GeoGebra-5.04/C2/Introduction-to-GeoGebra/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:12, 21 March 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Introduction to GeoGebra குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, GeoGebra இடைமுகம் மற்றும் geometric toolகளை பற்றி
00:12 இணையான மற்றும் செங்குத்தாக கோடுகளை வரைவது
00:16 ஒரு வரியின் object பண்புகளை மாற்றுவது, Graphics viewன் பண்புகள் பற்றி
00:22 இங்கு நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS, பதிப்பு 14.04
00:28 GeoGebra பதிப்பு 5.0.438.0-d
00:33 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கவேண்டும்
00:40 GeoGebra applicatonஐ Ubuntu Linux OSல் திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும்
00:46 search barல் டைப் செய்க, geogebra. GeoGebra icon தோன்றுகிறது
00:52 GeoGebra applicationஐ திறக்க, iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்
00:57 GeoGebra applicationஐ Windows 10 OSல் திறப்போம்
01:04 Search the web and Windows boxல், டைப் செய்க geogebra
01:09 GeoGebra பட்டியலில் தோன்றுகிறது
01:12 GeoGebra applicationஐ திறக்க அதை க்ளிக் செய்யவும்
01:17 இது GeoGebra interface ஆகும்
01:20 அது standard menu bar உடன் பின்வரும் menu itemகளை கொண்டிருக்கிறது, File, Edit, View, Options, Tools, Window மற்றும் Help.
01:37 menu barக்கு கீழே, பல்வேறு geometric toolகளை கொண்ட ஒரு tool bar இருக்கிறது
01:43 tool barன் வலது பக்கத்தில், Undo, Redo, Help மற்றும் Preferences தேர்வுகள் இருக்கின்றன
01:53 tool barக்கு கீழ், Algebra view மற்றும் Graphics view இருக்கின்றன
01:58 GeoGebraவில், geometry மற்றும் algebra ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன.
02:03 Graphics காட்சி toolbarல் உள்ள toolகளைப் பயன்படுத்தி geometric உருவங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
02:09 Algebra காட்சி வரையப்பட்ட உருவங்களின் தொடர்புடைய algebraic வெளிப்பாடுகளைக் காட்டுகிறது.
02:15 View menuவை பயன்படுத்தி, நமது தேவையின் அடிப்படையில் எந்த காட்சியையும் திறக்கலாம் அல்லது மூடலாம்.
02:25 Windowவின் கீழ், input bar உள்ளது
02:29 input bar.ஐ பயன்படுத்தி, நேரடியாக நாம் algebraic commandகள் மற்றும் functionகளை enter செய்யலாம்
02:36 முன்னிருப்பாக, Graphics viewல் grid மற்றும் axes தேர்வுகள் enable செய்யப்பட்டிருக்கின்றன
02:42 context menu ஐ பயன்படுத்தி நீங்கள் axisகள் அல்லது gridஐ disable செய்யலாம்
02:47 Graphics viewஐ ரைட் க்ளிக் செய்யவும். Graphics menu திறக்கிறது
02:53 இந்த menu வில், Axesகள் மற்றும் Gridஐ check மற்றும் uncheck செய்ய நமக்கு தேர்வுகள் உள்ளன
03:00 Axesகள் மற்றும் Gridஐ enable அல்லது disable செய்ய வேறொரு வழிமுறையை நான் உங்களுக்கு காட்டுகிறேன்
03:05 Toggle Style Bar. என்ற பெயருள்ள ஒரு சிறிய அம்பு முக்கோணம் Graphicsக்கு அடுத்ததாக இருப்பதை காணவும்
03:12 drop-down menu வை திறக்க அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
03:16 இங்கு Axesகள் மற்றும் Gridஐ check மற்றும் uncheck செய்ய தேர்வுகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்
03:22 அடுத்து tool bar ஐ பற்றி விவரமாக கற்போம்
03:26 toolbarன் வலது பக்க முனையில் இருக்கும் Move Graphics View tool ஐ க்ளிக் செய்வோம்
03:31 Tool ஐ சுற்றி ஒரு அடர் நீல நிற பார்டர் தோன்றுவதை கவனியுங்கள். tool தேர்ந்தெடுக்கப்பட்டதை இது குறிக்கிறது.
03:38 Cursor ஐ toolன் மீது நகர்த்தவும். Tool tip பெட்டியில் அதன் பெயர் மற்றும் செயல்பாடு தோன்றுகிறது
03:45 இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ பயன்படுத்தி, நாம் Graphics viewஐ நகர்த்தலாம். தேவைக்கேற்ப Graphics viewஐ க்ளிக் செய்து இழுக்கவும்
03:53 ஒவ்வொரு toolஉம் அதன் மூலையில் ஒரு சிறிய கருப்பு முக்கோணத்தைக் கொண்டுள்ளது.
03:58 Cursor முக்கோணத்தின் மீது வைக்கப்படும் போது, அது சிவப்பு நிறமாக மாறுகிறது
04:03 tool bar.ன் மீதுள்ள Move tool ஐ க்ளிக் செய்வோம். தொடர்புடைய toolகளின் ஒரு drop-down பட்டியல் தோன்றுகிறது
04:10 Graphics viewல் புள்ளிகளை வரைவோம்
04:13 Point toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும். புள்ளி A வரையப்படுகிறது
04:20 மற்றொரு புள்ளி Bஐ வரைய மீண்டும் க்ளிக் செய்யவும்
04:24 புள்ளிகளின் தொடர்புடைய coordinateகள் Algebra viewவில் தோன்றும் என்பதை நினைவில் கொள்ளவும்.
04:29 ஒரு வரியை வரைய கற்றுக்கொள்வோம். Line toolன் மூலையில் உள்ள முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
04:36 பல்வேறு வகையான வரிகளை வரைவதற்கான Line toolகளின் பட்டியலை இங்கே காணலாம்.
04:42 Line toolஐ பயன்படுத்தி, A மற்றும் B புள்ளிகள் வழியாக செல்லும் ஒரு வரியை வரைவோம்.
04:47 Line toolஐ க்ளிக் செய்து, பின் புள்ளிகள் A மற்றும் B.ஐ க்ளிக் செய்யவும்
04:53 வரி f, A மற்றும் B வழியாக செல்கிறது
04:57 Graphics viewல் உள்ள எல்லா objectகளையும் நீக்கி விடுவோம்
05:01 எல்லா objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl+Aஐ அழுத்தவும். Keyboard ல் Delete key ஐ அழுத்தவும்
05:08 வரி ABஐ மீண்டும் வரைவோம். Line toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewஐ க்ளிக் செய்யவும்
05:17 வரி ABஐ வரைய மீண்டும் வேறொரு இடத்தில் க்ளிக் செய்யவும்
05:22 அடுத்து நான் வரி ABக்கு செங்குத்தாக ஒரு வரியை வரைகிறேன்.
05:27 அதைச் செய்ய, Perpendicular Line tool ஐ க்ளிக் செய்யவும்
05:31 புள்ளி Cஐ வரைய AB வரிக்கு மேலே க்ளிக் செய்து, பின் வரி ABஐ க்ளிக் செய்யவும்
05:38 C வழியாக செல்லுகின்ற வரி g, வரி ABக்கு செங்குத்தாக இருக்கின்றது
05:43 AB' வரிக்கு இணையாக ஒரு வரியை வரைவோம்.
05:47 Parallel Line toolஐ க்ளிக் செய்யவும்
05:50 புள்ளி Dஐ வரைய ABக்கு கீழே க்ளிக் செய்து, பின் வரி ABஐ க்ளிக் செய்யவும்
05:57 ABக்கு இணையாகவும் D புள்ளி வழியாக செல்லுகின்ற ஒரு வரி h வரையப்படுகிறது
06:02 இப்போது நாம் இரண்டு வரிகளுக்கு குறுக்குவெட்டு புள்ளிகளைக் குறிப்போம்.
06:06 Point tool drop-downல், Intersect tool ஐ தேர்ந்தெடுக்கவும்
06:10 f மற்றும் g வரிகளின் குறுக்கு வெட்டுப்புள்ளியில் க்ளிக் செய்யவும்.
06:15 பின்னர் g' மற்றும் h வரிகளின் குறுக்குவெட்டுப் புள்ளியைக் க்ளிக் செய்யவும்.
06:20 இப்போது நம் வரைபடத்தை கொஞ்சம் interactiveஆக செய்வோம்.
06:24 Move toolஐ க்ளிக் செய்யவும்
06:27 புள்ளி Aஐ க்ளிக் செய்து இழுக்கவும்
06:30 E மற்றும் F புள்ளிகள் மற்றும் அனைத்து வரிகளும் A புள்ளியுடன் நகர்வதைக் கவனிக்கவும்.
06:36 இதேபோல் நாம் B மற்றும் D புள்ளிகளை நகர்த்துவோம்.
06:40 புள்ளிகள் E, F மற்றும் வரிகள் B புள்ளியுடன் சேர்ந்து நகரும்.
06:45 புள்ளி F மற்றும் h' வரி மட்டும் D புள்ளியுடன் நகரும்.
06:50 புள்ளிகள் A, B மற்றும் D சுயாதீனமான objectகள் ஆகும்.
06:56 இப்போது நான் E அல்லது F. புள்ளிகளை நகர்த்த முயற்சிக்கிறேன். நம்மால் எந்த அசைவையும் பார்க்கமுடியவில்லை
07:03 புள்ளிகள் E அல்லது F சார்ந்த objectகள் என்பதை இது குறிக்கிறது.
07:09 இப்போது வரிகளின் பண்புகளை மாற்றுவோம்.
07:13 வரி ABஐ ரைட் க்ளிக் செய்யவும். வரியின் எல்லா பண்புகளையும் கொண்ட ஒரு context menu திறக்கிறது
07:21 Object Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். Preferences window திறக்கிறது
07:27 Graphics view வில் மாற்றங்களை காண Preferences window வின் அளவை மாற்றவும்.
07:33 Preferences window வில் சில அடிப்படை பண்புகளை நான் விளக்குகிறேன்
07:38 Name பெட்டியில், நீங்கள் பெயரை Line AB என மாற்றலாம்
07:43 மேலும் CaptionOriginal Line. என மாற்றலாம்
07:46 வரியை காட்ட அல்லது காட்டாமலிருக்க Show Object check box ஐ க்ளிக் செய்யவும்
07:51 தேர்வு செய்ய Show Label check box, ஒரு drop down ஐ கொண்டிருக்கிறது
07:55 நான் Name & Valueஐ தேர்ந்தெடுக்கிறேன். பெயரும் மதிப்பும் வரியின் கீழே தோன்றுவதைக் கவனிக்கவும்.
08:03 அடுத்து Color tab ஐ க்ளிக் செய்யவும். வரியை வண்ணமயமாக்க இங்கே ஒரு வண்ண பெட்டி உள்ளது.
08:10 வண்ணப் பெட்டியின் கீழே மாற்றப்பட்ட நிறத்தைப் பார்க்க Preview பெட்டி உள்ளது.
08:15 நான் பச்சை பெட்டியை க்ளிக் செய்கிறேன். Line ABன் நிறம் பச்சையாக மாறியுள்ளது.
08:22 அடுத்து Style tab ஐ க்ளிக் செய்யவும்
08:25 இங்கு நீங்கள் Line Thickness, Line Opacity மற்றும் Line Styleஐ மாற்றலாம்
08:33 Preferences windowவை மூடவும்
08:36 மாற்றப்பட்ட object பண்புகளுடன் இருக்கும் Line ABஐக் கவனிக்கவும்.
08:41 h வரியின் object propertiesஐ நான் மாற்றுகிறேன்
08:45 Object Propertiesஐ தேர்ந்தெடுக்க வரி hஐ ரைட் க்ளிக் செய்யவும். Preferences window திறக்கிறது
08:53 இங்கே நான் நிறத்தை பிங்க் நிறமாகவும் ஸ்டைலை dashed lineக்கு மாற்றுகிறேன்
09:00 Preferences windowவை மூடவும்
09:03 இப்போது fileஐ சேமிப்போம். File menuவை க்ளிக் செய்து Saveஐ தேர்ந்தெடுக்கவும்
09:10 Save dialog box திறக்கிறது
09:13 நான் எனது கணினியில் Documents folder ஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:17 உங்கள் கணினியில் நீங்கள் விரும்பும் எந்த folderஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
09:22 File nameLines என டைப் செய்யவும். பின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
09:29 நமது file .ggb நீட்டிப்புடன் சேமிக்கப்படுகிறது
09:34 டுடோரியலை இடைநிறுத்தி, இந்த பயிற்சியை செய்யவும். ஒரு புதிய GeoGebra window வை திறக்கவும்
09:40 Segment toolஐ பயன்படுத்தி ஒரு AB line segmentஐ வரையவும்
09:44 segment AB க்கு ஒரு செங்குத்தான ஒரு bisector ஐ வரையவும்
09:48 வரிகளை மறுபெயரிடவும் மற்றும் object பண்புகளை மாற்றவும்.
09:52 உங்கள் முடிக்கப்பட்ட பயிற்சி இப்படி இருக்க வேண்டும்.
09:57 இப்போது ஒரு புதிய windowவை திறப்போம்
10:00 File menuஐ க்ளிக் செய்து New Windowவை தேர்ந்தெடுக்கவும்
10:05 இப்போது நான் Graphics window பண்புகளை பற்றி விளக்குகிறேன். இங்கு நான் Algebra காட்சியை மூடுகிறேன்
10:13 Graphics windowவை ரைட்-க்ளிக் செய்யவும்
10:16 பல்வேறு தேர்வுகளுடன் context menu திறக்கிறது
10:20 Graphics தேர்வை தேர்ந்தெடுக்கவும்
10:23 Preferences window திறக்கிறது
10:26 Preferences windowவில், Basic, xAxis, yAxis மற்றும் Grid tabகளை நாம் காண்கிறோம்
10:36 Preferences window மற்றும் Graphics காட்சியின் அளவை மாற்றி அவற்றை அருகருகே வைக்கவும்
10:43 Basic tabல் உள்ள Axesன் அடிப்படை பண்புகளை நாம் மாற்றுவோம்
10:48 Bold check-boxஐ க்ளிக் செய்யவும். இது Axesஐ bold ஆக ஆக்குகிறது
10:54 Color பட்டனை க்ளிக் செய்யவும். Choose a color பெட்டி தோன்றுகிறது
11:00 நீங்கள் ஏதேனும் ஒரு அடர் நிறத்தை தேர்வு செய்து , பின் OK பட்டனை க்ளிக் செய்யவும்
11:05 axesன் நிறம் அதற்க்கேற்றார் போல் மாறுகிறது
11:09 அடுத்து Line style drop down ஐ தேர்ந்தெடுக்கவும். நான் இரண்டு-பக்க அம்பு தேர்வை தேர்ந்தெடுக்கிறேன்
11:17 அடுத்து நாம் Miscellaneous பண்புகளுக்கு செல்வோம்
11:21 நாம் Graphics viewன் பின்னணி நிறத்தை மாற்றுவோம்
11:25 Background Color பட்டனை க்ளிக் செய்யவும். Choose a color பெட்டி தோன்றுகிறது
11:31 நான் வெளிர் பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுத்து OK பட்டனை க்ளிக் செய்கிறேன்
11:36 பின்னணி நிறம் வெளிர் பச்சை நிறமாக மாறுவதைக் கவனிக்கவும்.
11:40 இப்போது Grid tab ஐ க்ளிக் செய்யவும். முன்னிருப்பாக, Show Grid check-box check செய்யப்பட்டு இருக்கிறது
11:47 Gridன் நிறத்தை மாற்றுவோம். Color பட்டனை க்ளிக் செய்யவும்
11:53 Choose a color பெட்டி தோன்றுகிறது
11:56 நான் Dark Greenஐ தேர்ந்தெடுத்து, பின் OK பட்டனை க்ளிக் செய்கிறேன்
12:02 grid ன் நிறம் அடர் பச்சை நிறத்திற்கு மாறுவதை கவனிக்கவும்
12:07 Preferences windowவை மூடவும்
12:10 மாற்றப்பட்ட பண்புகளுடன் கூடிய GeoGebra இடைமுகத்தை கவனிக்கவும்
12:15 பயிற்சியாக பின்வருவனவற்றை ஆராயவும், 1. Grid Type தேர்வுகள் 2. xAxis மற்றும் yAxis tabகள்
12:25 நாம் கற்றதை சுருங்கச் சொல்ல,
12:28 இந்த டுடோரியலில் நாம் கற்றது, GeoGebra இடைமுகம் மற்றும் geometric toolகள் பற்றி
12:35 இணை மற்றும் செங்குத்து வரிகளை வரைவது, ஒரு வரியின் object பண்புகளை மாற்றுவது
12:41 Graphics காட்சியின் பண்புகள் பற்றி
12:44 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:52 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:01 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
13:07 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்
13:14 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
13:18 ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
13:23 அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம். இது குழப்பங்களை குறைக்க உதவும்.
13:31 இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
13:36 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
13:47 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree