Koha-Library-Management-System/C2/Add-Budget-and-Allocate-Funds/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Add a Budget and allocate Funds. குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Budgetஐ சேர்ப்பது, ஒரு duplicate Budgetஐ செய்வது மற்றும் Fundகளை ஒதுக்குவது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:33 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:39 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:45 | மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:49 | மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:56 | மேலும் தொடர்ந்து, ஒரு Budget. ஐ சேர்க்கக்கற்போம். |
01:01 | தொடங்குவதற்கு முன், Budgetகளை புரிந்துகொள்வோம். Acquisitionகளுக்கு தொடர்புடைய கணக்கு மதிப்புகளை கண்காணிப்பதற்காக Budgetகள் பயன்படுத்தப்படுகின்றன. |
01:13 | ஒரு fund உருவாக்கப்படுவதற்கு முன்பு, ஒரு Budget வரையறுக்கப்பட வேண்டும். |
01:18 | உதாரணத்திற்கு- தற்போதய year 2017க்கு ஒரு Budget ஐ உருவாக்கவும். |
01:25 | வெவ்வேறு பகுதிகளுக்கு, அவைகளை Fundsகளாக பிரிக்கவும். அதாவது, Books, Journals மற்றும்/அல்லது Databases. |
01:38 | Budget களை முதலிலிருந்தோ அல்லது முந்தைய ஆண்டுகளின் Budget களில் ஒன்றின் நகலை எடுத்தோ, |
01:50 | அல்லது, உடனடியான முந்தைய ஆண்டின் Budgetன் நகலை எடுத்தோ, அல்லது உடனடியான முந்தைய ஆண்டின் Budgetஐ மூடுதலின் மூலமாகவோ உருவாக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். |
02:00 | முந்தைய டுடோரியல்களில் கூறியது போல், Superlibrarian username Bella மற்றும் அவளது passwordஐ வைத்து login செய்யவும். |
02:10 | 'Koha' Home page ல், Acquisitions.ஐ க்ளிக் செய்யவும். |
02:16 | இடது பக்கத்திலிருக்கின்ற தேர்வுகளிலிருந்து, Budgets. ஐ க்ளிக் செய்யவும். |
02:21 | இப்போது, New budget. tab ஐ க்ளிக் செய்யவும். |
02:26 | முதலில், இந்த Budget.ற்கான நேரத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். |
02:31 | Budgetஐ, ஒரு Academic year, Fiscal year அல்லது ஒரு Quarter yearக்கு நாம் உருவாக்கலாம். |
02:39 | நான் Budgetஐ, ஒரு Fiscal year.க்கு உருவாக்குகிறேன். |
02:43 | பின், Start மற்றும் End dateகளை தேர்வு செய்யவும். |
02:48 | நான், Start date: ஐ, 04/01/2016 (MM/DD/YYYY) எனவும், End date: ஐ, 03/31/2017 (MM/DD/YYYY) எனவும் தேர்ந்தெடுக்கிறேன். |
03:07 | அடுத்து, நமது Budgetக்கு நாம் ஒரு descriptionஐ கொடுக்க வேண்டும். |
03:11 | இது order செய்யும் போது, அதை அடையாளம் காண நமக்கு உதவி புரியும். |
03:17 | இங்கு நான், Spoken Tutorial Library 2016-2017 Phase I என டைப் செய்கிறேன். |
03:26 | Amount box ல், இந்த குறிப்பிட்ட Budget.ற்கான தொகையை நாம் enter செய்ய வேண்டும். |
03:32 | இதுவே, நாம் Spoken Tutorial Library.க்கு, குறிப்பிட்ட காலத்தில் செலவழிக்கத் திட்டமிடுகின்ற மொத்த தொகையாகும். |
03:41 | இந்த field, numeralகள் மற்றும் decimalகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளவும். |
03:47 | Special characterகள் மற்றும் symbolகள் அனுமதிக்கப்படமாட்டாது. |
03:51 | நாம் enter செய்கின்ற Amount, அந்த libraryக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்ட Budgetன் படி இருக்க வேண்டும். |
03:57 | இங்கு, நான் Amount.ஆக, Rs. 5,00,000/-ஐ சேர்க்கிறேன். |
04:03 | அடுத்து, Make a budget activeஐ க்ளிக் செய்யவும். |
04:08 | அவ்வாறு செய்கையில், Acquisitions module லில், orderகளை வைக்கும் போது, budget பயனுள்ளதாகின்றது. |
04:17 | மேலும், Budget End date. முடிந்த பிறகு order வைக்கப்பட்டாலும், இது இவ்வாறே இருக்கிறது. |
04:24 | இது, முந்தைய ஆண்டின் Budget.ல் நாம் வைத்த recordகளை பதிவு செய்யவும் அனுமதிக்கும். |
04:31 | அடுத்து, Lock budgetக்கான check-box ஆகும். |
04:35 | இதன் பொருள், Fundகளை library staff.ஆல் பின்னர் மாற்ற இயலாது. |
04:41 | நான் இந்த check-box ஐ காலியாக விடுகிறேன். |
04:45 | எல்லா entryகளும் முடிந்தவுடன், பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
04:52 | Budgets administration என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
04:57 | இங்கு, +New Budget பக்கத்தில் நாம் முன்பு சேர்த்த விவரங்களை காணலாம். |
05:04 | இந்தப்பக்கத்தில் தெரிகின்ற விவரங்கள்- |
05:08 | Budget name tabன் கீழ் உள்ள விவரிப்பு, Start date:, End date:, Total amount:, Actions:. |
05:19 | தேவைக்கேற்றவாறு ஒரு குறிப்பிட்ட Budgetஐ, edit, delete அல்லது நகல் எடுத்துக்கொள்ளலாம். |
05:25 | அதைச்செய்ய, அந்த Budget name.ன் முனைக்கோடி வலது பக்கத்தில் உள்ள, Actions tab க்ளிக் செய்யவும். |
05:33 | Drop-downனிலிருந்து, ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்: Edit, Delete, Duplicate, Close அல்லது Add fund. |
05:44 | ஒரு Fiscal year.க்கு fundகளை ஒதுக்கக்கற்போம். |
05:49 | அதே tableலில், fund ஒதுக்கப்படவேண்டிய குறிப்பிட்ட Budget Nameஐ க்ளிக் செய்யவும். |
05:56 | நான் Spoken Tutorial Library 2016-2017 Phase 1.ஐ க்ளிக் செய்கிறேன். |
06:05 | Funds for 'Spoken Tutorial Library 2016-2017 Phase 1' என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
06:14 | Funds for 'Spoken Tutorial Library 2016-2017 Phase 1' க்கு சிறிது மேலே, New. tabஐ கண்டறிந்து க்ளிக் செய்யவும். |
06:26 | Drop-downனிலிருந்து, New fund for Spoken Tutorial Library 2016-2017 Phase 1.ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:36 | திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்யவும்: Fund code: Books, Fund name: Books fund போன்றவை. |
06:47 | Amountஐ, : 25000 என enter செய்யவும். Warning at (%): 10 |
06:55 | நான் Warning at (%)ஐ ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டபடியால், Warning at (amount): fieldஐ அப்படியே விட்டுவிடுகிறேன். |
07:02 | நான், Owner: மற்றும் Users fieldகளையும் தவிர்க்கிறேன். |
07:08 | Library:, க்கு, drop-downனிலிருந்து, Spoken Tutorial Libraryஐ தேர்ந்தெடுக்கவும். |
07:14 | நான் Restrict access to: ஐ அப்படியே விட்டுவிடுகிறேன். |
07:19 | நான், Statistic 1 done on மற்றும் Statistic 2 done on:ஐ காலியாக விடுகிறேன். |
07:27 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
07:34 | அந்த குறிப்பிட்ட libraryக்கு தொடர்பான எல்லா Fund ஒதுக்கீடு விவரங்களும் இப்போது ஒரு பட்டியல் வடிவில் தோன்றுகின்றன. |
07:42 | இடது பக்கத்தில் இருக்கும் தேர்வுகளிலிருந்து, Budgets. ஐ க்ளிக் செய்யவும். |
07:47 | ஒரு budgetன் நகலை எப்படி எடுப்பது என நான் இப்போது காட்டுகிறேன். |
07:51 | ஆனால், அதற்கு முன், ஒரு budgetன் நகலை ஏன் எடுக்க வேண்டும் என நாம் கற்கவேண்டும். |
07:57 | ஒரு வேளை, அடுத்த financial year-க்கு budget தொகை மற்றும் Fundsகளின் தொகையும் ஒத்ததாக இருந்தால், நாம் எளிதாக Fundsன் நகலை எடுத்துக்கொள்ளலாம். |
08:08 | இது Library staff ன் நேரம் மற்றும் உழைப்பை வெகுவாக சேமிக்கும். |
08:14 | அதைச்செய்ய, அந்த Budget name.ன் முனைக்கோடி வலது பக்கத்தில் உள்ள, Actions tab க்ளிக் செய்யவும். |
08:22 | Drop-downனிலிருந்து, Duplicateஐ தேர்ந்தெடுக்கவும். |
08:26 | Duplicate Budget என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:30 | புதிய Start dateமற்றும் End dateஐ enter செய்யவும். நான், அடுத்த வருடத்திற்கான Budgetன் தேதிகளை enter செய்கிறேன். |
08:39 | Start date: க்கு, 04/01/2017 (MM/DD/YYYY), End date: க்கு, 03/31/2018 (MM/DD/YYYY) |
08:53 | அடுத்தது, Description. |
08:56 | ஒரு குறிப்பிட்ட Budget உடன் பின்னர், எளிதாக அடையாளம் காணும் அளவிற்கு Description விவரங்கள் ஏற்றவாறு இருக்கவேண்டும். முன்னிருப்பாக, Koha, முன்பு enter செய்யப்பட்ட descriptionஐயே காட்டும். |
09:10 | ஆனால், நான் அதற்கு, Spoken Tutorial Library 2017-2018, Phase II. என மறுபெயரிடுகிறேன். உங்கள் libraryக்கு நீங்கள் ஏதேனும் பொருந்தத்தக்க ஒன்றை enter செய்யலாம். |
09:24 | Change amounts by: fieldக்கு, முந்தைய வருடங்களின் Budget லிருந்து வெளியே எடுக்கப்பட வேண்டிய சதவிகிதத்தை enter செய்யவும், அல்லது அதே தொகையை சேர்க்கவும். |
09:38 | Spoken Tutorial Library.க்கு, Rs 5,00,000/- பணத்தொகைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதை நினைவுகூறவும். |
09:45 | அதனால், Rs 1,00,000/- தொகையை வெளியே எடுக்க, நான் -20% (minus 20 percent) என enter செய்கிறேன். |
09:54 | அடுத்த field, If amounts changed, round to a multiple of:. அந்த fieldஐ நான் காலியாக விடுகிறேன். |
10:03 | மேலும் செல்ல, Mark the original Budget as inactive.க்கான check-boxஐ நாம் கொண்டுள்ளோம். |
10:10 | அவ்வாறு செய்கையில், அசல் budgetஐ இனி பயன்படுத்தமுடியாது. மீண்டும், இந்த boxஐ காலியாக விடுகிறேன். |
10:19 | இறுதியாக, Set all funds to zero.க்கான check-box உள்ளது. |
10:25 | முந்தைய Budget.ல் இருப்பது போல, புது Budget.க்கும் அதே Fund கட்டமைப்புகள் வேண்டுமெனில், இந்த boxஐ check செய்யவும். |
10:32 | ஆனால், Fund.ல் கைமுறையாக நீங்கள் ஒரு தொகையை enter செய்யும் வரையில், எந்த ஒதுக்கீடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும். இப்போதைக்கு, இதையும் நான் காலியாக விடுகிறேன். |
10:44 | எல்லா விவரங்களையும் செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save changesஐ க்ளிக் செய்யவும். |
10:52 | Spoken Tutorial Library 2017-2018 Phase II நகல் budgetக்காக enter செய்யப்பட்ட விவரங்கள், Budgets administration பக்கத்தில் தோன்றுகின்றன. |
11:04 | இப்போது, நீங்கள் Koha Superlibrarian Accountலிருந்து log out செய்யலாம். |
11:09 | அதைச்செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு சென்று, Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும். பின், drop-downனிலிருந்து, Log outஐ தேர்ந்தெடுக்கவும். |
11:21 | சுருங்கச்சொல்ல- இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு Budgetஐ சேர்ப்பது, ஒரு duplicate Budgetஐ செய்வது மற்றும் Fundகளை ஒதுக்குவது. |
11:34 | Budgetக்கான பயிற்சி: Financial yearக்கு, ரூபாய் 50 லட்சம் Budget ஒதுக்கீடுடன் கூடிய, ஒரு புதிய Budget ஐ சேர்க்கவும். |
11:44 | Fundகளின் ஒதுக்கீட்டுக்கான பயிற்சி: Non-print materialக்கு, ரூபாய். 20 லட்சம் fundகளை ஒதுக்கீடு செய்யவும். |
11:53 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
12:09 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
12:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:25 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |