Koha-Library-Management-System/C2/Create-MARC-framework/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | ஒரு MARC Frameworkஐ எவ்வாறு உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம், Koha.வில், ஒரு MARC Framework ஐ உருவாக்கக்கற்போம். |
00:14 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:27 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:33 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:44 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:50 | தொடங்குவதற்கு முன், பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்- Frameworkகளை, edit அல்லது delete செய்யலாம். |
00:57 | Libraryகளின் தேவைக்கேற்றவாறு, Superlibrarian, தனது சொந்த frameworkகளை உருவாக்கிக்கொள்ளலாம். |
01:05 | இப்போது தொடங்கலாம். நான் Koha interface க்கு மாறுகிறேன். |
01:11 | Superlibrarian username Bella மற்றும் அவளது passwordஐ வைத்து login செய்யவும். |
01:17 | இப்போது, நாம் Koha interfaceவினுள், Superlibrarian Bellaவாக இருக்கின்றோம். |
01:25 | Koha administration.க்கு செல்லவும். |
01:29 | Catalog, பிரிவின் கீழ், MARC bibliographic framework. ஐ க்ளிக் செய்யவும். |
01:36 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:40 | plus New framework. ஐ க்ளிக் செய்யவும். |
01:44 | விவரங்களை பூர்த்தி செய்யத்தூண்டும், மற்றொரு பக்கம் திறக்கிறது- Framework code: மற்றும் Description: |
01:54 | Framework code, fieldல், BK. என நான் டைப் செய்கிறேன். |
02:01 | Description:, ல், BOOKS. என நான் டைப் செய்கிறேன். |
02:06 | அடுத்து, கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
02:11 | திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், Code BK , அதாவது BOOKS.க்கு செல்லவும். |
02:18 | Actions, tabலிருந்து, MARC structure. ஐ க்ளிக் செய்யவும். |
02:25 | MARC Framework for BOOKS (BK) என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. இந்த தலைப்பின் கீழ், இங்குள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். |
02:35 | அதே தலைப்பை கொண்ட, MARC Framework for BOOKS (BK) என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது. |
02:40 | இது, 1 to 20 of 342 tagகளிலிருந்து, tagகளை காட்டுகிறது. |
02:48 | எனினும், tagகளை அதிக எண்ணிக்கையில், நீங்கள் உங்கள் திரையில் காணலாம். |
02:53 | மொத்தமாக, 342 முன்னிருப்பு tagகள் இருப்பதை நினைவில் கொள்ளவும். Books. க்கு, சில tagகளை மட்டுமே நான் தேர்ந்தெடுக்கப்போகிறேன். உங்கள் தேவைக்கேற்றவாறு tagகளை, நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். |
03:08 | ஒரு tag.ஐ, Edit அல்லது Delete செய்வதற்கு தேர்வுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். |
03:14 | நான் எப்படி Delete செய்வதென செயல்விளக்குகிறேன். |
03:17 | நான் tag எண் 010- Library of Congress Control Number.ஐ தேர்வு செய்கிறேன். |
03:25 | முனைக்கோடி வலது பக்கத்தில் உள்ள Delete tabஐ க்ளிக் செய்தால், “Confirm deletion of tag '010'?” எனக் கேட்கின்ற ஒரு pop-up window தோன்றுகிறது. |
03:40 | Yes, delete this tag. ஐ க்ளிக் செய்யவும். |
03:44 | ‘Tag deleted’. என்ற செய்தியை கொண்ட மற்றொரு window தோன்றுகிறது. Ok. ஐ க்ளிக் செய்யவும். |
03:51 | அதே பக்கம், MARC Framework for Books (BK) மீண்டும் தோன்றுகிறது. |
03:56 | இந்தப்பக்கத்தில், ‘Tag’ number 010 இனி காட்டப்படமாட்டாது. |
04:03 | இவ்வாறே, ஒரு குறிப்பிட்ட item typeக்கு தொடர்புடையதாக இல்லாத வேறு tagகளையும் delete செய்யவும். |
04:11 | tagகளை edit செய்ய, Actions சென்று, Edit தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
04:17 | நான் tag number 000, Leader.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:24 | பின், Edit.ஐ க்ளிக் செய்யவும். |
04:27 | பின்வரும் fieldகள், Koha வினாலேயே, defaultஆக பூர்த்தி செய்யப்படுகின்றன- Label for lib: , Label for opac:. |
04:38 | 'Label for lib', staff client.ல் தெரியும். 'Label for OPAC', OPAC.ல் உள்ள காட்சியில் தோன்றும் என்பதை நினைவில் கொள்ளவும். |
04:50 | உங்கள் தேவைக்கேற்றவாறு, Repeatable: க்கான check-boxஐ check செய்யவும். |
04:56 | முன்னிருப்பாக, Koha, Mandatoryக்கான check-boxஐ check செய்யும். |
05:02 | நான் Repeatable:க்கான check-boxஐ check செய்கிறேன். |
05:06 | நீங்கள் Repeatable'ஐ க்ளிக் செய்தால், பின், Catalogingல் அந்த field, தனக்கு பக்கத்தில் ஒரு plus குறியை கொண்டிருக்கும். |
05:16 | அதே tagன் மேலும் பல விவரங்களை சேர்ப்பதற்கு அனுமதிக்க, 3 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அல்லது பதிப்பாசிரியர்களுக்கு அடிப்படையாக இது தேவைப்படுகிறது. |
05:27 | Kohaவினால், 'Mandatory' க்ளிக் செய்யப்பட்டால் அல்லது தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த குறிப்பிட்ட tag.க்கு நீங்கள் ஒரு மதிப்பை ஒதுக்கும் வரையில், record சேமிக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. |
05:43 | Koha interface.க்கு திரும்பச் செல்வோம். |
05:46 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, Save changes.ஐ க்ளிக் செய்யவும். |
05:52 | திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், tag number 000, Leader:க்கு, Repeatable மற்றும் Mandatory, Yes.ஆக காட்டப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். |
06:05 | அடுத்து, Authority fileஐ எப்படி enable செய்வதென கற்போம். |
06:10 | Koha Administration.க்கு செல்லவும். |
06:13 | பின், Global system preferences. ஐ க்ளிக் செய்யவும். |
06:18 | Acquisitions preferences பக்கம் திறக்கிறது. |
06:23 | இடது பக்கத்தில் உள்ள tabகளின் பட்டியலிலிருந்து, Authorities. ஐ க்ளிக் செய்யவும். |
06:30 | General பிரிவின் கீழ், Value of Preferenceஐ பின்வருமாறு மாற்றத்தொடங்கவும்: |
06:37 | AuthDisplayHierarchy, க்கு, drop-donwனிலிருந்து Display ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:44 | AutoCreateAuthorities, க்கு, generate.ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:50 | BiblioAddsAuthorities, க்கு, allowஐ தேர்ந்தெடுக்கவும். dontmerge, க்கு, Doஐ தேர்ந்தெடுக்கவும். |
07:01 | MARCAuthorityControlField008 மற்றும் UNIMARCAuthorityField100ஐ அப்படியே விடவும். |
07:11 | UseAuthoritiesForTracings க்கு, Koha முன்னிருப்பாக Use.ஐ தேர்ந்தெடுக்கிறது. |
07:19 | Linker, பிரிவின் கீழ், பின்வருவனவற்றிற்கு முன்னிருப்பு மதிப்புகள் தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும்- CatalogModuleRelink, |
07:28 | LinkerKeepStale, LinkerModule, |
07:33 | LinkerOptions மற்றும் LinkerRelink. |
07:38 | இப்போது, Save all Authorities preferences.ஐ க்ளிக் செய்யவும். |
07:43 | இப்போது, Kohaவின் Superlibrarian account லிருந்து நீங்கள் log out செய்யலாம். |
07:48 | அதைச்செய்ய, மேல் வலது மூலைக்கு செல்லவும். |
07:52 | Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Log outஐ தேர்ந்தெடுக்கவும். |
07:59 | இது MARC Framework. க்கு தேவையான அமைப்புகளை நிறைவு செய்கிறது. |
08:04 | சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம், Koha.வில், ஒரு MARC Framework ஐ உருவாக்கக்கற்றோம். |
08:13 | பயிற்சியாக- Serialsக்கு, ஒரு புது MARC Framework ஐ உருவாக்கவும். |
08:20 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
08:38 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
08:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
08:54 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |