PERL/C3/Perl-and-HTML/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Perl மற்றும் HTML குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நாம் உருவாக்க கற்கப்போவது: html pages மற்றும் CGI module.
00:14 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2, Firefox Web Browser, Apache HTTP server மற்றும் gedit' Text Editor.
00:31 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:35 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
00:47 Webல் பயன்படுத்தப்படும் Perl programகள், Perl CGI எனப்படும்.
00:52 CGI என்பது Common Gateway Interface என்பதாகும்.
00:56 அது, client-server web communication க்கான interface ஆகும்.
01:01 CGI என்பது communicationக்காக, Perl நிறுவுதலுடன் சேர்த்து நிறுவப்படும் ஒரு Perl module ஆகும்.
01:10 Developerகள், Perl CGI applicationகளை எழுதுவதற்கு உதவ, பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் functionகளை CGI.pm பெற்றிருக்கிறது.
01:19 Web browserல் இருந்து, குறிப்பிட்ட directoryன் ஒரு fileஐ கோரினால், HTTP server போல் அல்லாமல், Perl CGI scriptகள் இயக்கப்பட்டு, காட்டுவதற்கு outputஐ browserக்கு திருப்பி அனுப்புகிறது.
01:33 இந்த function, CGI எனவும், programகள் CGI scripts எனவும் அழைக்கப்படுகின்றன.
01:40 CGI programகள், Perl script, Shell Script, C அல்லது C++ programஆகவோ இருக்கலாம்.
01:47 இப்போது, ஒரு மாதிரி Perl programஐ காண்போம்.
01:50 Terminalக்கு திரும்பவும்.
01:53 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்தcgiexample.pl fileஐ, geditல் திறக்கிறேன்.
02:01 cgiexample dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
02:08 இப்போது codeஐ புரிந்து கொள்வோம்.
02:11 Use CGI statement, நமது programல், CGI.pm moduleஐ நாம் பயன்படுத்த வேண்டும் என, Perlக்கு கூறுகிறது.
02:19 அது moduleஐ load செய்து, நமது codeக்கு, CGI functionகளின் ஒரு தொகுப்பை கிடைக்கச் செய்யும்.
02:26 HTMLஐ தொடங்க, start_html() methodஐ பயன்படுத்துவோம்.
02:33 “My Home Page” என்பது, webpageக்கு உண்டான page title ஆகும்.
02:38 CGI moduleஐ பயன்படுத்தி நாம் எந்த HTML tagஐயும் print செய்யலாம்.
02:43 Heading tagகள், h1, h2 என குறியிடப்படுகின்றன.
02:49 end_html method, BODY மற்றும் HTML tagகளை return செய்கிறது.
02:55 இப்போது fileஐ சேமிக்கவும்.
02:57 Web server வழியாக scriptஐ run செய்வதற்கு முன், அதை command lineல் இருந்து run செய்ய முயற்சிப்போம்.
03:04 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl cgiexample.pl, பின் Enterஐ அழுத்தவும்.
03:12 Output, HTML போல் இருக்கும்.
03:15 அடுத்து, அதே scriptஐ web server வழியாக சோதிப்போம்.
03:20 முதலில், web server வேலை செய்கிறதா என்று சரி பார்ப்போம்.
03:25 உங்கள் web browserஐ திறந்து, கணிணியின் IP addressஐ கொடுத்து, Enterஐ அழுத்தவும்.
03:31 இல்லையெனில், "localhost" என டைப் செய்யலாம்.
03:35 எல்லாம் நன்றாக வேலை செய்தால், browserல் இதைப் போல் ஏதோ ஒன்றை காண்பீர்கள்.
03:40 ஏதேனும் error கிடைத்தால், web service நிறுவப்படவில்லை அல்லது அது ON statusல் இல்லை.
03:48 என் கணிணியில், Apache HTTP server நிறுவப்பட்டுள்ளது.
03:52 அது நிறுவப்படவில்லை எனில், terminalலில் கீழ்கண்ட commandஐ இயக்கவும்.
03:58 இல்லையெனில், server configurationக்கு உங்கள் system administratorஐ அனுகவும்.
04:04 இப்போது, அதே scriptஐ web server வழியாக சோதிப்போம்.
04:09 இதற்கு, சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
04:13 முதலில், web server, நமது programஐ ஒரு CGI scriptஆக அடையாளம் கண்டுகொள்ள, அதை cgi-bin directoryல் வைக்கவும்.
04:22 Program fileன் பெயர், dot pl அல்லது dot cgi extentionஉடன் முடிய வேண்டும்.
04:29 Serverல் இயக்க, fileக்கு அனுமதியை அமைக்கவும்.
04:33 Scriptஐ run செய்யவும்.
04:35 இந்த programக்கான URL, slideல் காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
04:40 Terminalக்கு திரும்பவும்.
04:42 இப்போது, cgi-bin directoryக்கு fileஐ copy செய்வோம்.
04:47 இதற்கு, இந்த commandஐ டைப் செய்க: sudo space cp space cgiexample.pl /usr/lib/cgi-bin/.
05:03 தேவைப்பட்டால் passwordஐ enter செய்யவும்.
05:06 அடுத்து, Web-server userக்கு, fileக்கான, 'read' மற்றும் 'execute' permissionஐ தர வேண்டும்.
05:13 இதற்கு, டைப் செய்க: sudo space chmod space 755 space /usr/lib/cgi-bin/cgiexample.pl
05:31 இப்போது, cgi-bin directoryல் உள்ள நமது file, இயங்க தயாராக இருக்கிறது.
05:38 Web browserக்கு செல்லவும்.
05:41 டைப் செய்க: localhost/cgi-bin/cgiexample.pl, பின் Enterஐ அழுத்தவும்.
05:50 Web browserல் இயக்கப்படும் outputஐ நாம் காணலாம்.
05:55 இப்போது, மற்றொரு programஐ காண்போம். இந்த program, ஒரு formக்கு fieldகளை சேர்த்து, கொடுக்கப்பட்ட மதிப்புகளை நம் வலைப்பக்கத்திற்கு மீட்டெடுக்கும்.
06:06 முன்னதாக உருவாக்கப்பட்ட cgi-bin directoryல், 'form.cgi' என்ற fileஐ நான் சேமித்து வைத்துள்ளேன். இந்த fileஐ நான் geditல் திறக்கிறேன்.
06:17 இப்போது, கீழ்கண்ட வரிகளைச் சேர்க்கவும். இந்த program, ஒரு feedback formஐ உருவாக்கும்.
06:24 User, first name, last name, gender மற்றும் feedback விவரங்களை enter செய்ய வேண்டும்.
06:31 ஒரு formஐ தொடங்க, start_form() methodஐ நாம் பயன்படுத்துகிறோம்.
06:36 Form field methodகளும், standard html tag methodகளும் ஒன்றே.
06:42 Formல் text boxஐ உருவாக்க, பல parameterகளுடன், Textfield() method பயன்படுத்தப்படுகிறது.
06:49 இங்கு, fname”, “lname” என்பன, user இடமிருந்து inputஐ பெறும் text boxன் பெயர்களாகும்.
06:57 Radio underscore group, “Male” மற்றும் “Female” என்ற இரண்டு optionகளுடன், radio buttonஐ குறிப்பிடுகிறது.
07:05 இது hyphen values என்ற parameterஆல் குறிக்கப்படுகிறது.
07:09 Hyphen default parameter, radio buttonனின் முன்னிருப்பான தேர்வை குறிக்கிறது.
07:15 Popup underscore menu, listbox optionஐ குறிப்பிடுகிறது.
07:20 Submit button, URL providerக்கு, enter செய்யப்பட்ட dataஐ submit செய்ய பயன்படுகிறது.
07:26 Clear button, formஐ clear செய்ய பயன்படுத்தப்படுகிறது.
07:30 Displayform function, நாம் formல் enter செய்த மதிப்புகளை மீட்டெடுக்கிறது.
07:36 Param() function, எந்த form fieldன் பெயர் parameterஆக pass செய்யப்பட்டதோ, அதன் மதிப்பை தருகிறது.
07:42 இங்கு, “fname” என்பது, “First Name” textboxக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.
07:47 மதிப்பு மீட்டெடுக்கப்பட்டு, dollar name1 என்ற variableலில் சேமிக்கப்படுகிறது.
07:53 இப்போது, Programஐ இயக்குவோம்.
07:56 Web browserக்கு செல்லவும்.
07:58 டைப் செய்க: localhost/cgi-bin/form.cgi, பின் Enterஐ அழுத்தவும்.
08:06 Feedback form காட்டப்படுகிறது.
08:09 இங்கு காட்டப்பட்டுள்ளபபடி, இந்த formன் உள், dataஐ enter செய்கிறேன்.
08:15 பிறகு formல் இருந்து மீட்டெடுக்கப்பட்ட outputஐ காண, Submit buttonஐ அழுத்தவும்.
08:21 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
08:26 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில், CGI moduleஐ பயன்படுத்தி, html pageகளை உருவாக்க கற்றோம்.
08:33 பயிற்சியாக- Form.cgi programல், Java, C/C++ மற்றும் Perl languageகளுக்கு, checkbox optionஐ சேர்க்கவும்.
08:44 User feedbackஐ பெற, textarea optionஐ சேர்க்கவும்.
08:48 User enter செய்த தகவலை, வலைப்பக்கத்தில் print செய்யவும்.
08:52 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:59 Spoken Tutorial திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:08 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:11 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst