Arduino/C2/Introduction-to-Arduino/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time Narration
00:01 Introduction to Arduino. குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduinoகருவி,
00:12 Arduino வின் அம்சங்கள், Arduino boardன் கூறுகள்,
00:18 microcontrollers மற்றும் Ubuntu Linux OSல் Arduino IDEஐ நிறுவுவது.
00:26 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:31 Ubuntu Linux 14.04 operating system
00:36 மற்றும் Arduino IDE.
00:39 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்
00:45 இது Arduino board. ஆகும். Arduino UNO board என்பது Arduino திட்டத்தின் பிரபலமான மாறுபாடுகளில் ஒன்றாகும்.
00:53 இது பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது: ATMEGA328 microcontroller, Digital input/output pins,
01:02 Analog input pins மற்றும் USB power adapter.
01:08 USB power adapterboardஐ program செய்ய பயன்படுத்தலாம்
01:13 இது microcontroller ஆகும். இது பல மின்னணு சாதனங்களில் காணப்படுகிறது – சிறிய இசை சாதனம் முதல், சலவை இயந்திரங்கள் மற்றும் கார்கள் வரை.
01:25 ஒரு micro-controller என்றால் என்ன? ஒரு micro-controller என்பது ஒரு mini computer ஆகும்
01:31 அது ஒரு CPU i.e. the central processing unit, memory, system clock மற்றும் peripheralகளை கொண்டிருக்கிறது
01:41 Micro-controller ஒரு பணியை மட்டும் செய்யவும் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட applicationஐ மட்டும் execute செய்ய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
01:51 Micro-controller பயன்படுத்தப்படும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
01:56 இது பிரிண்டர்கள், கார்கள், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மோஷன் டிடெக்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
02:04 அடுத்து, Arduino இன் சில அம்சங்களைப் பார்ப்போம்.
02:09 Arduino IDE ஒரு open-source software ஆகும்
02:13 codeஐ எழுதி அதை physical boardக்கு upload செய்வது எளிது
02:19 programming language ஐ அதன் inbuilt functionகளுடன் கற்றுக்கொள்வது மிகவும் எளிது
02:25 அதை Windows, Mac Operating System மற்றும் Linuxல் run செய்யலாம். இந்த software ஐ எந்த Arduino board உடனும் பயன்படுத்தலாம்
02:35 அடுத்து, Arduino IDE ஐ எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம்.
02:40 நிறுவுதலுக்கு, www.arduino.cc வலைத்தளத்திற்கு செல்லவும்
02:48 Download இணைப்பை க்ளிக் செய்யவும்
02:51 Windows, Mac operating systems மற்றும் Linuxக்கு Arduinoவை தரவிறக்க பல்வேறு இணைப்புகள் உள்ளன
03:00 இந்த டுடோரியலைப் பதிவு செய்யும் நேரத்தில், எங்களிடம் Arduino பதிப்பு 1.6.9 உள்ளது. எதிர்காலத்தில் பதிப்பு மாறுபடலாம்.
03:10 Windows Operating Systemக்கு “Windows for non admin install”ஐ நிறுவ நான் பரிந்துரைப்பேன்
03:18 இப்போது, Linux Operating Systemல் Arduinoஐ எவ்வாறு நிறுவுவது என்று நான் உங்களுக்கு செயல் விளக்குகிறேன்
03:24 நான் Linux 64bit இணைப்பை க்ளிக் செய்கிறேன், ஏனெனில் என் கணினியின் கட்டமைப்பு 64- bit. ஆகும்
03:32 உங்கள் கணினியின் கட்டமைப்புக்கேற்ப, Linux 32-bit அல்லது 64-bit ஐ க்ளிக் செய்யவும்
03:39 Just Download. ஐ க்ளிக் செய்யவும். ஒரு dialog box திறக்கிறது. Save File. ஐ க்ளிக் செய்யவும்.
03:47 தரவிறக்குவதற்கு இது சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அது முடியும் வரை காத்திருக்கவும்
03:52 Downloads folderலில், தரவிறக்கப்பட்ட zip file உள்ளது. Zip folderல் இருந்து fileகளை extract செய்யவும்
04:02 இப்போது, Terminalலில் இருந்து Arduino IDEஐ தொடங்குவோம்
04:07 Terminalஐ திறக்க, CTRL +ALT + Tஐ அழுத்தவும்
04:12 cd Downloads. என டைப் செய்து, Downloads directory க்கு செல்லவும்
04:19 Arduino folder பெயரை காண, ls என டைப் செய்யவும்
04:23 இங்கு, எனது கணினியில் அது Arduino 1.6.9 என காட்டுகிறது
04:29 இப்போது directory ஐ Arduino 1.6.9க்கு மாற்றவும். டைப் செய்க: cd arduino 1.6.9
04:40 Fileகளின் பட்டியலை காண, ls என டைப் செய்யவும்
04:46 இந்த folderலில், Arduino IDE compilerகளுக்கு தொடர்புடைய பின்வரும் பல்வேறு fileகள் நம்மிடம் உள்ளன: Arduino backend files மற்றும் configuration files.
05:00 இப்போது, arduino executable file ஐ run செய்வோம். அதற்கு, டைப் செய்க: dot slash arduino . பின் Arduino IDEவை தொடங்க, Enterஐ அழுத்தவும்
05:16 நாம் Arduino IDE window வை காணலாம்
05:20 நான் Arduinoவை எனது கணினியின் USB portக்கு இணைத்துள்ளேன். இப்போது, இணைப்பை சரி பார்ப்போம்
05:27 Tools menuவை க்ளிக் செய்யவும். Arduino UNO board ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது என்பதை இது காட்டுகிறது.
05:36 Port menuவில், நாம் ஒரு port எண்ணை காணலாம்
05:41 இப்போது, Arduino IDEஐ மூடுகிறேன்
05:45 முதலில் Fileஐயும், பின் Closeஐயும் க்ளிக் செய்யவும்
05:49 Linux Operating System ல் Arduino வை நிறுவுவதற்கு மற்றொரு வழி, Terminalலில் உள்ள apt hyphen get command ஐ பயன்படுத்துவதாகும்
05:59 தூண்டப்படும் போது, sudo password ஐ enter செய்யவும்
06:03 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
06:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino கருவி, Arduino வின் அம்சங்கள், Arduino boardன் கூறுகள்,
06:17 microcontrollers மற்றும் Ubuntu Linux OSல் Arduino IDEஐ நிறுவுவது.
06:25 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
06:34 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:49 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
06:55 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்
07:03 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
07:07 ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
07:12 அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம். இது குழப்பங்களை குறைக்க உதவும்.
07:20 குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
07:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:38 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree