Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-6-month-old-babies/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | 6 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, |
00:10 | கூடுதல் உணவுக்கு அறிமுகம் மற்றும் |
00:13 | பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- |
00:17 | காராமணி கூழ் |
00:19 | பூசணிக்காய் கூழ் |
00:21 | கேழ்வரகு கஞ்சி, சோளக்கஞ்சி |
00:24 | மற்றும் கீரை கூழ். |
00:27 | தொடங்குவதற்கு முன், முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது |
00:31 | என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். |
00:36 | 6 மாதங்களுக்கு பிறகு, தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு போதாது. |
00:42 | அதனால், தாய்ப்பாலூட்டலுடன், குழந்தைக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கொடுக்கப்பட வேண்டும். |
00:48 | இது, கூடுதல் உணவூட்டுதல் எனப்படுகிறது. |
00:51 | ஒரு கூடுதல் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு நேரத்தில் ஒரு உணவை கொடுக்கத் தொடங்கவும். |
00:58 | இது, குழந்தை ஏதேனும் உணவிற்கு ஒவ்வாமை கொண்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும். |
01:02 | குழந்தைக்கு அது பழகியவுடன், பொருட்களின் கலவையை கொடுக்கத் தொடங்கவும். |
01:09 | முதலில், நாளொன்றுக்கு இருமுறை, 1 மேசைக்கரண்டி என்று தொடங்கவும். |
01:13 | பின், படிப்படியாக, நாளொன்றுக்கு இருமுறை, 4 மேசைக்கரண்டி வரை செல்லவும். |
01:18 | இவைகளைத் தவிர, குழந்தையின் உணவை தயாரிக்கும் போது, எப்போதும் உள்ளூர் மற்றும் பருவகால பொருட்களைப் பயன்படுத்தவும். |
01:29 | குழந்தைக்கு 1 வயது முடியும் வரை, சர்க்கரை, உப்பு அல்லது மசாலா பொருட்களை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டாம். |
01:36 | மேலும், குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம். |
01:43 | 6 மாதங்களுக்கு பிறகு, |
01:45 | கூடுதல் உணவுகளிலிருந்து குழந்தைக்கு, 200 கிலோ கலோரிகள் வரை சக்தி தேவைப்படுகிறது. |
01:51 | நன்கு சமைக்கப்பட்ட மற்றும் கூழ் வடிவிலான உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். |
01:56 | நமது சமையல் செய்முறையை தொடங்குவதற்கு முன், |
02:01 | பின்வரும் உணவுகளை தயாரிக்க, |
02:04 | தாய்ப்பால், தேங்காய்ப்பால், அல்லது |
02:06 | கொதிக்கவிட்டு பின் குளிர வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும். |
02:10 | முதல் உணவு, காராமணி கூழ். |
02:14 | அதை தயாரிக்க நமக்கு, காராமணி அல்லது தட்டைப்பயறு தேவை. |
02:21 | காராமணியை சுமார் 9-12 மணி நேரம் ஊற வைக்கவும் |
02:25 | அதை வடிகட்டி, தண்ணீரால் நன்கு கழுவவும். |
02:30 | தண்ணீர் நன்கு வடிகட்டவும். |
02:33 | பின் அதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். |
02:36 | அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும் |
02:39 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. |
02:43 | இந்த காராமணியை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். |
02:47 | ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். |
02:50 | பின் விரல்களிடையே அவற்றை தேய்த்து மெதுவாக வெளிப்புற தோலை நீக்கவும். |
02:55 | வெளிப்புற தோலை பிரித்து எடுத்து, காராமணியை மட்டும் ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள்வும் |
03:00 | காராமணி மூடும் வரை தண்ணீரை சேர்க்கவும் |
03:04 | இந்த ஸ்டீல் பாத்திரத்தை ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும் |
03:07 | 4-5 விசில்கள் வரும் வரை வேகவைக்கவும். |
03:11 | அதை தீயிலிருந்து நீக்கி, சிறிது நேரம் ஆற விடவும். |
03:15 | இப்போது, ஏதேனும் சமைக்கப்பட்ட வெளிப்புற தோல்கள் இருந்தால், அவற்றை மெதுவாக பிரித்தெடுக்கவும். |
03:21 | பின், மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட காராமணியை கூழாக்கவும். |
03:27 | சிறிதளவு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் |
03:31 | அல்லது குக்கரில் மீதமுள்ள சமைக்கப்பட்ட தண்ணீரை சேர்க்கவும். |
03:34 | காராமணி கூழ் இப்போது தயாராகிவிட்டது. |
03:37 | இந்த காராமணி கூழ், பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது- Protein |
03:41 | Phosphorus |
03:43 | Iron, Zinc |
03:45 | மற்றும் Magnesium. |
03:47 | இவை போன்ற கூழ்களை செய்ய, பின்வரும், உள்ளூரில் கிடைக்கின்ற மாற்றுப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்- |
03:54 | பயறு, கொண்டைக்கடலை |
03:57 | பட்டாணி, மைசூர் பருப்பு, |
03:59 | பச்சை பட்டாணி, |
04:01 | சிவப்பு காராமணி, வெள்ளை கொண்டக்கடலை, |
04:03 | கொள்ளு போன்றவை. |
04:05 | இரண்டாவது உணவு, பூசணிக்காய் கூழ். |
04:09 | நமக்கு, 250 கிராம்கள் மஞ்சள் பூசணிக்காய் தேவை. |
04:13 | அதன் தயாரிப்புக்கு, கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பூசணியை எடுத்துக்கொள்ளவும். |
04:18 | விதைகளை நீக்கவும். |
04:20 | அதை, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும். |
04:22 | பின் அதை நீராவியில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். |
04:26 | அதை தீயிலிருந்து நீக்கி, |
04:28 | சிறிது நேரம் ஆற விடவும். |
04:30 | இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது அம்மியை பயன்படுத்தி, இந்த சமைக்கப்பட்ட பூசணிக்காயின் கூழை செய்யவும். |
04:37 | பூசணிக்காய் கூழ் தயாராகி விட்டது. |
04:40 | இந்த பூசணிக்காய் கூழ், பின்வருவனவற்றை கொண்டுள்ளன - Vitamin A |
04:44 | Folate , Choline |
04:46 | Potassium மற்றும்Sulphur |
04:49 | பூசணிக்காய் கிடைக்கவில்லையெனில், பின்வரும் மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். |
04:54 | பச்சை பூசணி, வெள்ளை பூசணி |
04:58 | மூன்றாவது உணவான, கேழ்வரகு கஞ்சியை இப்போது பார்ப்போம். |
05:02 | இதற்கு, ஒரு மேசைக்கரண்டி கேழ்வரகுப்பொடி நமக்கு தேவை. |
05:08 | கேழ்வரகுப்பொடி, கேழ்வரகு மாவிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும். |
05:12 | இந்த உணவிற்கு, நமக்கு கேழ்வரகுப்பொடி தேவை. |
05:16 | அதனால், கேழ்வரகுப்பொடியை எப்படி செய்வதென முதலில் காண்போம். |
05:21 | அதை தயாரிப்பதற்கு, முதலில் கேழ்வரகை 9 ல் இருந்து 12 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும். |
05:26 | அதை ஒரு வடிகட்டியில் மாற்றி, தண்ணீரால் நன்றாக அலசவும். |
05:32 | எல்லா தண்ணீரும் வடியட்டும். |
05:34 | பின் அதை, ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். |
05:37 | அது முளை கட்டும் வரை, ஒரு ஓரமாக வைக்கவும். |
05:40 | இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படுகிறது. |
05:43 | அதற்குப்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அதை சூரிய ஒளியில் உலர வைக்கவும். |
05:48 | பிறகு, 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு, அதை குறைந்த தீயில் வறுக்கவும். |
05:52 | இடைவிடாமல் கிளறுவது அவசியம் என்பதை நினையவில் கொள்க. |
05:56 | இந்த முழு செயல்முறை, உணவிலிருக்கும் பைட்டிக் அமிலத்தை குறைக்கும். |
06:01 | இப்போது, ஒரு மிக்ஸர் அல்லது உரலை பயன்படுத்தி, அதனை பொடிக்கவும். |
06:07 | இந்த பொடியை, ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம். |
06:15 | அடுத்து, கேழ்வரகு கஞ்சியை செய்ய, இந்த கேழ்வரகுப்பொடியின் ஒரு மேசைக்கரண்டியை எடுத்துக்கொள்ளவும். |
06:20 | கொதித்த, ஆரிய நீர் அல்லது முன்பு கூறிய |
06:22 | வேறு மாற்றுப்பொருளை சேர்க்கவும். |
06:26 | கட்டிகளை தவிர்க்க, அதை நன்கு கலக்கவும். |
06:29 | இந்த கலவையை, குறைந்த தீயில், 7ல் இருந்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
06:34 | தேவைப்பட்டால், சமைக்கும் போது, சிறிதளவு நீரை சேர்க்கவும். |
06:38 | அது கஞ்சியின் கெட்டித்தன்மையை குறைக்கும். |
06:42 | ஆனால், கஞ்சியின் தன்மை, தண்ணியாக இல்லாமல் இருக்க பார்த்திக்கொள்ளவும். |
06:49 | கேழ்வரகு கஞ்சி இப்போது தயாராக உள்ளது. |
06:51 | இந்த கேழ்வரகு கஞ்சி பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது- Protein |
06:56 | Calcium, Iron |
06:59 | Potassium மற்றும்Sulphur |
07:02 | நான்காவது உணவு, சோளக்கஞ்சி. |
07:06 | அதற்கு நமக்கு, இரண்டு மேசைக்கரண்டிகள் சோளப்பொடி தேவைப்படுகிறது. |
07:10 | அந்தப்பொடியை செய்ய, சோளத்தை நீரில் 7 ல் இருந்து 8 மணிநேரம் வரை ஊற வைக்கவும். |
07:16 | பின், அதை நாம் ஒரு வடிகட்டியில் போட்டு, நீரினால் நன்கு அலசவும். |
07:21 | எல்லா நீரும் வடியட்டும். |
07:24 | இப்போது அதை, சுத்தமான, உலர்ந்த பருத்தி துணியில் கட்டி, அது முளைக்கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும். |
07:30 | இந்த முளைக்கட்டிய சோளத்தை, சூரிய ஒளியின் கீழ் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும். |
07:36 | அதை குறைந்த தீயில் 10 ல் இருந்து 12 நிமிடங்களுக்கு வறுக்கவும். |
07:40 | பின், அதை அரைத்து பொடியாக்கவும். |
07:43 | இந்த பொடியை, காய்ந்த, குளிர்ந்த இடத்தில், ஒரு வாரத்திற்கு, காற்றுப்புகாத பாத்திரத்தில் நாம் சேமித்து வைக்கலாம். |
07:50 | இந்த சோளப்பொடியின் இரண்டு மேசைக்கரண்டிகயயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். |
07:54 | 4 அல்லது 5 தேக்கரண்டிகள், கொதித்து ஆரிய நீர் |
07:58 | அல்லது முன்பு கூறியது போல் வேறு மாற்றுப்பொருட்களை சேர்க்கவும். |
08:01 | கட்டிகள் சேராமல் இருக்க, அதை நன்கு கலக்கவும். |
08:04 | இப்போது, இந்த கலவையை, குறைந்த தீயில், 4 ல் இருந்து 6 நிமிடங்களுக்கு சமைக்கவும். |
08:10 | இப்போது, சோளக்கஞ்சி தயாராகிவிட்டது. |
08:13 | சோளக்கஞ்சி, பின்வருவனவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்- Protein |
08:17 | Phosphorus, Potassium |
08:20 | Magnesium. Selenium |
08:23 | Sulphur மற்றும் Iron |
08:25 | ஐந்தாவது உணவு, கீரை கூழ்: |
08:30 | கீரை கூழை செய்ய நமக்கு, |
08:33 | நறுக்கி, கழுவப்பட்ட 2 கப் கீரை |
08:37 | மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் தேவை. |
08:40 | செயல்முறை: கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும். |
08:44 | நறுக்கி, கழுவப்பட்ட கீரையை சேர்க்கவும். |
08:47 | குறைந்த தீயில் அதை, 5-7 நிமிடங்களுக்கு வதக்கவும். |
08:52 | இப்போது, வதக்கிய கீரையை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும். |
08:56 | ஒரு அம்மி அல்லது மிக்ஸரை பயன்படுத்தி, அதை கூழாக்கவும். |
09:01 | இப்போது, நமது கீரை கூழ் தயாராகிவிட்டது. |
09:05 | கீரை, பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது - Vitamin A, |
09:08 | Folate, |
09:10 | Vitamin C, Iron |
09:12 | Magnesium மற்றும் Calcium |
09:16 | இம்மாதிரி கூழை செய்ய, ஒருவர் உள்ளூரில் கிடைக்கின்ற இலை காய்கறியை பயன்படுத்தலாம். |
09:22 | உதாரணத்திற்கு: தண்டு கீரை |
09:25 | முருங்கைக்கீரை, |
09:27 | முள்ளங்கி கீரை |
09:29 | வெந்தயக்கீரை, மற்றும் கடுகு கீரை. |
10:10 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |