Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-pregnant-women/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | கர்ப்பிணிப் பெண்களுக்கான சைவ உணவுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு வருக. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:10 | ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவம். |
00:13 | ஒரு சில சத்தான சைவ உணவுகள். |
00:17 | முதலில், ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வோம். |
00:23 | கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கின்றன. |
00:28 | இது முக்கியமாக உயிரணுக்களின் வளர்ச்சிக்காகும். |
00:32 | ஊட்டச்சத்து நிறைந்த உணவு கருவின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஆதரிக்கிறது. |
00:38 | எனவே, நன்கு ஊட்டமளிக்கும் உணவை உட்கொள்வது அவசியம். |
00:43 | நன்கு ஊட்டமளிக்கின்ற உணவு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது. |
00:48 | உணவில் பின்வருவனவை நிறைந்திருக்கவேண்டும்- புரதங்கள், |
00:51 | நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள் |
00:53 | மற்றும் தாதுக்கள். |
00:55 | ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது குமட்டல் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். |
01:02 | இது பின்வருவானவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது- இரத்த சோகை |
01:05 | கர்ப்ப நீரிழிவு |
01:07 | மற்றும் உயர் இரத்த அழுத்தம் |
01:09 | இது குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை பிறக்கின்ற வாய்ப்பையும் |
01:13 | குறைப்பிரசவம் ஏற்படுகின்ற வாய்ப்பையும் குறைக்கிறது. |
01:16 | நல்ல உணவைத் தவிர, தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். |
01:22 | சத்தான உணவை உட்கொள்வதோடு, அதன் ஊட்டச்சத்து உறிஞ்சுதலும் முக்கியம். |
01:29 | உணவில் இருக்கும் பைட்டேட், ஆக்சலேட்டுகள் மற்றும் டானின்கள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கின்றன. |
01:36 | பல்வேறு சமையல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தலாம். |
01:42 | உதாரணமாக: ஊறவைத்தல், |
01:45 | முளை கட்டுதல், வறுத்தல் |
01:47 | மற்றும் நொதித்தல். |
01:48 | நீராவியில் வேக வைத்தல், வதக்குதல் |
01:50 | மற்றும் கொதிக்க விடுதல் ஆகியன வேறு சில எடுத்துக்காட்டுகள். |
01:54 | ஊட்டச்சத்தின் அளவை மேம்படுத்த, பல்வேறு சத்தான பொடிகளையும் பயன்படுத்தலாம். |
02:01 | முருங்கை இலைகளின் தூள், |
02:03 | கறிவேப்பிலை பொடி அல்லது கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை பயன்படுத்தலாம். |
02:07 | இந்த பொடிகளை தயாரிப்பதற்கான முறை மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
02:12 | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
02:15 | கர்ப்பத்தின் 9 மாதங்கள் முழுவதும் ஆரோக்கியமான எடை அதிகரிப்பு அவசியம். |
02:20 | பின்வருவனவற்றை தரவிற்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது- சர்க்கரை, |
02:23 | வெல்லம், |
02:25 | மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் |
02:28 | காபி, மது |
02:30 | மற்றும் புகையிலை ஆகியவற்றைத் தவிர்க்கவும். |
02:32 | மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் மருந்தை உட்கொள்ள வேண்டாம். |
02:36 | இதைப் பற்றி மேலும் விவரங்கள் மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
02:40 | இப்போது காராமணி இட்லி என்ற முதல் உணவுடன் தொடங்குவோம். |
02:46 | இந்த உணவை தயாரிக்க பின்வரும் ஒவ்வொன்றிலும் 2 மேசைக்கரண்டி தேவைப்படும்: |
02:50 | முழு கம்பு, |
02:52 | முழு திணை |
02:54 | மேலும் பின்வரும் ஒவ்வொன்றிலும் 1 மேசைக்கரண்டி தேவைப்படும் |
02:57 | முளைக்கட்டிய காராமணி |
02:59 | முளைக்கட்டிய முழு கொண்டக்கடலை |
03:01 | வெந்தயம் |
03:03 | வறுத்த சூரியகாந்தி விதைகள் |
03:05 | மேலும் பின்வரும் ஒவ்வொன்றிலும் 1/4 மேசைக்கரண்டி தேவைப்படும்: |
03:10 | முருங்கை இலைகள் தூள், கறிவேப்பிலை பொடி |
03:13 | கொட்டைகள் மற்றும் விதைகளின் தூள் |
03:15 | மற்றும் உப்பு |
03:17 | முதலில் காராமணி மற்றும் முழு கொண்டைக்கடலையை முளைக்க வைப்பதிலிருந்து தொண்டங்குவோம் |
03:22 | முளைக்க வைப்பதற்கானவிளக்கத்தை கூறுகிறேன். |
03:25 | காராமணி மற்றும் கொண்டைக்கடலையை, தனித்தனியாக ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். |
03:31 | காலையில் அதை வடிகட்டி, அவற்றை ஒரு மஸ்லின் துணியில் தனித்தனியாக கட்டவும். |
03:36 | முலை விடுவதற்கு, அவற்றை 2 நாட்களுக்கு ஒரு கதகதப்பான இடத்தில் வைக்கவும் |
03:40 | வெவ்வேறு பீன்ஸ் முளைக்க வெவ்வேறு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். |
03:45 | முளைகள் தயாரானதும் திணை மற்றும் வெந்தயத்தை ஒன்றாக ஊற வைக்கவும். |
03:50 | அவற்றை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும் |
03:55 | திணை, சூரியகாந்தி விதைகள் மற்றும் முளைப்பயிர்களை வடிகட்டி, அவற்றை மொழுமொழுப்பான மாவாக அரைக்கவும். |
04:01 | அரைப்பதற்கு மிக்சி அல்லது ஒரு அம்மிக்கல்லை நீங்கள் பயன்படுத்தலாம் |
04:06 | அரைத்த பிறகு, மாவுநொதிப்பதற்கு, அதை 6 முதல் 8 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் மூடி வைக்கவும். |
04:13 | சமைப்பதற்கு முன், உப்பு மற்றும் மற்ற அனைத்து பொடிகளையும் மாவில் சேர்த்து நன்கு கலக்கவும் |
04:19 | இட்லி தட்டில் எண்ணையை தடவி, அதில் மாவை ஊற்றவும் |
04:24 | அதை குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து, 10-12 நிமிடங்கள் வரை வேக வைக்கவும் |
04:29 | அல்லது நீங்கள் குக்கரில் 1/4 பங்கிற்கு தண்ணீரை ஊற்றி நீராவி மூலம் விசில் இல்லாமல் வேக வைக்கலாம் |
04:35 | 7 முதல் 8 நிமிடங்களுக்குப் பிறகு இட்லிகளை எடுத்து சூடாக பரிமாறவும். |
04:41 | இந்த உணவில் பின்வருவனவை நிறைந்துள்ளன: புரதம் |
04:45 | கால்சியம் மற்றும் இரும்புச்சத்தது. |
04:47 | இதில் பின்வருபவையும் நிறைந்துள்ளன: ஃபோலேட், |
04:50 | மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம். |
04:53 | அடுத்த செய்முறை சிறுதானிய உப்புமா. |
04:56 | இதை செய்ய, ஒவ்வொன்றிலும் 1 மேசைக்கரண்டி தேவைப்படும் |
05:01 | குதிரைவாலி, முளைத்த கம்பு |
05:04 | முளைத்த சோயாபீன் |
05:06 | 1 நறுக்கிய வெங்காயம், 1 நறுக்கிய கேரட் |
05:09 | 1 நறுக்கிய பீட்ரூட் |
05:11 | மேலும் பின்வரும் ஒவ்வொன்றிலும் 1 மேசைக்கரண்டி தேவைப்படும்: |
05:15 | புதிதாக துருவிய தேங்காய் |
05:17 | மற்றும் கசகசா |
05:19 | மேலும், பின்வருபவை நமக்கு தேவைப்படும் |
05:21 | ½ கப் தயிர், |
05:23 | பின்வரும் ஒவ்வொன்றிலும் 1/4 டீஸ்பூன் |
05:26 | மஞ்சள் தூள், தனியா |
05:28 | மற்றும் சீரக தூள். |
05:30 | சீரகம், |
05:32 | முருங்கை இலைகள் தூள், கறிவேப்பிலை பொடி, |
05:35 | தேவைக்கேற்ப உப்பு மற்றும் |
05:37 | 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய். |
05:40 | கம்பு மற்றும் சோயாபீனை முளைப்பதற்காக தனித்தனியாக நான் ஊற வைத்தேன் என்பதை நினைவில் கொள்க. |
05:46 | ஒன்று முளைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம் அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் முளைக்கட்டக்கூடும். |
05:52 | எனக்கு, சோயாபீன் முளைக்க அதிக நேரம் எடுத்தது. |
05:57 | குதிரைவாலியை 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். |
06:01 | தண்ணீரை வடிகட்டி அதை ஒரு ஓரமாக வைக்கவும் |
06:04 | பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கி சீரகத்தை சேர்க்கவும். |
06:09 | இப்போது, அனைத்து காய்கறிகள், முளைத்த சிறுதானியம், முளைத்த சோயாபீன் மற்றும் தயிரை சேர்க்கவும். |
06:17 | துருவிய தேங்காய், கசகசா, உப்பு, பொடிகள் மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். |
06:23 | நன்கு கலக்கவும் |
06:25 | அடுத்து, 1 கப் தண்ணீரை சேர்க்கவும். |
06:28 | 2 விசில்கள் வரும் வரை உப்மாவை வேக வைக்கவும் |
06:32 | பின், அதை சூடாக பரிமாறவும் |
06:35 | இந்த உணவில் பின்வருபவை நிறைந்துள்ளன: புரதங்கள், |
06:38 | நல்ல கொழுப்புகள், வைட்டமின்-ஏ |
06:40 | மற்றும் கால்சியம். |
06:42 | இதில் பின்வரும் தாதுக்கள் நிறைந்துள்ளன- இரும்புச்சத்து |
06:45 | ஃபோலேட், மெக்னீசியம் |
06:47 | மற்றும் பாஸ்பரஸ். |
06:49 | நமது மூன்றாவது உணவு, பச்சை பயறு ராப் |
06:53 | இதற்கு தேவையானவை: |
06:55 | மால்ட் கேழ்வரகு மாவு- ¼ கப் |
06:58 | கடலை மாவு- 1 மேசைக்கரண்டி |
07:01 | முளைத்த பச்சை பயறு- ½ கப் |
07:04 | உதிர்த்த பன்னீர்- ¼ கப் |
07:06 | நறுக்கிய வெங்காயம்- 1 மேசைக்கரண்டி |
07:08 | நறுக்கிய தக்காளி- 1 மேசைக்கரண்டி |
07:12 | பின்வருவன ஒவ்வொன்றிலும் 1/4 தேக்கரண்டி நமக்கு தேவைப்படும்: |
07:15 | மஞ்சள் தூள் |
07:17 | தனியா மற்றும் சீரகத்தூள் |
07:19 | சீரகம், கறிவேப்பிலைப்பொடி |
07:22 | முருங்கை இலைகள் தூள் |
07:24 | 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் |
07:27 | மேலும் தேவையானவை: பாதி எலுமிச்சை |
07:29 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
07:32 | செய்முறை: இந்த டுடோரியலில் முன்னர் குறிப்பிட்டபடி பச்சை பயறை முளைக்க வைக்கவும். |
07:37 | மால்ட் கேழ்வரகு மாவை தயாரிக்க, கேழ்வரகை முந்தைய நாள் இரவு ஊற வைக்கவும். |
07:42 | இப்போது அவற்றை ஒரு மஸ்லின் துணியில் கட்டி 6-8 மணி நேரம் அல்லது ஓர் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும் |
07:48 | அது முளைத்ததும், அவற்றை இரும்பு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்கவும். |
07:54 | இதற்குப் பிறகு, ஒரு மிக்சியில் மாவாக அரைத்து ஓரமாக வைக்கவும் |
08:01 | இரும்பு வாணலியில் எண்ணையை சூடாக்கவும் |
08:04 | சீரகம், உலர்ந்த மசாலா மற்றும் பொடிகளை சேர்க்கவும். |
08:09 | நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும். |
08:14 | அடுத்து, முளைகட்டிய பச்சைப்பயறை சேர்த்து 10 நிமிடங்கள் சமைக்கவும். |
08:19 | பன்னீர் மற்றும் உப்பை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். |
08:24 | ¼ கப் தண்ணீரைச் சேர்த்து, மேலும் 5-10 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
08:30 | தீயை அனைத்து பின் ஆறவிடவும் |
08:34 | இப்போது எலுமிச்சை சாறை சேர்த்து கலவையை ஒரு ஓரமாக வைக்கவும். |
08:38 | அடுத்து, ஒரு பாத்திரத்தில் மால்டேட் கேழ்வரகு மாவு மற்றும் கடலை மாவை கலக்கவும். |
08:44 | மிதமான சூடுள்ள தண்ணீரைச் சேர்த்து மாவை பிசையவும் |
08:48 | இப்போது வட்ட வடிவ பராத்தாக்களை உருட்டவும். |
08:51 | ஒரு இரும்பு தவாவில் இருபுறமும் பராத்தாக்களை சமைக்கவும். |
08:56 | பராத்தாவை ஒரு தட்டில் வைத்து, அதன் இடையில் பச்சை பயறு கலவையைச் சேர்க்கவும். |
09:02 | இப்போது அவற்றை ரோல்களாக்கி பரிமாறவும். |
09:05 | இவ்வுணவில் புரதம் மற்றும் |
09:07 | நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன |
09:10 | மேலும் இதில், பின்வருபவை நிறைந்துள்ளன: கால்சியம் |
09:12 | இரும்புச்சத்து, ஃபோலேட் |
09:14 | மெக்னீசியம் மற்றும் துத்தநாகம். |
09:16 | இங்கே குறிப்பிடப்பட்ட சிறுதானியங்களை தவிர, நீங்கள் மற்ற சிறுதானியங்கள் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தலாம். |
09:22 | உதாரணமாக: சோளம், |
09:24 | வரகு, உடைத்த கோதுமை |
09:26 | அல்லது முழு கோதுமை |
09:28 | அதேபோல், நீங்கள் மற்ற முளைப்பயறுகளையும் பயன்படுத்தலாம். |
09:32 | முளைக்கட்டிய கொண்டக்கடலை, |
09:35 | முளைக்கட்டிய பட்டாணி அல்லது |
09:37 | முளைக்கட்டிய சிறுபயறு |
09:39 | இங்கே குறிப்பிடப்பட்ட விதைகளைத் தவிர, உள்ளூரில் கிடைக்கும் மற்ற விதைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
09:46 | உதாரணமாக: எள், |
09:48 | பூசணி விதைகள், |
09:50 | ஆளி விதைகள் மற்றும் அளவி விதைகள். |
09:53 | ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்கு இந்த அனைத்து உணவுகளையும் சேர்க்கவும். |
10:00 | இத்துடன் நாம் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்து கொண்டமைக்கு நன்றி |