GeoGebra-5.04/C2/Theorems-in-GeoGebra/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Theorems in GeoGebra குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றை கூறி நிரூபிப்போம், Pythagoras தேற்றம் மற்றும் Geogebraவை பயன்படுத்தி Midpoint தேற்றம் |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:29 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனையாக GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:40 | Pythagoras தேற்றத்தை கூறுவோம் |
00:43 | hypotenuseன் ஸ்கொயர் (வலது கோணத்திற்கு எதிரே உள்ள பக்கம்) மற்ற இரண்டு பக்கங்களின் ஸ்கொயர்களின் கூட்டுத்தொகைக்கு சமம். |
00:50 | நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன் |
00:54 | அரை வட்டத்தை வரைவதன் மூலம் தொடங்குவோம். |
00:58 | Semicircle through 2 Points toolஐ க்ளிக் செய்யவும் |
01:02 | பின் Graphics viewவில் இரண்டு புள்ளிகளை குறிக்க க்ளிக் செய்யவும் |
01:07 | அந்த Pointஐ பயன்படுத்தி, அரைவட்டம் cல் மற்றொரு புள்ளி Cஐ குறிப்போம். |
01:14 | இப்போது அரைவட்டத்தில் உள்ள புள்ளிகளைப் பயன்படுத்தி ABC முக்கோணத்தை வரைவோம். |
01:19 | Polygon toolஐ க்ளிக் செய்து ABC முக்கோணத்தை வரையவும் |
01:26 | இங்கே நாம் முக்கோணத்தை வரைய அரை வட்டத்தைப் பயன்படுத்துகிறோம். |
01:30 | ஏனென்றால், நமக்கு ஒரு கோணத்தின் அளவு 90 டிகிரியாக இருக்க வேண்டும். |
01:36 | முக்கோணத்தின் கோணங்களை அளவிடுவோம். |
01:39 | Angle tool ஐ க்ளிக் செய்து, பின் முக்கோணத்தின் உள்ளே க்ளிக் செய்யவும். இங்கே கோணம் ABC 90 டிகிரி ஆகும். |
01:49 | இப்போது நாம் அரை வட்டம் c ஐ மறைப்போம். |
01:52 | Algebra view வில் Conic,ன் கீழ், cக்கு எதிரான நீலப் புள்ளியைக் க்ளிக் செய்யவும். |
01:58 | முக்கோணத்தின் பக்கங்களைப் பயன்படுத்தி மூன்று சதுரங்களை வரைவோம். |
02:02 | அதற்கு Regular Polygon tool ஐ க்ளிக் செய்து, பின் புள்ளிகள் C, Bஐ க்ளிக் செய்யவும் |
02:09 | 4 என்ற முன்னிருப்பான மதிப்புடன் Regular Polygon text box திறக்கிறது |
02:14 | கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:17 | புள்ளிகள் B, Cஐ நீங்கள் க்ளிக் செய்தால், சதுரம் எதிர் திசையில் வரையப்படுகிறது. |
02:25 | Undo பட்டனை க்ளிக் செய்து செயல்முறையை செயல்தவிர்ப்போம். |
02:29 | இப்போது புள்ளிகள் A, Cஐ க்ளிக் செய்யவும். பின் தோன்றுகின்ற text box ல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:37 | இவ்வாறே புள்ளிகள் B, Aஐ க்ளிக் செய்யவும். பின் தோன்றுகின்ற text box ல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:46 | இப்போது Pythagorean tripletsகளைக் குறிக்கின்ற மூன்று சதுரங்கள் நம்மிடம் உள்ளன . |
02:51 | இப்போது வரைபடத்தை தெளிவாக காண நாம் Zoom Out tool ஐ பயன்படுத்துவோம் |
02:57 | இப்போது இந்த சதுரங்களின் பரப்பளவைக் கண்டுபிடிப்போம். |
03:01 | Area tool ஐ க்ளிக் செய்து பின், poly1, poly2 மற்றும் poly3 ஐ முறையே க்ளிக் செய்வோம் |
03:12 | அந்தந்த சதுரங்களின் ஏரியாக்கள் காட்டப்படுகின்றன. |
03:16 | Move toolஐ பயன்படுத்தி, அவற்றை தெளிவாக காண labelகளை இழுக்கவும் |
03:29 | இப்போது poly1 + area of poly 2ன் ஏரியா, poly3.ன் ஏரியாவுக்கு சமமாக இருக்கிறதா என்று சரி பார்ப்போம் |
03:36 | input bar ல் டைப் செய்க poly1+ poly2 , பின் Enterஐ அழுத்தவும் |
03:43 | Algebra view வில் Number d, poly3ன் ஏரியாவின் மதிப்பை காட்டுகிறது |
03:49 | இவ்வாறு Pythagoras தேற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது |
03:52 | இப்போது நான் pythagoras தேற்றத்திற்கான Construction Protocolஐ விளக்குகிறேன் |
03:57 | Construction Protocol வரைபடத்தின் படிப்படியான கட்டுமானத்தை animationஆக காட்டுகிறது. |
04:03 | Animationஐ காண, View menu வை க்ளிக் செய்து Construction Protocol check box ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:10 | Construction Protocol view, Graphics viewக்கு பக்கத்தில் திறக்கிறது |
04:15 | Construction Protocol viewவை காண, Graphics view வின் எல்லையை நான் இழுக்கிறேன் |
04:21 | இந்தக் காட்சியில் சில columnகள் கொண்ட அட்டவணை உள்ளது. அட்டவணைக்கு கீழே animation கட்டுப்பாடுகள் உள்ளன. |
04:29 | இப்போது Play பட்டனை க்ளிக் செய்யவும் |
04:32 | animationஆக figureன் படிப்படியான கட்டுமானத்தைப் பார்க்கவும். |
04:50 | இப்போது நாம் Mid-point தேற்றத்தை நிரூபிப்போம் |
04:53 | ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களின் நடுப் புள்ளிகளை இணைக்கும் line segment மூன்றாவது பக்கத்திற்கும் மற்றும் அதன் பாதிக்கும் இணையாக இருக்கும். |
05:01 | நான் ஒரு புதிய GeoGebra window வை திறந்துள்ளேன் |
05:05 | Polygon toolஐ பயன்படுத்தி, ஒரு ABC முக்கோணத்தை வரைவோம் |
05:16 | இப்போது AB மற்றும் AC பக்கங்களின் நடுப் புள்ளிகளைக் கண்டுபிடிப்போம். |
05:21 | Midpoint or Center toolஐ க்ளிக் செய்யவும். பின்னர் AB மற்றும் AC பக்கங்களைக் க்ளிக் செய்யவும். |
05:30 | Line toolஐ பயன்படுத்தி, D மற்றும் E புள்ளிகள் வழியாக செல்லும் ஒரு வரியை வரையவும். |
05:38 | இப்போது AB segmentக்கு இணையாக ஒரு வரியை வரைவோம். |
05:42 | இதற்கு, Parallel Line tool ஐ க்ளிக் செய்து பின் segment ABஐ க்ளிக் செய்யவும் |
05:49 | பின் புள்ளி Cஐ க்ளிக் செய்யவும். வரி g' segment ABக்கு இணையாக வரையப்படுகிறது. |
05:56 | ஒரு புள்ளியில் f மற்றும் g வரிகள் intersect ஆவதை கவனிக்கவும் |
06:01 | Intersect toolஐ பயன்படுத்தி, intersection புள்ளியை F எனக் குறிப்போம். |
06:08 | இப்போது நாம் F C E மற்றும் D A E கோணங்களை அளவிட வேண்டும். |
06:17 | Angle tool ஐ க்ளிக் செய்து, புள்ளிகள் F, C, E மற்றும் D, A, Eஐ க்ளிக் செய்யவும் |
06:32 | மாற்று உள் கோணங்கள் என்பதால் கோணங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
06:38 | இவ்வாறே நாம் C, B, D மற்றும் E, D, Aஐ அளவிடுவோம் |
06:49 | கோணங்கள் சமமாக இருக்கின்றன. இது f வரி BC segmentக்கு இணையாக இருப்பதைக் குறிக்கிறது. |
06:56 | Distance or Length toolஐ பயன்படுத்தி, புள்ளிகள் D, E மற்றும் B, Cஐ க்ளிக் செய்யவும். DE' என்பது BCயின் பாதி என்பதை கவனிக்கவும். |
07:09 | இவ்வாறு mid-point தேற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது |
07:12 | மீண்டும் ஒருமுறை தேற்றத்திற்கான Construction Protocolஐ காண்பிக்கிறேன் |
07:17 | View menuவை க்ளிக் செய்து Construction Protocol check boxஐ தேர்ந்தெடுக்கவும் |
07:23 | Construction Protocol' view, Graphics viewக்கு பக்கத்தில் திறக்கிறது |
07:28 | இப்போது Play பட்டனை க்ளிக் செய்யவும். figureன் படிப்படியான கட்டுமானத்தைப் பார்க்கவும். |
07:51 | ஒரு பயிற்சியாக, இந்த தேற்றத்தை நிரூபிக்கவும். |
07:55 | உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும். |
07:59 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
08:02 | இந்த டுடோரியலில் நாங்கள் கூறி நிரூபித்தது, Pythagoras தேற்றம் மற்றும் Geogebraவை பயன்படுத்தி Midpoint தேற்றம் |
08:12 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
08:20 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:28 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
08:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும் |
08:43 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |