Firefox/C2/Introduction/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:56, 29 November 2012 by 10.102.152.163 (Talk)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:05 இதில் பின்வருவனவற்றை கற்போம்.
00:10 Mozilla Firefox என்பது என்ன?
00:12 ஏன் Firefox?
00:14 பதிப்பு, கணிணி தேவைகள், தரவிறக்கம், Firefox-சை நிறுவல், இணையதளத்திற்கு செல்வது.
00:21 Mozilla Firefox - சாதாரணமாக Firefox, இலவச, open source web browser ஆகும்.
00:27 உபுண்டு லினக்ஸ் க்கான default web browser Internet இல் உலவ உதவுகிறது.
00:33 இந்த browser web pages களை பார்க்க, அவற்றில் உலவ உதவுகிறது.
00:39 search engine களான Google,Yahoo Search அல்லது Bing மூலம் வலை பக்கங்களைத் தேடவும் உதவுகிறது.
00:47 இலாப நோக்கில்லா நிறுவனமான Mozilla Foundation volunteer programmer களால் Firefox உருவாக்கப்பட்டது.
00:54 மேலதிக விபரங்களுக்கு mozilla.org இணையதளத்தைப் பார்க்கவும்.
00:59 Firefox browser - Windows, Mac OSX, மற்றும் Linux இயங்குதளங்களில் இயங்கும்.
01:05 உபுண்டுவில் உள்ள பிரபல browser கள் Google Chrome, Opera மற்றும் Konqueror போன்றவை.
01:12 இந்த tutorialல் நாம் உபுண்டு10.04 இல் Firefox 7.0 பதிப்பை பயன்படுத்துகிறோம்.
01:20 Firefox - வேகம், privacy மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதனால் இணைய உலவலை மேம்படுத்துகிறது.
01:27 இதில் tabbed windows, built-in spell check, pop-up blocker, integrated வலைதேடல், Phishing மோசடி பாதுகாப்பு போல பல வசதிகளுள்ளன.
01:39 Firefox - ... graphics மற்றும் பக்கங்களை அதிவேகமாக ஏற்றி web browsing ஐ துரிதமாக்குகிறது.
01:45 இது மோசடி இணைய தளங்களில் இருந்து பல்வகைப்பட்ட பாதுகாப்பு மற்றும் privacy option களோடு, ஸ்பைவேர், வைரஸ், டிரோஜான்கள், மற்றும் மால்வேர்களிலிருந்து பாதுகாக்கிறது.
01:56 மேலும் இதில் தனிப்பயனருக்கான add-on கள், இலகுவில் நிறுவக்கூடிய ஆயிரக்கணக்கான theme கள் போன்றவை பயனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
02:06 Fedora, Ubuntu, Red Hat, Debian மற்றும் SUSE போன்ற லினக்ஸ் OS - இயங்குதளங்களில் Firefoxசை இயக்கத் தேவையான கணிணித் தேவைகள் கீழ்வருமாறு.
02:16 உபுண்டு 10.04 ல் Firefox சை இயக்க கீழுள்ள libraries அல்லது packages தேவைப்படும்.
02:24 GTK+ 2.10 அல்லது அதற்கும்மேல்
02:29 GLib 2.12 அல்லது அதற்கும்மேல்
02:32 libstdc ++ 4.3 அல்லது அதற்கும்மேல்
02:37 Pango 1.14 அல்லது அதற்கும்மேல்
02:40 X.Org 1.7 அல்லது அதற்கும்மேல்
02:44 மேலும் இதற்கான hardware Pentium 4 அல்லது அதற்கும் மேல், 512MB RAM மற்றும் 200MB கொள்ளவுள்ள hard drive தேவைப்படும்.
02:55 முழுமையான கணிணித் தேவைகளுக்கு இந்தப்பக்கத்திலுள்ள Firefox இணையதளத்துக்குச் செல்லவும்.
03:32 இந்தப்பக்கத்திலுள்ளபடி mozilla.com அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்லவதன் மூலம் Mozilla Firefoxசை தரவிறக்கி நிறுவலாம்.
03:11 இங்கே உங்களுக்கு Firefoxசின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும்.
03:15 மாறாக, பச்சை நிற பகுதியில் காணப்படும் ‘All Systems and Languages" இணைப்பை சொடுக்கி மேலும் தெரிவுகளைப் பெறலாம்.
03:23 Mozilla, 70க்கும் அதிக மொழிகளில் தன் Firefox சேவைகளை தருகிறது.
03:28 இந்தி, வங்காளம் போன்ற பல்வேறு மொழி பதிப்புக்களை இங்கே தரவிறக்கலாம்.
03:33 Windows, Mac அல்லது Linux, icon கள் மீது சொடுக்கி, வெவ்வேறு இயங்குதளங்களில் இயங்கும் வகையை தரவிறக்கலாம்.
03:42 உபுண்டு லினக்ஸ் பயன்பாட்டுக்கு முதலில் file ஐ சேமிக்க இடத்தை தேர்வு செய்யவும் (முன்னிருப்பு, கணிணியின் ஆரம்ப அடைவில் உள்ள Downloads அடைவு).
03:51 இப்போது “Save File”னைத் தேர்ந்தெடுத்து, மேல்வரும் சாளரத்தில் “Ok” பொத்தானை சொடுக்கவும்.
03:58 Firefox archive உங்கள் ஆரம்ப directory இல் உள்ள Downloads directory இல் சேமிக்கப்படும்.
04:06 Terminal Window வை திறந்து: cd ~/Downloads என்ற ஆணை தந்து Downloads அடைவுக்கு செல்க.
04:17 இப்போது Enterஐ அழுத்தவும்.
04:19 ": tar xjf firefox-7.0.1.tar.bz2" என்ற ஆணையை தந்து, தரவிறக்கிய பைலில் உள்ளவற்றை extract செய்யலாம்.
04:35 இப்போது Enterஐ அழுத்தவும்.
04:38 இப்போது Firefox 7.0னை இயக்கத் தேவையான பைல் களை extract செய்யும்.
04:44 Terminal Window ஐ திறந்து cd firefox என்ற ஆணையை தந்து Firefox directory க்கு செல்லலாம்.
04:52 இப்போது Enterஐ அழுத்தவும்.
04:54 இதனால் Firefox அடைவுக்கு செல்லலாம்.
04:58 Firefox browserஐ துவங்க ./firefox என்ற ஆணையை தந்து Enterஐ அழுத்தவும்.
05:06 ஒருவேளை தங்களது நடப்பு directory, home directory ஆக இல்லாதிருந்தால், அதற்கு மாற்றாக, Firefox-சை துவங்க கீழ்கண்ட ஆணையை தரவும்.
05:15 Tilde Downloads/firefox/firefox
05:21 default homepage ஐ நிறுவுவதை பின்னால் அறியலாம்.
05:25 இப்போதைக்கு, உதாரணத்துக்கு, Rediff.com இணையதளத்திற்கு சென்று புதிய செய்திகளையும் தகவல்களையும் பார்க்கலாம்.
05:33 menu bar க்கு கீழுள்ள Address bar இல் www.rediff.com என்று தட்டச்சவும்.
05:40 Rediff.com website இன் homepageஇன் உள்ளடக்கங்கள் தெரியவரும்.
05:47 இப்போது, இப்பக்கத்திலிருக்கும் பல்வேறு link கள் மூலம் அந்தந்த இணையபக்கங்களில் உள்ள தகவல்களை பார்வையிடலாம்.
05:53 தற்போது Headlines tab-பிலுள்ள முதல் link ஐ சொடுக்கலாம்.
05:58 இப்படி Firefoxசை பயன்படுத்தி பல இணைய பக்கங்களை பார்க்கலாம்.
06:05 எதிர்வரும் பயிற்சிகளில் மேலும் பல சிறப்பம்சங்களைப் பற்றி அறியலாம்.
06:12 http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial என்ற இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்..
06:16 Spoken Tutorial திட்டப்பணி பற்றிய சிறு குறிப்பைக் காணலாம்.
06:19 சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை download செய்தும் காணலாம்.
06:24 Spoken Tutorial Project குழுவினர் இணைந்து Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நிகழ்த்துகின்றனர்.
06:29 Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
06:33 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரிக்கு மின் மடல் அனுப்பவும்எழுதவும்.
06:39 Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.
06:44 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
06:51 இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
07:02 இந்த பயிற்சி நகல் Srividhya.S-ன் பங்களிப்பு.
07:08 எங்களோடு இணைந்திருப்பதற்கு நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst