GeoGebra-5.04/C2/Types-of-Symmetry/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:46, 25 March 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 GeoGebraவில் Types of Symmetry குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் பின்வரும் பல்வேறு வகையான சமச்சீர்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்: வரி, புள்ளி
00:15 சுழற்சி, இடப்பெயர்வு, அளவு
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 14.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d
00:36 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். இல்லையெனில் அதற்கான GeoGebra டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
00:49 சமச்சீரின் வரையறையுடன் தொடங்குவோம்.
00:53 ஒரு வடிவியல் வடிவம் சமச்சீரானது எனக் கூறினால் அதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான பகுதிகளாகப் பிரிக்கலாம் மற்றும் அதன் பகுதிகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யலாம்.
01:08 நான் ஏற்கனவே GeoGebra இடைமுகத்தை திறந்து வைத்துள்ளேன்
01:12 இந்த டுடோரியலுக்கு நான் axesஐ uncheck செய்கிறேன்
01:16 அதைச் செய்ய, Graphics view வை ரைட்-க்ளிக் செய்யவும். Graphics menu தோன்றுகிறது
01:23 இந்த menuவில் Axes check box ஐ uncheck செய்யவும்
01:27 Reflect about Line toolன் கீழ் கிடைக்கும் அனைத்து toolகளையும் பயன்படுத்துவோம்.
01:35 இப்போது நாம் வரி சமச்சீர்மையை வரையறுப்போம்.
01:38 பொருளின் ஒரு பாதி மற்ற பாதியின் கண்ணாடி பிம்பமாக இருந்தால், ஒரு figure வரி சமச்சீர்மையை கொண்டுள்ளது என்று பொருள்
01:46 வடிவம் பிரதிபலிக்கும் வரி சமச்சீர் வரி என்று அழைக்கப்படுகிறது.
01:52 செங்குத்து கோடு ABஐ வரைய, Segment toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவை க்ளிக் செய்யவும்
02:00 புள்ளி A Graphics viewவில் வரையப்படுகிறது
02:04 segmentAB ஐ வரைய புள்ளி Aக்கு நேரடியாக கீழே மீண்டும் க்ளிக் செய்யவும். இது f என பெயரிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
02:13 Semicircle through 2 Points toolஐ தேர்ந்தெடுக்கவும்
02:17 Segment AB ன் இடது பக்கம் க்ளிக் செய்யவும். புள்ளி C வரையப்படுகிறது
02:24 c என பெயரிடப்பட்ட CD அரைவட்டத்தை முடிக்க C'க்கு கீழே மீண்டும் க்ளிக் செய்யவும்.
02:30 இந்த அரைவட்டம் f segmentன் இடதுபுறத்தில் இருக்க வேண்டும்.
02:35 இப்போது f segmentஐ சுற்றி அரைவட்டத்தைப் பிரதிபலிப்போம்.
02:40 Reflect about Line toolஐ க்ளிக் செய்யவும். அரைவட்டத்தை கிளிக் செய்து, பின்னர் வரி f ஐ க்ளிக் செய்யவும்.
02:50 அரை வட்டம் c'(c prime) f segmentன் வலது பக்கத்தில் தோன்றுகிறது. இது அரை வட்டம் cன் பிரதிபலித்த படம்.
03:00 c மற்றும் c'(c prime) ஆகியவற்றின் object பண்புகளை மாற்றுவோம்.
03:05 cஐ ரைட்-க்ளிக் செய்து Object Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்
03:11 Preferences window திறக்கிறது
03:14 Conicன் கீழ் உள்ள இடது panelலில், c ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
03:19 Ctrl keyஐ அழுத்தியபடியே, c'(c prime)ஐ க்ளிக் செய்யவும்
03:23 Basic tabல், Show Trace check box ஐ க்ளிக் செய்யவும்
03:28 Color tabல், நான் இளஞ்சிவப்பு நிறத்தை தேர்வு செய்கிறேன்.
03:33 உங்களுக்கு விருப்பமான எந்த நிறத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். பின் Preferences window வை மூடவும்
03:40 Move tool ஐ பயன்படுத்தி, அரைவட்டம் cஐ இழுக்கவும் .
03:46 cஐ நகர்த்தும்போது அரைவட்டம் c'(c prime) நகர்வதைக் கவனியுங்கள்.
03:52 c'(c prime) என்பது c இன் கண்ணாடிப் பிம்பமாகும், இங்கு segment f கண்ணாடியாக உள்ளது.
03:58 தடயங்களை அழிக்க, Graphics viewஐ இழுக்கவும்.
04:03 Graphics viewவில் உள்ள எல்லா objectகளையும் நீக்குவோம்
04:07 எல்லா objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A key களை அழுத்தவும்
04:11 பின் keyboard ல் உள்ள Delete key ஐ அழுத்தவும்
04:15 இப்போது ஒரு புள்ளியைப் சுற்றி பிரதிபலிக்க கற்றுக்கொள்வோம்.
04:19 Segment toolஐ க்ளிக் செய்யவும்
04:22 segment AB ஐ வரைய Graphics viewவினுள் இருமுறை க்ளிக் செய்யவும்
04:28 Reflect about Point toolஐ தேர்ந்தெடுக்கவும். முதலில் புள்ளி Aஐயும் பின் புள்ளி Bஐயும் க்ளிக் செய்யவும்
04:38 A(A prime) அதாவது A இன் பிரதிபலித்த வடிவம், B புள்ளியின் மறுபக்கத்தில் தோன்றும்.
04:45 A' (A prime) ஐ காண தேவைப்பட்டால் Graphics viewவை இழுக்கவும்
04:50 A'(A prime) என்பது A இன் image என்பதைக் காட்ட, AB மற்றும் A'(A prime)Bன் தூரங்களை அளவிடுவோம்.
04:58 Angleன் கீழ், Distance or Length toolஐ க்ளிக் செய்யவும்
05:03 முதலில் புள்ளி Aஐயும், பின் புள்ளி Bஐயும் க்ளிக் செய்யவும்
05:08 மீண்டும் A'(A prime)ஐ க்ளிக் செய்து பின் Bஐ க்ளிக் செய்யவும்
05:15 AB மற்றும் A'(A prime)B தூரங்கள் சமமாக இருப்பதைக் கவனிக்கவும்.
05:20 Move toolஐ பயன்படுத்தி, AB segmentஐ மேல்நோக்கி இழுக்கிறேன்
05:27 A'(A prime) AB உடன் நகர்கிறது என்பதைக் கவனிக்கவும்
05:32 இப்போது நாம் ஒரு வட்டத்தைப் சுற்றி ஒரு புள்ளியை பிரதிபலிக்க கற்றுக்கொள்வோம்.
05:36 Circle with centre and radius toolஐ தேர்ந்தெடுக்கவும். Graphics viewவினுள் க்ளிக் செய்யவும்
05:43 Circle with Centre and Radius text box திறக்கிறது
05:48 text boxல் Radiusக்கு 2 என டைப் செய்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:56 Cஐ மையமாகவும் மற்றும் 2 செமீ ஆரம் கொண்ட ஒரு வட்டம் Graphics viewவில் வரையப்படுகிறது.
06:02 Point toolஐ பயன்படுத்தி, வட்டத்திற்கு வெளியே D புள்ளியை வரையவும்.
06:09 Reflect about Circle toolஐ தேர்ந்தெடுக்கவும். புள்ளி Dஐ கிளிக் செய்து பின் வட்டம் cஐ க்ளிக் செய்யவும்.
06:19 D'(D ப்ரைம்) அதாவது Dயின் image, வட்டத்திற்குள் தோன்றுகிறது.
06:24 Move toolஐ க்ளிக் செய்து புள்ளி Dஐ வட்டத்தை சுற்றி இழுக்கவும்
06:31 Dஐ பிரதிபலிக்கின்ற வட்டத்திற்கு உள்ளே D'(D prime)உம் நகர்வதை கவனிக்கவும்
06:37 வட்டத்தின் உள்ளே D புள்ளியை இழுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கவும். D மற்றும் D'(டD பிரைம்) இடங்களை மாற்றிக் கொள்கின்றன
06:47 இப்போது சுழற்சி சமச்சீர்மை பற்றி அறிந்து கொள்வோம்.
06:51 ஒட்டுமொத்த வடிவத்தை மாற்றாமல் ஒரு நிலையான புள்ளியில் சுழற்ற முடிந்தால், ஒரு objectக்கு சுழற்சி சமச்சீர் உள்ளது என்று பொருள்
07:02 ஒரு புதிய GeoGebra window வை திறப்போம்
07:06 File ஐ க்ளிக் செய்து பின் New Windowவை க்ளிக் செய்யவும்
07:11 இப்போது ஒரு objectஐ ஒரு புள்ளியைச் சுற்றி சுழற்றுவோம். இதற்காக, நான் ஒரு சதுரத்தை வரைகிறேன்.
07:18 Polygon toolஐ க்ளிக் செய்யவும்
07:21 புள்ளி Aஐ வரைய Graphics viewவினுள் க்ளிக் செய்யவும். இதேபோல் B, C மற்றும் D புள்ளிகளை வரையவும்.
07:33 polygonஐ முடிக்க, புள்ளி A மீது மீண்டும் க்ளிக் செய்யவும்.
07:37 q1 என பெயரிடப்பட்ட ஒரு quadrilateral ABCD வரையப்படுகிறது
07:42 q1 ஐ சதுரமாக மாற்ற, நாம் நீளத்தை சரிசெய்ய வேண்டும்.
07:47 Move toolஐ க்ளிக் செய்து A, B, C மற்றும் D புள்ளிகளை இழுக்கவும்.
07:54 Algebra viewவில் நீளங்களின் மாற்றத்தைக் கவனிக்கவும். அனைத்து நீளங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
08:01 நாம் இப்போது சதுரத்திற்கு perpendicular bisectorகளை வரைவோம்.
08:05 Perpendicular Bisector toolஐ க்ளிக் செய்யவும்
08:08 A, B' மற்றும் B, C புள்ளிகளைக் க்ளிக் செய்யவும்.
08:14 இரண்டு perpendicular bisectorகள் ஒரு புள்ளியில் intersect செய்கின்றன
08:18 Intersect toolஐ க்ளிக் செய்து பின் intersection புள்ளியை க்ளிக் செய்யவும். புள்ளி E என்பது intersection புள்ளி ஆகும்.
08:28 ஒரு கோண ஸ்லைடரை உருவாக்குவோம். Slider tool ஐ க்ளிக் செய்து பின் Graphics view.வை க்ளிக் செய்யவும்
08:37 Slider dialog box தோன்றுகிறது
08:40 Angle ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்கவும்
08:43 Alpha Name fieldல் தோன்றுகிறது
08:47 Min, Max மற்றும் Incrementன் முன்னிருப்பான மதிப்புகளை அப்படியே விடவும். பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
08:58 Graphics viewவில் alpha ஸ்லைடர் உருவாக்கப்படுகிறது
09:02 இப்போது Rotate around Point tool ஐ க்ளிக் செய்யவும். சதுரம் q1ஐ கிளிக் செய்து பின்னர் E புள்ளியைக் க்ளிக் செய்யவும்.
09:12 45 degrees கோணத்துடன் Rotate around Point text box தோன்றுகிறது
09:18 text box ன் கீழ் counter clockwise மற்றும் clockwise ரேடியோ பட்டங்கள் இருக்கின்றன
09:25 உங்கள் விருப்பப்படி ரேடியோ பட்டன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நான் clockwiseஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:33 Angle text boxல் இருந்து 45 degreesஐ நீக்கவும்
09:37 Angle text boxல் வலது பக்கத்தில் alpha குறி இருப்பதை கவனிக்கவும்
09:43 குறிகளின் அட்டவணையைக் காட்ட அதைக் க்ளிக் செய்யவும்.
09:47 அட்டவணையிலிருந்து alphaவை தேர்ந்தெடுத்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
09:54 Graphics viewவில் ஒரு புதிய சதுரம் q1 தோன்றுவதை கவனிக்கவும்
10:00 இந்த சதுரம் q1 சதுரம் q1 ஐப் பொறுத்து alpha கோணத்தில் சுழற்றப்படுகிறது.
10:07 இப்போது alpha ஸ்லைடரை 0 டிகிரி முதல் 360 டிகிரி வரை இழுக்கவும்.
10:13 நாம் இழுக்கும்போது, E புள்ளியைச் சுற்றி q1' சுழற்சியைக் கவனிக்கவும்.
10:20 பயிற்சியாக, ஒரு அறுகோணத்தை வரைந்து அதன் சுழற்சி சமச்சீர்மையைக் காட்டவும்.
10:28 இப்போது எல்லா objectகளையும் நீக்குவோம்
10:31 Edit menuவிற்கு சென்று Select Allக்கு செல்லவும். பின் Delete தேர்வை தேர்ந்தெடுக்கவும்
10:41 அடுத்து vectorஐ பயன்படுத்தி ஒரு objectஐ நகர்த்துவோம்.
10:45 இடப்பெயர்ப்பு சமச்சீர்மையை வரையறுப்போம்
10:49 ஒரு objectக்கு translational சமச்சீர் இருந்தால், அதன் ஒட்டுமொத்த வடிவத்தை மாற்றாமல் அதை நகர்த்த முடிய வேண்டும்.
10:58 Polygon toolஐ பயன்படுத்தி t1 என பெயரிடப்பட்ட ABC முக்கோணத்தை வரையவும்.
11:08 ஒரு vectorஐ வரைய, tool bar ல் Vector tool ஐ க்ளிக் செய்யவும்
11:13 புள்ளி Dஐ க்ளிக் செய்து பின் புள்ளி Eஐ க்ளிக் செய்யவும்
11:19 vector, "'u. ஆல் குறிக்கப்படுகிறது.
11:23 Translate by Vector toolஐ தேர்ந்தெடுக்கவும். முக்கோணம் t1 ஐ கிளிக் செய்து பின்னர் u vector ஐ க்ளிக் செய்யவும்
11:33 இங்கே t1' என்பது t1 என்பதன் translate செய்யப்பட்ட image ஆகும்
11:38 t1 மற்றும் t1க்கு இடையிலான தூரம் vector u இன் நீளத்தைப் அளவே உள்ளது.
11:45 Move toolஐ பயன்படுத்தி, vector uன் புள்ளி Eஐ இழுக்கவும். image முக்கோணம் t1, vector u உடன் translate செய்யப்படுவதை கவனிக்கவும்.
11:59 பயிற்சியாக, ஒரு vectorஐ வரையவும்
12:04 Translate by Vector toolஐ பயன்படுத்தி ஒரு புள்ளியை translate செய்யவும்
12:08 அசல் புள்ளிக்கும் translate செய்யப்பட்ட புள்ளிக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடவும்.
12:13 அளவின் சமச்சீர்மையை வரையறுப்போம்.
12:16 ஒரு பொருள் விரிவடையும் போது அல்லது சுருங்கும்போது அதன் வடிவம் மாறவில்லை என்றால், அதற்கு scale' சமச்சீர் உள்ளது என்று பொருள்.
12:25 ஒரு புதிய Geogebra window வை திறப்போம். Fileஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும்
12:34 இப்போது ஒரு objectஐ எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
12:38 Circle with centre and radius toolஐ க்ளிக் செய்யவும். பின் Graphics viewவை க்ளிக் செய்யவும்
12:45 Circle with Centre and Radius text boxல், ஆரத்தை 1 என டைப் செய்யவும்
12:50 கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்.
12:53 Point toolஐ பயன்படுத்தி, வட்டத்திற்கு வெளியே ஒரு புள்ளி Bஐ வரையவும்
12:59 Dilate from Point toolஐ தேர்ந்தெடுக்கவும்
13:02 அலகு வட்டத்தின் சுற்றளவைக் க்ளிக் செய்து, புள்ளி B மீது க்ளிக் செய்யவும்.
13:09 Dilate from Point text box தோன்றுகிறது. Factorக்கு 2 என டைப் செய்து பின் கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
13:20 இரு மடங்கு ஆரம் கொண்ட விரிந்த வட்டம் Graphics viewவில் தோன்றுகிறது.
13:26 பயிற்சியாக, ஒரே windowவில் ஒரு pentagon மற்றும் hexagonஐ வரையவும்
13:32 Pentagonஐ factor 0.5ஆக விரிவாக்கவும். Hexagonஐ factor 3 ஆக விரிவாக்கவும்
13:40 நாம் கற்றுக்கொண்டதை சுருங்கச் சொல்ல,
13:44 இந்த டுடோரியலில் நாம் கற்றது, சமச்சீர் மற்றும் பல்வேறு வகையான சமச்சீர், வரி, புள்ளி,
12:56 சுழற்சி, இடப்பெயர்வு, அளவு கோல்
14:02 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
14:10 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:20 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
14:24 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
14:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree