GeoGebra-5.04/C2/Types-of-Symmetry/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | GeoGebraவில் Types of Symmetry குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் பின்வரும் பல்வேறு வகையான சமச்சீர்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்: வரி, புள்ளி |
00:15 | சுழற்சி, இடப்பெயர்வு, அளவு |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 14.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:36 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். இல்லையெனில் அதற்கான GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
00:49 | சமச்சீரின் வரையறையுடன் தொடங்குவோம். |
00:53 | ஒரு வடிவியல் வடிவம் சமச்சீரானது எனக் கூறினால் அதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான பகுதிகளாகப் பிரிக்கலாம் மற்றும் அதன் பகுதிகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யலாம். |
01:08 | நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன் |
01:12 | இந்த டுடோரியலுக்கு நான் axesஐ uncheck செய்கிறேன் |
01:16 | அதைச் செய்ய, Graphics view வை ரைட்-க்ளிக் செய்யவும். Graphics menu தோன்றுகிறது |
01:23 | இந்த menuவில் Axes check box ஐ uncheck செய்யவும் |
01:27 | Reflect about Line toolன் கீழ் கிடைக்கும் அனைத்து toolகளையும் பயன்படுத்துவோம். |
01:35 | இப்போது நாம் வரி சமச்சீர்மையை வரையறுப்போம். |
01:38 | பொருளின் ஒரு பாதி மற்ற பாதியின் கண்ணாடி பிம்பமாக இருந்தால், ஒரு figure வரி சமச்சீர்மையை கொண்டுள்ளது என்று பொருள் |
01:46 | வடிவம் பிரதிபலிக்கும் வரி சமச்சீர் வரி என்று அழைக்கப்படுகிறது. |
01:52 | செங்குத்து கோடு ABஐ வரைய, Segment toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
02:00 | புள்ளி A Graphics viewவில் வரையப்படுகிறது |
02:04 | segmentAB ஐ வரைய புள்ளி Aக்கு நேரடியாக கீழே மீண்டும் க்ளிக் செய்யவும். இது f என பெயரிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். |
02:13 | Semicircle through 2 Points toolஐ தேர்ந்தெடுக்கவும் |
02:17 | Segment AB ன் இடது பக்கம் க்ளிக் செய்யவும். புள்ளி C வரையப்படுகிறது |
02:24 | c என பெயரிடப்பட்ட CD அரைவட்டத்தை முடிக்க C'க்கு கீழே மீண்டும் க்ளிக் செய்யவும். |
02:30 | இந்த அரைவட்டம் f segmentன் இடதுபுறத்தில் இருக்க வேண்டும். |
02:35 | இப்போது f segmentஐ சுற்றி அரைவட்டத்தைப் பிரதிபலிப்போம். |
02:40 | Reflect about Line toolஐ க்ளிக் செய்யவும். அரைவட்டத்தை கிளிக் செய்து, பின்னர் வரி f ஐ க்ளிக் செய்யவும். |
02:50 | அரை வட்டம் c'(c prime) f segmentன் வலது பக்கத்தில் தோன்றுகிறது. இது அரை வட்டம் cன் பிரதிபலித்த படம். |
03:00 | c மற்றும் c'(c prime) ஆகியவற்றின் object பண்புகளை மாற்றுவோம். |
03:05 | cஐ ரைட்-க்ளிக் செய்து Object Propertiesஐ தேர்ந்தெடுக்கவும் |
03:11 | Preferences window திறக்கிறது |
03:14 | Conicன் கீழ் உள்ள இடது panelலில், c ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது |
03:19 | Ctrl keyஐ அழுத்தியபடியே, c'(c prime)ஐ க்ளிக் செய்யவும் |
03:23 | Basic tabல், Show Trace check box ஐ க்ளிக் செய்யவும் |
03:28 | Color tabல், நான் இளஞ்சிவப்பு நிறத்தை தேர்வு செய்கிறேன். |
03:33 | உங்களுக்கு விருப்பமான எந்த நிறத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். பின் Preferences window வை மூடவும் |
03:40 | Move tool ஐ பயன்படுத்தி, அரைவட்டம் cஐ இழுக்கவும் . |
03:46 | cஐ நகர்த்தும்போது அரைவட்டம் c'(c prime) நகர்வதைக் கவனியுங்கள். |
03:52 | c'(c prime) என்பது c இன் கண்ணாடிப் பிம்பமாகும், இங்கு segment f கண்ணாடியாக உள்ளது. |
03:58 | தடயங்களை அழிக்க, Graphics viewஐ இழுக்கவும். |
04:03 | Graphics viewவில் உள்ள எல்லா objectகளையும் நீக்குவோம் |
04:07 | எல்லா objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A key களை அழுத்தவும் |
04:11 | பின் keyboard ல் உள்ள Delete key ஐ அழுத்தவும் |
04:15 | இப்போது ஒரு புள்ளியைப் சுற்றி பிரதிபலிக்க கற்றுக்கொள்வோம். |
04:19 | Segment toolஐ க்ளிக் செய்யவும் |
04:22 | segment AB ஐ வரைய Graphics viewவினுள் இருமுறை க்ளிக் செய்யவும் |
04:28 | Reflect about Point toolஐ தேர்ந்தெடுக்கவும். முதலில் புள்ளி Aஐயும் பின் புள்ளி Bஐயும் க்ளிக் செய்யவும் |
04:38 | A(A prime) அதாவது A இன் பிரதிபலித்த வடிவம், B புள்ளியின் மறுபக்கத்தில் தோன்றும். |
04:45 | A' (A prime) ஐ காண தேவைப்பட்டால் Graphics viewவை இழுக்கவும் |
04:50 | A'(A prime) என்பது A இன் image என்பதைக் காட்ட, AB மற்றும் A'(A prime)Bன் தூரங்களை அளவிடுவோம். |
04:58 | Angleன் கீழ், Distance or Length toolஐ க்ளிக் செய்யவும் |
05:03 | முதலில் புள்ளி Aஐயும், பின் புள்ளி Bஐயும் க்ளிக் செய்யவும் |
05:08 | மீண்டும் A'(A prime)ஐ க்ளிக் செய்து பின் Bஐ க்ளிக் செய்யவும் |
05:15 | AB மற்றும் A'(A prime)B தூரங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும். |
05:20 | Move toolஐ பயன்படுத்தி, AB segmentஐ மேல்நோக்கி இழுக்கிறேன் |
05:27 | A'(A prime) AB உடன் நகர்கிறது என்பதைக் கவனிக்கவும் |
05:32 | இப்போது நாம் ஒரு வட்டத்தைப் சுற்றி ஒரு புள்ளியை பிரதிபலிக்க கற்றுக்கொள்வோம். |
05:36 | Circle with centre and radius toolஐ தேர்ந்தெடுக்கவும். Graphics viewவினுள் க்ளிக் செய்யவும் |
05:43 | Circle with Centre and Radius text box திறக்கிறது |
05:48 | text boxல் Radiusக்கு 2 என டைப் செய்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:56 | Cஐ மையமாகவும் மற்றும் 2 செமீ ஆரம் கொண்ட ஒரு வட்டம் Graphics viewவில் வரையப்படுகிறது. |
06:02 | Point toolஐ பயன்படுத்தி, வட்டத்திற்கு வெளியே D புள்ளியை வரையவும். |
06:09 | Reflect about Circle toolஐ தேர்ந்தெடுக்கவும். புள்ளி Dஐ கிளிக் செய்து பின் வட்டம் cஐ க்ளிக் செய்யவும். |
06:19 | D'(D ப்ரைம்) அதாவது Dயின் image, வட்டத்திற்குள் தோன்றுகிறது. |
06:24 | Move toolஐ க்ளிக் செய்து புள்ளி Dஐ வட்டத்தை சுற்றி இழுக்கவும் |
06:31 | Dஐ பிரதிபலிக்கின்ற வட்டத்திற்கு உள்ளே D'(D prime)உம் நகர்வதை கவனிக்கவும் |
06:37 | வட்டத்தின் உள்ளே D புள்ளியை இழுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கவும். D மற்றும் D'(டD பிரைம்) இடங்களை மாற்றிக் கொள்கின்றன |
06:47 | இப்போது சுழற்சி சமச்சீர்மை பற்றி அறிந்து கொள்வோம். |
06:51 | ஒட்டுமொத்த வடிவத்தை மாற்றாமல் ஒரு நிலையான புள்ளியில் சுழற்ற முடிந்தால், ஒரு objectக்கு சுழற்சி சமச்சீர் உள்ளது என்று பொருள் |
07:02 | ஒரு புதிய GeoGebra window வை திறப்போம் |
07:06 | File ஐ க்ளிக் செய்து பின் New Windowவை க்ளிக் செய்யவும் |
07:11 | இப்போது ஒரு objectஐ ஒரு புள்ளியைச் சுற்றி சுழற்றுவோம். இதற்காக, நான் ஒரு சதுரத்தை வரைகிறேன். |
07:18 | Polygon toolஐ க்ளிக் செய்யவும் |
07:21 | புள்ளி Aஐ வரைய Graphics viewவினுள் க்ளிக் செய்யவும். இதேபோல் B, C மற்றும் D புள்ளிகளை வரையவும். |
07:33 | polygonஐ முடிக்க, புள்ளி A மீது மீண்டும் க்ளிக் செய்யவும். |
07:37 | q1 என பெயரிடப்பட்ட ஒரு quadrilateral ABCD வரையப்படுகிறது |
07:42 | q1 ஐ சதுரமாக மாற்ற, நாம் நீளத்தை சரிசெய்ய வேண்டும். |
07:47 | Move toolஐ க்ளிக் செய்து A, B, C மற்றும் D புள்ளிகளை இழுக்கவும். |
07:54 | Algebra viewவில் நீளங்களின் மாற்றத்தைக் கவனிக்கவும். அனைத்து நீளங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். |
08:01 | நாம் இப்போது சதுரத்திற்கு perpendicular bisectorகளை வரைவோம். |
08:05 | Perpendicular Bisector toolஐ க்ளிக் செய்யவும் |
08:08 | A, B' மற்றும் B, C புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். |
08:14 | இரண்டு perpendicular bisectorகள் ஒரு புள்ளியில் intersect செய்கின்றன |
08:18 | Intersect toolஐ க்ளிக் செய்து பின் intersection புள்ளியை க்ளிக் செய்யவும். புள்ளி E என்பது intersection புள்ளி ஆகும். |
08:28 | ஒரு கோண ஸ்லைடரை உருவாக்குவோம். Slider tool ஐ க்ளிக் செய்து பின் Graphics view.வை க்ளிக் செய்யவும் |
08:37 | Slider dialog box தோன்றுகிறது |
08:40 | Angle ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்கவும் |
08:43 | Alpha Name fieldல் தோன்றுகிறது |
08:47 | Min, Max மற்றும் Incrementன் முன்னிருப்பான மதிப்புகளை அப்படியே விடவும். பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:58 | Graphics viewவில் alpha ஸ்லைடர் உருவாக்கப்படுகிறது |
09:02 | இப்போது Rotate around Point tool ஐ க்ளிக் செய்யவும். சதுரம் q1ஐ கிளிக் செய்து பின்னர் E புள்ளியைக் க்ளிக் செய்யவும். |
09:12 | 45 degrees கோணத்துடன் Rotate around Point text box தோன்றுகிறது |
09:18 | text box ன் கீழ் counter clockwise மற்றும் clockwise ரேடியோ பட்டங்கள் இருக்கின்றன |
09:25 | உங்கள் விருப்பப்படி ரேடியோ பட்டன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நான் clockwiseஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:33 | Angle text boxல் இருந்து 45 degreesஐ நீக்கவும் |
09:37 | Angle text boxல் வலது பக்கத்தில் alpha குறி இருப்பதை கவனிக்கவும் |
09:43 | குறிகளின் அட்டவணையைக் காட்ட அதைக் க்ளிக் செய்யவும். |
09:47 | அட்டவணையிலிருந்து alphaவை தேர்ந்தெடுத்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:54 | Graphics viewவில் ஒரு புதிய சதுரம் q1 தோன்றுவதை கவனிக்கவும் |
10:00 | இந்த சதுரம் q1 சதுரம் q1 ஐப் பொறுத்து alpha கோணத்தில் சுழற்றப்படுகிறது. |
10:07 | இப்போது alpha ஸ்லைடரை 0 டிகிரி முதல் 360 டிகிரி வரை இழுக்கவும். |
10:13 | நாம் இழுக்கும்போது, E புள்ளியைச் சுற்றி q1' சுழற்சியைக் கவனிக்கவும். |
10:20 | பயிற்சியாக, ஒரு அறுகோணத்தை வரைந்து அதன் சுழற்சி சமச்சீர்மையைக் காட்டவும். |
10:28 | இப்போது எல்லா objectகளையும் நீக்குவோம் |
10:31 | Edit menuவிற்கு சென்று Select Allக்கு செல்லவும். பின் Delete தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
10:41 | அடுத்து vectorஐ பயன்படுத்தி ஒரு objectஐ நகர்த்துவோம். |
10:45 | இடப்பெயர்ப்பு சமச்சீர்மையை வரையறுப்போம் |
10:49 | ஒரு objectக்கு translational சமச்சீர் இருந்தால், அதன் ஒட்டுமொத்த வடிவத்தை மாற்றாமல் அதை நகர்த்த முடிய வேண்டும். |
10:58 | Polygon toolஐ பயன்படுத்தி t1 என பெயரிடப்பட்ட ABC முக்கோணத்தை வரையவும். |
11:08 | ஒரு vectorஐ வரைய, tool bar ல் Vector tool ஐ க்ளிக் செய்யவும் |
11:13 | புள்ளி Dஐ க்ளிக் செய்து பின் புள்ளி Eஐ க்ளிக் செய்யவும் |
11:19 | vector, "'u. ஆல் குறிக்கப்படுகிறது. |
11:23 | Translate by Vector toolஐ தேர்ந்தெடுக்கவும். முக்கோணம் t1 ஐ கிளிக் செய்து பின்னர் u vector ஐ க்ளிக் செய்யவும் |
11:33 | இங்கே t1' என்பது t1 என்பதன் translate செய்யப்பட்ட image ஆகும் |
11:38 | t1 மற்றும் t1க்கு இடையிலான தூரம் vector u இன் நீளத்தைப் அளவே உள்ளது. |
11:45 | Move toolஐ பயன்படுத்தி, vector uன் புள்ளி Eஐ இழுக்கவும். image முக்கோணம் t1, vector u உடன் translate செய்யப்படுவதை கவனிக்கவும். |
11:59 | பயிற்சியாக, ஒரு vectorஐ வரையவும் |
12:04 | Translate by Vector toolஐ பயன்படுத்தி ஒரு புள்ளியை translate செய்யவும் |
12:08 | அசல் புள்ளிக்கும் translate செய்யப்பட்ட புள்ளிக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடவும். |
12:13 | அளவின் சமச்சீர்மையை வரையறுப்போம். |
12:16 | ஒரு பொருள் விரிவடையும் போது அல்லது சுருங்கும்போது அதன் வடிவம் மாறவில்லை என்றால், அதற்கு scale' சமச்சீர் உள்ளது என்று பொருள். |
12:25 | ஒரு புதிய Geogebra window வை திறப்போம். Fileஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும் |
12:34 | இப்போது ஒரு objectஐ எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம். |
12:38 | Circle with centre and radius toolஐ க்ளிக் செய்யவும். பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
12:45 | Circle with Centre and Radius text boxல், ஆரத்தை 1 என டைப் செய்யவும் |
12:50 | கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். |
12:53 | Point toolஐ பயன்படுத்தி, வட்டத்திற்கு வெளியே ஒரு புள்ளி Bஐ வரையவும் |
12:59 | Dilate from Point toolஐ தேர்ந்தெடுக்கவும் |
13:02 | அலகு வட்டத்தின் சுற்றளவைக் க்ளிக் செய்து, புள்ளி B மீது க்ளிக் செய்யவும். |
13:09 | Dilate from Point text box தோன்றுகிறது. Factorக்கு 2 என டைப் செய்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
13:20 | இரு மடங்கு ஆரம் கொண்ட விரிந்த வட்டம் Graphics viewவில் தோன்றுகிறது. |
13:26 | பயிற்சியாக, ஒரே windowவில் ஒரு pentagon மற்றும் hexagonஐ வரையவும் |
13:32 | Pentagonஐ factor 0.5ஆக விரிவாக்கவும். Hexagonஐ factor 3 ஆக விரிவாக்கவும் |
13:40 | நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல, |
13:44 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, சமச்சீர் மற்றும் பல்வேறு வகையான சமச்சீர், வரி, புள்ளி, |
13:56 | சுழற்சி, இடப்பெயர்வு, அளவு |
14:02 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
14:10 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
14:20 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
14:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
14:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |