PERL/C3/Perl-and-HTML/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Perl மற்றும் HTML குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் உருவாக்க கற்கப்போவது: html pages மற்றும் CGI module. |
00:14 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2, Firefox Web Browser, Apache HTTP server மற்றும் gedit' Text Editor. |
00:31 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:35 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:40 | இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும். |
00:47 | Webல் பயன்படுத்தப்படும் Perl programகள், Perl CGI எனப்படும். |
00:52 | CGI என்பது Common Gateway Interface என்பதாகும். |
00:56 | அது, client-server web communication க்கான interface ஆகும். |
01:01 | CGI என்பது communicationக்காக, Perl நிறுவுதலுடன் சேர்த்து நிறுவப்படும் ஒரு Perl module ஆகும். |
01:10 | Developerகள், Perl CGI applicationகளை எழுதுவதற்கு உதவ, பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் functionகளை CGI.pm பெற்றிருக்கிறது. |
01:19 | Web browserல் இருந்து, குறிப்பிட்ட directoryன் ஒரு fileஐ கோரினால், HTTP server போல் அல்லாமல், Perl CGI scriptகள் இயக்கப்பட்டு, காட்டுவதற்கு outputஐ browserக்கு திருப்பி அனுப்புகிறது. |
01:33 | இந்த function, CGI எனவும், programகள் CGI scripts எனவும் அழைக்கப்படுகின்றன. |
01:40 | CGI programகள், Perl script, Shell Script, C அல்லது C++ programஆகவோ இருக்கலாம். |
01:47 | இப்போது, ஒரு மாதிரி Perl programஐ காண்போம். |
01:50 | Terminalக்கு திரும்பவும். |
01:53 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்தcgiexample.pl fileஐ, geditல் திறக்கிறேன். |
02:01 | cgiexample dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
02:08 | இப்போது codeஐ புரிந்து கொள்வோம். |
02:11 | Use CGI statement, நமது programல், CGI.pm moduleஐ நாம் பயன்படுத்த வேண்டும் என, Perlக்கு கூறுகிறது. |
02:19 | அது moduleஐ load செய்து, நமது codeக்கு, CGI functionகளின் ஒரு தொகுப்பை கிடைக்கச் செய்யும். |
02:26 | HTMLஐ தொடங்க, start_html() methodஐ பயன்படுத்துவோம். |
02:33 | “My Home Page” என்பது, webpageக்கு உண்டான page title ஆகும். |
02:38 | CGI moduleஐ பயன்படுத்தி நாம் எந்த HTML tagஐயும் print செய்யலாம். |
02:43 | Heading tagகள், h1, h2 என குறியிடப்படுகின்றன. |
02:49 | end_html method, BODY மற்றும் HTML tagகளை return செய்கிறது. |
02:55 | இப்போது fileஐ சேமிக்கவும். |
02:57 | Web server வழியாக scriptஐ run செய்வதற்கு முன், அதை command lineல் இருந்து run செய்ய முயற்சிப்போம். |
03:04 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl cgiexample.pl, பின் Enterஐ அழுத்தவும். |
03:12 | Output, HTML போல் இருக்கும். |
03:15 | அடுத்து, அதே scriptஐ web server வழியாக சோதிப்போம். |
03:20 | முதலில், web server வேலை செய்கிறதா என்று சரி பார்ப்போம். |
03:25 | உங்கள் web browserஐ திறந்து, கணிணியின் IP addressஐ கொடுத்து, Enterஐ அழுத்தவும். |
03:31 | இல்லையெனில், "localhost" என டைப் செய்யலாம். |
03:35 | எல்லாம் நன்றாக வேலை செய்தால், browserல் இதைப் போல் ஏதோ ஒன்றை காண்பீர்கள். |
03:40 | ஏதேனும் error கிடைத்தால், web service நிறுவப்படவில்லை அல்லது அது ON statusல் இல்லை. |
03:48 | என் கணிணியில், Apache HTTP server நிறுவப்பட்டுள்ளது. |
03:52 | அது நிறுவப்படவில்லை எனில், terminalலில் கீழ்கண்ட commandஐ இயக்கவும். |
03:58 | இல்லையெனில், server configurationக்கு உங்கள் system administratorஐ அனுகவும். |
04:04 | இப்போது, அதே scriptஐ web server வழியாக சோதிப்போம். |
04:09 | இதற்கு, சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். |
04:13 | முதலில், web server, நமது programஐ ஒரு CGI scriptஆக அடையாளம் கண்டுகொள்ள, அதை cgi-bin directoryல் வைக்கவும். |
04:22 | Program fileன் பெயர், dot pl அல்லது dot cgi extentionஉடன் முடிய வேண்டும். |
04:29 | Serverல் இயக்க, fileக்கு அனுமதியை அமைக்கவும். |
04:33 | Scriptஐ run செய்யவும். |
04:35 | இந்த programக்கான URL, slideல் காட்டப்பட்டுள்ளபடி இருக்கும். |
04:40 | Terminalக்கு திரும்பவும். |
04:42 | இப்போது, cgi-bin directoryக்கு fileஐ copy செய்வோம். |
04:47 | இதற்கு, இந்த commandஐ டைப் செய்க: sudo space cp space cgiexample.pl /usr/lib/cgi-bin/. |
05:03 | தேவைப்பட்டால் passwordஐ enter செய்யவும். |
05:06 | அடுத்து, Web-server userக்கு, fileக்கான, 'read' மற்றும் 'execute' permissionஐ தர வேண்டும். |
05:13 | இதற்கு, டைப் செய்க: sudo space chmod space 755 space /usr/lib/cgi-bin/cgiexample.pl |
05:31 | இப்போது, cgi-bin directoryல் உள்ள நமது file, இயங்க தயாராக இருக்கிறது. |
05:38 | Web browserக்கு செல்லவும். |
05:41 | டைப் செய்க: localhost/cgi-bin/cgiexample.pl, பின் Enterஐ அழுத்தவும். |
05:50 | Web browserல் இயக்கப்படும் outputஐ நாம் காணலாம். |
05:55 | இப்போது, மற்றொரு programஐ காண்போம். இந்த program, ஒரு formக்கு fieldகளை சேர்த்து, கொடுக்கப்பட்ட மதிப்புகளை நம் வலைப்பக்கத்திற்கு மீட்டெடுக்கும். |
06:06 | முன்னதாக உருவாக்கப்பட்ட cgi-bin directoryல், 'form.cgi' என்ற fileஐ நான் சேமித்து வைத்துள்ளேன். இந்த fileஐ நான் geditல் திறக்கிறேன். |
06:17 | இப்போது, கீழ்கண்ட வரிகளைச் சேர்க்கவும். இந்த program, ஒரு feedback formஐ உருவாக்கும். |
06:24 | User, first name, last name, gender மற்றும் feedback விவரங்களை enter செய்ய வேண்டும். |
06:31 | ஒரு formஐ தொடங்க, start_form() methodஐ நாம் பயன்படுத்துகிறோம். |
06:36 | Form field methodகளும், standard html tag methodகளும் ஒன்றே. |
06:42 | Formல் text boxஐ உருவாக்க, பல parameterகளுடன், Textfield() method பயன்படுத்தப்படுகிறது. |
06:49 | இங்கு, fname”, “lname” என்பன, user இடமிருந்து inputஐ பெறும் text boxன் பெயர்களாகும். |
06:57 | Radio underscore group, “Male” மற்றும் “Female” என்ற இரண்டு optionகளுடன், radio buttonஐ குறிப்பிடுகிறது. |
07:05 | இது hyphen values என்ற parameterஆல் குறிக்கப்படுகிறது. |
07:09 | Hyphen default parameter, radio buttonனின் முன்னிருப்பான தேர்வை குறிக்கிறது. |
07:15 | Popup underscore menu, listbox optionஐ குறிப்பிடுகிறது. |
07:20 | Submit button, URL providerக்கு, enter செய்யப்பட்ட dataஐ submit செய்ய பயன்படுகிறது. |
07:26 | Clear button, formஐ clear செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
07:30 | Displayform function, நாம் formல் enter செய்த மதிப்புகளை மீட்டெடுக்கிறது. |
07:36 | Param() function, எந்த form fieldன் பெயர் parameterஆக pass செய்யப்பட்டதோ, அதன் மதிப்பை தருகிறது. |
07:42 | இங்கு, “fname” என்பது, “First Name” textboxக்கு கொடுக்கப்பட்ட பெயராகும். |
07:47 | மதிப்பு மீட்டெடுக்கப்பட்டு, dollar name1 என்ற variableலில் சேமிக்கப்படுகிறது. |
07:53 | இப்போது, Programஐ இயக்குவோம். |
07:56 | Web browserக்கு செல்லவும். |
07:58 | டைப் செய்க: localhost/cgi-bin/form.cgi, பின் Enterஐ அழுத்தவும். |
08:06 | Feedback form காட்டப்படுகிறது. |
08:09 | இங்கு காட்டப்பட்டுள்ளபபடி, இந்த formன் உள், dataஐ enter செய்கிறேன். |
08:15 | பிறகு formல் இருந்து மீட்டெடுக்கப்பட்ட outputஐ காண, Submit buttonஐ அழுத்தவும். |
08:21 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
08:26 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில், CGI moduleஐ பயன்படுத்தி, html pageகளை உருவாக்க கற்றோம். |
08:33 | பயிற்சியாக- Form.cgi programல், Java, C/C++ மற்றும் Perl languageகளுக்கு, checkbox optionஐ சேர்க்கவும். |
08:44 | User feedbackஐ பெற, textarea optionஐ சேர்க்கவும். |
08:48 | User enter செய்த தகவலை, வலைப்பக்கத்தில் print செய்யவும். |
08:52 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:59 | Spoken Tutorial திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:08 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:11 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |