Arduino/C2/First-Arduino-Program/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:05, 28 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 First Arduino Program குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு Arduino program ஐ எழுதுவது, programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க்செய்ய வைப்பது.
00:19 இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:23 Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE.
00:30 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, பின்வருபவை உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும்: மின்னணுவியலின் அடிப்படை அறிவு,
00:36 ஒரு C அல்லது C++ programஐ எழுதுவதற்கான அடிப்படை அறிவு,
00:41 மற்றும் USB power cable உடன் கூடிய Arduino UNO Board
00:46 நமது முதல் programஐ எழுத, Arduino IDEஐ திறப்போம்
00:52 இங்கு, Menu bar ல் பல்வேறு menuக்களை நாம் காணலாம்
00:57 Arduinoசூழ்நிலையில், ஒவ்வொரு programஉம் Sketchஆக சேமிக்கப்படுகிறது
01:03 முன்னிருப்பாக, அது Sketch underscore என்ற பெயரையும் மற்றும் ஒரு பெயரையும் உருவாக்குகிறது
01:11 முதலில் File ஐ க்ளிக் செய்து, பின் Saveஐ க்ளிக் செய்வதன் மூலம், நீங்கள் பெயரை மாற்றலாம்
01:18 Fileன் பெயரை BlinkLed என டைப் செய்யவும். இப்போது Save பட்டனை க்ளிக் செய்யவும்
01:26 இது இரண்டு காலி functionகளை கொண்ட முன்னிருப்பான program சூழல் ஆகும்- void setup மற்றும் void loop.
01:35 இப்போது, LED.ஐ பிலிங்க்செய்ய வைக்க, ஒரு Arduino program ஐ நாம் எழுதுவோம்
01:41 எனது IDE மற்றும் Arduino board ஆகியவற்றை அருகருகே நான் வைத்துள்ளேன்.
01:47 இது programன் execution மற்றும் outputboardல் காண உதவும்
01:54 இந்த LED program க்கு, நான் pin எண் 13ஐ பிலிங்க்செய்ய வைக்க வேண்டும்
02:00 இது உட்புறமாக LEDக்கு இணைக்கப்பட்டுள்ள digital input/output pin ஆகும்
02:07 மார்க்கரால் ஹைலைட் ஆனதை கவனிக்கவும்
02:10 இப்போது, நாம் நமது codeஐ எழுத வேண்டும்.
02:13 void setup functionஎன்பது ஒரு microcontrollerஐ அமைப்பதைக் குறிக்கிறது.
02:18 நமது வழக்கில், pin எண் 13 ஐ முதலில் அமைக்க வேண்டும்.
02:24 இதைச் செய்ய, pinMode எனப்படும் in-built function ஐ பயன்படுத்துவோம்.
02:31 இது இரண்டு parameterகளை கொண்டிருக்கிறது- - pin number comma mode.
02:36 அதனால், டைப் செய்க: pinMode open brackets 13 comma output close brackets semicolon.
02:48 நாம் எதற்கு modeஐ outputஆக வைக்க வேண்டும்?
02:51 இது ஏனெனில், pin எண் 13, LEDக்கு உட்புறமாக இணைக்கப்பட்டுள்ளது
02:58 மின்னழுத்தம் அதிகமாக இருக்கும்போது அது ஒளிரும் ஆனால் மின்னழுத்தம் பூஜ்ஜியமாக இருக்கும்போது அது ஒளிராது.
03:05 LEDக்கு மின்னழுத்தத்தை வழங்க, modeஐ ‘output’ ஆக உள்ளமைக்க வேண்டும்.
03:12 அடுத்து, void loop function க்கு நாம் codeஐ எழுதுவோம்
03:17 ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு முன், ஒரு LEDஐ ஒளிர வைப்போம்
03:22 digitalWrite எனப்படும் ஒரு function உள்ளது, இது digital pinக்கு எழுதும்.
03:29 pin number மற்றும் value அல்லது stateஆக இரண்டு parameterகளை இந்த function கொண்டுள்ளது
03:36 ஏற்கனவே, நமக்கு pin எண் 13 என தெரியும். மதிப்பு HIGH அல்லது low. ஆக இருக்க வேண்டும்.
03:44 அதனால், டைப் செய்க: digitalWrite open brackets 13 comma HIGH close brackets semicolon.
03:55 நமக்கு LED ஒளிர வேண்டும். எனவே, மின்னழுத்தம் HIGH ஆக இருக்க வேண்டும்.
04:00 அவ்வளவுதான். code மிகவும் எளிமையானது.
04:04 அடுத்த படி programஐ compile செய்வது ஆகும்
04:08 programஐ சரிபார்க்க, menu bar ல் உள்ள Tick iconஐ க்ளிக் செய்யவும்
04:14 இது நமது programஐ binary formatல் compile செய்யும், இது microcontrollerஆல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
04:22 IDEன் கீழ், compilation நிலையை நீங்கள் காணலாம்
04:27 அடுத்து, நாம் programஐ microcontrollerக்கு upload செய்ய வேண்டும்
04:32 Upload செய்வதற்கு, menu barல் இருக்கும், வலது அம்பு பட்டனை க்ளிக் செய்யவும். அல்லது Sketch menu வை தேர்ந்தெடுத்து, பின் upload செய்யலாம்
04:48 TX RX சிறிது நேரத்திற்கு பிலிங்க் ஆவதை நீங்கள் காணலாம். இது transmission ON ஆக இருப்பதை குறிக்கிறது
04:57 இப்போது LED ஒளிர்வதை நீங்கள் காணலாம்.
05:01 LEDஐ எப்படி off செய்வது? இரண்டாவது parameter மதிப்பு LOW ஆக்குவதற்கு இந்த programஐ மாற்ற வேண்டும்.
05:11 இப்போது இந்த program ஐ compile செய்து, பின் upload செய்வோம்
05:16 LED இப்போது off ஆகிவிட்டது
05:20 LEDஐ எப்படி ON மற்றும் OFF செய்வது என்று நமக்கு தெரியும்
05:25 அடுத்து, LEDஐ பிலிங்க் செய்ய வைக்க, programஐ மாற்றுவோம்
05:31 அதாவது, ஒரு வினாடி இடைவெளியுடன் ON மற்றும் OFF செய்வது
05:36 காட்டப்பட்டுள்ளபடி நாம் programஐ மாற்றுவோம். Delay என்பது ஒரு built-in function. இது programஐ குறிப்பிட்ட நேரத்திற்கு இடைநிறுத்துகிறது.
05:46 நான் delay open brackets 500 close brackets semicolon என டைப் செய்கிறேன். இங்கே, 500 என்பது 500 மில்லி விநாடிகள், அதாவது அரை வினாடி தாமதமாகும்.
06:01 அடுத்து, டைப் செய்க: digitalWrite open brackets 13 comma LOW close brackets semicolon.
06:12 இது digital pin 13OFF mode ற்கு கொண்டு செல்கிறது
06:17 எவ்வளவு நேரம் அதை OFF செய்ய வேண்டும்? டைப் செய்க: delay open brackets 500 close brackets semicolon.
06:28 மீண்டும், அதை 500 மில்லி விநாடிகளுக்கு OFF செய்ய விரும்புகிறோம்.
06:34 Void loop program ஐ மீண்டும் வரிக்கு வரி விளக்குகிறேன்.
06:40 Void loop என்பது ஒரு முடிவிலா loop, அது தொடர்ந்து இயங்கும்.
06:45 LED உடன் இணைக்கப்பட்ட pin எண் 13, 500 மில்லி விநாடிகளுக்கு HIGH நிலையில் இருக்கும். பின்னர், 500 மில்லி விநாடிகளுக்கு LOW நிலையில் இருக்கும்.
06:57 இந்த program loopல் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
07:02 Programஐ upload செய்வோம்
07:05 நமது LED பிலிங்க் ஆவதை நாம் காணலாம்
07:10 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
07:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு Arduino program ஐ எப்படி எழுதுவது,
07:21 programஐ Compile செய்து, பின் upload செய்வது மற்றும் ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பது.
07:27 பின்வரும் பயிற்சியை செய்யவும். மேலே உள்ள Blink LED programல் தாமத நேரத்தை 1500 ஆக மாற்றவும்.
07:37 programஐ Compile செய்து, பின் upload செய்து, LED blink ஆவதை கவனிக்கவும்
07:45 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
07:53 Spoken Tutorial Project குழு: ஸ்போக்கன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, ஆன்லைன் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:06 இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும்
08:13 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
08:24 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
08:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree