BOSS-Linux/C2/Synaptic-Package-Manager/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில்
00:10 BOSS Linux 3.4.2 ல் ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜரை கொண்டு அப்ளிகேஷன்களை நிறுவ கற்போம்
00:18 இங்கே நான் பயன்படுத்துவது
00:20 ஜினோம் என்விரான்மென்ட் டெஸ்க்டாப் உடன் BOSS Linux 3.4.2 .
00:26 ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்த மேலாளர் அனுமதி வேண்டும்.
00:32 சரியாக வேலைசெய்யும் இன்டர்நெட் இணைப்பும் தேவை.
00:36 முதலில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை திறக்கலாம்
00:41 விண்டோவை minimize செய்கிறேன். BOSS desktop ஐ இங்கு காணலாம்.
00:48 இப்போது செல்க Applications, System Tools, Administration.
00:56 பின் Synaptic Package Manager மீது க்ளிக் செய்க
01:00 இப்போது admin password ஐ கேட்கும் ஒரு authentication dialog box தோன்றுகிறது
01:06 admin password ஐ கொடுத்து எண்டரை அழுத்தக.
01:11 முதல்முறை Synaptic Package Manager ஐ பயன்படுத்தும்போது, ஒரு introduction dialog box தோன்றுகிறது.
01:19 Synaptic Package Manager ஐ பயன்படுத்துவதற்கான தகவலை இந்த dialog box கொண்டுள்ளது
01:25 proxy network ல் வேலை செய்கிறீர்கள் எனில் ஒரு application அல்லது package ஐ நிறுவுவதற்கு Synaptic Package Manager ல் Proxy ஐ configure செய்யவும் .
01:36 இல்லையெனில் இந்த proxy configuration setting ஐ தவிர்க்கவும்
01:41 இதை செய்ய, Synaptic Package Manager விண்டோவிற்கு வரவும்.
01:47 இப்போது Setting க்கு சென்று Preferences மீது க்ளிக் செய்க
01:54 Preferences விண்டோவில் பல tabகள் உள்ளன.
01:58 proxy settingகளை configure செய்ய Network tab மீது க்ளிக் செய்க.
02:03 Proxy Server ல் இரு தேர்வுகள் உள்ளன– Direct Connection to the internet மற்றும்
02:09 Manual Proxy Configuration
02:12 நான் Manual Proxy Configuration ஐ பயன்படுத்துகிறேன்.
02:17 தேவையான தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் பின் Authentication பட்டன் மீது க்ளிக் செய்க.
02:23 HTTP Authentication விண்டோ திரையில் தோன்றுகிறது.
02:28 தேவையெனில் username மற்றும் password ஐ உள்ளிட்டு OK மீது க்ளிக் செய்க
02:33 இப்போது மாற்றங்களை பொருத்த Apply மீது க்ளிக் செய்க.
02:37 பின் விண்டோவை மூட OK மீது க்ளிக் செய்க.
02:42 இந்த tool ஐ பயன்படுத்த கற்க, உதாரணமாக இப்போது vlc player ஐ நிறுவுகிறேன்.
02:49 Synaptic Package Manager ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், packageகளை reload செய்ய வேண்டும்.
02:57 அதை செய்ய, tool bar ல் Reload பட்டன் மீது க்ளிக் செய்க.
03:02 இது சில நிமிடங்கள் எடுக்கலாம்.
03:06 இங்கே அந்த packageகள் இணையம் வழியே பரிமாற்றப்பட்டு update செய்யப்படுவதைக் காணலாம்.
03:14 reloading முடிந்தவுடன், tool bar ல் உள்ள quick search box க்கு சென்று டைப் செய்க vlc
03:23 இங்கே அனைத்து packageகளும் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
03:28 vlc packageகளுக்கு அடுத்துள்ள check box மீது க்ளிக் செய்க.
03:33 இப்போது தோன்றும் menu bar ல் Mark for installation மீது க்ளிக் செய்க.
03:39 repository packageகளின் பட்டியலைக் காட்டும் ஒரு dialog box தோன்றுகிறது.
03:45 தானாக அனைத்து dependencyகளையும் குறியிட Mark பட்டன் மீது க்ளிக் செய்க.
03:51 tool bar க்கு சென்று Apply பட்டன் மீது க்ளிக் செய்க.
03:56 நிறுவப்பட வேண்டிய packageகளின் தகவலைக் காட்டும் ஒரு Summary விண்டோ தோன்றுகிறது.
04:02 நிறுவலை ஆரம்பிக்க Apply பட்டன் மீது க்ளிக் செய்க
04:07 நிறுவல் நேரமானது நிறுவப்படும் packageகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பொருத்தது.
04:16 நிறுவல் முடிந்தவுடன் Downloading Package File விண்டோ மூடப்படும்.
04:25 இப்போது vlc நிறுவப்பட்டதைக் காணலாம்.
04:29 Synaptic Package Manager விண்டோவை மூடவும்.
04:33 இப்போது, vlc player உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதா என சோதிப்போம்.
04:40 திரையை minimize செய்கிறேன், அதற்கு, செல்லவும் Applications, Sound & Video.
04:49 இங்கே பட்டியலில் vlc media player இருப்பதைக் காணலாம்.
04:54 அதாவது vlc வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
04:59 அதே போல, Synaptic Package Manager ஐ பயன்படுத்தி மற்ற applicationகளை நிறுவலாம்
05:06 சுருங்கசொல்ல.
05:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது-
05:10 Synaptic Package Manager ல் Proxy ஐ configure செய்தல்
05:14 Synaptic Package Manager ஐ பயன்படுத்தி ஒரு application அல்லது package ஐ நிறுவுதல்
05:20 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
05:24 அதை தரவிறக்கி காணலாம்.
05:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:36 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு இந்திய அரசின் MHRD, NMEICT ஆதரவளிக்கிறது.
05:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst