Inkscape/C4/Warli-art-for-Textle-design/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Textile designக்கான Warli art குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:07 இந்த tutorialல் நாம் கற்கப்போவது: Borderகளுக்கு ஆன Warli pattern ஐ வடிவமைப்பது. Cloning ஐ பயன்படுத்தி patternகளை மீண்டும் செய்வது .
00:17 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 OS, Inkscape பதிப்பு 0.91
00:27 Inkscape ஐ திறக்கவும். முதலில் warli patternஐ வடிவமைப்போம்.
00:32 Fileற்கு செல்லவும், Document Properties மீது க்ளிக் செய்யவும். Orientation Landscape க்கு மாற்றவும். '”Dialog box'" ஐ மூடவும்
00:42 Rectangle toolஐ தேர்வு செய்யவும்.canvasமுழுவதிலும் செவ்வகம் வரைந்து அதனை நீல நிறமாக மாற்றவும்.
00:53 Ellipse tool மீது க்ளிக் செய்யவும், canvas வெளியே ஒரு வட்டம் வரையவும், பின், Selector toolஐ க்ளிக் செய்யவும்
01:02 Tool controls bar ல் width மற்றும் height ஐ 15 ஆக மாற்றவும்.
01:08 அதன் நிறத்தை ஆரஞ்சாக மாற்றவும். காட்டியவாறு அதை canvas ல் கீழே நகர்த்தவும்.
01:15 வட்டத்தை நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும்.
01:19 Tool controls bar ல் width மற்றும் height ஐ 7 ஆக மாற்றவும்.
01:25 நகல் வட்டத்தை அசல் வட்டத்தின் கீழே இடது பக்கமாக நகர்த்தவும்.
01:31 இதுவே warli figureன் தலை ஆகும்.
01:34 அடுத்து, Object menuற்கு செல்லவும், Symbols option மீது க்ளிக் செய்யவும், Symbol set drop-down menu மீது க்ளிக் செய்யவும், Flow Chart Shapes தேர்வு செய்யவும்
01:46 வடிவியல் பட்டியல் தோன்றும். முக்கோண வடிவத்தின் மீது கிளிக் செய்து, அதை canvasற்கு இழுக்கவும். ஆரஞ்சு நிறமாக மாற்றவும், பின்பு Strokeஐ நீக்கவும்
02:00 Tool controls bar ல் width மற்றும் height ஐ 20ஆக மாற்றவும்.
02:07 முக்கோணத்தை நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும். அதை flip செய்ய V ஐ அழுத்தவும்
02:14 முக்கோணங்களை தலையின் கீழ் வைக்கவும்.
02:21 அதுவே warli figure ன் உடல் ஆகும்
02:24 Rectangle tool ஐ தேர்வு செய்யவும். தலைக்கும் உடலுக்கும் இடையே ஒரு கோடு வரையவும்.
02:30 இப்போது கழுத்து வரையப்பட்டது.
02:33 அடுத்து கை மற்றும் கால்களை வரைய வேண்டும். இதற்கு நாம் Bezier toolஐ தேர்வு செய்ய வேண்டும்.
02:41 காட்டப்படுவது போல கைகள் மற்றும் கால்களை வரையவும்.
02:47 கைகள் மற்றும் கால்களை தேர்ந்தெடுக்கவும்.Fill and Strokeல் Picker tool ஐ பயன்படுத்தி warli artன் உடலுக்கு ஆரஞ்சு நிறத்தை இடவும்.
02:59 Strokeன் widthஐ 2 ஆக மாற்றவும்.
03:02 இப்போது அனைத்து உறுப்புகளையும் தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும்.
03:09 இப்போது warli figure தயாராக உள்ளது. இப்போது warli figureஐ வைத்து round patternஐ உருவாக்குவோம்.
03:17 மேலும் செல்வதற்கு முன், இந்த figure நகல் எடுத்து அதனை ஒரு பக்கமாக வைக்கிறேன்.
03:22 இப்போது அசல் warli art ஐ தேர்வு செய்யவும். இப்போது anchor point தெரிய, மீண்டும் ஒரு முறை figure ன் மீது க்ளிக் செய்யவும்.
03:30 இங்கு காட்டியவாறு Anchor point மீது க்ளிக் செய்து அதை கீழே நகர்த்தவும்.
03:36 இப்போது Edit ற்கு சென்று Clone மீது க்ளிக் செய்து Create Tiled Clones மீது க்ளிக் செய்யவும்.
03:42 '”dialog box'”ல் Symmetry tab'” ன் கீழ், drop-down மெனுவில் option Simple translationஆக இருக்க வேண்டும்.
03:51 பின்னர் Shift tabற்கு செல்லவும்.Per column optionன் கீழ் , X ன் மதிப்பை minus 100 ஆக மாற்றவும்.
03:58 அடுத்து Rotation tab'ற்கு செல்லவும். Per row மற்றும் Per column ல் Angleன் parameterகளை 30ஆக மாற்றவும்.
04:07 கீழே rows ன் எண்ணிக்கை 1ஆக இருக்க வேண்டும். Columns ன் எண்ணிக்கையை 12 ஆக மாற்றவும்.
04:14 பின்னர் Create button- ஐ கிளிக் செய்யவும்.
04:16 canvasல் round pattern உருவாக்கப்பட்டதை கவனிக்கவும்.
04:21 இப்போது வேறு சில optionகளை முயற்ச்சி செய்வோம்.
04:24 Rotation tab ன் கீழ் Per row மற்றும் Per column 'ல் Angleன் parameterகளை 10 ஆக மாற்றவும். Create மீது க்ளிக் செய்யவும்.
04:33 canvasல் உருவாக்கப்பட்ட pattern களை கவனிக்கவும். அதை ஒரு முழுமையான round pattern ஆக மாற்ற Rows ன் எண்ணிக்கையை 40 ஆக மாற்றவும்.
04:41 Createஐ க்ளிக் செய்யவும். canvasல் மாற்றங்களை கவனிக்கவும்.
04:46 இதுபோல Rotation parameterகளை மாற்றி வெவ்வேறு கோணங்களில் patternsகளை பெற முடியும்
04:53 round patternஐ தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும்.
04:59 இப்போது canvas ல் அழகான warli art இருக்கிறது.
05:04 இங்கு காட்டியவாறு அதை ஒரு பக்கமாக நகர்த்தவும்.
05:08 இப்போது வேறு சில optionகளை முயற்சி செய்வோம்.
05:11 அடுத்து, இங்கு காட்டியவாறு Create Spirals toolஐ பயன்படுத்தி canvas ல் மிக பெரிய spiralஐ வரையவும்.
05:20 Selector toolஐ க்ளிக் செய்யவும். ஒற்றை warli figureஐ தேர்வு செய்து இதேபோல் spiralன் மையத்தில் வைக்கவும்.
05:27 இப்போது Tool Controls barல் Raise to top optionஐ க்ளிக் செய்யவும்.
05:32 பின்னர் spiral ஐயும் தேர்வு செய்யவும்.
05:35 Extensions menu ஐ க்ளிக் செய்து Generate from path optionஐ தேர்வு செய்யவும்.
05:41 தோன்றும் sub-menuல் Scatterஐ தேர்வு செய்யவும்.
05:45 திரையில் ஒரு dialog box திறக்கிறது, இங்கே Follow path orientation check boxஐ check செய்யவும்.
05:54 Space between copiesல் 5 என கொடுப்போம்.
05:58 Original pattern will be ஆனது Moved எனவும் Duplicate the pattern before deformation ஆனது check செய்யப்பட்டுள்ளதா எனவும் உறுதி செய்யவும் ..
06:08 Apply buttonஐ க்ளிக் செய்து dialog box ஐ மூடவும்.
06:12 spiral path தெரிவதற்காக spiral warli pattern -ஐ சிறிது தூரம் நகர்த்தவும். இப்போது spiral pathஐ தேர்ந்தெடுத்து அதை நீக்கவும்.
06:21 இது போல் , அழகான spiral warli pattern -ஐ '"Inkscape '" கொண்டு வரைய முடியும்.
06:26 இதேபோல், நாம் பல அழகான warli patternகளை உருவாக்க முடியும்.
06:31 அடுத்து , எவ்வாறு border-ஐ உருவாக்குவது என கற்போம்.
06:35 Object menu சென்று Symbols மீது க்ளிக் செய்யவும். முக்கோண வடிவத்தின் மீது க்ளிக் செய்து அதைcanvasற்கு இழுக்கவும்.
06:42 Tool controls bar, ல் width மற்றும் heightஐ 30 ஆக மாற்றவும்.
06:47 இப்போது முக்கோணத்தை '"Canvas '" -ன் மேல் இடது பக்கமாக நகர்த்தவும்.
06:52 முக்கோணத்தை பயன்படுத்தி row patternகளை உருவாக்க வேண்டும்.
06:56 Edit க்கு சென்று Cloneஐ க்ளிக் செய்து Create Tiled Clonesஐ க்ளிக் செய்யவும். அனைத்து முந்தைய settingகளும் இங்கே தெரியும்.
07:06 Rotation tabல் Angle parameter ன் Per Row மற்றும் Per Column ஐ 0 ஆக மாற்றவும்.
07:13 Shift tab-ல் Per column option-ன் கீழ் X ன் மதிப்பை 0 ஆக மாற்றவும்.
07:19 இறுதியாக கீழே கட்டப்பட்டவாறு Column ஐ 35 ஆக மாற்றவும். பின்னர் CreateButton மீது க்ளிக் செய்யவும்.
07:27 canvasல் உருவாக்கப்பட்ட row patternஐ கவனிக்கவும்.
07:31 அனைத்து முக்கோணங்களையும் தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும்.
07:37 Triangle patternஐ நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும். அதை flip செய்ய V ஐ அழுத்தவும்.
07:43 இபோதுcanvas ன் கீழே patternஐ நகர்த்தவும்.
07:48 நமது warli pattern இபோது தயாராக உள்ளது. நாம் இந்த patternஐ பல்வேறு textile design பணிகளுக்கு border ஆக பயன்படுத்தலாம்.
07:55 இது ஒரு kurti போல் தெரிகிறது.
07:58 ஒரு தலையணை உறை வடிவமைப்பாகவும் இதை பயன்படுத்தலாம்.
08:02 மற்றும் இந்த warli art, பெரிய துணியிலும் நன்றாக இருக்கும்.
08:06 எனவே, இதேபோல warli art வடிவங்களை பயன்படுத்தி பல்வேறு textile patternகளை உருவாக்கலாம்.
08:13 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
08:18 சுருங்கசொல்ல இந்த டுட்டோரியலில் நாம் கற்றது: textiles க்கான Warli pattern, Cloningஐ பயன்படுத்தி patternகளை மீண்டும் செய்தல்
08:27 பயிற்சியாக ஒரு மயில் மாதிரி ஆன Patternஐ உருவாக்கவும்.
08:33 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
08:37 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
08:43 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:53 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
09:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst