COVID19/C2/Breastfeeding-during-COVID-19/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:02 கோவிட்-19 ன் போது தாய்ப்பாலூட்டுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது
00:11 கோவிட்-19 என்றால் என்ன
00:14 கோவிட்-19 ன் போது தாய்ப்பாலூட்டுவதற்கான வழிமுறைகள்.
00:19 முதலில் கோவிட்-19 என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வோம்
00:24 COVID-19 என்பது கொரோனா வைரஸ் என்ற வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும்.
00:33 இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
00:37 பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது அல்லது இருமும்போது, அவர்கள் நீர்த்துளிகளை பரப்புகின்றனர்.
00:44 இந்த நீர்த்துளிகளில் கொரோனா வைரஸ் உள்ளது.
00:49 நோய்த்தொற்றுள்ள இந்த நீர்த்துளிகளை மற்றவர்கள் சுவாசிக்கும்போது தொற்று பரவுகிறது.
00:56 இந்த நீர்த்துளிகள் 1 முதல் 2 மீட்டர் வரை பயணித்து ஏதேனும் மேற்பரப்பில் அமரலாம்.
01:04 அங்கே அவை பல மணிநேரம் அல்லது சில நாட்கள் உயிருடன் இருக்கின்றன.
01:09 மற்றவர்கள் அத்தகைய நோய்த்தொற்றுள்ள மேற்பரப்புகளை தங்கள் கைகளால் தொடுகிறார்கள்.
01:15 பின்னர், அவர்கள் கைகளை கழுவாமல் கண்கள்,
01:18 மூக்கு அல்லது வாயைத் தொடுகிறார்கள்.
01:23 நோய்த்தொற்று பரவுவதற்கான மற்றொரு வழி இது.
01:28 நோய்த்தொற்றுடையவர்கள் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே வைரஸை பரப்பலாம்.
01:35 இன்றுவரை இந்த virusன் கருப்பையகத்தின் மூலம் பரவுவதற்கான தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை.
01:43 பாதிக்கப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பாலில் இந்த வைரஸ் இன்னும் கண்டறியப்படவில்லை.
01:50 இது தாய்ப்பால் மூலம் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
01:57 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் மருத்துவ அறிகுறிகள் பல உண்டு.
02:03 காய்ச்சல், இருமல்,
02:05 மூச்சுத் திணறல், சோர்வு,
02:07 தலைவலி, தொண்டை புண் போன்றவை பொதுவானவை.
02:12 வாந்தி, வயிற்றுப்போக்கு,
02:14 தும்மல் மற்றும் கண் வெண்படலம் ஆகியவை குறைவு.
02:19 பாதிக்கப்பட்டவர்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
02:25 பச்சிளம் குழந்தைகளுக்கும் சிசுக்களுக்கும் COVID-19ன் ஆபத்து குறைவாக உள்ளது.
02:30 இளம் குழந்தைகளில் COVID-19 ன் ன் பாதிப்பு குறைவாக உள்ளது.
02:37 பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே அல்லாமல் இருக்கின்றன
02:44 இப்போது, COVID-19 இன் போது தாய்ப்பால் கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பற்றி பார்க்கலாம்.
02:51 எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் அவசியம்.
02:56 சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 உள்ள தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளும் இதில் அடங்கும்.
03:03 சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 உள்ள குழந்தைகளும் இதில் அடங்கும்.
03:10 அனைத்து குழந்தைகளுக்கும் முறையான குழந்தை உணவு வழிகாட்டுதல்களின்படி உணவளிக்க வேண்டும்.
03:17 பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
03:22 பிரத்தியேக தாய்ப்பாலூட்டல் 6 மாதங்களுக்கு தொடர வேண்டும்.
03:28 தேவைப்பட்டால், தாயின் வெளிப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கலாம்.
03:34 கூடுதல் உணவு 6 மாத வயதில் தொடங்கப்பட வேண்டும்.
03:40 தாய்ப்பாலை குறைந்தபட்சம் 2 வயது வரை கொடுக்க வேண்டும்.
03:46 தாய்ப்பால் கொடுப்பது, பாலை வெளிப்படுத்துவது மற்றும் கூடுதல் உணவளிப்பது அவசியம்.
03:54 அவை மற்ற டுடோரியல்களில் விளக்கப்பட்டுள்ளன
03:59 எங்கள் வலைத்தளத்தில் உள்ள முன்நிபந்தனை சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தொடரைப் பார்க்கவும்.
04:06 COVID-19 இன் போது, ​​குழந்தைக்கு சுகாதாரமாக தாய்ப்பாலூட்ட சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
04:13 குழந்தையைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் தாய், 20 வினாடிகளுக்கு கைகளை கழுவ வேண்டும்.
04:21 தாய்ப்பால் கொடுப்பதற்கு அல்லது பாலை வெளிக்கொணர்வதற்கு முன்பும் பின்பும் அவள் கைகளை கழுவ வேண்டும்.
04:28 கைகளை சுத்தம் செய்ய ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானையும் பயன்படுத்தலாம்.
04:34 அவர் COVID-19 இன் சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர் என்றால், மருத்துவ முகக்கவசங்கள் தேவை.
04:43 தாய்ப்பால் கொடுக்கும் போதும் மற்றும் பாலை வெளிக்கொணரும் போதும் அவள் ஒரு ,
04:46 முகக்கவசத்தை அணிய வேண்டும்
04:49 முகக்கவசம் ஈரப்பதம் அடைந்துவிட்டால், அதை உடனே மாற்ற வேண்டும்
04:55 பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் உடனடியாக அப்புறப்படுத்தபட வேண்டும்.
05:01 அதை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
05:04 முகக்கவசத்தின் முன் மேற்பரப்பை தாய் தொடக்கூடாது.
05:09 அவள் அதை பின்புறத்திலிருந்து கழற்ற வேண்டும்.
05:13 சில நேரங்களில், மருத்துவ முகக்கவசங்கள் கிடைக்காமல் போகலாம்.
05:19 இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தாய் ஒரு காகிதம்
05:22 அல்லது ஒரு சுத்தமான துணி, அல்லது ஒரு கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும்
05:27 அவள் எப்போதும் அதனுள்ளே தும்ம வேண்டும் அல்லது இரும வேண்டும்.
05:31 அவள் உடனடியாக அதை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு, பின் கைகளை கழுவ வேண்டும்.
05:38 ஒரு அழுக்கடைந்த காகிதம் அல்லது துணி
05:40 அல்லது கைக்குட்டை அடிக்கடி தேவைக்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
05:46 மருத்துவ முகக்கவசங்கள் கிடைக்கவில்லை என்றால் துணி முகக்கவசங்களையும் பயன்படுத்தலாம்.
05:53 ஒவ்வொரு தாய்ப்பாலூட்டலுக்கு முன்பும் தாய் மார்பகத்தை கழுவ வேண்டியதில்லை.
05:58 அவள் மார்பின் மீது இருமி இருந்தால் அவற்றைக் கழுவ வேண்டும்.
06:04 சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரினால் அவள் குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு அவற்றை மென்மையாக கழுவ வேண்டும்.
06:12 குழந்தையின் பராமரிப்பாளர்கள் குழந்தையைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவ வேண்டும்.
06:19 அறையில் உள்ள அனைத்து மேற்பரப்புகளும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
06:26 நோய்த்தொற்றுள்ள சில தாய்மார்கள், மோசமான உடல்நிலை பாதிப்பினால் தாய்ப்பால் கொடுக்க இயலாமல் இருக்கலாம்.
06:32 இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு தாயின் வெளிப்படுத்தப்பட்ட பால் கொடுக்கப்பட வேண்டும்.
06:39 ஒரு செவிலியர் அல்லது குடும்ப உறுப்பினர் குழந்தைக்கு இந்த பாலை கொடுக்கலாம்.
06:45 பாலை கொடுப்பவர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்க கூடாது
06:51 குழந்தை அல்லது பாலைத் தொடும் முன் அவர்கள் 20 வினாடிகளுக்கு கைகளைக் கழுவ வேண்டும்.
06:59 கைகளை கழுவிய பின்பு, முகக்கவசத்தையும் அவர்கள் அணிய வேண்டும்
07:05 வெளிப்படுத்தப்பட்ட பாலை குழந்தைக்கு பதப்படுத்தல் கொடுக்கவேண்டும்.
07:11 வெளிப்படுத்தப்பட்ட பாலின் சேகரிப்பு மற்றும் கொடுத்தல் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும்.
07:18 தாய் குணமடைந்த பின் மீண்டும் தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
07:24 பாதிக்கப்பட்ட சில தாய்மார்கள் பாலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உடல் நலக்குறைவுடன் இருக்கலாம்
07:29 இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு ஊட்டமளிக்க வேறு வழிகளை முயற்சிக்கவும்.
07:35 தாய்ப்பால் ஒரு நன்கொடையாக, தாய்ப்பால் வங்கியில் கிடைக்கிறதா என்று பார்க்கவும்.
07:41 தாய் குணமடையும் வரை குழந்தைக்கு நன்கொடையாளர் அளிக்கும் தாய்ப் பாலை கொடுங்கள்.
07:47 நன்கொடையாக தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால், தாய் குணமடையும் வரை வெட் நர்சிங்கை முயற்சிக்கவும்.
07:56 வெட்-நர்சிங் என்பது அந்த குழந்தையின் தாயில்லாத, வேறொரு பெண் தாய்ப்பால் கொடுப்பதை அனுமதிப்பதாகும்.
08:03 வெட்-நர்சிங் சாத்தியமில்லை என்றால், குழந்தைக்கு விலங்குகளின் பாலை கொடுக்கவும்.
08:11 விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் பாலை கொதிக்க வைக்கவும்.
08:16 இவை குறித்து உங்கள் சுகாதார வழங்குநரின் கருத்தை கேளுங்கள்.
08:23 பவுடர் பால்,
08:25 பீடிங் பாட்டில்கள்
08:27 மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் அல்லது சிலிகான் முலைக்காம்புகளை பயன்படுத்தவேண்டாம்.
08:32 குணமடைந்த பின் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க தாய்க்கு உதவுங்கள்.
08:38 மற்றொரு முக்கியமான நடைமுறை தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தோலுடன் தோல் தொடர்பு.
08:46 தாய்க்கு COVID-19 இருந்தாலும் குழந்தை பிறந்த உடனேயே இது தொடங்க வேண்டும்.
08:53 இது தாய்ப்பாலூட்டுவதைத் தொடங்க உதவும்.
08:58 கங்காரு தாய் பராமரிப்பு பகல் மற்றும் இரவு முழுவதும் செய்யப்பட வேண்டும்.
09:04 தாய்ப்பால் மற்றும் தோலுடன் தோல் தொடர்பு குழந்தைகளில் இறக்கும் அபாயத்தை குறைக்கிறது.
09:12 அவை உடனடி மற்றும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டு நன்மைகளை வழங்குகின்றன.
09:20 தாய்ப்பாலூட்டுதல் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
09:27 இந்த நன்மைகள் தொற்றுநோயால் ஏற்படும் அபாயங்களை விட கணிசமாக அதிகம் ஆகும்.
09:34 கடைசியாக, எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
09:42 குழந்தையிடம் தென்படுகின்ற எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
09:48 அவர்கள் ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
09:54 இந்த டுடோரியலில் உள்ள வழிகாட்டுதல்கள் இப்போது கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
10:01 புதிய சான்றுகள் வரும் பட்சத்தில், சில பரிந்துரைகள் மாறக்கூடும்.
10:08 அரசாங்கத்தின் சமீபத்திய விதிமுறைகளின்படி இந்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தவும்.
10:14 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி

Contributors and Content Editors

Jayashree