OpenFOAM/C3/Installing-and-running-Gmsh/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Gmshஐ நிறுவிrun செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: Gmshஐ நிறுவிrun செய்வது, Gmshல் ஒரு basic geometryஐ உருவாக்குவது.
00:18 முன்நிபந்தனையாக, userக்கு, mesh பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
00:24 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, மற்றும், Gmsh பதிப்பு2.8.5ஐ பயன்படுத்துகிறேன்.
00:34 Gmshஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். Gmsh, pre மற்றும் post processing வசதிகளை தன்னுள் கொண்ட ஒரு தானியங்கி, 3-D finite element mesh generator ஆகும். அது ஒரு open-source software ஆகும்.
00:51 OpenFOAMல் இருக்கும் blockmesh utilityகளான blades, aerofoil. போன்றவைகளை விட, gmshல் சிக்கலான geometryகளை உருவாக்குவது இலாபகரமானது. Gmsh. போன்ற மூன்றாம் தரப்பு meshing softwareல் இருந்து, meshஐ import செய்வதற்கு, OpenFOAM ஆதரவு அளிக்கிறது.
01:08 Gmshஐ எப்படி நிறுவுவது என்று காட்டுகிறேன். Synaptic Package Managerஐ பயன்படுத்தி, Gmshஐ நிறுவலாம்.
01:15 உங்களுக்கு, Synaptic Package Managerஐ நான் திறக்கிறேன். அது உங்கள் passwordஐ கேட்கும். உங்கள் passwordஐ டைப் செய்யவும்.
01:25 Search boxல் டைப் செய்க: "gmsh", பின், gmshக்கு முன்னாள் இருக்கும் checkbox ஐ க்ளிக் செய்யவும். பின், Mark for installationஐ க்ளிக் செய்யவும். Applyஐ க்ளிக் செய்யவும்.
01:40 மீண்டும், Applyஐ க்ளிக் செய்யவும். இது, சிறிது நேரம் எடுக்கலாம். உங்கள் , Gmsh நிறுவப்பட்டுவிட்டது.
01:50 மாறாக, Gmsh வலைதளத்தில் இருந்தும், Gmsh ஐ , நீங்கள் தரவிறக்கலாம். உங்களுக்கு, browserஐ நான் திறக்கிறேன்.
01:59 Address barல் டைப் செய்க: http://geuz.org/gmsh/, பின், Enterஐ அழுத்தவும்.
02:09 Downloadக்கு scroll down செய்து, உங்கள் operating systemக்கு ஏற்றவாறு current stable releaseஐ தேர்ந்தெடுக்கவும். நான் Linux 64-bitஐ தேர்ந்தெடுக்கிறேன். Save fileஐ க்ளிக் செய்து, OKஐ அழுத்தவும்.
02:26 உங்கள் downloadஐ முடித்த பிறகு, Downloads folderக்கு செல்லவும்.
02:31 இங்கு tar fileஐ நீங்கள் காணலாம். இந்த fileஐ Extract செய்யவும். ஒரு புது folder உருவாக்கப்படும்.
02:41 அந்த folderஐ திறக்கவும். Binக்கு சென்று, gmsh iconஐ க்ளிக் செய்யவும்.
02:49 நீங்கள் Gmsh ன் start திரையை காணலாம். இப்போது, Gmsh ஐ பயன்படுத்தி ஒரு cubeஐ உருவாக்குவோம்.
02:57 பக்கங்களின் அளவை ஒரு unitக்கு சமமாக கொண்ட cubeஐ இங்கு நீங்கள் காணலாம்.
03:03 Gmsh க்கு திரும்புகிறேன். இடது பக்கத்தில், Geometry, Mesh மற்றும் Solverஐ கொண்ட module treeஐ நீங்கள் காணலாம்.
03:14 Geometry >> Elementary entitiesக்கு செல்லவும். Addஐ க்ளிக் செய்யவும். Point. ஐ க்ளிக் செய்யவும். ஒரு புது window திறக்கும்.
03:25 (0 0 0)உடன் தொடங்கும்X,Y மற்றும் Z coordinateகளை enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
03:34 இரண்டாவது coordinateஐ (1 0 0) என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும். மூன்றாவதுcoordinateஐ (1 1 0) என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும். நான்காவதுcoordinateஐ (0 1 0) என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
03:53 இவ்வாறே, positive z-திசைக்கு, point (0 0 1)உடன் தொடங்கும் coordinateகளை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். மீதமுள்ள மூன்று coordinateகளை enter செய்து, wndowஐ மூடவும்.
04:10 நான் எல்லா எட்டு coordinateகளையும் enter செய்துவிட்டேன். Pointஐ நகர்த்த, இடது mouse க்ளிக்கை பயன்படுத்தவும்.
04:18 எல்லா 8 coordinateகளையும் pointகளாக நீங்கள் பார்க்கலாம்.
04:23 இப்போது, Straight lineஐ க்ளிக் செய்யவும். அது ஒரு start pointஐ கேட்கும். முதல் pointஐ தேர்ந்தெடுக்கவும்.
04:31 அது ஒரு end pointஐ கேட்கும். End pointஐ தேர்ந்தெடுக்கவும்.
04:37 இந்த இரண்டு pointகளுக்கு இடையே ஒரு வரி வரையப்படும். இவ்வாறே எல்லா pointகளையும் சேர்க்கவும்.
04:45 Abort செய்ய, 'q'ஐ அழுத்தவும்.
04:49 இப்போது, cubeன் faceகளை வரையறுப்போம். Plane surfaceஐ க்ளிக் செய்யவும். அது surface boundaryஐ கேட்கும்.
04:59 அடிப்புற faceன் edgeகளை முதலில் தேர்ந்தெடுக்கவும். நாம் தேர்ந்தெடுக்கின்ற edgeகள், சிவப்பு நிறமாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
05:08 Hole boundaryக்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை அது கேட்கும். நமது boundaryல், எந்த holeஉம் இல்லாததால், தேர்ந்தெடுப்பை முடிக்க, 'e'ஐ அழுத்தவும்.
05:19 Dashகளுடன் கூடிய center வரிகளுடன் face தெரிவதை நீங்கள் கவனிப்பீர்கள். இப்போது, top faceஐ வரையறுக்கவும்.
05:29 இவ்வாறே, மீதமுள்ள faceகளை வரையறுக்கவும். நான் எல்லா faceகளையும் வரையறுத்துவிட்டேன். Abort செய்ய, 'q'ஐ அழுத்தவும்.
05:39 இப்போது, cubeன் volumeஐ நாம் வரையறுப்போம். அது volume boundaryஐ கேட்கும்.
05:47 ஏதேனும் ஒரு surface boundaryஐ தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுப்பை முடிக்க, 'e'ஐ அழுத்தவும்.
05:55 Cubeன் மத்தியில், ஒரு மஞ்சள் நிற புள்ளி தோன்றுகிறது. அது volumeஐ குறிக்கிறது. Abort செய்ய, 'q'ஐ அழுத்தவும்.
06:04 OpenFOAM.க்கு geometryஐ export செய்ய பயன்படுத்தப்படும், physical groupகளை இப்போது வரையறுப்போம்.
06:13 Physical Groups >> Addக்கு சென்று, surfaceஐ க்ளிக் செய்யவும்.
06:19 முன்பக்க surface ஐ முதலில் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும். பின்பக்க surface ஐ தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும்.
06:31 இவ்வாறே, மீதமுள்ள surfaceகளை தேர்ந்தெடுக்கவும். நான் எல்லா surfaceகளையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். Abort செய்ய, 'q'ஐ அழுத்தவும்.
06:41 இப்போது, physical volume.ஐ நாம் வரையறுப்போம். volume.ஐ க்ளிக் செய்யவும். அது volumeஐ கேட்கும். Cubeன் மத்தியில் இருக்கும், மஞ்சள் நிற புள்ளியை க்ளிக் செய்யவும்.
06:53 மஞ்சள் நிற புள்ளி, சிவப்பு நிறமாக மாறும். தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும். Abort செய்ய, qஐ அழுத்தவும்.
07:02 நமது cube, நிறைவுபெற்றுவிட்டது. நமது வேலையை சேமிப்போம்.
07:07 File >> Save as.க்கு செல்லவும். நமது fileக்கு, cube.geo என பெயரிடுவோம்.
07:15 இங்கு, geo என்பது geometryஐ குறிப்பதை கவனிக்கவும். Okஐ க்ளிக் செய்யவும். மீண்டும், Okஐ க்ளிக் செய்யவும்.
07:23 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். பயிற்சியாக, Gmshல், cylinder, sphere போன்ற, வேறு எளிய geometryஐ உருவாக்கவும்.
07:35 இந்த டுடோரியலில், Synaptic Package Manager மற்றும் வலைத்தளத்தை பயன்படுத்தி, Gmshஐ நிறுவி, run செய்யக் கற்றோம். மேலும், Gmshஐ பயன்படுத்தி ஒரு cubeஐ உருவாக்கினோம்.
07:48 இந்த வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:56 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:11 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya