Arduino/C2/Wireless-Connectivity-to-Arduino/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:54, 28 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Wireless Connectivity to Arduino குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
00:17 ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது
00:23 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, பின்வருவனவற்றில் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும்: Electronics
00:29 C or C++ programming language மற்றும்
00:33 Wireless Communication
00:36 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Arduino UNO Board,
00:41 Ubuntu Linux 16.04 OS மற்றும் Arduino IDE
00:48 பின்வரும் சில external componentகள் நமக்கு தேவைப்படும்: ESP8266-01 Wi-Fi module
00:59 Breadboard
01:01 Jumper Wires மற்றும் Push Button
01:05 இந்த டுடோரியலில் நாம் ESP8266-01 WiFi module ஐ பயன்படுத்துவோம்
01:13 VCC, RST, CH_PD, Tx, Ground, GPIO2, GPIO0, Rx ஆகியவை Wi-Fi module.ன் pinகள் ஆகும்
01:27 Power LED, module ON அல்லது OFFஆக இருக்கிறதா என்பதை காட்டுகிறது
01:32 COMM LED, WiFi moduleன் built-in blue LED ஆகும்
01:37 இந்த டுடோரியலில், WiFi ஐ பயன்படுத்தி இந்த உள்ளமைக்கப்பட்ட LED ஐ எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
01:43 இந்த WiFi module, ஒருங்கிணைந்த TCP/IP stack. உடன் கூடிய ஒரு உள்ளமைக்கப்பட்ட System on Chipஐ கொண்டிருக்கிறது
01:51 இது ஒரு UART மற்றும் 2 GPIO pins (General Purpose Input / Output)களை கொண்டிருக்கிறது
01:57 இது IoT (i.e. Internet of Things) applicationகளின் மேம்பாட்டிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
02:04 இது ESP8266 - 01 module உடன் கூடிய Arduino இன் circuit இணைப்பு ஆகும்.
02:12 குறிப்பு: ESP8266-01 module 3.3 Voltsகளில் மட்டுமே வேலை செய்கிறது.
02:20 5 Voltகளுக்கு இணைப்பது Wi-Fi moduledamage செய்யலாம்
02:24 Wi-Fi moduleன் ground pin ஐ, Arduinoவின் ground pin க்கு இணைக்கவும்
02:29 Wi-Fi moduleன் GPIO 0pin ஐ, Arduinoவின் groundக்கு இணைக்கவும்
02:35 Wi-Fi moduleன் Rx pin ஐ, Arduinoவின் Rx pin க்கு இணைக்கவும்
02:41 Wi-Fi moduleன் Tx pin ஐ, Arduinoவின் Tx pin க்கு இணைக்கவும்
02:47 Wi-Fi moduleன் VCC மற்றும் CH_PD pin ஐ, Arduinoவின் 3.3V க்கு இணைக்கவும்
02:57 Wi-Fi moduleன் RST pin மற்றும் Arduinoவின் ground pinக்கு இடையே ஒரு push buttonஐ இணைக்கவும்
03:05 இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைப்பின் நேரடி அமைப்பாகும்.
03:10 இங்கே காட்டப்பட்டுள்ளபடி இணைப்பைச் செய்யவும்.
03:13 WiFi module மற்றும் ஒரு laptop அல்லது ஒரு mobile phoneக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவோம்
03:20 இப்போது, Arduino IDE.ல் ஒரு programஐ எழுதுவோம். Arduino IDEஐ திறக்கவும்
03:27 Arduino boardஐ உங்கள் PCக்கு இணைக்கவும்
03:30 முதலில், Arduino இணைக்கப்பட்டுள்ள portன் பெயரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
03:35 Tools menuவிற்கு சென்று, Port தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:40 எனது வழக்கில், port ttyUSB0. ஆகும். உங்களது portன் பெயரை குறித்துக்கொள்ளவும்
03:49 port தானாகவே கண்டறியப்படுவதால், Windows பயனர்கள் கீழே உள்ள படிகளைத் தவிர்க்கலாம்.
03:56 Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறக்கவும்
04:03 டைப் செய்க: sudo space chmod space a+rw space slash dev slash ttyUSB0
04:18 எனது வழக்கில், portன் பெயர் ttyUSB0
04:25 நீங்கள் உங்களது portன் பெயரை குறிப்பிட வேண்டும். Enterஐ அழுத்தவும்
04:30 உங்கள் systemக்கான passwordஐ enter செய்யவும். பின் Enterஐ அழுத்தவும்
04:35 மேலுள்ள command, usb port.க்கான read-write permissionஐ கொடுக்கிறது
04:40 Arduino IDE.க்கு திரும்பவும்
04:43 அடுத்து நாம் தொடர்பு கொள்ள ESP8266 module ஐ கட்டமைப்போம்.
04:49 menu bar ல், File menu வை க்ளிக் செய்யவும். Preferencesஐ தேர்ந்தெடுக்கவும்
04:56 ஒரு புதிய window தோன்றுகிறது
04:58 Settings tabல், Additional Boards Manager URLs பிரிவுக்கு செல்லவும். இந்த json URLஐ சேர்க்கவும்
05:09 இது Arduino IDE.ல், ESP8266 WiFi module ஐ தரவிறக்க உதவும்
05:16 Windowவின் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:20 menu bar ல், Tools menuவை க்ளிக் செய்து, Boardஐ தேர்ந்தெடுக்கவும்
05:25 பின் Boards Manager தேர்வை தேர்ந்தெடுக்கவும். ஒரு புதிய window தோன்றும்
05:31 மேல் வலது மூலையில், ஒரு search tab ஐ நாம் காணலாம்
05:35 இங்கு, ESP8266 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
05:41 ESP8266 by ESP8266 Communityஐ தேர்ந்தெடுக்கவும்
05:48 பதிப்பு drop down box ல், moduleன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கவும்
05:53 moduleஐ நிறுவ, Install பட்டனை க்ளிக் செய்யவும்
05:57 நிறுவுதல் முடிவடைய சில நிமிடங்கள் ஆகும்.
06:01 அது வெற்றிகரமாக நிறுவப்படும் வரை காத்திருக்கவும்.
06:05 ESP8266 module, இப்போது Arduino IDEல் நிறுவப்பட்டுவிட்டது
06:09 Windowவின் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்
06:14 இப்போது, programஐ upload செய்வதற்கு முன்பு, நாம் ESP8266 moduleஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
06:20 முதலில் Tools தேர்வையும், பின் Boardஐயும் தேர்ந்தெடுக்கவும்
06:25 கீழே scroll செய்து, Generic ESP8266 Moduleஐ தேர்ந்தெடுக்கவும்
06:32 அடுத்து, ESP8266 Moduleன் built-in LEDஐ நாம் set செய்யவேண்டும். மீண்டும், Toolsஐ தேர்ந்தெடுக்கவும்
06:41 Builtin LED தேர்வுக்கு செல்லவும். Builtin LED1க்கு Set செய்யவும்
06:48 அடுத்து, நாம் Reset தேர்வை set செய்வோம்
06:52 menu bar ல், Toolsஐ தேர்ந்தெடுக்கவும். Reset Methodக்கு செல்லவும்
06:58 Resetமுறையை, no dtr in bracket aka ck.க்கு தேர்ந்தெடுக்கவும்
07:06 இது wifi moduleஐ கைமுறையாக reset செய்ய உதவும்
07:10 இப்போது நாம் codeஐ எழுதுவோம். கட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்
07:16 நாம் ESP8266 libraryஐ சேர்த்துள்ளோம்
07:20 SSID, Wi-Fi moduleன் name ஆகும்
07:24 இங்கு, நான் wifi networkக்கு WIFI_ESP8266_Pratik. என பெயர் வைத்துள்ளேன்
07:34 Wi-Fi networkஉடன் சேர்வதற்கான passcode , Password ஆகும். moduleக்கான password, 12345678 ஆகும்
07:47 உங்களுடைய தனிப்பட்ட ssid மற்றும் passwordஐ நீங்கள் கொடுக்க வேண்டும்
07:52 Password parameterகட்டாயமானது அல்ல
07:56 நீங்கள் password parameterஐ கொடுக்கவில்லை என்றால், Wi-Fi network திறந்து இருக்கும்
08:01 இது அருகிலுள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.
08:05 இந்த command, moduleன் முன்னிருப்பான IP addressஐ enable செய்யும்
08:10 moduleன் முன்னிருப்பான IP address 192.168.4.1 ஆகும்
08:20 setup functionனின் உள், காட்டப்பட்டுள்ளபடி codeஐ எழுதவும்
08:25 இந்த command, ESP8266 moduleக்கான SSID மற்றும் Passwordஐ enable செய்யும்
08:33 கொடுக்கப்பட்டுள்ள SSID மற்றும் Passwordக்கு, server.begin, Wi-Fi networkஐ enable செய்யும்
08:40 moduleன் bootக்கு, 2 வினாடிகளின் delay வழங்கப்படுகிறது.
08:44 ESP8266 moduleன் Built-in LED, OUTPUT modeக்கு set செய்யப்படுகிறது
08:51 Codeஐ void loop functionனின் உள் copy செய்து paste செய்யவும்
08:56 இந்த code, இந்த டுடோரியலின் Code files இணைப்பில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்
09:04 இந்த HTML code, இங்கு காட்டப்பட்டுள்ளபடி ஒரு web pageஐ உருவாக்கும்
09:10 LED ON அல்லது LED OFF அழுத்தப்படும் போதெல்லாம், மதிப்பு programக்கு pass செய்யப்படுகிறது
09:17 program மதிப்பை சரிபார்த்து, ESP8266-01 moduleன் built-in LEDஐ கட்டுப்படுத்துகிறது
09:27 program.ஐ சரிபார்க்க, compile பட்டனை Click செய்யவும்
09:31 தற்போதைய programஐ சேமிக்க, pop up window ஒன்று தோன்றும்
09:35 programக்கு WiFi'_ESP8266. என பெயரிடவும்
09:43 பின், programஐ சேமிக்க, save பட்டனை க்ளிக் செய்யவும்
09:48 தற்போதைய program ESP8266-01.ல் upload செய்ய, upload பட்டனை க்ளிக் செய்யவும்
09:58 program upload செய்யப்படுவதை திரையின் கீழ் நாம் காணலாம்
10:03 நிலை Connecting,குக்கு மாறும் போது, breadboardல் உள்ள push buttonஐ அழுத்தவும். 2 முதல் 3 வினாடிகளுக்குப் பிறகு அதை விடுவிக்கவும்.
10:13 இங்கே காட்டப்பட்டுள்ளபடி, Leaving…. Soft resetting என்ற செய்தியை நாம் காண்போம்
10:20 இது, program வெற்றிகரமாக upload செய்யப்பட்டிருப்பதை குறிக்கிறது
10:25 உங்கள் mobile internetஐ Switch off செய்யவும்
10:28 உங்கள் mobile phoneனின் Wi-Fi optionஐ திறக்கவும்
10:32 இணைக்க, அருகிலுள்ள networkஐ தேடவும்.
10:35 எனது வழக்கில் நான் WIFI_ESP8266_Pratikஐ பெறுகிறேன். ஏனெனில், இந்த codeஐ நான் பெயரில் கொடுத்துள்ளேன். WiFiஐ தேர்ந்தெடுக்கவும்
10:52 passwordஐ enter செய்து, மேலும் இது WiFi உடன் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
10:57 உங்கள் mobile phoneலில் Web Browserஐ திறக்கவும். IP address 192.168.4.1ஐ enter செய்யவும்
11:11 இது உற்பத்தியாளரின், ESP8266-01 Wi-Fi module ன் default IP address ஆகும்
11:22 HTML codeக்கு ஏற்ப web page திறக்கிறது
11:26 ESP8266-01 moduleன் LED, OFFஆக இருப்பதை நாம் காணலாம்
11:34 LED ONபட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi module.ன் நீல நிற LEDஐ இயக்கும்
11:41 நாம் LED OFF பட்டனை அழுத்தும் வரை அது ON' ஆக இருக்கும்.
11:46 LED OFF பட்டனை க்ளிக் செய்யவும். இது, Wi-Fi module.ன் நீல நிற LEDஐ அணைக்கும்
11:52 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
11:58 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ESP8266-01 module லில் codeஐ உள்ளமைத்து upload செய்வது
12:09 ESP மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே Wireless Communication'ஐ அமைப்பது
12:15 assignmentஆக: உங்கள் PC அல்லது லேப்டாப்பில் wireless connectivity உள்ளதா எனச் சரிபார்த்து, கீழே உள்ள படிகளைச் செய்யவும்.
12:23 மேல் வலது மூலையில் உள்ள, WiFi icon ஐ க்ளிக் செய்யவும்
12:28 உங்கள் WiFiன் பெயரை தேர்ந்தெடுத்து, passwordஐ enter செய்யவும்
12:32 browserஐ திறந்து, 192.168.4.1க்கு செல்லவும்
12:41 பட்டனை தேர்ந்தெடுத்து, outputஐ ESP8266-01 moduleலில் பார்க்கவும்
12:49 இங்கே காட்டப்பட்டுள்ளபடி பயிற்சியின் outputஐ நீங்கள் பார்க்க வேண்டும்.
13:03 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
13:11 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:18 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:22 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
13:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree