LibreOffice-Suite-Base/C2/Enter-and-update-data-in-a-form/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:30, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial லில் எப்படி...
00:09 form இல் data வை உள்ளிடுவது, updateசெய்வது என காணலாம்.
00:12 கடைசி tutorial லில் form control களை form இல் சேர்ப்பதை பார்த்தோம்.
00:19 இந்த tutorial லில், form இல் data வை உள்ளிடுவது, ஒரு படிவத்தால் form data வை மேம்படுத்துவது குறித்து காணலாம்.
00:27 அதற்கு முன் நம் form design இல் இன்னும் மூன்று மாறுதல்களை செய்வோம்.
00:36 முதலில் LibreOffice Base program திறந்து இல்லை எனில், துவக்குவோம்.
00:51 நம் Library தரவுத்தளத்தை திறப்போம்.
00:54 File menu விலிருந்து Open ஐ சொடுக்கி ....
00:58 இப்போது Library database இல் இருக்கிறோம்.
01:02 'Books Issued to Members' form ஐ திறக்கலாம்.
01:07 இதற்கு, இடது panel இல் forms icon ஐ சொடுக்கலாம். பின் வலது panel இல் 'Books Issued to Members' form இன் மீது வலது சொடுக்கி...
01:20 பின் edit மீது சொடுக்கவும்.
01:23 இப்போது form design window வில் இருக்கிறோம்.
01:28 முதலில், form ஐ மறு அளவு செய்வோம்.... கச்சிதமாக, அச்சுறுத்தாமல் தோன்ற...
01:36 இதற்கு நம் form window வின் உயர, அகலத்தை குறைக்கலாம்.
01:42 form window வின் மேல் மற்றும் பக்கவாட்டில் சொடுக்கி - இழுத்து - விடுதல் மூலம் இதை செய்யலாம்.
01:51 அடுத்து, நம் form இன் தலைப்பு font ஐ மாற்றலாம்.
01:57 மேலே உள்ள Formatting toolbar இல் Arial Black, அளவு 12என அமைப்போம்... <pause>
02:12 இறுதியாக, form control களின் tab வரிசையை பார்க்கலாம்.
02:19 இது form control கள் இடையே விசைப்பலகையால் நகர ஒரு வரிசையை அமைக்க உதவுகிறது.
02:29 உதாரணமாக மேலிருந்து கீழ்....
02:33 இது tab order எனப்படும்.
02:37 இப்போது, Base தானியங்கியாக form control களின் வரிசையை மேலிருந்து கீழாக ஒரு form இல் வைக்கிறது.
02:47 ஆனால் சில text boxகளை நீக்கினோம். இரண்டு புதிய List boxகளையும் நான்கு buttonகளை சேர்த்தோம்; ஆகவே வரிசை மாறி விட்டிருக்கலாம்.
03:00 ஆகவே இப்போது அதை சரி செய்யலாம்.
03:05 வழக்கமாக window வின் அடியில் காணப்படும் form Design toolbar இல் iconகளில் உலவுவோம்.
03:16 'Activation order' என்றூ tooltip சொல்லும் icon ஐ கண்டுபிடிப்போம்.
03:25 இந்த icon மீது சொடுக்குவோம்.
03:29 இப்போது, 'Tab Order' என்று தலைப்பிட்ட pop up window ஒன்றை காணலாம்.
03:38 form control களை வரிசை செய்ய ஒன்று சொடுக்கி- இழுத்து- விடலாம் அல்லது....
03:46 'Move up', 'Move down' button களை பயன்படுத்தலாம்.
03:52 ஆகவே tab order ஐ இந்த படத்தில் காண்பது போல அமைக்கலாம்.... <pause>
04:04 முடித்துவிட்டோம்; மாற்றங்களை சேமிக்க Ok மீது சொடுக்கலாம்.
04:12 சரி, Control S ஐ அழுத்தி நம் form ஐ சேமிக்கலாம்.
04:19 பின் form window வை மூடலாம்.
04:24 இறுதியாக நம் form design ஐ முடித்து விட்டோம்.
04:29 இப்போது, நம் form ஐ சோதிக்கலாம்.
04:32 main Base window வின் 'Books Issued to Members' form ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.
04:41 இப்போது form data வை உள்ளிடும் பாங்கில் திறந்துள்ளது
04:47 தலைப்பு 'form to track Books issued to Members' என்று இருப்பதை கவனிக்கவும்.
04:54 மேலும் bookIds மற்றும் memberIds க்கு பதிலாக புத்தக தலைப்புகள், member பெயர்களை காண்கிறோம்.
05:03 அத்துடன் இது BooksIssued table யின் முதல் பதிவேடு; 'An Autobiography' என்பது book title எதிரில் highlight ஆகியுள்ளதை காணலாம்.
05:15 Member name எதிரில் 'Nisha Sharma' highlight ஆகியுள்ளது.
05:21 ஏனைய field களையும் கூட பார்க்க முடிகிறது.
05:25 இப்போது கீழே உள்ள form Navigation toolbar சின்னங்களை பயன்படுத்தி எல்லா பதிவேடுகள் இடையேயும் போகலாம். <pause>
05:45 இப்போது இரண்டாவது பதிவேட்டுக்கு போகலாம்.
05:48 member Jacob Robin 'Macbeth' புத்தகத்தை வாங்கிச்சென்றதை காணலாம். இப்போது அந்த புத்தகத்தை திருப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
06:01 ஆகவே , இந்த தகவலை இந்த record இல் புதுப்பிப்போம்.
06:07 இதற்கு, திருப்பிக் கொடுத்த தேதியை type செய்வோம்- உதாரணமாக 7/7/11
06:17 Checked In field இல் குறியிடுவோம்.
06:20 தகவலை சேமிக்க, சேர்த்திருக்கும் 'Save Record' button ஐ அழுத்துவோம்.
06:30 button இப்போது சாம்பல் நிறமாகிவிட்டது; அதாவது அதை இப்போது பயன்படுத்த இயலாது.
06:37 ஆனால் record ஐ திருத்தினால் button மீண்டும் active ஆகிவிடும்.
06:45 சரி, 'Undo changes' button ஐ சோதிக்கலாம்.
06:50 இதற்கு, record இல் புத்தக தலைப்பு 'Conquest of Self' மீது சொடுக்கி Actual Return Date field இல் 5/7/11 என உள்ளிடுவோம்.
07;06 'Save record' button, 'Undo changes' button இரண்டுமே active ஆனதை காணலாம்.
07:15 இப்போது, 'Undo Changes' button மீது சொடுக்கி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
07:22 கடைசியாக செய்த மாற்றம் செயல் நீக்கப்பட்டது. 'Macbeth' இப்போது 'Conquest of Self' க்கு பதில் முன்னிலையில் இருக்கிறது. Actual return date 7/7/11 என்றிருக்கிறது.
07:37 நல்லது; இப்போது 'Delete Record' button ஐ சொடுக்கலாம் அதாவது இரண்டாம் பதிவேட்டை நீக்குகிறோம்.
07:47 Base நீக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறது; ஆகவே அது உறுதிப்படுத்தலை கேட்கிறது.
07:55 இப்போதைக்கு மேலே சென்று, 'Yes' button ஐ சொடுக்கலாம்.
08:02 பதிவேடு நீக்கப்பட்டதை காணலாம். அந்த இடத்தில் அடுத்த பதிவேடு தெரிகிறது.
08:13 இறுதியாக, புதிய பதிவேடு ஒன்றை form இன் கடைசி button ஐ சொடுக்கி சேர்க்கலாம்; அதன் பெயர் 'New record'.
08:22 சில மதிப்புகளை type செய்யலாம்.
08:26 IssueId ஒரு தான்தோன்றி field, அதை விட்டுவிடலாம்.
08:33 இங்கே data வை படத்தில் உள்ளபடி சேர்க்கலாம்......<pause>
08:42 உள்ளீடுகளை சேமிக்க Save Record button ஐ சொடுக்கலாம்.
08;47 இதோ.....
08:48 data வை உள்ளிட்டு மேம்படுத்தி form ஐ சோதித்தும் விட்டோம்.
08:54 இதோ ஒரு பயிற்சி. உறுப்பினர்கள் தகவலை காட்ட ஒரு form ஐ Design செய்யவும்.
09:00 form ஐ கச்சிதமாக அமைக்கவும்.
09:03 font ஐ bold ஆக்குக.
09:07 Save மற்றும் New record buttons களை சேர்க்க.
09:10 இத்துடன் LibreOffice Base இல் data வை உள்ளிடுதல், update செய்தல் மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
09:17 சுருங்கச்சொல்ல கற்றது:
09:20 ஒரு form இல் data வை உள்ளிடுதல், update செய்தல்
09:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ... வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Priyacst