Digital-Divide/D0/Oral-Dental-Hygiene-and-Care/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | ராமு காலையில் எழுந்து பள்ளி செல்ல தயாராகிறான். |
00:08 | அவன் தூக்க கலக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் சமாளித்து ப்ரஷை எடுத்து பேஸ்டை வைத்து பல் துலக்க ஆரம்பிக்கிறான். |
00:15 | சீக்கிரம் பள்ளி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமாக பல் துலக்குகிறான். |
00:20 | கொப்பளித்துவிட்டு... குளித்துவிட்டு தயாராக வேகமாக செல்கிறான். |
00:25 | ராமுவின் அம்மா அவனை காலை உணவிற்காக அழைகிறார். |
00:28 | ராமு தன் காலை உணவை உண்கிறான். |
00:31 | உணவு அவனது பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அவன் சத்தமாக கத்துகிறான். |
00:36 | ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் அம்மா தண்ணீரை கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்ல சொல்கிறார். |
00:43 | ராமு வலியுடனே புத்தக பையை எடுத்துக்கொண்டு விட்டை விட்டு கிளம்புகிறான். |
00:48 | வழியில் அவனது நண்பனை சந்திக்கிறான். |
00:51 | வலியுடன் அவனை பார்த்தவுடன் அவன் நண்பன் சுரேஷ் என்ன நடந்தது என கேட்கிறான். |
00:56 | ராமு நடந்ததை சொல்கிறான். |
00:59 | சுரேஷ் நிதானமாக ராமு சொல்வதைக் கேட்கிறான். |
01:02 | பின் அவன் தன் வீட்டின் அருகில் இருக்கும் பல்மருத்துவர் பற்றி கூறுகிறான். |
01:07 | சுரேஷ் பள்ளி முடிந்தவுடன் ராமுவை அவரிடம் கூட்டிசெல்வதாக வாக்களித்தான். |
01:13 | டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
01:18 | இங்கே நாம் பார்க்கபோவது, வாயை சுத்தமாக பராமரிப்பதற்கான வழிகள், முதன்மை பாதுகாப்பு மற்றும் பல்மருத்துவரை கலந்தாலோசித்தல். |
01:27 | பள்ளியைவிட்டு திரும்பும்போது வழியில் சுரேஷ உம் ராமுவும் பல் மருத்துவரை சந்திக்கின்றனர். |
01:33 | பல்மருத்துவர் ராமுவின் பற்களை சோதித்து அவனுக்கு ஒரு சிறிய பற்குழி இருப்பதாக சொல்கிறார். |
01:39 | பின் அவர் பற்குழிக்கான காரணங்களை அவர்களிடம் சொல்கிறார். |
01:45 | பற்களுக்கிடையே உணவு மாட்டிக்கொள்ளுதல் |
01:48 | பற்களை சரிவர துலக்காதிருத்தல் |
01:52 | சிட்ரிக் அமில சதவீதம் அதிகமாக உள்ள குளிர்பானங்கள். |
01:57 | அதன் பின் பல்மருத்துவர் இவ்வகை வலிகளை குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறார். |
02:04 | மினரல் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல். |
02:08 | பற்களை சரிவர துலக்குதல். |
02:11 | ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்குதல். |
02:14 | எப்போதும் சாப்பிட்டவுடன் வாய்கொப்பளித்தல் |
02:17 | அனைத்து வயதினரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது நன்று. |
02:25 | பற்கள் சீரற்று தெற்றுப்பல் இருந்தால். |
02:31 | பற்களில் பற்குழி இருந்தால். |
02:34 | சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு உண்ணும்போது பற்கூச்சம் ஏற்பட்டால் பல் மருத்துவரை அனுகவும் |
02:38 | பற்களின் முன்னும் பின்னும் மெதுவாக துலக்கவும். |
02:45 | நல்ல சுவாசத்தை பெறவும் கிருமிகளை நீக்கவும் நாக்கை சுத்தப்படுத்தவும். |
02:53 | இயற்கை முறையாக, மிஸ்வாக் (Miswak) எனப்படும் உகா மரத்து குச்சியை பயன்படுத்தலாம். |
02:58 | இந்த குச்சியை மெல்ல வேண்டும். |
03:01 | பின் இந்த குச்சியை இயற்கை பல்துலக்கியாக பயன்படுத்தலாம். |
03:06 | பற்களை சுத்தமாக பார்த்துக்கொள்வதும் அவ்வப்போது பற்களை பரிசோதனை செய்வதும் பற்களை பராமரிக்க உதவும் என்பதை நினைவு கொள்க. |
03:14 | இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி. |
03:17 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
03:21 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
03:24 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
03:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
03:35 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
03:38 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
03:46 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
03:51 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
03:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
04:14 | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அதிதி கோகர்ன் அனிமேஷன் உதய சந்திரிகா |
04:21 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |