகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை கொண்டு வர, நாம் 'figure' command. ஐ பயன்படுத்துகிறோம். டைப் செய்க: figure(1) |
06:03 | plot அடைப்புக்குறிக்குள் x comma sin(x) comma inside inverted commas b. |
06:12 | figure(2) |
06:14 | plot அடைப்புக்குறிக்குள் x comma cos(x) comma inside inverted commas g. |
06:24 | இப்போது, இரண்டு வெவ்வேறு படங்களில், sine curve மற்றும் cosine curve என்று இரண்டு plotகளை கொண்டுள்ளோம் |
06:33 | figure command, integerஐ ஒரு argument. ஆக எடுத்துக்கொள்கிறது. இது தொடர்புடைய plotஐ தேர்ந்தெடுப்பதற்கான plotன் வரிசை எண் ஆகும். |
06:43 | இப்போதிலிருந்து நாம் run செய்யும் எல்லா plot command களும், தேர்ந்தெடுக்கப்பட்ட plotக்கு apply செய்யப்படுகின்றன. இந்த உதாரணத்தில், figure 1 sine plot ஆகும் மற்றும் figure 2 cosine plot ஆகும். |
06:56 | உதாரணத்திற்கு, நாம் ஒவ்வொரு plotஐயும் தனித்தனியாக save செய்ய முடியும் |
07:01 | டைப் செய்க: title அடைப்புக்குறிக்குள், inverted commas உள் cos(x) |
07:09 | savefig அடைப்புக்குறிக்குள், inverted commas உள் cosine.png |
07:18 | figure(1) |
07:21 | title அடைப்புக்குறிக்குள் inverted commas உள் sin(x). |
07:28 | savefig அடைப்புக்குறிக்குள் inverted commas உள் sine.png |
07:36 | படங்கள் தற்போதைய working directoryல் சேமிக்கப்படும். இப்போது, இரண்டு plot windowக்களையும் மூடவும் |
07:44 | வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும். |
07:49 | y equals to xஎன்ற வடிவம் கொண்ட ஒரு வரியை, ஒரு figureஆக வரையவும் y is equal to 2x plus 3 வடிவம் கொண்ட மற்றொரு வரியை வரையவும். ஒவ்வொன்றையும் Save செய்யவும். |
08:05 | தீர்வுக்கு terminalக்கு மாறவும். இந்த சிக்கலுக்கு தீர்வு காண, முதல் plotting பகுதியை உருவாக்க, நாம் figure command ஐ பயன்படுத்துவோம் |
08:15 | டைப் செய்க: figure(1) , x equals to linspace அடைப்புக்குறிக்குள் minus 5 comma 5 comma 100. |
08:29 | plot அடைப்புக்குறிக்குள் x comma x. |
08:35 | இப்போது, இரண்டாவது plotting பகுதியை உருவாக்கி, படத்தை plot செய்ய, figure command ஐ பயன்படுத்தவும் |
08:43 | டைப் செய்க: figure(2) plot அடைப்புக்குறிக்குள் x comma 2x plus 3. |
08:56 | பின்வருமாறு படத்தை save செய்வோம் |
08:59 | டைப் செய்க: figure(1) , savefig அடைப்புக்குறிக்குள் inverted commas உள் plot1.png |
09:11 | figure(2), savefig அடைப்புக்குறிக்குள் inverted commas உள் plot2.png |
09:23 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒன்றின் மேல் ஒன்று உள்ள பல plotகளை வரைவது, |
09:33 | figure commandஐ பயன்படுத்துவது, |
09:35 | legend command ஐ பயன்படுத்துவது, |
09:38 | plotக்களுக்கு இடையே மாறுவது மற்றும் plotகளை சேமிப்பது போன்ற சில operationகளை ஒவ்வொன்றின் மீதும் செய்வது |
09:46 | நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் இங்கே உள்ளன- தனிப்பட்ட plotகளை தனித்தனியாக பெறுவதற்கு என்ன command பயன்படுத்தப்படுகிறது? |
09:55 | sine மற்றும் cosine curve ஐ அடையாளம் காண்பதற்கான command என்ன? |
10:00 | விடைகள்- தனிப்பட்ட plotகளை தனித்தனியாக பெறப் பயன்படுவது command "figure()" ஆகும் |
10:07 | legend command- legend அடைப்புக்குறிக்குள் சதுர அடைப்புக்குறிக்குள் inverted commas உள் sin(x) comma inside inverted commas cos(x). |
10:21 | இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும். |
10:26 | இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும் |
10:31 | FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது |
10:35 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
10:45 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |