Firefox/C2/Introduction/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:05 | இதில் பின்வருவனவற்றை கற்போம். |
00:10 | Mozilla Firefox என்பது என்ன? |
00:12 | ஏன் Firefox? |
00:14 | பதிப்பு, கணிணி தேவைகள், தரவிறக்கம், Firefox-சை நிறுவல், இணையதளத்திற்கு செல்வது. |
00:21 | Mozilla Firefox அல்லது சாதாரணமாக Firefox, இலவச, open source web browser. |
00:27 | உபுண்டு லினக்ஸ் க்கான default web browser... Internet இல் உலவ உதவுகிறது. |
00:33 | இந்த browser web pages களை பார்க்க, அவற்றில் உலவ உதவுகிறது. |
00:39 | search engine களான Google,Yahoo Search அல்லது Bing மூலம் வலை பக்கங்களைத் தேடவும் உதவுகிறது. |
00:47 | இலாப நோக்கில்லா நிறுவனமான Mozilla Foundation... volunteer programmer களால் Firefox உருவாக்கப்பட்டது. |
00:54 | மேலதிக விபரங்களுக்கு mozilla.org ஐ பார்க்கவும். |
00:59 | Firefox - Windows, Mac OSX, மற்றும் Linux இயங்குதளங்களில் இயங்கும். |
01:05 | உபுண்டுவில் உள்ள பிரபல browser கள் Konqueror மற்றும் Google Chrome, Opera போன்றவை. |
01:12 | இதில் பயனாவது Firefox 7.0 மற்றும் உபுண்டு 10.04 |
01:20 | Firefox - வேகம், privacy மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதனால் இணைய உலவலை மேம்படுத்துகிறது. |
01:27 | இதில் tabbed windows, built-in spell check, pop-up blocker, integrated வலைதேடல், Phishing மோசடி பாதுகாப்பு போல பல வசதிகளுள்ளன. |
01:39 | Firefox - ... graphics மற்றும் பக்கங்களை அதிவேகமாக ஏற்றி web browsing ஐ துரிதமாக்குகிறது. |
01:45 | இது மோசடி இணைய தளங்களில் இருந்து பல்வகைப்பட்ட பாதுகாப்பு மற்றும் privacy option களோடு, ஸ்பைவேர், வைரஸ், டிரோஜான்கள், மற்றும் மால்வேர்களிலிருந்து பாதுகாக்கிறது. |
01:56 | இதில் தனிப்பயனருக்கான add-on கள், இலகுவில் நிறுவக்கூடிய ஆயிரக்கணக்கான theme கள் பயனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. |
02:06 | Fedora, Ubuntu, Red Hat, Debian மற்றும் SUSE போன்ற லினக்ஸ் இயங்குதளங்களில் Firefoxசை இயக்கத் தேவையான கணிணித் தேவைகள் கீழ்வருமாறு. |
02:16 | உபுண்டு 10.04 ல் Firefox சை இயக்க கீழுள்ள libraries அல்லது packages தேவைப்படும். |
02:24 | GTK+ 2.10 அல்லது அதற்கும்மேல் |
02:29 | GLib 2.12 அல்லது அதற்கும்மேல் |
02:32 | libstdc ++ 4.3 அல்லது அதற்கும்மேல் |
02:37 | Pango 1.14 அல்லது அதற்கும்மேல் |
02:40 | X.Org 1.7 அல்லது அதற்கும்மேல் |
02:44 | hardware Pentium 4 அல்லது அதற்கும் மேல், 512MB RAM மற்றும் 200MB கொள்ளவுள்ள hard drive தேவைப்படும். |
02:55 | முழுமையான கணிணித் தேவைகளுக்கு Firefox இணையதளத்துக்குச் செல்லவும். |
03:02 | mozilla.com அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்வதன் மூலம் Mozilla Firefoxசை தரவிறக்கி நிறுவலாம். |
03:11 | இங்கே Firefoxசின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும். |
03:15 | மாறாக, ‘All Systems and Languages" இணைப்பை சொடுக்கி மேலும் தெரிவுகளைப் பெறலாம். |
03:23 | Mozilla, 70க்கும் அதிக மொழிகளில் தன் Firefox சேவைகளை தருகிறது. |
03:28 | இந்தி, வங்காளம் போன்ற பல்வேறு மொழி பதிப்புக்களை இங்கே தரவிறக்கலாம். |
03:33 | Windows, Mac அல்லது Linux, icon கள் மீது சொடுக்கி, வெவ்வேறு இயங்குதளங்களில் இயங்கும் வகையை தரவிறக்கலாம். |
03:42 | file ஐ சேமிக்க இடத்தை தேர்வு செய்யவும் (முன்னிருப்பு, கணிணியின் ஆரம்ப அடைவில் உள்ள Downloads அடைவு). |
03:51 | “Save File” ஐ சொடுக்கவும். “Ok” ஐ சொடுக்கவும். |
03:58 | Firefox archive ஆரம்ப directory இல் உள்ள Downloads directory இல் சேமிக்கப்படும். |
04:06 | Terminal ஐ திறந்து cd ~/Downloads என கொடுத்து Downloads அடைவுக்கு செல்க. |
04:17 | Enterஐ அழுத்தவும். |
04:19 | ": tar xjf firefox-7.0.1.tar.bz2" என கொடுத்து, தரவிறக்கிய file ஐ extract செய்யலாம். |
04:35 | Enterஐ அழுத்தவும். |
04:38 | இது Firefox 7.0 ஐ இயக்கத் தேவையான பைல் களை extract செய்யும். |
04:44 | cd firefox என கொடுத்து Firefox directory க்கு செல்லலாம். |
04:52 | Enterஐ அழுத்தவும். |
04:54 | இதனால் Firefox அடைவுக்கு செல்லலாம். |
04:58 | Firefox browserஐ துவங்க ./firefox என கொடுத்து Enterஐ செய்க. |
05:06 | ஒருவேளை நடப்பு directory, home directory ஆக இல்லாதிருந்தால், Firefox-சை துவங்க |
05:15 | Tilde /Downloads/firefox/firefox |
05:21 | default homepage ஐ நிறுவுவதை பின்னால் அறியலாம். |
05:25 | இப்போதைக்கு, உதாரணத்துக்கு, Rediff.com இணையதளத்திற்கு சென்று புதிய செய்திகளையும் தகவல்களையும் பார்க்கலாம். |
05:33 | menu bar க்கு கீழுள்ள Address bar இல் www.rediff.com என தட்டச்சவும். |
05:40 | Rediff.com website இன் homepageஇன் உள்ளடக்கங்கள் தெரியவரும். |
05:47 | இப்பக்கத்திலிருக்கும் பல்வேறு link கள் மூலம் அந்தந்த இணையபக்கங்களில் உள்ள தகவல்களை பார்வையிடலாம். |
05:53 | Headlines tab-பிலுள்ள முதல் link ஐ சொடுக்கலாம். |
05:58 | இப்படி Firefoxசை பயன்படுத்தி பல இணைய பக்கங்களை பார்க்கலாம். |
06:05 | எதிர்வரும் பயிற்சிகளில் மேலும் பல சிறப்பம்சங்களைப் பற்றி அறியலாம். |
06:12 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்.. |
06:16 | Spoken Tutorial திட்டப்பணி பற்றிய சிறு குறிப்பைக் காணலாம். |
06:19 | சிறந்த bandwidth இல்லாதிருந்தால் download செய்தும் காணலாம். |
06:24 | Spoken Tutorial திட்ட குழு Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:29 | இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர். |
06:33 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org |
06:39 | Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும். |
06:44 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. |
06:51 | மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
07:02 | தமிழாக்கம் Srividhya.S |
07:08 | நன்றி. |