GeoGebra-5.04/C2/Polynomials/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Polynomials குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, ஒரு variableன் polynomialகள், நேரியல் polynomialன் சாய்வு |
00:14 | polynomialகளின் டிகிரி, polynomialகளின் zeroக்கள், polynomialகளின் rootகள் |
00:23 | Remainder தேற்றம், polynomialகளின் காரணியாக்கம் |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:41 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனையாக GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
00:52 | முதலில் ஒரு polynomialஐ வரையறுப்போம் |
00:55 | பூஜ்ஜியம் அல்லாத coefficientகளுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட termகளைக் கொண்ட algebraic expression ஒரு polynomial ஆகும். |
01:03 | உதாரணத்திற்கு, x cube plus 3 x squared plus 2 x minus 5 ஒரு polynomial ஆகும் |
01:08 | நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன் |
01:13 | இந்த டுடோரியலில் polynomialகளை தீர்க்க நாம் input barஐ பயன்படுத்துவோம் |
01:18 | முதலில் ஒரு polynomialன் சாய்வுடன் ஆரம்பிக்கலாம். |
01:22 | input barல் டைப் செய்க, r அடைப்புக்குறிக்குள் x is equal to 3x minus 3 , பின் Enterஐ அழுத்தவும் |
01:31 | Algebra மற்றும் Graphics viewக்களில் நேரியல் polynomial காட்டப்படுகிறது |
01:36 | இப்போது டைப் செய்க, Slope அடைப்புக்குறிக்குள் r, பின் Enterஐ அழுத்தவும் |
01:42 | வரி மீதும் Algebra viewவிலும் rன் Slope காட்டப்படுகிறது |
01:47 | இப்போது நாம் ஒரு polynomialன் டிகிரியை வரையறுப்போம். |
01:51 | ஒரு polynomialலில் variableன் மிக உயர்ந்த power, polynomialன் டிகிரி ஆகும். |
01:57 | உதாரணத்திற்கு, p is equal to x raised to the power of 5 minus x raised to the power of 4 plus 3 |
02:04 | இந்த polynomial லில் டிகிரி '5' ஆகும் |
02:07 | Polynomialகளின் டிகிரியை கண்டறிய இன்னும் சில உதாரணங்களை செய்வோம். |
02:13 | input barல் டைப் செய்க, Degree. |
02:15 | polynomialன் இடத்தில் டைப் செய்க, 3x raised to the power of 7 plus 4x raised to the power of 6 plus x plus 9 |
02:25 | Enterஐ அழுத்தவும் |
02:27 | Polynomialன் டிகிரி Algebra viewவில் 7 என காட்டப்படுகிறது |
02:32 | இவ்வாறே, 5x raised to the power of 5 minus 4x squared minus 6ன் டிகிரி 5 ஆகும் |
02:42 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும் |
02:47 | இப்போது நான் polynomial ன் zeroக்களை பற்றி விளக்குகிறேன். p of x ன் zero, 'r' என்ற ஒரு எண்ணாகும். இங்கு p of r பூஜ்யத்திற்கு சமமாக இருக்கிறது |
02:59 | எல்லா objectகளையும் நீக்குவோம் |
03:02 | எல்லா objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + Aஐ அழுத்தி, பின் keyboard ல் Delete key ஐ அழுத்தவும் |
03:09 | Polynomialன் zeroக்களை கண்டுபிடிக்க, input barல் டைப் செய்க, p is equal to 5x squared minus 3x plus 7. பின் Enterஐ அழுத்தவும் |
03:20 | Polynomialஐ தெளிவாகக் காண நான் Algebra view வின் எல்லையை இழுக்கிறேன் |
03:25 | parabola வை உங்களால் காண முடியவில்லையெனில், Graphics viewவை நகர்த்தவும் |
03:29 | இப்போது p of 0, p of 1, p of 2 மற்றும் p of 3ன் மதிப்புகளை நாம் கண்டுபிடிப்போம் |
03:36 | input barல் டைப் செய்க p, பின் அடைப்புக்குறிக்குள் டைப் செய்க 0, பின் ஐ அழுத்தவும் |
03:44 | p of 0வின் மதிப்பு Algebra viewவில் காட்டப்படுகிறது |
03:48 | இதே போல் நான் p of 1, p of 2 மற்றும் p of 3ஐ டைப் செய்கிறேன் |
03:57 | p of 1, p of 2 மற்றும் p of 3ன் மதிப்புகள், Algebra viewவில் காட்டப்படுகின்றன |
04:06 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை முடிக்கவும். |
04:11 | நான் இடைமுகத்தை மீண்டும் clear செய்கிறேன் |
04:14 | இப்போது polynomial ன் rootகளை கண்டுபிடிப்போம் |
04:18 | input barல் டைப் செய்க, p is equal to x squared minus x minus 2 பின் Enterஐ அழுத்தவும் |
04:27 | Polynomial p of x, Algebra view வில் காட்டப்படுகிறது |
04:31 | அதன் graph, அதாவது ஒரு parabola, Graphics viewவில் காட்டப்படுகிறது |
04:36 | தேவைப்பட்டால், parabolaவை தெளிவாக காண Graphics viewவை இழுக்கவும் |
04:41 | அடுத்து டைப் செய்க, Root அடைப்புக்குறிக்குள் p பின் Enterஐ அழுத்தவும் |
04:48 | Polynomial p இன் rootகள் A மற்றும் B புள்ளிகளாக Algebra மற்றும் Graphics viewகளில் காட்டப்படுகின்றன |
04:56 | மேலும் ஒரு polynomialஐ டைப் செய்வோம். q is equal to x squared minus 5x plus 6, பின் Enterஐ அழுத்தவும் |
05:07 | Polynomial q of x Algebra viewவில் காட்டப்படுகிறது |
05:12 | அதன் graph, அதாவது ஒரு parabola, Graphics viewவில் காட்டப்படுகிறது |
05:17 | டைப் செய்க, Root அடைப்புக்குறிக்குள் q பின் Enterஐ அழுத்தவும் |
05:22 | Polynomial q இன் rootகள் C மற்றும் D புள்ளிகளாக Algebra மற்றும் Graphics viewகளில் காட்டப்படுகின்றன |
05:30 | இங்கே நாம் B மற்றும் C புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் காண்கிறோம். |
05:35 | Move tool ஐ பயன்படுத்தி, labelகளை தெளிவாக காண நாம் அவற்றை நகர்த்தலாம் |
05:41 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும். |
05:46 | அடுத்து polynomialகளை வகுக்க, நாம் Remainder theoremஐ பயன்படுத்துவோம் |
05:51 | p of x டிகிரி 1க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் polynomialஆக இருக்கட்டும். |
05:57 | 'a' ஏதேனும் ஒரு real எண்ணாக இருக்கட்டும் |
06:00 | p of x ஒரு நேரியல் polynomial x minus aஆல் வகுக்கப்பட்டால், பின் remainder p of a ஆகும் |
06:08 | Dividend ஆனது, Quotient ஆல் பெருக்கப்பட்ட Divisor மற்றும் remainder ன் கூட்டலுக்கு சமமாகும் |
06:14 | ஒரு புதிய Geogebra window வை திறப்போம். File மற்றும் New Windowவை க்ளிக் செய்யவும் |
06:22 | input barல் டைப் செய்க, p1 is equal to 3x squared plus x minus 1 பின் Enterஐ அழுத்தவும் |
06:32 | டைப் செய்க p2 is equal to x plus 1, பின் Enterஐ அழுத்தவும் |
06:38 | இப்போது polynomial p1ஐ p2ஆல் வகுப்போம் |
06:43 | input barல் டைப் செய்க Division. இரண்டு தேர்வுகள் தோன்றுகின்றன. polynomialகளைக் கொண்ட இரண்டாவது தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
06:52 | Dividend Polynomial இடத்தில் p1 என டைப் செய்யவும். Divisor Polynomial இடத்தில் p2 என டைப் செய்யவும். பின் Enterஐ அழுத்தவும் |
07:03 | ஒன்றையொன்று வெட்டும் இரண்டு கோடுகள் Graphics viewவில் தோன்றுகின்றன |
07:08 | இந்த வரிகள் p1 மற்றும் p2 polynomialகளின் வகுத்தலை குறிக்கின்றன. |
07:14 | வகுத்தலின் Quotient மற்றும் remainder ஒரு பட்டியலாக காட்டப்படுகின்றன |
07:19 | L1 is equal to சுருள் அடைப்புக்குறிகளுக்குள் 3x minus 2 comma 1. இங்கு quotient 3x-2 மற்றும் remainder 1 ஆகும் |
07:30 | polynomialகளின் இரண்டாவது தொகுப்பைக் காட்ட, நான் Graphics 2 view.வை திறக்கிறேன் |
07:35 | Graphics 2 viewவை தெளிவாக காண நான் எல்லையை இழுக்கிறேன் |
07:40 | பின் நான் input barல் polynomialகள் q1 மற்றும் q2வை டைப் செய்கிறேன் |
07:45 | q1 is equal to 4x cube minus 3x squared minus x plus 1 பின் Enterஐ அழுத்தவும் |
07:54 | q2 is equal to x plus 1 பின் Enterஐ அழுத்தவும் |
08:01 | டைப் செய்க Division, இதைத் தொடர்ந்து polynomialகள் அடைப்புக்குறிகளுக்குள் q1 comma q2 பின் Enterஐ அழுத்தவும் |
08:10 | வகுத்தலின் Quotient மற்றும் remainder ஒரு பட்டியலாக காட்டப்படுகின்றன |
08:15 | L2 is equal to சுருள் அடைப்புக்குறிகளுக்குள் 4xsquared minus7x plus 6 comma minus 5 |
08:24 | இங்கு quotient 4xsquared minus7x plus 6 மற்றும் remainder -5 ஆகும் |
08:31 | வீடியோவை இடைநிறுத்தி, remainder தேற்றத்தின் அடிப்படையில் பயிற்சிகளைத் தீர்க்கவும். |
08:37 | இப்போது polynomialகளை காரணியாக்குவோம். |
08:40 | ஒரு புதிய GeoGebra window வை திறப்போம். File மற்றும் New Windowவை க்ளிக் செய்யவும் |
08:47 | input barல் டைப் செய்க, p is equal to x squared minus 5x plus 6 பின் Enterஐ அழுத்தவும் |
08:57 | Factors என டைப் செய்து Factors Polynomial தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
09:02 | Polynomial இடத்தில் டைப் செய்க p அடைப்புக்குறிகளுக்குள் x பின் Enterஐ அழுத்தவும் |
09:09 | Algebra viewவை தெளிவாக காண எல்லையை இழுக்கவும் |
09:13 | Algebra viewவில் M1 காட்டப்படுகிறது |
09:16 | இங்கு (x minus 3) மற்றும் (x minus 2) polynomial p of x ன் காரணிகள் ஆகும். |
09:23 | மேலும் ஒரு உதாரணத்தை செய்வோம் |
09:26 | டைப் செய்க Factors, பின் அடைப்புக்குறிகளுக்குள் டைப் செய்க x cube minus 2x squared minus x plus 2. பின் Enterஐ அழுத்தவும் |
09:38 | Algebra viewவில் M2 காட்டப்படுகிறது. x minus 2, x minus 1, x plus 1 polynomialன் காரணிகள் ஆகும் |
09:49 | வீடியோவை இடைநிறுத்தி, காரணிப்படுத்தலின் அடிப்படையில் உள்ள பயிற்சிகளைத் தீர்க்கவும். |
09:55 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
09:57 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு variableன் polynomialகள், நேரியல் polynomialன் சாய்வு, polynomialகளின் டிகிரி, |
10:10 | polynomialகளின் zeroக்கள், polynomialகளின் rootகள், |
10:16 | Remainder தேற்றம், polynomialகளின் காரணியாக்கம் |
10:21 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
10:28 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. |
10:37 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:40 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
10:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும் |
10:55 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |