Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-6-month-old-babies/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 6 மாத குழந்தைகளுக்கான அசைவ சமையல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, அசைவ உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும்
00:17 பின்வரும் அசைவ உணவுகளை எப்படி தயாரிப்பது-
00:22 முட்டை கூழ்
00:24 மீன் கூழ், வாழைக்காய் மீன் கஞ்சி
00:27 கோழி கல்லீரல் கூழ் மற்றும் கோழி கேரட் கூழ்
00:31 தொடங்குவோம்- குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன், குழந்தையின் ஊட்டச்சத்து தேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
00:42 கூடுதல் உணவுகளிலிருந்து அவளுக்கு, 200 கலோரிகள் வரை சத்து தேவைப்படும்.
00:48 தாய்ப்பாலூட்டுதலுடன், கூடுதல் உணவும் தொடங்கப்பட வேண்டும்.
00:53 இதைத் தவிர, குழந்தையின் வயது படிப்படியாக அதிகரிக்க- உணவின் அளவு மற்றும் நிலைத்தன்மை மாற்றப்பட வேண்டும்.
01:03 குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது, கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளை பயன்படுத்தி, உணவின் அளவு அளவிடப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:12 இதே தொடரின், மற்றொரு டுடோரியலில், இது விளக்கப்பட்டுள்ளது.
01:18 குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன்- முதலில், ஒரு நாளைக்கு, இரண்டு முறை, 1 தேக்கரண்டி வீதம் தொடங்கவும். பின்னர் படிப்படியாக ஒரு நாளைக்கு, இரண்டு முறை, 4 தேக்கரண்டி வரை செல்லலாம்.
01:29 மேலும், நன்கு சமைக்கப்பட்ட, கூழ் உணவு வகை மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
01:35 இப்போது, அசைவ உணவுகள் குழந்தைக்கு ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம்.
01:40 எல்லா அசைவ உணவுகளும், நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் பல நுண் ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கின்றன.
01:48 இந்த ஊட்டச்சத்துக்கள், குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், மற்றும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்.
01:57 பின்வருவனவை, குழந்தைக்கு பரிந்துரைக்கப்படுகின்ற உணவுகள் ஆகும்-நாட்டு கோழியினம்,
02:02 முட்டை, இறைச்சி மற்றும் அனைத்து வகை மீன்கள், நண்டு வகைகளை தவிர. இது, 1 வயதிற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
02:12 அசைவ உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்-
02:18 குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சமைக்கப்படாத உணவு கொடுக்க கூடாது.
02:23 முழுவதுமாக சமைக்கப்பட்ட உணவையே கொடுக்க வேண்டும்.
02:26 மிகவும் முக்கியமாக, குழந்தையின் உணவை சமைக்கும் போது- நுண்ணலை அடுப்பை பயன்படுத்துவதை எப்போதும் தவிர்க்கவும்.
02:34 குழந்தையின் தேவையான கூடுதல் அசைவ உணவுகளின் முக்கியத்துவத்தை பற்றி பார்த்தோம்.
02:43 இப்போது, இந்த கூடுதல் அசைவ உணவுகளை எப்படி செய்வதென பார்ப்போம்.
02:48 நமது முதல் உணவு, முட்டை கூழிலிருந்து தொடங்குவோம்.
02:53 இந்த முட்டை கூழை செய்ய நமக்கு, 1 முட்டை மற்றும் அரை தேக்கரண்டி வெண்ணை அல்லது நெய் தேவைப்படும்.
03:01 அதை தயாரிக்க, முட்டையை ஒரு கிண்ணத்தில் போட்டு, நன்றாக கலக்கவும்.
03:06 பின், ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். கலக்கிய முட்டையை, இந்த ஸ்டீல் பாத்திரத்தில் ஊற்றி, குறைந்த தீயில் கிளறத் தொடங்கவும்.
03:15 தொடர்ந்து சமைத்தால், அது முட்டை கூழை எரித்துவிடும் ஆகையால், இடையே தீயிலிருந்து அதை நீக்கவும்.
03:21 கெட்டியாகும் வரை, அந்த கலவையை கிளறிக்கொண்டே சமைக்கவும்.
03:25 தீயை அணைக்கவும். முட்டை கூழ் தயாராகிவிட்டது.
03:30 அது ஆறிய பிறகு, குழந்தைக்கு ஊட்டவும்.
03:34 நாம் பார்க்கப்போகின்ற இரண்டாவது உணவு, மீன் கூழ்.
03:37 இதற்கு, நமக்கு தேவை- பின்வரும் உள்ளூரில் கிடைக்கின்ற மீன்களில், ஏதேனும் ஒன்றின் 2 துண்டுகள்-கருப்பு வெளவால், வங்கவராசி, வெள்ளை வெளவால் மற்றும் கணவாய் மீன்.
03:50 கழுவப்பட்டு மற்றும் சுத்தப்படுத்தப்பட்ட, மீனின் 2 துண்டுகளை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
03:54 மீன் மூடப்படும் வரை தண்ணீரை சேர்க்கவும். இந்த ஸ்டீல் பாத்திரத்தை, ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும்.
04:00 3 அல்லது 4 விசில்கள் வரும் வரை, அதை சமைக்கவும்.
04:04 ஆறிய பிறகு, அந்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
04:10 இப்போது, எல்லா எலும்புகளையும் கவனமாக நீக்கவும்.
04:13 எலும்புகள், குழந்தையை மூச்சு திணற வைக்குமாதலால், குழந்தைக்கு ஊட்டும் முன்பு அவற்றை நீக்குவது மிகவும் முக்கியமாகும்.
04:22 இப்போது, சமைத்த மீனை, ஒரு மிக்ஸரில் போட்டு கூழாக செய்து, பின் குழந்தைக்கு ஊட்டவும்.
04:28 மூன்றாவது உணவு, வாழைக்காய் மீன் கஞ்சி.
04:32 அதை தயாரிக்க, 2 தேக்கரண்டிகள் வாழைக்காய் பொடி, உள்ளூரில் கிடைக்கின்ற மீன் அல்லது வங்கவராசி மீன் 2 துண்டுகள் தேவை.
04:41 முதலில், வாழைக்காய் பொடியை தயார் செய்வதிலிருந்து தொடங்குவோம்.
04:46 உங்கள் பகுதியில் கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வகையில், 2 வாழைக்காயை எடுத்துக்கொள்ளவும்.
04:51 ஒரு தோலுரிப்பானை பயன்படுத்தி, அவற்றின் தோலை எடுக்கவும். இப்போது, இவற்றை மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
04:58 இந்த துண்டுகளை 1 முதல் 2 நாட்களுக்கு நிழலில், முருகலாகும் வரை உலர வைக்கவும்.
05:05 பின்னர், இந்த உலர வைத்த வாழைக்காய் துண்டுகளை, ஒரு மிக்ஸரில் போட்டு பொடிக்கவும்.
05:10 இந்த பொடியை சலித்து, விதைகளை அகற்றவும்.
05:13 வாழைக்காய் பொடி, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
05:17 அடுத்து, ஒரு மீன் கூழை செய்ய-முந்தைய உணவு செய்முறையில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
05:24 அதற்குப் பிறகு, 2 தேக்கரண்டிகள் வாழைக்காய் பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
05:29 3 தேக்கரண்டிகள் தண்ணீரை சேர்த்து, கட்டிதட்டாமல் இருக்க நன்றாக கலக்கவும்.
05:35 தேவைப்பட்டால், மேலும் தண்ணீரை சேர்க்கவும்.
05:38 இப்போது, இந்த கலவையை சிறிய தீயில் 5ல் இருந்து 7 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
05:43 அதற்குப் பிறகு, சமைக்கப்பட்ட மீன் கூழை அதனுடன் சேர்க்கவும்.
05:47 கலவையை கிளறிக்கொண்டே, அடுத்த 4-5 நிமிடங்களுக்கு சிறிய தீயில் சமைக்கவும்.
05:53 வாழைக்காய் மீன் கூழ் தயாராகி விட்டது. அதை ஆற வைத்து, பின் குழந்தைக்கு ஊட்டவும்.
06:01 இப்போது, நான்காவது சமையல் குறிப்பிற்கு வருகிறோம்- கோழி கல்லீரல் கூழ்.
06:06 இதைச் செய்ய, ஒரு கோழியின் கல்லீரல் தேவை.
06:09 செய்முறை: கழுவிய கோழியின் கல்லீரலை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து தொடங்கவும்.
06:15 அது மூடும் வரை, தண்ணீரை சேர்க்கவும்.
06:18 இப்போது இந்த ஸ்டீல் பாத்திரத்தை, ஒரு பிரஷர் குக்கரில் வைக்கவும்.
06:21 3ல் இருந்து 4 விசில்கள் வரும் வரை, அதை சமைக்கவும்.
06:25 ஆறிய பிறகு, அதனை ஒரு தட்டில் எடுத்துவைக்கவும்.
06:29 ஒரு மிக்ஸரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட கோழியின் கல்லீரலை கூழாக்கி, குழந்தைக்கு ஊட்டவும்.
06:37 இப்போது, ஐந்தாவது சமையல் குறிப்பை பார்ப்போம்- கோழி கேரட் கூழ்.
06:43 நமக்கு தேவையானவை: 4-5 சிறிய துண்டுகள் கோழி மார்பு அல்லது எலும்பில்லாத கோழி மற்றும் 1 கேரட்.
06:50 கழுவிய கோழி துண்டுகளை, ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து தொடங்கவும். பின்னர், அது மூடும் வரை, தண்ணீரை சேர்க்கவும்.
07:00 இந்த பாத்திரத்தை, ப்ரெஷர் குக்கரில் வைத்து, 3ல் இருந்து 4 விசில்கள் வரும் வரை சமைக்கவும்.
07:07 அதை ஆற வைக்கவும். பின்னர், அந்த கோழி துண்டுகளை தட்டில் எடுத்து வைக்கவும்.
07:15 அடுத்து, கேரட்டை 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து, ஆற வைக்கவும்.
07:20 ஒரு மிக்ஸரை பயன்படுத்தி, சமைக்கப்பட்ட கோழி துண்டுகள் மற்றும் வெந்த கேரட்டின் கூழை செய்யவும்.
07:26 இந்த உணவுகளின் ஊட்டச்சத்து பற்றி பார்ப்போம். பின்வருவன இவற்றில் அதிகமாக இருக்கின்றன- புரதம்,
07:36 Omega 3 Fatty acidகளான, DHA மற்றும்EPA
07:42 Choline,
07:45 Vitamin A,
07:49 Vitamin D,
07:52 Vitamin B3,
07:57 Vitamin B6,
08:01 Folate,
08:04 Vitamin B12,
08:08 Zinc,
08:11 Magnesium,
08:14 Iron,
08:18 Phosphorus,
08:21 Copper மற்றும் Selenium.
08:28 அசைவ உணவுளில், இந்த சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன.
08:33 எனவே குழந்தையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், இவை உதவுகின்றன.
08:40 இத்துடன், 6 மாத குழந்தைகளுக்கான அசைவ சமையல் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree