LibreOffice-Suite-Writer/C3/Using-search-replace-auto-correct/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:27, 17 December 2013 by Nancyvarkey (Talk | contribs)

Jump to: navigation, search

Resources for recording Search மற்றும் Replace Auto Correct

TIME NARRATION
00:00 LibreOffice Writer இல், Find and Replace , AutoCorrect அம்சங்கள் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:09 இந்த டுடோரியலில் கற்பது:
00:12 Find and Replace
00:14 spellcheker
00:15 AutoCorrect
00:17 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
00:26 Writer இல் “Find and Replace” button குறித்து கற்க துவங்கலாம்
00:32 இது முழு document இலும் text யை தேடுகிறது அல்லது தேடி மாற்றுகிறது.
00:36 உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
00:40 “resume.odt” file ஐ திறப்போம்.
00:44 இப்போது “Edit” option மீதும் பின் “Find and Replace” மீதும் சொடுக்கவும்.
00:51 மாற்றாக, standard tool bar இல் உள்ள button மீது சொடுக்கவும்.
00:56 ஒரு dialog box “Search for”, “Replace with” field களுடன் தெரிகிறது.
01:01 “Search for” field இல் நீங்கள் தேடும் text ஐ உள்ளிடவும்.
01:06 உதாரணமாக document இல் “Ramesh” வரும் இடங்களை காண வேண்டும்.
01:12 Search For field இல் “Ramesh” என டைப் செய்க.
01:15 “Find All” மீது சொடுக்கவும்
01:19 நம் document இல் “Ramesh” வரும் இடங்கள் அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
01:25 “Replace with” field இல் இந்த பெயரை மாற்ற விரும்பும் text ஐ உள்ளிடுக.
01:31 “Ramesh” ஐ "MANISH" ஆல் நம் document இல் மாற்ற வேண்டும்.
01:37 “Manish” என “Replace with” tab இல் type செய்வோம்.
01:41 இப்போது “Replace All” மீது சொடுக்கவும் .
01:44 நம் document இல் “Ramesh” என எழுதியுள்ள இடங்கள் அனைத்தும் “Manish” என மாற்றப்படுகின்றன.
01:51 dialog box இன் கீழ், “More options ” button ஐ காணலாம். அதன் மீது சொடுக்கவும்.
01:57 “More options” button இல் குறிப்பாக பல "Find and Replace" option கள் உள்ளன.
02:03 option கள் பலவிதம். “Backwards” என்பது text யை document இன் பின் நோக்கி தேடுகிறது; “Current selection only” எனில் தேர்ந்தெடுத்த text இல் மட்டுமே தேடுகிறது.
02:15 “Regular expressions”, “Search for Styles” மற்றும் சில மேம்பட்ட option களும் உண்டு.
02:26 dialog boxயின் வலது பக்கம் இன்னும் மூன்று option கள் உண்டு .
02:31 அவை “Attributes”,”Format” மற்றும் “No Format”.
02:36 அவை பயனர்களுக்கு மேம்பட்ட find and replace option களை அளிக்கின்றன.
02:41 இதை மூடலாம்.
02:44 மேம்பட்ட tutorial களில் மேலும் காணலாம்..
02:48 “Find and Replace” ஐ கற்றோம்; Writer இல் “Spellcheck” ஐ பயன்படுத்தி சொற்களை திருத்துவதை பார்க்கலாம்.
02:57 முழு document , தேர்ந்தெடுத்த text இல் Spellcheck ஐ பயன்படுத்தி வழக்கமாக நிகழும் சொற்பிழைகளை சரி செய்யலாம்.
03:05 spellcheck நடப்பு cursor இடத்தில் துவங்கி document அல்லது தேர்வின் முடிவுக்கு செல்லும்.
03:12 பின் spellcheck ஐ document இன் ஆரம்பத்தில் இருந்து தேடவும் சொல்லலாம்.
03:17 Spellcheck சொற்களில் தவறுகளை தேடுகிறது. மேலும் தெரியாத சொற்களை பயனரின் அகராதி ஒன்றில் சேர்க்க option தருகிறது.
03:26 இது எப்படி என்று காண்போம்.
03:29 spell check அம்சம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமானது.
03:33 உதாரணமாக, menu bar இல் “Tools” option மீதும், பின் “option கள்” மீதும் சொடுக்கவும்
03:39 வரும் dialog boxஇல் “Language Settings” option மீதும், கடைசியாக “Languages” மீதும் சொடுக்கவும்.
03:47 “User interface” தேர்வின் கீழ் default option “English USA” என உள்ளதா என்று உறுதி செய்க.
03:56 அதன் கீழுள்ள கீழ் அம்புக்குறி மீது சொடுக்கி “Locale setting” பின் “English USA” option மீது சொடுக்கவும்.
04:03 இப்போது “default languages for documents” தலைப்பின் கீழ் “Western” field இல் default மொழி “English India” என இருக்க வேண்டும்.
04:12 “English India” க்கு சொல்திருத்திக்கு தேவையான அகராதி இல்லாமல் இருக்கலாம். ஆகவே மொழியை “English USA” என மாற்றுக.
04:21 “Western” field இல் கீழ் அம்புக்குறி மீதும், பின் “English USA” option மீதும் சொடுக்கவும்.
04:27 கடைசியாக “OK” ஐ சொடுக்கவும்.
04:31 இப்போது “English USA” மொழிக்கு spellcheck அம்சம் எப்படி செயலாகிறது என்று பார்க்கலாம்,
04:38 “Spelling and Grammar” அம்சத்தை காண “AutoSpellCheck” option செயலில் உள்ளதா என உறுதி செய்க.
04:45 செயலில் இல்லையானால் toolbar இல் “AutoSpellCheck” button மீது சொடுக்கவும்
04:52 நம் “resume.odt” file இல் “Mother’s Occupation” க்கு “housewife” என்பதற்கு “husewife” என தவறான சொல்லை எழுதி spacebar ஐ அழுத்துவோம்.
05:05 தவறான சொல்லுக்கு கீழ் சிவப்பு வரி தோன்றுகிறது.
05:10 cursor ஐ “husewife” மீது வைத்து standard tool bar இல் “Spelling and Grammar” சின்னம் மீது சொடுக்கவும்
05:18 அந்த சொல்லை “Not in dictionary” field இல் பார்க்கிறோம்.
05:22 தவறான சொல் தொடர் சிவப்பாக இருக்கிறது. மேலும் சரியான சொல்லுக்கு பரிந்துரைகள் “Suggestions” பெட்டியில் உள்ளன. அதிலிருந்து சொல்லை தேர்வு செய்ய முடியும்.
05:34 பரிந்துரை பெட்டியில் “housewife” மீதும், பின் “Change” button மீது சொடுக்கவும்,
05:40 தோன்றும் dialog boxஇல் “OK” மீது சொடுக்கவும்.
05:44 இப்போது document இல் சரியான சொல் இருக்கிறது.
05:48 மாற்றங்களை நீக்குவோம்.
05:50 standard tool bar இல் உள்ள இன்னொரு option “AutoCorrect” ஐ காணலாம்.
05:56 “AutoCorrect” Spellcheck இன் நீட்சிப்பயனாகும்.
06:00 menu bar இல் “Format” option இல் கீழிறங்கும் மெனுவில் AutoCorrect உள்ளது.
06:06 தானியங்கியாக அமைக்கும் option கள் படி AutoCorrect... file ஐ ஒழுங்கு செய்கிறது.
06:12 இவை “AutoCorrect options” ஐ சொடுக்குவதன் மூலம் கிடைக்கிறது.
06:18 AutoCorrect dialog box திறக்கிறது.
06:21 text ஐ எழுதும் போதே AutoCorrect தானியங்கியாக திருத்துகிறது.
06:26 திருத்தம் செய்வது “options” tab இல் அமைக்கும் option களை ஒட்டியே.
06:32 AutoCorrect option கள் பல உண்டு. உதாரணமாக: “Delete spaces at the end and beginning of paragraph”, “Ignore double spaces” போல மேலும் பல.
06:44 இவை வேலை செய்வதை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.
06:48 நம் resume file இல், ஏதேனும் text யை சொற்களின் இடையே ஒரு இடைவெளி விட்டும், மேலும் சில இடங்களில் இரட்டை, அல்லது மூன்று இடைவெளிகள் விட்டும் டைப் செய்யலாம்.
07:02 இப்போது முழு text யையும் தேர்ந்தெடுக்கவும்.
07:05 menu bar இல் “Format” button மீது சொடுக்கவும்.
07:09 “AutoCorrect” கீழிறங்கும் menu மீது சொடுக்கவும். கடைசியாக “AutoCorrect options” sub menu மீதும் சொடுக்கவும் .
07:17 “options” tab இன் மீது சொடுக்கவும்
07:20 “Ignore double spaces” இன் பெட்டியில் குறியிட்டு “OK” ஐ சொடுக்கவும்.
07:26 அடுத்து டைப் செய்யும் text இல் இரட்டை இடைவெளிகளை விட முடியாது. தானியங்கியாக தடுக்கப்படும்.
07:34 cursor ஐ ”MANISH” என்ற பெயருக்கு அடுத்து வைக்கலாம். இப்போது “spacebar” ஐ இரு முறை அழுத்துவோம்.
07:41 cursor ஒரு இடம் மட்டுமே நகருகிறது, text இல் இரட்டை இடைவெளியை அனுமதிப்பதில்லை.
07:48 ஒரு இடைவெளிக்குப்பின் “KUMAR” என இரண்டாம் பெயரை எழுதுக.
07:53 AutoCorrect ஆல் ஒரு சொல்லின் சுருக்கத்தை நீட்டி எழுதவும் முடியும்.
08:02 அது நீண்ட சொற்களை சுலபமாக உள்ளிட உதவுகிறது.
08:09 உதாரணமாக, நம் resume.odt file இல் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களோ சொற் கோவையோ இருக்கலாம்.
08:19 இவற்றை அடிக்கடி type செய்வது தொல்லையாக இருக்கலாம்.
08:24 ஒரு வேளை அடிக்கடி, “This is a Spoken Tutorial Project” என நம் document இல் எழுத வேண்டி இருந்தால்,
08:31 நமக்கு தேவையான text யை உடனடியாக தரும் சுருக்கத்தை உருவாக்கலாம்.
08:38 “stp” போன்ற சுருக்கங்கள் எப்படி “Spoken Tutorial Project” என மாற்றப்படலாம் என்று பார்க்கலாம்.
08:46 இப்போது menu bar இல் “Format” option , “AutoCorrect” பின் “AutoCorrect options” மீது சொடுக்கவும்.
08:57 தோன்றும் dialog boxஇல் “Replace” tab இன் மீது சொடுக்கவும்.
09:02 “English USA” நம் option மொழியாக இருக்கிறதா என சோதித்துக்கொள்ளுங்கள்.
09:06 இப்போது “Replace” field இல் மாற்ற வேண்டிய சுருக்கத்தை “stp” என உள்ளிடுவோம்.
09:14 “With” field இல் மாற்றி அமைக்க text ஐ “Spoken Tutorial Project” என உள்ளிடுவோம்.
09:20 dialog boxஇல் “New” மீது சொடுக்கவும்.
09:24 மாற்றுப்பட்டியலில் இது தோன்றுவதை காணலாம்.
09:28 இப்போது “OK” மீது சொடுக்கவும் .
09:31 இப்போது text யை “This is a stp” என எழுதி spacebar ஐ அழுத்திய உடனே “stp” என்ற சுருக்கம் “Spoken Tutorial Project”என மாற்றப்படுகிறது.
09:43 இது document இல் அடிக்கடி நீண்ட சொற்கள் வருமானால் மிகவும் பயனாகும்.
09:49 மாற்றங்களை நீக்குவோம்.
09:52 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:57 சுருங்க சொல்ல நாம் கற்றது:
10:00 Find and Replace
10:01 Spell check
10:02 AutoCorrect
10:04 முழுமையான பயிற்சி
10:06 Writer இல் பின் வருவதை எழுதவும்: - ”This is a new document. The document deals with find and replace”.
10:15 இப்போது “Find and Replace” ஆல் “document” என்ற சொல்லை கண்டுபிடித்து “file” என மாற்றவும்.
10:21 “text” என்பதை ' t x t” என உங்கள் document இல் மாற்றவும்.
10:27 Spellcheck அம்சத்தை பயன்படுத்தி சொல்லை “text” என சரியாக்கவும்.
10:31 English(USA) ஐ உங்கள் default மொழியாக்கவும்.
10:36 AutoCorrect அம்சத்தை பயன்படுத்தி, “This is LibreOffice Writer” என்பதற்கு “TLW” என சுருக்கம் அமைத்து அது வேலை செய்வதை காண்க.
10:48 கீழ் வரும் தொடுப்பில் விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
10:55 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
10:59 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணைய பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
11:09 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
11:15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:27 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:38 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst